Originally Posted by
KALAIVENTHAN
‘பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை;
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை...’
என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நான் இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். வியப்பால் விரிந்த விழிகளை இன்னும் சுருக்க முடியவில்லை.
சென்னை பிளாசா, ஸ்ரீநிவாசா, புவனேஸ்வரி திரையரங்குகளில் 75 நாட்களும் பிளாசா, ஸ்ரீநிவாசா திரையரங்குகளில் 100 நாட்களும் ஓடிய படகோட்டி வெற்றித் திரைக் காவியத்தின் 75 மற்றும் 100வது நாள் விளம்பரங்களை வெளியிட்டு, நல்லோர், நடுநிலையாளர், மனசாட்சி உள்ளோரின் கண்களுக்கு காணிக்கையாக்கி, புது ஆதாரக் குண்டு மூலம் பொய் கோட்டைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி, உண்மையை உலகுக்கு உரத்து உரைத்திட்ட தலைவரின் புகழ்பாடும் தங்கம், வேலூர் கோட்டை சிங்கம் திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு நன்... ம்.....ம்... கொன்னுட்டேள் போங்கோ!
இந்த அரிய ஆவணத்தை தந்து உண்மை வெளிவர உதவிய திரு.பாஸ்கரன், திரு.ஸ்ரீனிவாசன் ஆகியோரின் கர மலர்களில் என் கண் மலர் பதித்து வணங்குகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்