Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    எனக்கு பிடிபடாத விஷயம் சில nt படங்களுக்கு ரசிகர்களி டம் கிடைத்த cold shoulder மற்றும் blanket rejection . சொல்ல பட்ட காரணங்கள் சுவாரஸ்யமானது. இந்த மாதிரி படத்திலா nt நடிப்பது மற்றும் இது ஒரு சாதாரண நடிகர் செய்ய வேண்டிய ரோல் ஆச்சே? என்பது போல. இத்தனைக்கும் அனைத்து ரசிகர்களிலும் maturity ,ரசனை, தேர்ந்த அறிவு கொண்டவர்கள் சிவாஜி ரசிகர்களே. அவர் எந்த மாதிரி பாத்திரம் ஏற்றாலும் ஆதரித்து அவர் இமேஜ் வலையில் சிக்காமல் பார்த்து கொண்ட பெருமைக்குரியவர்கள்.
    ஆனால் இந்த மாதிரி ரசிகர்களாலேயே கை விட பட்ட இரு படங்களை நான் ரசித்திருக்கிறேன். ஒன்று அன்பே ஆருயிரே ,இன்னொன்று லாரி டிரைவர் ராஜாகண்ணு.
    ஒன்று middle urban class காமெடி ரசிகர்களை target செய்தது. இன்னொன்று கடைகோடி c சென்டர் ரசிகனுக்காக.
    அன்பே ஆருயிரே படு ஜாலியான காமெடி டிராமா. Nt தன் அந்தஸ்தை மறந்து ஒரு அப்பாவி deprived வாலிபன் பாத்திரத்தை ஜாலியாக செய்திருப்பார். Dialogue comedy ,situational comedy ,slapstick என்று எல்லாவற்றையும் தெளித்திருப்பார்கள் திருலோக் சந்தர், a .l .நாராயணன். விசுவநாதன் சாரின் இரண்டு பிரமாத பாடல்கள் ,மூன்று கேட்கும்படி பாடல்கள்.இதை கை விட்ட காரணம் விளங்கவில்லை.
    Ldr இடைவேளை வரை படு ஜாலி. குத்தால அருவி எனக்கு பிடித்த குத்து பாட்டு. படத்தின் நோக்கமே கீழ்தட்டுதான் என்றதும் நாமும் மனத்தடைகளை அகற்றி கீழ்தட்டு ஆகிவிட வேண்டாமா? அந்த வகையில் சிறப்பாக உருவாகி இருந்தால் (சித்ரா பவுர்ணமி,தர்மராஜா போல ஏமாற்றாமல் ) ரசிக்க வேண்டியதுதானே?எனக்கு பிடித்ததே நம்பியார் வித்யாசமான "நாகா "காட்சிகள். புலி வேஷ காரனுடன் நாகமாக மோதல்,கடைசி காட்சி கண்ணாடி தொட்டி நக்கல் இவைதான். ஆனால் மூளையை கழற்றி விட்டு (இயக்குனரும் தெரிந்தே செய்த சுவாரஸ்ய தவறுதானே?)ரசிக்காமல் நமது விமரிசகர்கள்,பொது மக்கள் ரியலிஸ்ட் ஆக criticise பண்ணுவது எனக்கு வியப்பை தரும்.
    நடிகர்திலகத்தின் தனித்துவமே இதுதானே? ஒரு புறம் உலக நடிகனாக தில்லானா வையும் மறுபுறம் சாமானிய கீழ்தட்டு ரசிகர்களின் ஸ்டார் ஆக பட்டை கிளப்பியதும்தானே?
    நிஜமாகவே மிக அதிகம் வணிகத்தில் சாதித்தவை திரிசூலம், தியாகம், சந்திப்பு போன்ற சாமான்ய மக்களுக்கான படங்கள்தானே என்னும் போது ,நாமும் அவரை எல்லா படங்களிலும் ரசிப்பதுதானே சரி?படம் சிறப்பாக இல்லாமல் இருந்தால் விமரிசித்து ஒதுக்கலாம். ஆனால் blanket rejection on someother pretext ?
    அட .....கோபால் சார் ....தாங்களா இப்படி கூறுவது? அதுவும் lorry driver rajakannu மற்றும் 80 களில் வந்த நடிகர் திலகம் திரைப்படங்களை பற்றி கூறுவது.......என்ன அதிசயம் !!

    நீங்கள் தான் 80 களில் வந்த திரைப்படங்களை கரித்து கொட்டுவீர்களே? ஏன் இந்த திடீர் மனமாற்றம் ? இதை போல மிருதங்க சக்ரவர்த்தி, ராஜ ராஜ சோழன்(80 களில் வந்த திரைப்படம் இல்லையென்றாலும் ), கருட சௌக்யமா?, திரைப்படத்தில் உங்கள் எண்ணங்களில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? பொதுவாக முதல் மரியாதை மற்றும் தேவர் மகன் (திரு.கமலஹாசன் படம் என்பதால்) இந்த இரண்டு படங்களை மட்டுமே பாராட்டியவர் ஆயிற்றே தாங்கள் !

    ஏதோ நடக்கிறது ! ஹ்ம்ம்...! நடப்பவை நல்லதாக இருந்தால் சரி !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •