I cannot even digest now that for a non-NT movie 'Dheivamagan' was above to lift from 3 three theaters at 98th day. We may agree if 'Deivamagan' will be lifted for another NT movie.
Printable View
True many a sivaji films were lifted when it was going in full houses. in the case of sivandamann sridhar -chitralaya wanted prestgious SHANTHI for theie movie leaving crown and bhuvaneswari as a prestige matter that is why sivandamann release adverisements leaving mount road theatre blank other theatres AGASTYA MEKALA AND NOORJEHAN WERE PRINTED. even inthe advertisements newglobe shown with a different ink.after trying for anand casino thetres in the alternative nothing was worked. later globe was booked with a title NEWGLOBE with little alteraions done. this case sivaji films really obliged. later part aathaimagal was a unexpected bookings made later dropped. we have been running to sivaji films chitralaya always that time. true story happened.
but other movies thillana saraswathi sabatam and thanga surangam
your statement centpercent true.
Ganpatji,
I strongly hope, I never oppose any of such statement by Mr. Gopal. (may be some other hubbers / fans objected that).
Because I never have a good openion on Mr.V.C.Shanmugam regarding running NT films as per the deisre of the fans.
So. this 'nagai muran' will not be applicable for me.
Mr. Ramajayam sir,
Regarding Sivandha Mann theatres, there was an article in our previous part of NT thread. I hop it was written by Murali Srinivas or Saradha (not sure, but as it was about chennai, more chances are there for saradha, because Murali sir is expert in Madurai incidents). As it was interesting, I saved it but forgot to save the hubber's name. It goes like this....
எடுத்தவரை யில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் ஸ்ரீதருக்கு திருப்தி யளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.
1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.
சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம் ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.
அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர்.
குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது.
அதிலும் நடிகர்திலகத்தின் கோட்டையான புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக் கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்..
No Mr.Adiram,I never said it was you.
When Mr.Gopal made some comments on Mr.Shanmugam in the same issue,
there were some hue and cries here, stating அண்ணனுக்கு அண்ணன் நமக்கும் அண்ணன்
So none should criticize NT's family members..etc etc.
So I called that as irony.
Thanks
Mr Gopal,
I wouldn't even try contemplating leaving a comment regarding this sequence of articles. Forget the content, but the jargons are too strong and intimidating for me. I wouldn't want to risk myself entering into an unfamiliar territory!! But I guess it's a landmark to this thread. Congratulations!
திரு.கோபால் அவர்களின் தெய்வமகன் பதிவு, அதனை ஒட்டிய நண்பர்களின் பதிவுகளைப் பார்த்துவிட்டு, தொலைக்காட்சியைப் பார்த்தால், நேற்று (15-04-13) இரவு sun life -ல் தெய்வமகன்.
பதிவுகளை அசைபோட்டபடியே குடும்பத்துடன் உட்கார்ந்து, பார்த்தேன், ரசித்தேன்.... நன்றி.
நன்றி ராகவேந்திரா சார் . வசந்தமாளிகையை பொறுத்தவரை நான் சிறுவனாக இருந்த போது ஒவ்வொரு வருடமும் நாஞ்சில் நகரில் திரையிடப்படும் . நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா (டிசம்பர் 3) மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது . அப்போதெல்லாம் சுற்று வட்டார கிராமங்களில் சிறுவர்கள் கோட்டாறு சவேரியார் திருவிழாவுக்கு செல்வதற்காக 5 பைசா , 10 பைசா என சேர்த்து திருவிழாவுக்கு வருவார்கள் . மூன்று நோக்கங்கள் ..கோவிலுக்கு செல்வது , தேன்குழல் மற்றும் சேவு வாங்கி சாப்பிடுவது ..மூன்றாவது முக்கியமானது .. நள்ளிரவு சிறப்பு காட்சி படம் பார்ப்பது .. எனக்கு தெரிந்து எல்லா வருடமும் சொல்லி வைத்தாற் போல வசந்த மாளிகையும் , உலகம் சுற்றும் வாலிபனும் வெளியாகும் .. தீபாவளிக்கு வந்த ஹிட் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் . ஆனால் மொத்த கூட்டமும் வசந்த மாளிகைக்கும் , உலகம் சுஊரும் வாலிபனுக்கும் தான் மொய்க்கும் . அதிலும் நாஞ்சில் நகர் நடிகர் திலகத்தின் கோட்டை என்பது எல்லோருக்கும் தெரியும் .. வசந்தமாளிகை போஸ்டர்கள் திரும்பிய பக்கமெல்லாம் ஒட்டப்பட்டிருக்கும் . பல வருடங்கள் இது தொடர்ந்தது .
Mr. Joe sir,
You cant fully raise your collar, because in the first release of 1972, out of 13 centres where Vasandha Maaligai crossed 100 days there is NO Nagerkoil and NO Thirunelveli.
In southern Tamil Nadu only one centre Madurai crossed 100 days.
But in Central TN, four centres Trichy, Thanjai, Kumabakonam and Mayavaram enjoyed 100 days.
In western TN three centres Kovai, Salem and Erode.
In north TN Chennai and Vellore.
அதற்கு பிராயச்சித்தமாத் தான் எங்கூருல வருஷா வருஷம் வெளியிட்டு பார்த்தாங்க போல மக்கள்.
Jokes apart , நான் குமரியிலே பிறந்தாலும் திருச்சியியிலும் படித்திருக்கிறேன் , சென்னையிலும் களித்திருக்கிறேன் . மேற்கு தமிழகம் தவிர்த்து பிற பகுதிகளில் பரிச்சையம் உண்டு . நான் பார்த்தவரை சதவீத அளவில் குமரி மண்ணில் சிவாஜிக்குள்ள ரசிகர் பட்டாளத்துக்கும் , செல்வாக்குக்கும் நிகராக நான் எங்கும் கண்டதில்லை . நான் குமரி மைந்தன் என்பதால் இதை சொல்லவில்லை . முரளி , ராகவேந்திரர் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும் . சிவாஜியின் பிள்ளை என்பதற்காகவே பிரபுவை செல்லப்பிள்ளையாக கொண்டாடிய மண் குமரி மண் . பிரபுவின் 100-வது படம் சென்னையில் கூட இல்லை , தமிழகத்திலேயே 100 நாட்கள் ஓட வைத்த ஒரே இடம் இன்றைக்கு திண்டுக்கல் கூட மாநகராட்சியான பின்னரும் நகராட்சியாக தொடரும் நாஞ்சில் நகர் மட்டும் தான் . அதற்கு பல அரசியல் காரணங்களும் , அது பெருந்தலைவரை பிரதிநிதித்த மண் என்பதும் முக்கிய காரணம் .
ஜோ,
நடிகர் திலகத்தின் மகனுக்கு மட்டுமல்ல அவரது பேரனுக்கும் மாபெரும் வரவேற்பு கொடுத்திருக்கும் நகரம் நாஞ்சில் நகரம். கும்கி இப்போதும் நாஞ்சில் மாநகரில் ஓடிக் கொண்டிருக்கும் செய்தி உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
மே 12 அன்று நாஞ்சில் மாநகரில் படத்தின் 150-வது நாள் வெற்றி விழா நடைபெறும் என்று ஒரு தகவல் வந்திருக்கிறது.
அன்புடன்
கோபால்,
தெய்வ மகன் வந்தால் சாரதி வருவார் என்று தெரியும். வந்து விட்டார். நானும் வருவேன். சற்று பொறுங்கள்.
டியர் கோபால் சார்
எட்டாவது உலக அதிசயம் மிக மிக அருமையான தொடர். நடிகர் திலகத்தைப் பற்றி இது வரை யாரும் இவ்வளவு உன்னிப்பாக கவனித்து எழுதியிருக்க மாட்டார்கள் என்று மார் தட்டிக் கூறும் அளவிற்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் பெருமை கொள்ளும் தொடர். இதனை எழுதும் நீங்கள் அவ்வப்போது ஏதாவது கோபமாக எழுதி விட்டு தொடரின் நோக்கம் திசை திரும்புவதற்கு காரணமாகி விடுகிறீர்கள். பின்னர் அப்படி எழுதுவதை நீக்கி விடுகிறீர்கள். உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதை தவிர்க்கவும்.
நிழற்படங்களும் ஆவணங்களும் நடிகர் திலகத்தின் புகழைப் பறை சாற்ற உதவும் ஒப்பற்ற ஆவணங்கள். அவரின் ஒரு பார்வையை வைத்து நாம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதலாம். நடிகர் திலகம் திரியைப் பொறுத்த மட்டில் அத்தனை பக்கங்களையும் அவருடைய நிழற்படத்தைப் பார்த்தாலும் இன்னும் பார்க்கத் தூண்டும். அவருடைய சாதனைகளை பரப்ப உதவுபவை விளம்பர நிழற்படங்களே. தங்களுடைய எட்டாவது உலக அதிசயம் தொடரும் நிழற்படமும் காணொளியும் இருந்தால் அவற்றைப் புரிந்து கொள்ள உதவும். இவையெல்லாம் தங்களுக்குத் தெரியாததல்ல. இதனை உருவாக்க தேவைப்படும் உழைப்பு, நேரம், சக்தி போன்றவை, தாங்கள் எழுதுவதற்கு எவ்வளவு செலவிடுகிறீர்களோ, அதற்கு சற்றும் குறைந்ததல்ல. இதனைத் தாங்கள் மனதில் நிறுத்த வேண்டும். நடிகர் திலகத்தின் பல சாதனைகள், திரைப்படம் மட்டுமின்றி, கற்றோர் நிறைந்த பல சபைகளிலே அவர் பெற்ற பெருமைகளும் பாராட்டுக்களும் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல உதவுபவை இவை போன்ற பத்திரிகை செய்திகளும் அவற்றின் நிழற்படங்களுமே.
இதனைத் தாங்கள் அப்பாச்சே இந்தியர்களுடன் அவர் இருந்த நிழற்படத்தை வைத்தே தெரிந்து கொண்டிருப்பீர்கள். எந்த ஒரு அரச பதவியிலும் இல்லாமல் அவர் உலகின் பல நாடுகளில் பல பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர்.
அவற்றையும் நாம் இங்கே அவ்வப்போது பகிர்ந்து கொள்வது நம்முடைய கடமை என நான் எண்ணுகிறேன்.
நம் ரசிகர்களில் பலர் பல அரிய ஆவணங்களைத் தங்களிடம் வைத்திருப்பார்கள். அவற்றையெல்லாம் நாம் இங்கே பகிர்ந்து கொண்டால் எதிர்கால சந்ததியினர் நடிகர் திலகத்தைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொள்ள நாம் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
இன்னும் பல அரிய ஆவணங்களை நானும் இங்கே பகிரந்து கொள்ள விரும்புகிறேன்...
டியர் கோபால் சார்,
voice of america வானொலிக்காக நடிகர் திலகத்தை வி.கோபால கிருஷ்ணன் பேட்டி எடுத்தார். இது 1970களின் துவக்கத்தில் நடந்தது. அந்தப் பேட்டியில் நடிப்புக்கலையின் நுணுக்கங்களைப் பற்றி நடிகர் திலகம் கூறியிருக்கிறார். தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அதனை பெற முடியுமா என்று முயன்று பாருங்கள். நான் அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் ஒன்றும் தகவல் இல்லை.
1962ல் நடிகர் திலகத்தின் அமெரிக்க விஜயத்தின் போது அவர் சந்தித்த பல பிரமுகர்களில் அந்நாளைய பிரபல ஹாலிவுட் நடிகர்களுடனான படங்களைப் பெரும்பாலானோர் பார்த்திருப்பிர்கள். ஆனால் அப்போது அவரைச் சந்தித்தவர்களில் ஹாலிவுட் பிரபல நடிகைகளும் உண்டு என்பதையும், அவர்களிடம் நடிப்பின் நுணுக்கங்களை, இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் நடிப்பைப் பற்றி நடிகர் திலகம் விளக்கியதையும் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். அப்படி அவரை சந்தித்து உரையாடிய இரு ஹாலிவுட் பிரபல நடிகைகளுடனான நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் இங்கே. இவை மிக மிக அபூர்வமானவை, எனக்குத் தெரிந்து இதுவரை இணையத்தில் வந்திராதவை என எண்ணுகிறேன்.
http://i1146.photobucket.com/albums/...ps7c1cb850.jpg
http://i1146.photobucket.com/albums/...ps2bcf57e5.jpg
இவர்களின் பெயர்கள் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை. கோபால் சார் கூறுவார் என எதிர்பார்க்கிறேன்.
இதே காட்சியை நம் பார்த்தசாரதி சார் சிலாகித்து எழுதியிருந்ததைப் பலர் படித்திருப்பீர்கள். அதனையொட்டிய காணொளியினையும் அப்போது நாம் பார்த்திருப்போம். அதே காட்சியை இப்போது கோபால் சாரின் குறிப்புகளுடன் இணைத்துப் பாருங்கள்.Quote:
டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method actin
http://www.youtube.com/watch?v=WOJ6B...lcLpnIKC2q3h3A
இந்தக் காட்சியைத் தனியாக மெல்லிசை மன்னரின் பின்னணி இசைக்காக பார்த்து அனுபவிக்க வேண்டும். அதனைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
இதில் மறக்க முடியாத கட்டம், படிக்கட்டின் போக்கிலேயே நடிகர் திலகம் தன் பார்வையை செலுத்துவது. சுந்தரராஜன் இறங்கி வருவதை தன் பார்வையிலேயே உணர்த்தும் அற்புத நடிப்பு. இதுவும் ஒரு வகையில் sense memoryயைக் கொண்டிருக்கும்.
நான் சொல்லும் ரகசியம் திரைப்படம் தற்போது மோசர் பேர் நிறுவனத்தின் மூன்றில் ஒன்று திரைப்பட நெடுந்தகடு வரிசையில் இடம் பெற்றுள்ளது. அதன் முகப்பு தற்போது நம் பார்வைக்கு
http://i1146.photobucket.com/albums/...ps07e93263.jpg
சரஸ்வதி சபதம் - எப்படிப்பட்ட ஒரு திரைக்காவியத்தை எப்படி கேவலப்படுத்தி மீண்டும் எடுக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.
http://epaper.timesofindia.com/Defau...&ViewMode=HTML
http://i1234.photobucket.com/albums/...ps706184de.jpg
பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி இன்று (17-04-2013) அதிகாலை காலமானார்.
திரையிசையில் மகத்தான சாதனை படைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் -டிகே.ராமமூர்த்தி. இருவரும் இணைந்து 700க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்போம்.
3000 ஆவது சிறப்புப் பதிவு.
தாம்பத்யம் (20.11.1987)
ஒரு தாராள அலசல்.
http://i1087.photobucket.com/albums/..._000012976.jpg
அடப் போப்பா... தேவரையும், தில்லானாவையும், தெய்வ மகனையும் போட்டு ஆளாளுக்கு விலாவாரியாய் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கும் போது வந்துட்டாரு இவரு 'தாம்பத்யம்' படம் பத்தி ஆய்வு எழுதறதுக்கு என்று எண்ணத் தோன்றுகிறதா? 'தாம்பத்யம்'... அப்படி ஒரு படமா!? 'தாம்பத்யம் ஒரு சங்கீதம்' அப்படீன்னு 'மைக்' மோகன் நடிச்ச படம் கூடஒண்ணு ஞாபகம் இருக்கு... ஆனா 'தாம்பத்யம்' அப்படின்னு அதுவும் தலைவர் நடிச்சி ஒரு படம் இருக்கா? என்ற கேள்வி கூட சிலர் மனதில் தொக்கி நிற்கக் கூடும். அழகான குண்டுமணி குவியலில் ஒரு குண்டுமணி கைநழுவி எங்கோ ஓடி மறைந்து விட்டது. அந்த குண்டுமணியைத் தேடி கண்டுபிடித்து மீண்டும் அந்த குண்டுமணிக் குவியலில் சேர்க்க ஆசை. தொலைந்து போன அந்த அழகான குண்டுமணிதான் 'தாம்பத்யம்' அதைத் தேடிக் கண்டு பிடித்து கொடுக்கத்தான் இந்த ஆய்வு.
பொதுவாகவே திரிசூலத்திற்குப் பிறகு தலைவர் நடித்திருக்க வேண்டாம் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. திரிசூலத்திற்குப் பிறகெல்லாம் கூட அற்புதமான நடிப்பையும் (ஆஸ்கர் ரேஞ்சுக்கெல்லாம்) அருமையான சில படங்களையும் தந்திருக்கிறாரே! என்று இன்னொரு சாரார் கூறுவதுண்டு. இருநூறுக்கும் மேல் பல வெற்றிப்படங்களையும் தலைவர் தந்திருக்கிறார். தோல்விகளும் நிறைய உண்டு. இது இருநூறுக்கும் மேல் மட்டுமே நடந்ததல்ல. 1952-இலிருந்தே வெற்றிகளும், தோல்விகளும் தலைவருக்கு சர்வ சாதாரணம். படங்களின் வெற்றியாலோ அல்லது தோல்வியாலோ எள்ளளவும் பாதிக்கப் படாத அபூர்வ நடிகர் நம் தலைவர். தொடர் வெற்றிகளைக் கொடுத்தாலும் சரி, தொடர் தோல்விகளைக் கொடுத்தாலும் சரி அவர் அவர்தான். அவர் சாதனையை யாரும் தொட்டுக் கூடப் பார்த்து விட முடியாது. காரணம் திறமை! அசைக்க முடியாத திறமை! உலகில் யாருக்குமே வாய்க்காத திறமை! ஈரேழுலோகத்திலும் எவரும் நினைத்துப் பார்க்க முடியாத திறமை! சிவனே பார்த்து சிலாகித்த திறமை! தன்னம்பிக்கை கொண்ட திறமை! அந்த அற்புதத் திறமை ஒளி வீசிப் பிரகாசித்த அவருடைய இன்னொரு படம்தான் தாம்பத்யம். அவருடைய திரையுலக வாழ்க்கை முடியப் போகும் இறுதிக் காலகட்டத்தில் கூட அந்த கிழட்டு சிங்கத்தின் கில்லாடித்தனங்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்ட படம்.
சரி! 1987-இல் வெளி வந்த இந்தப் படத்தில் அப்படி என்ன விசேஷம்! பெரிய அளவில் விசேஷமெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு சாதாரணப் படம்தான். ஆனால் நல்ல படம். நல்ல நடிப்பைக் கொண்ட ஆனால் கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்ட வீணாய்ப் போன நல்ல படம்.
தாம்பத்யத்திற்கு முன் வந்த ஜல்லிக்கட்டு (28.08.1987) ஒரு சூப்பர் ஹிட் மூவி. ஜல்லிக்கட்டுடன் சேர்ந்து வெளியான தேங்காய் சீனிவாசனின் கிருஷ்ணன் வந்தான் ஒரு சுமாரான வெற்றிப்படம். அதற்கு முன் இரண்டு தெலுங்குப்படங்கள். விஸ்வநாத நாயக்கடு (தெலுங்கு) 14.08.1987 அக்னி புத்ருடு (தெலுங்கு) 27.08.1987. இதை விட்டு விடுவோம்.
அதற்கும் முந்தைய படங்கள்
ராஜ மரியாதை (14.01.1987)
குடும்பம் ஒரு கோவில் (26.01.1987)
முத்துக்கள் மூன்று (06.03.1987)
வீர பாண்டியன் (14.04.1987)
அன்புள்ள அப்பா (16.05.1987)
இவையெல்லாம் நம்மை சோதனை செய்த படங்கள். ஏனோதானோ என்று தொடர்ந்து வந்து நம்மை ஏமாற்றிய படங்கள். தலைவர் வேறு உடல்நிலை சரியில்லாமல் இளைத்து சோர்வுற்றிருந்த கால கட்டம். அதிகமாக சோர்வுற்றிருந்த நம்மை 'ஜல்லிக்கட்டு' குளுகோஸை ஏற்றி உற்சாகமாய் துள்ளி எழச் செய்தார் தலைவர். இந்தக் காலகட்ட சூழ்நிலையில் வந்து மாட்டிக் கொண்டு வீணான படம்தான் தாம்பத்யம். பஸ்சிலோ, ட்ரெயினிலோ நாம் கடலை வாங்கி சாப்பிடும் போது இரண்டு சொத்தைக் கடலை வாயில் மாட்டிக் கொண்டால் அடுத்து உரித்துப் போடும் நல்ல கடலையும் அந்த சொத்தைகளோடு சேர்ந்து வீணாகி விட்டதைப் போன்ற ஒரு நல்ல படம்தான் இந்த தாம்பத்யம். அப்பாடா..( தாம்பத்யம் பற்றி எழுத ஆரம்பிப்பதற்கு எவ்வளவு build-up கொடுக்க வேண்டியிருக்கிறது?)
http://i1087.photobucket.com/albums/..._003861591.jpg
சரி! தாம்பத்யத்தைப் பற்றி சற்று விரிவாகத்தான் கூற வேண்டியிருக்கிறது. காரணம் இந்தப் படம் மிகக் குறைந்த நாட்களே ஓடிய படம். அடுத்து நம் ரசிகர்கள் அதிகம் பார்த்திராத படம். பொதுவாகவே நம் ரசிகர்கள் ரொம்ப சுமாரான படங்கள் என்றால் கூட தலைவரின் படங்களை குறைந்தது இரண்டு முறையாவது பார்த்து விடுவார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு அந்த வாய்ப்பு ரொம்பக் கம்மி. ஒருமுறைதான் பார்த்திருக்கக் கூடும். அதனால் படத்தின் காட்சிகள் நினைவில் இருப்பது கஷ்டமே. அப்படியே நினைவில் இருந்தாலும் ஒன்றிரண்டு காட்சிகள்தாம் நினைவில் நிற்கக் கூடும். அதுவும் ஒரு சிலருக்கே! மீண்டும் பார்த்து நினைவில் கொள்ள மறு வெளியீடு என்ற பேச்சுக்கெல்லாம் இடமேயில்லை. இணையத்தில் ஏதாவது தென்படுமா என்று பார்த்தால் மருந்துக்குக் கூட இப்படத்தைப் பற்றிய தகவல்களோ, கோபாலுக்கு ரொம்ப விருப்பமான பொம்மைகளோ இல்லை. ஒரு stamp size இமேஜ் கூட இணையத்தில் இல்லை. ராஜ் டிவிக்காரர்கள் இப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை வைத்திருக்கிறார்கள். அதுவும் raj digital plus channel இல்தான் எப்போதோ ஒருமுறை போடுவார்கள். cable காரர்கள் raj digital plus கொடுப்பதே இல்லை. dish -களிலும் raj digital plus வருவதில்லை. vcd மற்றும் dvd க்களும் இப்படத்திற்கு இல்லை.
எதிர்பார்த்து எதிர்பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடி ஒருவழியாக இப்போதுதான் இப்படத்தைப் பிடித்தேன். நானும் ரிலீசில் ஒருமுறைதான் பார்த்திருந்தேன். நிறையக் காட்சிகள் ஞாபகமில்லை. இப்போது ரீவைண்ட் செய்து பார்க்கும் போது மெய்யாலுமே சுகமான ஒரு அனுபவம் கிடைத்தது மறுப்பதற்கில்லை. மிகவும் ரசித்துப் பார்த்தேன். நிச்சயமாக எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆவல் எல்லை மீறியது. அதுதான் எழுத ஆரம்பித்து விட்டேன்.
http://i1087.photobucket.com/albums/..._000580403.jpg
படத்தின் கதை என்ன? சிம்பிள்தான். பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்தியமூர்த்தி வேறு யார்?! (சாட்சாத் நம் அன்பு தெய்வம்தான்) தன் தர்மபத்தினி ஜானகி (அம்பிகா) மற்றும் தன்னுடைய அன்பு மகள்கள் ('சங்கராபரணம்' துளசி, கலைச்செல்வி) இருவருடனும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தன் மனைவி மேல் உயிரையே வைத்திருக்கும் சத்தியமூர்த்திக்கு சதா அவளை விளையாட்டிற்கு சீண்டிப் பார்ப்பதே வழக்கம். ஜானகியோ ஒரு 'படபட' என பொரிந்து தள்ளும் ஒரு படபடப்பு முன்கோபி கேரக்டர். ஆனால் கணவனே கண்கண்ட தெய்வம். பிள்ளைகளுக்கும் பெற்றோர்கள் மீது கொள்ளைப் பிரியம். கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் அன்னியோன்யமான அன்பு கொண்டு அருமையான தாம்பத்ய (ஹைய்யா! நைசாக படத்தின் பெயரை நுழைத்து விட்டேன்) வாழ்க்கையை கலகலப்பாக நடத்தி வருகிறார்கள். இவர்களுடன் ஜானகியின் அப்பாவும் (வி கே ஆர்) கலகலப்பு பேர்வழியாய் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
சத்திய மூர்த்தியின் பெண்களில் கலைச்செல்வி ஜூனியர் வக்கீலையும் (பாண்டியன்) பத்திரிகை ரிப்போர்ட்டரான அருணா ஒரு இன்ஸ்பெக்டரையும் காதலிக்கிறார்கள். இன்ஸ்பெக்டரோ கடமை தவறாத சௌத்ரியின் வழித்தோன்றல் போல எப்போதும் கடமை கடமை என்றிருப்பவன். அவனுக்கு வாழ்வில் மிகப்பெரிய லட்சியம் ஒன்று. அவனைத் தாய்க்குத் தாயாக வளர்த்த அவனுடைய அக்கா டாக்டர் லதாவை (ராதா) கொலை செய்தவனை கண்டு பிடித்து பழி தீர்ப்பதே அது. அதற்காகவே அவன் இன்ஸ்பெக்டரானவன். பழி தீர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்துக் கிடப்பவன்.
பெண்களுடைய காதலை ஒரு சந்தர்ப்பத்தில் தெரிந்து கொள்கிறார் சத்தியமூர்த்தி. அவர்கள் காதலுக்கு பச்சைக்கொடியும் காட்டிவிடுகிறார். முதலில் மறுக்கும் தன் மனைவி ஜானகியுடனும் சாதுர்யமாகப் பேசி பெண்களின் ஆசைக்கு அவளை சம்மதம் சொல்ல வைக்கிறார். கல்யாணமும் ஏற்பாடாகிறது. திருமணத்திற்காக துணிக்கடையில் துணி எடுக்கும் போது ஆரம்பிக்கிறது வில்லங்கம். கடையில் யாரோ ஒரு தாடிக்காரன் சத்தியமூர்த்தியை தனியே அழைத்து மிரட்டும் தொனியில் பேச ஆரம்பிக்க அந்த நபரை அடையாளம் கண்டு நிலைகுனிந்து போகிறார் சத்தியமூர்த்தி. ஆனால் அவனைத் தெரியாதது போல அவனிடம் பேசிவிட்டு வெளியேறிவிடுகிறார்.
வீட்டில் கல்யாண சந்தோஷ மூடில் இருக்கும் தன் மனைவி ஜானகியுடனும், அருமை மகள்களுடனும் கடும் கோபத்தைக் காட்டுகிறார்...(அந்த மர்ம மனிதனைச் சந்தித்தன் விளைவாக). நிம்மதி இழந்து வெளியில் எதையும் சொல்ல முடியாமல் புழுவாய்த் துடிக்கிறார். இயலாமை கோபமாய் மாறுகிறது. தேவையில்லாமல் இதுவரை பார்க்காத கோபக்கார அப்பாவைப் பார்த்து பெண்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். ஜானகி கூட தன் முன் கோபங்களை மூட்டை கட்டிவிட்டு கணவன் எதையோ வெளியில் சொல்ல முடியாமல் மென்று விழுங்குகின்றானே என்று பரிதவிக்கிறாள். கணவனை சாந்தப்படுத்த முயல்கிறாள். மனைவியின் அரவணைப்பால் சற்று சாந்தமடைகிறார் சத்தியமூர்த்தி.
அந்த மர்ம மனிதன் நேராக சத்தியமூர்த்தியின் வீட்டிற்கே வந்து விடுகிறான். சத்தியமூர்த்தி அந்த நபருக்கு பயந்து, அவன் கேட்ட பணத்தைக் கொடுப்பதை அருணா பார்த்து விடுகிறாள். அதை போட்டோவும் எடுத்து விடுகிறாள். தன் அப்பாவை அந்த மர்ம மனிதன் மிரட்டுவதையும், தன் அப்பா அவனுக்கு பயந்து பணம் கொடுப்பதையும் தன் இன்ஸ்பெக்டர் காதலனிடம் சொல்லி தன் அப்பாவைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்வதோடு அந்த மர்ம மனிதனின் போட்டோவையும் அவனிடம் கொடுத்து விடுகிறாள். அந்த போட்டோவை வைத்து 'ஜக்கு' என்ற அந்த மர்ம மனிதனை பிடிக்கிறான் இன்ஸ்பெக்டர். அதற்குப் பிறகு....
கல்யாண நாளும் வருகிறது. கல்யாணத்துக்கு மாப்பிள்ளையாக வர வேண்டிய இன்ஸ்பெக்டர் காக்கி உடையில் கோபமாக வந்து நிற்கிறான். டாக்டர் சத்திய மூர்த்தியை அரெஸ்ட் செய்யப் போவதாக கூறி அனைவரையும் அதிர வைக்கிறான். காரணம் கேட்பதற்கு தன் உயிருக்குயிரான டாக்டர் அக்காவை சத்தியமூர்த்திதான் இருபது வருடங்களுக்கு முன்னால் கொலை செய்ததாகக் கூறி அதற்கான ஆதாரமாக அவனுடைய அக்காவை சத்தியமூர்த்தி கத்தியால் குத்தி கொலை செய்து கத்தியை வயிற்றிலிருந்து வெளியே எடுப்பது போன்ற ஒரு போட்டோவையும் காண்பிக்கிறான். அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக சத்தியமூர்த்தியும் தான் தான் அந்த கொலைகாரன் என்று முழுமனதுடன் ஒத்துக் கொண்டு கைதாகிறார்.
சந்தோஷமாக வாழ்ந்த குடும்பம் சங்கடத்துக்குள்ளாகி தவிக்கிறது. ஜானகி தன் கணவன் கொலை செய்திருக்க முடியாது என்று நம்புகிறாள். ஆனால் கணவன் ஏன் குற்றத்தை தானே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று குழம்புகிறாள். பெண்களோ அப்பா கொலைகாரன்தான் என்று தீர்மானித்து விடுகிறார்கள். அப்பாவை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். அருணா இன்ஸ்பெக்டரிடம் சென்று தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்க இன்ஸ்பெக்டரோ, "என் அக்காவைக் கொன்ற உன் அப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக பழி தீர்க்க உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் இருப்பதுதான் சிறந்த வழி" என்று உதாசீனப் படுத்தி அனுப்பி விடுகிறான்.
ஜானகி ஜெயிலுக்கு சென்று கணவனிடம் நடந்ததை சொல்லுமாறு வற்புறுத்துகிறாள். சூழ்நிலை காரணமாகத்தான் அந்தக் கொலையை செய்ததாக மட்டும் கூறுகிறார் சத்தியமூர்த்தி. ஆனால் ஜானகியோ வேறு விதமாக முடிவு செய்கிறாள். "கொலை செய்யப்பட்ட டாக்டர் லதாவிற்கும், உங்களுக்கும் கள்ளக்காதல்... அந்தத் தொடர்பு வெளியே தெரியாமல் இருக்கத்தான் நீங்கள் லதாவைக் கொலை செய்தீர்கள்" என்று சத்தியமூர்த்தியிடம் வெடிக்கிறாள். இதுவரை தன் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி வெட்கப்படுவதாகக் கூறிக் கதறுகிறாள். கணவன் தனக்கு துரோகம் செய்து விட்டதாகக் கூறி வெதும்பி வெளியேறுகிறாள். அனைத்திற்கும் மௌனம் காக்கிறார் சத்தியமூர்த்தி.
http://i1087.photobucket.com/albums/..._001320711.jpg
ஜெயிலில் இருந்து வீடு திரும்பிய ஜானகி தன் கணவன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக எண்ணி எண்ணி வருந்தி கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு அறையில் அடைபட்டு மயக்கமாகக் கிடக்கிறாள். பரிசோதனை செய்த டாக்டர் ஜானகியின் இதயத்துடிப்பு மிக பலவீனமாக இருப்பதாகவும், உடனே இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். விஷயம் சத்தியமூர்த்திக்குத் தெரியவர ஜானகிக்குத் தானே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் மனு கொடுக்க, கோர்ட்டில் அந்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. காரணம் தன் கணவர் கையால் தனக்கு ஆபரேஷன் நடப்பதை ஜானகியே விரும்பாததால்தான். அவ்வளவு வெறுப்பு அவளுக்குத் தன் கணவன் மேல்.
ஆனால் சத்தியமூர்த்தி தன்னால்தான் ஜானகியைக் காப்பாற்ற முடியும் என்று தீர்மானமாக நம்புகிறார். அதனால் ஜானகிக்கு ஆபரேஷன் செய்ய ஜெயிலில் இருந்து தப்பி வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வரும் தன் அப்பாவை கொலைகாரன் என்றும், அவரால்தான் தன் அம்மாவிற்கு இந்த கதி நேர்ந்தது என்றும், அவர் கையால் தன் அம்மாவிற்கு ஆபரேஷன் செய்வதை தான் அனுமதிக்க முடியாது என்றும் கத்துகிறாள் செல்ல மகள் அருணா. மகளின் தரம் கெட்ட பேச்சைக் கேட்டு கொதித்துப் போகிறார் சத்தியமூர்த்தி. அவளை அடித்தும் விடுகிறார். மனைவிக்கு உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும்... நடந்தவை என்னவென்று மகளுக்கும் தெரிய வேண்டும், நமக்கும் தெரிய வேண்டும் என்று தன்னுடைய பிளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பிக்கிறார்.
இனி பிளாஷ்பேக்
http://t2.gstatic.com/images?q=tbn:A...3z3ABK31kU90VQ
இருபது வருடங்களுக்கு முன்
http://i1087.photobucket.com/albums/..._002835631.jpg
மெடிக்கல் காலேஜில் research செய்யும் professor ஆக பணி புரியும் இளம் டாக்டர் சத்தியமூர்த்தி. அவருடன் பணி புரியும் அழகான இளம் டாக்டர் லதா (ராதா). இருவருக்கும் அளவான, அழகான நட்பு. லதாவிற்கு சத்தியமூர்த்தி மீது ஒருதலைக் காதல். அதே போல் சத்தியமூர்த்தி குடியிருக்கும் house owner (V.K.R) இன் மகள் ஜானகியும் (அம்பிகா) சத்தியமூர்த்தியை கண்மூடித்தனமாகக் காதலிக்கிறாள். சத்தியமூர்த்தியை தான் தற்கொலை செய்வதாகக் கூறி செல்லமாக மிரட்டியே தன்னைக் காதலிக்க வைத்து விடுகிறாள் ஜானகி. சத்தியமூர்த்தியும் ஜானகியை விரும்பி கல்யாணத்துக்கும் சம்மதிக்கிறார். லதா வீட்டிற்கு சென்று அவளிடம் திருமண பத்திரிக்கை கொடுக்கிறார். ஜானகியை தான் விரும்பி கல்யாணம் செய்து கொள்ளப் போவதையும் கூறுகிறார். பத்திரிகை பார்த்து லதா அதிர்ச்சியடைகிறாள். ஆனால் அப்போதும் பேசா மடந்தையாய் இருந்து சத்திய மூர்த்தி மேல் தனக்குள்ள காதலை மறைத்து விடுகிறாள்.
இதற்கு நடுவில் வி.கே.ஆரின் நண்பர் ஒருவர் தன் மகன் ஜக்கு (மலையாள நடிகர் ஜனார்த்தனன்)விற்கு (அதே மர்ம நபர்தான்) ஜானகியை திருமணம் செய்து கொடுக்கக் கேட்க அதற்கு வி.கே.ஆர் மழுப்பலாக பதில் சொல்லி அனுப்பி விடுகிறார். இப்போது ஜானகிக்கும், சத்தியமூர்த்திக்கும் திருமணம் இனிதே நடக்கிறது. கல்யாணம் ஆன கையேடு சத்தியமூர்த்திக்கு வெளியூரில் வேலை கிடைத்து விட, அதை ஏற்று ஜானகியுடன் வெளியூர் சென்று வேலை பார்க்கிறார் சத்திய மூர்த்தி.
வி.கே.ஆரின் நண்பர் தன் மகன் ஜானகிக்குத் திருமணம் நடந்தது தெரியாமல் ஜக்குவிற்காக மீண்டும் ஜானகியை பெண் கேட்டு வர, ஜானகிக்கு சத்தியமூர்த்தியுடன் திருமணம் முடிந்த விஷயத்தை அவர்களிடம் தெரியப்படுத்துகிறார் வி.கே.ஆர். இதனால் கோபமுறும் ஜக்கு சத்தியமூர்த்தியையும், ஜானகியையும் பழி வாங்கத் துடிக்கிறான். அவனிடம் ஒரு பழக்கம். எதையுமே கேமராவினால் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு ப்ளாக்மெயில் செய்வதுதான் அது.
வெளியூர் சென்ற சத்தியமூர்த்தி தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. ஒருநாள் தம்பதியர் குழந்தையுடன் இருவரும் வெளியே போகும்போது எதிர்பாராமல் லாரி விபத்தொன்றில் சிக்கி தன் சுய நினைவை இழக்கிறாள் ஜானகி. குழந்தை போல மாறி விடுகிறது அவள் குணம். ('மூன்றாம் பிறை' ஸ்ரீதேவி போல) சத்திய மூர்த்தி அவளை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று குணப்படுத்த முடிவெடுக்கிறார். முதலில் தான் மட்டும் சென்று அந்த மனோதத்துவ நிபுணரைப் பார்க்க முடிவெடுத்து செல்கிறார்.அங்கெ போய்ப் பார்த்தால் அது மெடிக்கல் காலேஜில் அவருடன் பணி புரிந்த டாக்டர் லதா. நிரம்ப வசதியாகப் போயிற்று. லதா சத்தியமூர்த்தியின் மேல் கொண்ட காதலால் திருமணம் செய்யாமலேயே வாழ்க்கை நடத்துகிறாள். சத்தியமூர்த்தி ஜானகியின் பரிதாப நிலையைப் பற்றி லதாவிடம் கூறுகிறார். தான் ஜானகியை குணப்படுத்துவதாக சத்தியமூர்த்தியிடம் கூறுகிறாள் லதா. சத்தியமூர்த்தியை பழிவாங்கத் துடிக்கும் ஜக்குவும் சத்தியமூர்த்தியைத் தேடி அவர் இருக்கும் இடத்திற்கே வந்து அவரை watch செய்தபடியே இருக்கிறான்.
http://i1087.photobucket.com/albums/..._003996191.jpg
ஒருநாள் ஜானகிக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர் லதா ஜானகி வீட்டிற்கு செல்ல, அங்கே தன் நிலை மறந்த ஜானகி தன் குழந்தையை மாடிப்படிகளில் கைப்பிடியில் தவழ வைத்து விளையாடப் பார்க்கிறாள். அதைக் கண்டு துடித்துப் போகும் லதா எவ்வளவோ எச்சரித்தும் ஜானகி குழந்தையை கைப்பிடிகளில் சறுக்கி விட்டு விடுகிறாள். நல்ல வேலையாக லதா குழந்தையைப் பிடித்துக் காப்பாற்றி விடுகிறாள். குழந்தையை தன்னிடம் கொடுக்கச் சொல்லி லதாவை ஜானகி வற்புறுத்த, லதா குழந்தையின் உயிருக்கு ஜானகியினால் ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி குழந்தையை ஜானகியிடம் கொடுக்க மறுக்க, கோபமுறும் தன் நிலை மறந்திருக்கும் குழந்தை போன்ற ஜானகி கையில் கிடைத்த பொருளை எல்லாம் எடுத்து லதாவின் மேல் வீச, லதா குழந்தையை அங்கிருக்கும் நர்ஸிடம் பத்திரமாக ஒப்படைத்து விடுகிறாள். தொடர்ந்து லதாவைத் தாக்கிக் கொண்டிருக்கும் ஜானகி தான் செய்வது இன்னதென்று தெரியாமல் பழம் அறுக்கும் கத்தியை எடுத்து லதா மேல் வீச, வயிற்றில் கத்திக்குத்து பட்டு லதா உயிருக்குப் போராடுகிறாள். அந்த சம்பவத்தைப் பார்க்கும் ஜானகி அதிர்ச்சியில் மயக்கமாகிறாள். மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் லதாவை அவ்வமயம் அங்கு வந்து விடும் சத்தியமூர்த்தி பார்த்து விடுகிறார். வயிற்றில் கத்தி செருகப்பட்டிருக்கும் நிலையில் துடிக்கும் லதாவைக் காப்பாற்ற அவள் வயிற்றிலிருந்து கத்தியை சத்தியமூர்த்தி எடுக்கப் போக, சரியான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த ஜக்கு அதைப் படம் பிடித்து விட்டு ஓடி விடுகிறான். லதா உயிரை விடப் போகும் நிலையில் தனக்கிருந்த சத்தியமூர்த்தி மீதான காதலை அவரிடம் சொல்கிறாள். சத்திய மூர்த்திக்கு இதுவும் ஒரு அதிர்ச்சி. அதுமட்டுமல்லாமல் லதா ஜானகி தன் மீது கத்தி வீசியதைப் பார்த்து அதிர்ச்சியில் மயக்கமுற்றதால் அந்த அதிர்ச்சியே அவளை பழைய நிலைக்குத் திரும்ப குணப்படுத்தி இருக்கக் கூடும் என்றும், அப்படி பழைய மாதிரி அவளுக்கு நினைவு திரும்பியிருந்தால் தற்போது நடந்த எந்த நிகழ்வையும் அவளிடத்தில் சொல்லக் கூடாது... அப்படிச் சொன்னால் தான் ஒரு கொலைகாரி என்ற குற்ற உணர்வே அவளைக் கொன்று விடும் என்று கூறி அதைக் கூறாமல் ஜானகியைப் பார்த்துக் கொள்ளும்படி கூறி தன் ஒருதலைக் காதலன் மடியிலேயே உயிர் நீக்கிறாள் லதா. தன் குடும்பத்தையே காப்பாற்றிய அந்த தூய உள்ளத்தை நினைத்து உள்ளம் கலங்குகிறார் சத்தியமூர்த்தி.
முன் கதை தொடர்ச்சி...
http://i1087.photobucket.com/albums/..._004557791.jpg
தான் எடுத்த அந்த போட்டோவைக் காட்டித்தான் போலீஸிடமும், ஜானகியிடமும் சொல்லிவிடுவதாக ஜக்கு சத்திய மூர்த்தியிடம் பிளாக்மெயில் செய்து பணம் பறித்தான். தன் அம்மாவிற்காக தன் தந்தை கொலைகாரப் பட்டம் ஏற்றுக் கொண்ட தியாக உள்ளத்தை எண்ணி, உண்மையை உணர்ந்து, தந்தையை அறிந்து, தந்தையிடம் மன்னிப்பு கேட்கிறாள் அருணா. தன்னுடைய ஹாஸ்பிட்டலுக்கு தன் மனைவி ஜானகியைக் கொண்டு சென்று மகள்களையும் மாமனாரையும் காவலுக்கு வைத்து விட்டு ஜானகிக்கு பல்வேறு இன்னல்களுக்கும், தடங்கல்களுக்கும் இடையே இருதய ஆபரேஷனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறார் சத்திய மூர்த்தி. சத்தியமூர்த்தியை பிடிக்க கழுகாய் வட்டமிடும் இன்ஸ்பெக்டரும் அருணா மூலம் உண்மையை உணருகிறான். ஜானகி, மற்றும் அனைவருக்கும் உண்மை தெரிய வருகிறது. ஜானகி தன்னுடைய தவறுகளுக்காக சத்தியமூர்த்தியிடம் மன்னிப்புக் கோருகிறாள். அவர்களுக்குள் இருந்த அன்னியோன்யமான தாம்பத்யம் மீண்டும் மலர்ந்து மணம் பரப்ப ஆரம்பிக்கிறது. அவர்களுடைய மகள்களுக்கும் திருமணம் இனிதே நடைபெற முடிவு மங்களம்.
தாம்பத்யம்...தொடர்ச்சி
ஒரு தாராள அலசல்.
தலைவர் சாம்ராஜ்யம்.
http://i1087.photobucket.com/albums/..._000249535.jpg
அருமையான பாத்திரம். அதுவும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர். பாந்தமான தோற்றம். அரண்மனை போன்ற வீட்டில் கிட்டத்தட்ட (ஏவிஎம் வீடு செட் மாதிரி) மாடிப்படிக்கட்டுகளில் அவர் சூட்கேஸுடன் ஹாஸ்பிட்டலுக்கு புறப்பட்டு இறங்கி வரும் அறிமுகக் காட்சியே நம்மை கிறங்க வைத்து விடும். அம்பிகாவுடம் இவர் ஆரம்பிக்கும் சீண்டல்கள் எல்லாம் சுவையோ சுவை. Flower wash இல் செம்பருத்திப் பூவை அம்பிகா வைக்க சொல்லி வேலையாட்களிடம் ஆர்டர் பண்ண, நம்மவரோ ரோஜாதான் வைக்க வேண்டுமென அடம் பிடிக்க,"செம்பருத்தி ஏன் பிடிக்காது? என அம்பிகா வினவ, அதற்கு இவர் "Rose ... ரொமாண்டிக் flower...செம்பருத்தி சாமிக்குப் போடுற பூடி... கிழவிகளுக்குதான் பிடிக்கும்" என்பார். என்ன ஒரு நக்கல்!... பதிலுக்கு அம்பிகா, "இவர் குமரன்...பேரன் பேத்தி எடுக்கிற வயசு" என்று எதிர் நையாண்டி செய்ய, "பேரன் பேத்திகளை வச்சி வயசை எடை போடறதில்ல...spirit, outlook, behaviour" என்று கட்டை விரலை உயர்த்தியபடியே,"இத வச்சிதாண்டி எடை போட்றாங்க", என்று ஆடியபடியே நடிகர் திலகம் சொல்வது, "நான் என்னைக்குமே ஹீரோதாம்மா! ( நூற்றுக்கு இருநூறு உண்மை) வாவ்!... ரகளை.
அதேபோல நடிகர் திலகத்தின் நகைச்சுவை பஞ்சுக்கு ஒரு உதாரணம். பெண்கள் இருவரும் தாத்தா வி.கே.ராமசாமியின் பாட்டுக்கு பயந்து ஓடிவர, தலைவர் விவரம் கேட்க, பெண்களோ,"தாத்தா கல்யாணியைப் பாடித்தான் ஆகணும்னு அடம் பிடிக்கிறாரு", என்று சொல்ல நம்மவரோ வி.கே.ஆரிடம்," ஏன் மாமா அடம் பிடிக்கிறீங்க? கல்யாணியைப் பிடிக்கலன்னா பண்டரிபாய்கிட்ட சொல்லுங்க... இல்ல மைனாவதிகிட்ட சொல்லி பாட வைங்க", என்று போடுவாரே ஒரு போடு!
பத்திரிகை நிருபர் அருணாவை இன்ஸ்பெக்டர் ஒரு விஷயத்திற்காகப் பிடித்து வைக்க, பெண்ணை ஜாமீனில் எடுக்க வரும் தலைவர் முதலில் இன்ஸ்பெக்டரை மிரட்டுவது போல act செய்துவிட்டு பின் இன்ஸ்பெக்டரின் கடமை உணர்ச்சியைப் பாராட்ட, அதற்கு இன்ஸ்பெக்டர் இவரிடம், "சார் நீங்க டாக்டரா? இல்ல ஆக்டரா?" என்று மெய்மறந்து கேட்க, "ஆக்டரா? ஆக்டிங் பத்தி எனக்கு மண்ணாங்கட்டி கூட தெரியாதப்பா... நான் ஒரு சாதாரண ஆளு"....என்று தலைவர் ஒரு நெத்தியடி அடிப்பாரே பார்க்கலாம். (ஆழம் பார்க்குரதிலே மனுஷன் கில்லாடிப்பா)
http://i1087.photobucket.com/albums/..._000041124.jpg
பெண்ணை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனில் பிடித்து வைத்து விட்டார் என்று அம்பிகா கிளினிக் வந்து நடிகர் திலகத்திடம் படபடப்பாகக் கூறி ஜாமீனில் எடுத்து வர சொல்ல, நடிகர் திலகமோ அலட்டிக் கொள்ளாமல் தன் patient ஐ பார்த்துக் கொண்டிருக்க, கோபித்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லும் அம்பிகா கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு அமர்க்களம் செய்ய, ஸ்டேஷனிலிருந்து பெண்ணோடு வரும் நடிகர் திலகம் அம்பிகாவை ரூமை விட்டு வெளியே வரவழைக்க அபிநயம் பிடித்தபடி பெண்களுடன் நாட்டியம் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி. (எங்க வீட்டு மகாலக்ஷ்மியே ! மங்கையர் திலகமே! மாதர்குல மாணிக்கமே") தபலா வாசிப்பு, புல்லாங்குழல் வாசிப்பு என்று சில வினாடிகளே ஆனாலும் தலைவரின் ஆளுமையை அவற்றில் பார்க்கலாம். பாடல் முடிந்தவுடன் அம்பிகா சாந்தமடைந்து வெளியே வர இவர் ஓடிப்போய்,"அடி என் சக்காளத்தி... சக்காளத்தி," என்று இழுத்து முழக்கியபடியே கொஞ்சி அணைப்பது கொள்ளை அழகு.
http://i1087.photobucket.com/albums/..._000004964.jpg
நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை படத்தில் மிக ஹைலைட்டான காட்சிகள் இரண்டு.
முதல் காட்சி.(காமெடி கலந்த கலகலப்பு)
http://i1087.photobucket.com/albums/..._000161471.jpg
தனக்கு நடந்த பாராட்டு விழவில் சந்தர்ப்ப சூழ்நிலையால் அதுவரை தண்ணி போடாதவர் தண்ணி போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்து ரெண்டு படுத்தும் சீன். சும்மா கொடி பறக்கிறது. ஒரிஜினல் தண்ணி போட்டவனெல்லாம் என்ன செய்ய முடியும்? அப்படி ஒரு அதலகதள அமர்க்களம். வீட்டின் வாசல் கதவை வேலைக்காரர் மூர்த்தி திறந்தவுடன் ஒன்றும் புரியாமல் சில வினாடிகள் அப்படியே காலை bend செய்தவாறு சுற்றும் முற்றும் மயங்கிப் பார்ப்பது... மப்பில் வீடு சுற்றும்போது வாயைக் கோணியபடியே,"வீடு ஆடுது... வீடு குடிச்சிட்டு வந்திருக்கா? வீட்டக் கட்னவன் நான்... கொஞ்சம் பயபக்தி வேணும்... எதிலுமே நிதானம் வேணும். stop it", என்று கட்டளை வேறு வீட்டிற்கு இடுவார். வீடு சுழல்வது நின்றவுடன்," இப்பதான் நல்ல வீடு... என்று certificate வேறு. வேலையாள் மூர்த்தியைக் "குடிச்சிருக்கியா?" என்று பெண்டு நிமிர்த்துவார்.
"அம்மாவை கூப்பிடு" என்பார் மூர்த்தியிடம்.
மூர்த்தி,"அம்மா... அம்மா என்று அம்பிகாவைக் கூப்பிட்டவுடன் அம்பிகா வழக்கம் போல் பட படவென பொரிந்தபடியே வர, அதிகார தோரணையோடு,"ஏய் கழுத"...என்று நிறுத்தி சில வினாடிகள் gap கொடுத்து மீண்டும் "கழுத" என்று நடிகர் திலகம் உரக்க தரும் ஒரு அழுத்தம். ஏக ரகளையே நடக்கும். அம்பிகா இவர் குடித்து கலாட்டா செய்வதை தாங்கமாட்டாமல் வியப்புடன் பார்க்கும் போது அம்பிகா அருகில் போய் வாயை வேறு ஊதிக் காண்பிப்பார். "குடிச்சிருக்கேன்னு பார்க்கிறியா? குடிப்பேன்... குடித்துக் கொண்டே இருப்பேன்" என்று அழிச்சாட்டியம் பண்ணுவார். நடுநடுவே இந்திப்பாட ல்களின் வரிகளை (பியா தோ) வேறு ராகம் இழுப்பார். "என்னை என்ன பொண்டாட்டிக்கு பயந்தவன்னு நெனச்சியா? யாருக்கு யார் பயப்படறாங்கன்னு பார்ப்போமா," என்று அலட்சியமாக சொல்லியபடி அம்பிகாவுக்கு விழுமே ஒரு அறை! (இந்த இடத்தில் வாழ்க்கையின் சில நுணுக்கங்களைப் புரிய வைப்பார் தலைவர். வாழ்க்கை முழுதும் படபடவென்று பொரிந்து தள்ளும் மனைவியுடன் காலம் கழிக்கும் போது (அவள் நல்லவளாகவே இருந்தாலும் கூட) ஒரு சமயம் வெறுப்பும் சலிப்பும் ஏற்படத்தான் செய்யும். இந்த மாதிரி சமயங்களில் அதுவரை வாய்மூடி மௌனியாக இருப்பவன் தண்ணி அடித்தால் தடி எடுத்த தண்டல்காரன் ஆகிவிடுவான். அன்று அவன் சக்கரவர்த்தி... அதுவரை அவன் மனதில் வைத்திருந்ததெல்லாம் வார்த்தைகளாக வந்து தேள் கொடுக்காகக் கொட்டும். அன்று அவன் யாருக்கும் அடிமை இல்லை.. அன்று அவன் வைத்ததுதான் சட்டம். மனைவிக்கு உதையும் அன்று கிடைக்கும்.(அடுத்தநாள் பற்றி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்) அவள் ராட்சஸியாக இருந்தால் கூட அன்று அவள் அடங்கித்தான் போக வேண்டும். அதை அப்படியே நடிகர் திலகம் கண்ணாடி மாதிரி பிரதிபலிப்பார். எப்பேர்ப்பட்டவன் மனநிலையையும் அடுத்தவருக்கு புரிய வைக்கும் சக்தி கொண்ட மாபெரும் மேதையல்லவோ நம் தலைவர். அவர் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்யும் காட்சிகளை பல படங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம். ஆனால் வயதான பிறகு அதுவும் உடல்நலம் குன்றிய நிலையில் இதுவரை எந்தப்படத்திலும் வழங்காத ஒரு நடிப்பை இந்தக்காட்சியில் அந்த மாபெரும் மேதை வழங்கியதாலேயே மட்டுமே இப்படம் சிறப்புப் பட்டியலில் இடம் பெறுகிறது. (இதில் அவர் குடிகாரர் அல்ல... தனக்கு பாராட்டு விழா நடத்தும் நண்பர்களின் வற்புறுத்தலுக்கிணங்க குடிக்க வேண்டிய கட்டாயம் ஆகி விடும்)
அதே போல தன்னைக் கண்டிக்கும் மாமனார் வி.கே.ராமசாமி இவரிடம் படும் பாடு... மாமனாரை இவர் அழைப்பதைப் பாருங்கள்!...(டேய்! வாடா இங்கே உன்னதாண்டா சின்னப் பயலே!) செல்ல மகள்களுக்கும் தர்ம அடி விழும். பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுப்பார். சிகரெட் விஷயத்தில் மனைவி ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வார். ("உன் முன்னாலே நான் சிகரெட் பிடிக்கக் கூடாதா? குடிக்கலாமா இல்லையா?" என்று குரலை ஓங்குவார்). அம்பிகா நைசாக,"கொஞ்சம் மோர் குடிச்சுடுங்களேன்", என்று தெளிய வைக்க பார்ப்பார். அதற்கு double meaning இல் இவர் பதில் சொல்வார். (no moar...no more) Excellent performance கொடுத்திருப்பார்.
இரண்டாவது காட்சி (சீரியஸ்)
http://i1087.photobucket.com/albums/..._001323351.jpg
தன்னை ஜனார்த்தனன் துணிக்கடையில் சந்தித்து மிரட்டிய பிறகு வீட்டிற்கு வந்து தலைவர் கொடுக்கும் expressions. ரொம்ப அருமையாக உணர்ந்து பண்ணியிருப்பார். வீடு கல்யாண சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்க வில்லன் மறுபடி போனில் மிரட்டியவுடன் என்ன செய்வது என்று புரியாமல் இயலாமை கோபமாய் வெடிக்க சிவன் நெற்றிக்கண்ணை திறப்பது போன்ற கோபத்தைக் காட்டுவார். அம்பிகா அவர் மௌனத்திற்கு காரணம் கேட்டவுடன் வெடிப்பாரே பார்க்கலாம். ("என்னடி நாய்...எப்படி இருக்கு உடம்பு!) அதுவரை அவ்வளவு சீரியஸ் காண்பித்திருக்க மாட்டார். மனைவியை அவ்வளவு கடுமையாக மிரட்டுவதும் அதுதான் முதல் முறையாக இருக்கும். மகளையும் அறைந்து விடுவார். மெளனமாக மெல்லிய அருமையான பின்னிசை இழையோட படிக்கட்டுகளில் மெளனமாக இறங்கி வந்து சோபாவில் அமர்ந்து சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை ஆழ்ந்து இழுத்து relax செய்வார். அம்பிகா அங்கே அருகில் வந்து அமர்வதை கவனியாதது போல இருப்பார். பின் சகஜ நிலைக்கு மெல்லத் திரும்புவார். முகமெல்லாம் வேர்த்துக் கொட்டியிருக்கும். வரக்கூடிய பிரச்னையை எப்படி சமாளிப்பது என்ற கவலை ரேகைகள் முகத்தில் ஓடும். யாரிடமும் சொல்லவும் முடியாது. நிம்மதி இல்லாமல் தடுமாறுவார். பிரமாதப்படுத்தி விடுவார்.
http://i1087.photobucket.com/albums/..._002511511.jpg
மனைவிக்கு தான் ஆபரேஷன் செய்யமுடியாத துர்பாக்கிய சூழ்நிலை. மனைவியே ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது மனம் நொந்து, "ஆண்டவரே!எத்தனையோ பேருடைய இதயத்தை குணப்படுத்தி உனக்கு சவால் விட்டிருக்கேன்...இப்ப எனக்கே நீ சவால் விடுறியா? வளைஞ்சி கொடுக்க மாட்டேன்... பார்த்துக்கலாம்," என்று தனக்குத்தானே பேசிக்கொள்வது அருமை.
http://i1087.photobucket.com/albums/..._004182312.jpg
அதேபோல ஜெயிலில் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்தவுடன் மகள் தன்னை எடுத்தெறிந்து கன்னாபின்னாவென்று பேசியவுடன் அதுவரை பொறுமையாய் இருந்து விட்டு சிங்கம் போல சீறுவார். ("யாரப் பார்த்து என்ன பேச்சு பேசற? நீ யாரு... நான் யாரு... உன் வயசென்ன என் வயசென்ன"...) என்று மகளுக்கு உண்மை நிலவரங்களை புரிய வைக்கும் காட்சி. ஒரு தந்தை தன் மகளிடம் அந்த சூழ்நிலையில் என்னென்ன எதிர்பார்ப்பான்... தன்னை அவளுக்குப் புரிய வைக்க எப்படி பாடுபடுவான்... அசத்தி விடுவார் அசத்தி. மகள் தன்னை புரிந்து கொள்ளாமல் மேலெழுந்தவாரியாக பேசுகிறாளே என்ற தவிப்பு, பின் அவளிடம் கண்டிப்பு என்று பாவங்கள் அற்புதமாய் அவரிடமிருந்து காட்டப்படும்.
http://i1087.photobucket.com/albums/..._004085631.jpg
அதேபோல தன் சக டாக்டர் ராதா இறந்தவுடன் அவர் காட்டும் முகபாவங்கள் ராகவேந்திரன் சார் சொன்னது போல மிக இயல்பாக,தேவையான அளவிற்கே இருக்கும்.
பொறுப்பான டாக்டராக, அன்பான கணவராக, அருமையான தந்தையாக, கொலைப்பழியைத் தான் ஏற்று குடும்ப மானத்தையும், மனைவியையும் காப்பாற்றும் தியாகச் சுடராக மங்காத ஒளி வீசிப் பிரகாசிக்கிறார் நடிகர் திலகம். அற்புதமான பாத்திரப் படைப்பு நம் அற்புதமான பிறவியினால் மெருகேற்றப்பட்டு நம் எல்லோரையும் மெய்மறக்கச் செய்கிறது.
http://i1087.photobucket.com/albums/..._000045564.jpg
தலைவருக்கு அடுத்து இப்படத்தில் கொடி நாட்டுவது அம்பிகாதான். அருமையிலும் அருமை. 'வாழ்க்கை' நாயகியாய் வளைந்து கொடுத்தவர் இதில் 'சலசல' நீரோடையாய் வெற்றிநடை பயணிக்கிறார் நாயகனுக்கேற்ற நாயகியாக. பட படவென பொரிந்து தள்ளுவதும், 'சட் சட்'டென்று முன் கோபப்படுவதும், புருஷன் குணமறிந்து அடங்கிப்போவதும், பிள்ளைகளிடம் கண்டிப்புமாக பின்னியெடுக்கும் நடிப்பு. சதா விஜாயாவையும், பத்மினியையும் பார்த்து சலித்த கண்களுக்கு fresh ஆன தலைவருக்கேற்ற நடுத்தர வயது பெண்மணியாக அட்டகாசமாகப் பாத்திரத்திற்கு பொருந்தி விடுகிறார் அம்பிகா. ஜெயிலில் கணவனை சந்தித்து தனக்கு துரோகம் இழைத்ததாக அவன் மேல் குற்றம் சாட்டிவிட்டு, "இத்தனை வருஷமா உங்களை கடவுளா கோவிலா நெனச்சிகிட்டிருந்தவ நான்... எனக்குத் தெரியாம உங்களுக்கு ஒரு பொண்ணோட தொடர்பு இருந்திருக்குன்னா நீங்க எனக்கு கணவரும் இல்ல... கடவுளும் இல்ல"... என்று உணர்ச்சியில் உருகும் கட்டம் உன்னதம்.
பின் வீட்டிற்கு வந்து யாரிடமும் ஒன்றுமே பேசாமல் வெறுத்துப் போய் கணவன் சம்பந்தப்பட்ட பொருள்களையெல்லாம் ஒவ்வென்றாக போட்டு உடைத்தபடியே, மாடிக்கு அழுகையை அடக்கியபடியே கோபம் கொப்பளிக்க செல்வது பின்னாட்களில் நடிகர் திலகத்தின் மிகப் பொருத்தமான ஜோடி அம்பிகாதான் என்று கூக்குரலிடச் சொல்கிறது. இளவயது நடிகர் திலகத்திடம் கட்டாயமாக காதலிக்கச் சொல்லி அவரை மிரட்டி காதலில் பணிய வைப்பது சுவாரஸ்யம். (அம்பிகா மிக அழகாகக் காட்சியளிக்கிறார் இக்காட்சிகளில்)
மது அருந்திவிட்ட குற்ற உணர்ச்சியில் அறையில் ஒளிந்து கொண்டிருக்கும் திலகத்தை அவர் பாடி வரவழைத்தது போலவே அம்பிகா தன் பெண்களுடன் ஆடிப் பாடி வரவழைப்பது பொருத்தம். அருமையும் கூட. அம்பிகா தன் மகள்களாக நடிக்கும் சிறுவயது பெண்களைவிட அருமையாக ஸ்டெப் வைத்து ஆடியிருப்பார் இப்பாடலில்) அம்பிகா ஜாடிக்கேத்த மூடி கனகச்சிதம்.
http://i1087.photobucket.com/albums/..._004067831.jpg
ராதா சிறிது நேரமே வந்தாலும் பரிதாபத்துக்குரிய பாத்திரம். நினைவில் நிற்கிறார். பாண்டியன், துளசி, கலைச்செல்வி, ஜனார்த்தனன் வி.கே.ஆர், மூர்த்தி, திடீர் கன்னையா என்று நடிக நடிகையர்.
செல்வி T.S கல்யாணியின் தயாரிப்பு. ஒளிப்பதிவு ரம்மியம். விஸ்வநாதராய் அவர்களின் விசுவாசமான ஒளிப்பதிவு. மனோஜ் கியான் இரட்டையரின் மனதை வருடும் இசை. ("கண்ணனே! மன்னனே!"... காதுகளில் ரீங்காரமிடும் பாடல்) வலம்புரி சோமநாதனின் வளமான வசனங்கள் ("Law practice பண்ணும் போதே லவ் practice ம் பண்ற போலிருக்கு") செழியனின் நச் எடிட்டிங், வாலியின் பாடல் வரிகள்... அம்பிகா நடிகர் திலகத்தை வெளியே வரவழைக்க பாடும் பாட்டில் தலைவர் புகழை அவர் நடித்த படங்களின் பெயர்கள் மூலமே பாடல் வரிகளை அமைத்திருக்கும் புத்திசாலித்தனம்.(வா கண்ணா வா... வாழ்க்கை நீயல்லவா... பந்தம் போதுமா... பாசமலர் வாடுமா... நீ இருந்தால் இது வசந்த மாளிகை... நீ இல்லையேல் இது வியட்நாம் வீடு... இங்கு உனக்குத் தான் முதல் மரியாதை) எப்படி சூப்பரா இல்ல...
இயக்கம் எனது மனம் கவர்ந்த இயக்குனர் விஜயன். தெளிந்த நீரோடை போன்ற பயணிப்பு. அனாவசிய சீன்களே வைக்க மாட்டார். சொல்ல வந்ததை எப்போதுமே நச்சென்று சொல்லுவார். வெற்றிப்பட இயக்குனர் என்பதை சொல்லவும் வேண்டுமோ! விஜயன் இயக்கத்தில் நடிகர் திலகம் பங்கு கொண்டாலே செம விருந்துதான்.
குறைகளும் உண்டு. முக்கியமானது பிளாஷ்பேக்கில் இளவயது டாக்டராக வரும் நடிகர் திலகத்தின் மேக்-அப். நன்றாக கோட்டை விட்டிருப்பார்கள். நடிகர் திலகத்திற்கு முன் வரிசைப் பற்கள் வேறு சில இருக்காது. அதை கவனித்து சரி செய்திருக்கலாம். நடிகர் திலகத்தின் வயது வேறு அவரை research செய்யும் இளம் டாக்டராக ஏற்றுக்கொள்ள நமக்கு இடம் கொடுக்காது. முன் வரிசைப் பற்களைக் கட்டிக் கொண்டு நடித்திருக்கலாம். அலட்சியமாக விட்டிருப்பார்கள். மீசையை மாற்றி அமைத்திருக்கலாம். Inn செய்யாமல் dress ஐ சாதாரணமாகவே விட்டிருக்கலாம். சில இடங்களில் நடிகர் திலகம், நல்ல உடல்நிலையில் இருந்த போது இருந்த தோற்றத்திலும், சில இடங்களில் உடல் நலிவுற்று பின்னர் இருந்த தோற்றத்திலும் காணப்படுவார். இளவயது பாத்திரத்தில் மிகவும் சோர்வாகத் தெரிவார். இருந்தாலும் தன் அசாத்தியமான நடிப்புத்திறமையால் அந்தக் குறையைப் போக்கி விடுவார். வசனங்களை ஒருவர் பேசி முடிப்பதற்குள் அடுத்தவர்கள் பேசுவது கேட்பது மிகப் பெரிய குறை. நடிப்பு ஸ்கோர் பண்ண நம்மவருக்கும் அம்பிகாவுக்கும்தான் சான்ஸ். மற்றவர்கள் யாவருமே ஒப்புக்குச் சப்பாணியாகத்தான் வலம் வருகிறார்கள். பிளாஷ்பேக் சீனைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
இந்தப் படத்தை அந்தக்கால நடிகர் திலகத்தின் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். சமகாலத்தில் வந்த நடிகர் திலகத்தின் படங்களுடன் ஒப்பிட்டால் இந்தப் படம் டாப்தான். அருமையான குடும்ப சப்ஜெக்ட். முகம் சுளிக்கும் காட்சிகள் அறவே இல்லை. நல்ல கதையும் கூட. சரியான விளம்பரம், தகுந்த சமயத்தில் வெளியீடு, படங்களுக்கிடையே நல்ல Gap என்று வந்திருந்தால் நல்ல வெற்றியைக் கூட இந்தப் படம் பெற்றிருக்கலாம். இப்படிப்பட்ட படங்கள் பல நம் கண்ணுக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன. நாமும் இது போன்றவற்றில் அதிக அக்கறை கொள்வதுமில்லை. ஒரு கண்மூடித்தனமான கொள்கையை விட்டு விட்டு வெளியே வந்தோமானால் இது போன்ற நல்ல படங்கள் நன்கு பேசப்படலாம். நடிப்புக்காகவே இறுதி வரை வாழ்ந்த அந்த மேதை ஆரம்பம் முதல் முடிவு வரை பல அற்புதங்களை நமக்கு அள்ளி வழங்கிச் சென்றிருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாக அள்ளிப் பருகி அனைவரும் மகிழ வேண்டும் என்பதே என் விருப்பம்.
