Originally Posted by
NTthreesixty Degree
அட .....கோபால் சார் ....தாங்களா இப்படி கூறுவது? அதுவும் lorry driver rajakannu மற்றும் 80 களில் வந்த நடிகர் திலகம் திரைப்படங்களை பற்றி கூறுவது.......என்ன அதிசயம் !!
நீங்கள் தான் 80 களில் வந்த திரைப்படங்களை கரித்து கொட்டுவீர்களே? ஏன் இந்த திடீர் மனமாற்றம் ? இதை போல மிருதங்க சக்ரவர்த்தி, ராஜ ராஜ சோழன்(80 களில் வந்த திரைப்படம் இல்லையென்றாலும் ), கருட சௌக்யமா?, திரைப்படத்தில் உங்கள் எண்ணங்களில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? பொதுவாக முதல் மரியாதை மற்றும் தேவர் மகன் (திரு.கமலஹாசன் படம் என்பதால்) இந்த இரண்டு படங்களை மட்டுமே பாராட்டியவர் ஆயிற்றே தாங்கள் !
ஏதோ நடக்கிறது ! ஹ்ம்ம்...! நடப்பவை நல்லதாக இருந்தால் சரி !