படம் வெற்றியோ தோல்வியோ அதை விட்டு விடுவோம். கோபால் சார் சொன்னது போல இந்தப்படம் ஒரு surprise package தான்.
நன்றி!
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
CONGRATULAIONS DEAR VASUDEVAN SIR
3000 SUPER POSTINGS - ALL THE BEST.
WITH CHEERS
esvee
பாவி,
கார் வாங்கின ஜோரில்தான் சும்மா சுத்திக்கிட்டு இருப்பதாக நினைத்தால், 3000 வது முத்தான, ரொம்ப rare படத்தை analyse பண்ணி, தங்க கோப்பையை ஒரே பதிவில் சுருட்டி கொண்டாய்.
superb தெளிவு, உன் style இல். எனக்கு அம்பிகாவை கலாய்க்கும் இடங்கள், தண்ணி போடும் scene , தன்னை உதாசீனம் செய்யும் குடும்பத்துடன் break point இல் உடையும் கட்டம் favourite .
படத்தை போல் உன்னுடையதும் surprise package .
மிக்க நன்றி ,நன்கு கவனிக்க படாத வைரத்தை தூசி துடைத்து காப்பாற்றினாய்.
டியர் வாசுதேவன் சார்
மூவாயிரமாவது முத்தான பதிவிற்கு முதற்கண் என் பாராட்டுக்கள்.
அதனை தாம்பத்யம் என்கிற அருமையான பதிவின் மூலம் சிறப்பாக்கி விட்டீர்கள். இது வரை இப்படத்திலிருந்து இவ்வளவு ஸ்டில்களை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதே போல் பாடல் காட்சிகளும் இணையத்தில் இதுவரை இடம் பெற்றதில்லை. என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
படத்தைப் பொறுத்த வரை ஒப்பனையும் உடையலங்காரமும் மிகவும் சுமார். இயக்குநர் இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாதது வியப்பாக உள்ளது. காரணம் தெரியவில்லை. மனோஜ்-கியான் இசையில் கண்மணி பாடல் மட்டும் நன்றாக இருக்கும். மற்றபடி நடிகர் திலகம் என்கின்ற ஒற்றைத் தூணின் மேல் எழுப்பப் பட்டுள்ள கூரை, தாம்பத்யம் திரைப்படம். கதை நன்றாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ரிசல்ட் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அனைத்து சிவாஜி ரசிகர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் தாம்பத்யம். அதை உறுதிப் படுத்துவதே தங்கள் எழுத்திலுள்ள சாமர்த்தியம்.
நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியோ அல்லது அதனுடைய சாதனைகளைப் பற்றியோ அல்லது அப்படங்களின் டைட்டில்களை மீண்டும் பயன் படுத்துவது பற்றியோ நமக்கு எந்த அளவிற்கு கவலை உள்ளதோ அதற்கு மேல் தயாரிப்பாளர்கள் அல்லது சம்பந்தப் பட்ட கலைஞர்களுக்கு இருக்க வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மனாகட்டும், கர்ணனாகட்டும், நாம் தான் குரல் தருகிறோமே யன்றி சம்பந்தப் பட்ட தயாரிப்பாளர்கள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. இதே போல் தான் படங்களுக்கு டைட்டில் வைக்கும் விஷயமும். சரஸ்வதி சபதம் படத்தைப் பொறுத்த மட்டில் தயாரிப்பாளர் ஏ.பி.என். தரப்பைக் கேட்காமல் டைட்டில் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இதனைப் பற்றி அவர்களுக்கும் அதே அளவு கவலை அக்கறை இருக்க வேண்டும். அவர்கள் நடிகர் திலகத்தின் படங்கள் மேலும் அவர் மேலும் நம் அளவிற்கு ஈடுபாடும் அபிமானமும் வைத்திருப்பார்களா என்பது தெரியவில்லை. உதாரணம் திருவிளையாடல் திரைப்படத்தின் மறு வெளியீடு.
எனவே நாம் அவசரப் பட்டு உணர்ச்சி வேகத்தில் குரல் கொடுப்பதற்கு முன் இவற்றைப் பற்றி முழுதும் அறிந்து கொள்வதே சிறந்தது.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் 3000 ஆவது சிறப்புப் பதிவு - தாம்பத்யம் - முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. அருமை
நீங்கள் ஒரு நல்ல ஓவியக்கலைஞர் என்பதை நான் அறிவேன். ஆனால் அதற்காக கையில் தூரிகையைப்பிடித்து இப்படி கண்ட இடங்களிலா வர்ணம் தீட்டுவது?
உண்மையை சொன்னால், நீங்கள் என்னை சரியாக அறியாததால் எழுந்த கேள்வி இது.
என்னிடம் பழகியவர் சொல்வார்கள்..நான் ஆழ்கடலைப்போல
அமைதியானவன் என்று.
சில நேரங்களில் சில விஷயங்களை தெளிவு படுத்த,மனதில் செலுத்த,
இப்படி வறுத்தால் தான் சரிபட்டு வரும்..
ஒரு மேதைப் பாடகரின் மறைவிலிருந்து நாம் மீள்வதற்குள் இப்படி ஒரு பேரிடியா?
இசைக்கும் மெல்லிசைக்கும் உள்ள வித்தியாசத்தை நமக்கு புரியவைத்த மன்னர் அல்லவோ இவர்?
இவர் இசையில் பாவ மன்னிப்பு பட பாடல்கள் ஒரு bench மார்க் ஆகிவிடவில்லையா?
நம் வாழ்நாளை இன்பகரமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிய சில மேதைகளில் இவரும் ஒருவரல்லவா!
வணங்குகிறோம் மன்னா.!!
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா என்ற உங்கள் பாடலையே மனதில் நன்றியுடன் நிறுத்தி,கண்ணீருடன் விடை கொடுக்கிறோம்.
காற்றுள்ளவரை உங்கள் பாடல்கள் இருக்கும்.
நண்பர் வாசுதேவன் அவர்களே,
பதிவு எனும் பெயரில் தாம்பத்தியம் படத்திற்கு ஒரு ஒலிச் சித்திரம் வழங்கியுள்ளீர்.
அருமை.
150 பதிவிற்கே இங்க மூச்சு முட்டறது.ஏதோ நானும் பாணபட்டர் போல பாடிக்கொண்டிருக்கிறேன்.
3000 தாண்டியும் இப்படி ஒரு வேகமா !!விட்டா இன்னும் 325 பட ஒலிச் சித்திரங்களும் வந்து விழும் போலிருக்கே!!
நன்றி.
Mr. Neyveli Vasudevan sir,
Congradulations for your wonderful 3,000+ posts. Each and every post of yours is a record of NT movies.
In the great path of "THUNAI" , now you have analised "THAAMBATHYAM" in your own way with beautiful stills as additional attarction.
I always submit double appreciation for those who analyse "AFTER 80" movies of NT. (indha vishayaththil naan Raghavendar sir katchi).
There are wonderful gems in that period. In the same way I like 'Anbulla Appa' and 'Kudumbam oru koil' also.
Soryy to say, I have watched this 'Thaambathyam' movie just one time only, due to some reasons. But now I want to see it again, because of your wonderful writing.
நெய்வேலி வாசுதேவன் அவர்களே
'தாம்பத்யம்' பதிவு சற்று நீளம். அதைப்பிரித்து ஐந்து பாகங்களாய் பதித்திருக்கலாம். பதிவின் தரம் மிக மிக அருமை.
சில திரிகளில் கவனித்தேன். ஒவ்வொரு புகைப்படத்தையும் தனித்தனியே பதித்து பதிவின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்வோர். தங்கள் அபிமான நடிகரின் ஒரே புகைப்படத்தை பல கலர்களில் மாற்றி மாற்றி போட்டு எண்ணிக்கையை அதிகமாக்குவோர் நிறைந்திருக்க, நீங்களோ இவ்வளவு பெரிய பதிவையும் ஏகப்பட்ட நிழற்படங்களையும் ஒரே பதிவில் தந்து அசத்துகிறீர்கள். அற்புதம், அற்புதம்.
அண்ணா திரையரங்கில் சொர்க்கம் திரைப்படம் சமீபத்தில் திரையிடப் பட்ட போது பொன்மகள் வந்தாள் பாடலுக்கு ரசிகர்களின் அளப்பரை காணொளி
http://youtu.be/oLyfvlRRZew
தரவேற்றிய நண்பருக்கு உளமார்ந்த நன்றி.
கர்ணன் நிழற்படங்களைத் தொகுத்து ஒரு அஞ்சலிக் காணொளியாக ...
http://youtu.be/sTxuqQu0Hfw
தரவேற்றிய நண்பர் விஜயகுமார் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி