ஆஹா.. இப்போதே தடுத்தாட்கொண்ட மதுண்ணா.. தாங்க்ஸ்.. :) ஆமா காதல் படுத்தும் பாடு.. கலைஞானம் தயாரித்து அவர் தான் வாணியை இண்ட்ரோ பண்ணி சக்ஸஸ் ஃபுல் என எழுதியிருந்தார்.. நன்னா இருக்குமா..
Printable View
ஆஹா.. இப்போதே தடுத்தாட்கொண்ட மதுண்ணா.. தாங்க்ஸ்.. :) ஆமா காதல் படுத்தும் பாடு.. கலைஞானம் தயாரித்து அவர் தான் வாணியை இண்ட்ரோ பண்ணி சக்ஸஸ் ஃபுல் என எழுதியிருந்தார்.. நன்னா இருக்குமா..
கேரளாவின் அருமையை , அதன் அழகை , அதன் தாத்பரியத்தை சிவாஜியார் பாடியிருக்கும் பாடல் - இந்த பாடலுக்கும் , நடிப்புக்கும் ஏது இணை ? என்ன பாட்டு, என்ன லோக்கேஷன், என்ன ப்ளாக்&வொய்ட் தெளிவு, என்ன ஹம்மிங், என்ன இடையூடும் தெலுங்குப் பாட்டு, என்ன அன்னியோன்னியமான ஜோடி, என்ன படகின் வேகம், என்ன வேடப் பொருத்தம், ம்ஹும், இன்னும் 100 வருசம் போனாலும் இதுபோல வருமா? உக்கார்ந்த இடத்திலேயே ஊர்ப்பட்ட எமோசன் காட்டும் கலைக்குரிசில்!
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்.
https://www.youtube.com/watch?v=AKLzxSGhVyw
உடம்பில் அறிவு ஜாஸ்தியாகி விட்டதால் எக்கச்சக்கமாய் வெய்ட் போட்டு விட்டது..லீவில் சென்று வந்த அலைச்சலில் இரண்டு கிலோ குறைந்தாலும் ஷேப் என்னவோ குட்டி யானை தான்..டை கட்டிக் கொண்டால் கொஞ்சம் மினி தும்பிக்கையாய்த் தொப்பையில் புரள,கொஞ்சம் எனக்கே வெட்கமாக இருந்தது..
எக்ஸர் ஸை..ஸ்… கிலோ என்ன விலை..எனில் டயட் எனப் பார்த்தால் ஒருடயட் கிடைத்தது..இல்லை.. நான்கு மாதங்களுக்கு முன்னாலேயே எனக்கு அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சம் நாள் இருந்து பின் மறுபடி நார்மல்ஃபுட் எடுத்து வெய்ட் போட்ட வண்ணம் இருந்தேன்.. இந்த ஆகஸ்ட் 1 முதல் கொஞ்சம் சீரியஸாக ஃபாலோ பண்ணிக் கொண்டு இருக்கிறேன்
டயட் ப்ரகாரம் நோ தானிய வகை உணவுகள் மீன்ஸ் ரைஸ் சப்பாத்திக்கெல்லாம் தடா.. ஓட்ஸூம் நோ.. பழங்களில் அவகாடோ மட்டுமாம்.. தேங்காய்,ச்சீஸ், வெண்ணெய் பால் மோர் - முழுக்கொழுப்புடன் எல்லாம் சாப்பிடலாம்.. பாதாம் முந்திரி பிஸ்தா எல்லாம் சேர்க்கலாம்..என்ன பாதாம் ஊறவைத்து நூறு சாப்பிட வேண்டுமாம் (சாப்பிடும் முன் பின் இரண்டு மணீ நேரம் தண்ணீர் குடிக்கக் கூடாது) வெஜிடபிள்ஸில் காலிஃப்ளவர்,முட்டைக்கோஸ் வெள்ளரி தக்காளி கணக்கில சேர்க்கலாமாம்.. நான் வெஜ்க்கு ஏகப்பட்ட ஆப்ஷன்ஸ்.. முட்டை சாப்பிடுபவர்கள் நான்கு முட்டை டெய்லி சாப்பிடலாமாம்.. (பட் நான் இரண்டு ஆம்லெட் வாரம் இருமுறை சாப்பிட்டேன் )எனில் அப்படியே ஃபாலோசெய்து கொண்டு இருக்கையில் நான்கு கிலோ குறைந்து விட்டது.. தற்போதைய எடை 105.5
மெல்லக் குறைந்தாலும் கொஞ்சம் மனசுக்கு மகிழ்ச்சியாய் உடல் கொஞ்சம் லைட்டாக உணர்கிறது.. ( கொஞ்சம் சோர்வும் இருக்கிறது..பரவாயில்லை)
என்ன ஒன்று.. நிறையத்தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது..குறைந்தபட்சம் மூன்று லிட்டர் .
ம்ம் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்..தண்ணீர்!
தண்ணீரில் வரும் பாடல்கள் என கொஞ்சம் யோசித்தால்..
தண்ணீர் சுடுவதென்ன
தண்ணி கருத்திருச்சு
தண்ணீர் கண்டபின்பு மாறும் எங்கள் கண்ணீர்
தண்ணீரிலே மீனழுதால் கண்ணீரை யாரறிவார்..
தண்ணீர் என்னும் கண்ணாடி தழுவுது முன்னாடி..
தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை..
உப்பத் தின்னவன் தண்ணி குடிப்பான்
ஆத்துல தண்ணி வர அதுலொருத்தன் மீன் பிடிக்க
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை..
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது
ம்ம் இன்னும் நிறைய இருக்கும் போல இருக்கே… :)
. https://youtu.be/Uhp6D2LEP38
மீள் பதிவு :
***
எம்.என்.எம் – 4 !
முத்த்ம் வாங்காத, கொடுக்காத மனிதன், மனுஷி இருக்கிறார்களா என்ன.. இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
அதுவும் இந்த முத்தம் இருக்கிறதே மக்களை சின்னக் குழந்தை முதல் வயது வந்து பின் வயதாகும் வரை படுத்தும் பாடு..ம்ம் சொல்லி மாளாதுங்க..
இப்பவும் மதுரையில் என் பக்கத்து வீட்டு மாமா உயிரோடிருந்து அவரைப் பார்த்தேனாகில் செளக்கியமா என்றெல்லாம் கேட்கமாட்டேன்..முதலில் ஒரு முறை.முறைப்பேன். அப்புறம் தான் இதர விசாரிப்பெல்லாம்..
பின் என்னங்க.. வெகுசின்ன வயதில் என்னைத்தூக்கி கொழுக் மொழுக் கன்னத்தைக் கிள்ளி மலையாளப் படப் போஸ்டர் சுவரில் ஒட்டியிருப்பது போல பச்சக்கென்று கன்னத்தில் அழுந்தமுத்தமிட்டு நான் பயந்தும் வாய்துர் நாற்றத்தாலும், தாடி குத்தியதாலும் இப்படி பல ரீஸன்களுக்காக அழ அப்படியே தலைக்கு மேலே தூக்கி தட்டாமாலை சுற்றி சுற்றல் வேகத்தில் அழமறந்து கொஞ்சம் கெக்கே என சிரிக்க் ஆரம்பிக்கையில்.. பார் கண்ணாக்குட்டிக்கு என்னோட முத்தம் பிடிக்குது சிரிக்கிறான் எனச் சொல்லி என்னைக் கீழிறக்கி மறுபடி பச்சக் கொடுத்து மறுபடி அழவிட்டார்.. இன்னும் அதை நினைத்தால் கன்னம் வலிக்கிறது..(இதைப் பிற்காலத்தில் என் அம்மா சொல்லியிருக்கிறார்.. ஒன்ன எப்படிக் கொஞ்சுவார் தெரியுமா அவர்….ஒங்கப்பா திட்டியே திட்டியிருக்காராக்கும்..கொழந்தைய முரட்டுத்தனமா கொஞ்சறான் பாவி.. கன்னம்லாம் கன்னியிருக்கு.. !)
நம்மளோட இன்றைய ஹீரோ இருக்கானே நல்ல ஹேண்ட்ஸம்மான புள்ளயாண்டான்.. ஹேண்ட்ஸம்மான ஹீரோயினே கிடைச்சுட்டா அவனுக்கு! சரி சரி..பியூட்டி ஃபுல்னே சொல்லிக்கலாம்.. ஹீரோயினை லவ் பண்றான்..சரி..அதுக்காக இப்படியா பண்றது..
என்னவாக்கும் செஞ்சான்..
ஹீரோயினோட பேசறான்..அதுவும் ஃபோன்ல..
பேசினா பரவால்லையே பேசறதுக்கு முன்னாடி முத்தா கொடுக்கறான் த்ரீ டைம்ஸ்..
சரி அவனோட லவ்வருக்கு கிஸ் கொடுக்கறான் ஃபோன்ல தானேன்னா..சுத்துமுத்தும் பாத்துக்க வேணாமோ.. என்ன தான் இருந்தாலும் ரகசியமா அம்மா பண்ணிவச்சுருக்கற லட்டை எடுத்துண்டு போய் மொட்டை மாடிக்குப் போய் பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கும் ஷேர்பண்ணி சாப்பிடறது தானே சுகம்.. ச்ச்..என்னது வேற கத வருதே இதுல! சுத்து முத்தும் பார்க்காம அவன் பேசறதே ஆபீஸ்லயே கேட்டுண்டுருக்கா ஒரு இளம் பெண்.. வேற யார்..ஹீரோவோட செக்ரட்டரி..இதுல என்னன்னா ஹீரோயினோட ஃப்ரண்டும் கூட அவ..
ஹீரோ என்னதான்பாஸா இருந்தாலும் அவர் குடுமி நம்ம கைலங்கற நினைப்புல ப்ச்ச் ப்ச்ச் ப்ச்ச் நு அவன் ஃபோன்ல பண்ற மாதிரியே பண்ணிக்காமிக்க அவனுக்கு வெக்கம் கோபம்லாம் வருது..
இவளே செகரட்டரி.. பேரு சுமான்னு வெச்சுக்குவோம்..சுமா. இப்படி சும்மாச் சும்மா நான் உமமா கொடுத்ததை ச்சுக்காட்டி சாரி குத்திக் காட்டிச் செய்யாதே..ஏதோ தெரியாத்தனமா செஞ்சுட்டேன்..ஸாரிங்கறான்..
அதுக்கு சுமா இட்ஸால் ரைட் நு சொன்னாலும் வீட்டுக்குப் போய் ஹீரோயினை (சூர்யான்னு வெச்சுக்கலாமா) சூர்யாவை கலாட்டா பண்றாள்..ஏன்னா அவ ஹீரோயின் வீட்ல தான் குடியிருக்கா..
இப்படி கலகலன்னு இருந்தாலும் கூட சுமா மனசுக்குள்ற ஒரு சோகம் 99 இயர்ஸ் லீஸ் போட்ட மாதிரி நன்னா சம்மணம் போட்டுண்டு ஒக்காந்திண்டுருக்கு.. என்னவாம்..
சுமாக்கு சில பலகதைகள்ள, சினிமாக்கள்ள மட்டும் தென்படற கதை மாதிரியான சோகம்..காலைல கல்யாணம் நைட் ஹஸ்பண்ட் போயாச்சு..இதான் அந்தக்காலத்திலேயே திருவிளையாடற் புராணத்துல இருக்கே.. ஒட்டிய பல் கிளை துவங்கி ஒல்லொலி மங்கலம் முழங்க கட்டிய கொம்பறதுப் பாய்ந்தகாளை மணமகனை முட்டி கொத்துப்ப்ரோட்டா வாக்க மணமகன் டபக்குனு போய்டறான்னு வருமே.. அதே தான் சுமா விஷயத்திலயும்..
அவள் ஒரு யங்க் விடோ..ஹூம் தள்ளாத வயசில்லை தான்..ஆனா ஆசைகளைப் புறந்தள்ளியும் விட முடியாத வயசு.. ம்ம் எல்லாம் விதிவசம்னு தான் இருக்கா சுமா.. ஹீரோ மேல கொஞ்சம் அபிலாஷை உண்டு.. ஹீரோவை சுரேஷ்னு வெச்சுக்குவோமா சுரேஷ்..ம்ம் இருந்தாலும் ஸ்னேகிதியின் ப்ரஸண்ட் காதலன் ப்யூச்சர் கணவன்.. கொஞ்சம் அவங்களை வாரி மட்டும் விடுவோம்னு இருக்கா..
ஆனாக்க இந்த விதி இருக்கே அது ஒரு பொல்லாத விஷயம்....இல்லையில்ல விஷமக் கார விஷயம்… யாராவது கிச்சுக் கிச்சு மூட்டினாக் கூட சிரிக்காது..ஆனா திடீர்னு எதையோ நினைச்சுக்கிட்டுச் சிரிக்கிற யங்க் காலேஜ் க்ர்ளாட்ட்மா கெக்கபிக்கேன்னு சிரிக்க ஆரம்பிச்சுடுத்துன்னு வச்சுக்கங்க வாழ்க்கை பாட்டுக்கு ரூட் மாதிரிப் போய்டும்..
சுமாக்கும் அப்படித்தான் நடக்குது.. ஊருக்குப் போய் இருக்கலாம்னு போறா..கூடவே சூர்யாவும் வரா.. அங்க சுமாவோட தகப்பனார் பக்க்த்தூர் திருவிழாப்பாக்க சூர்யாவக் கூட்டிண்டு போய்டறார்..
இங்க ஏதோ ஆஃபீஸ் வேலயா எங்கேயோ மும்பையோ என்னவோ போய்ட்டு வந்த சுரேஷுக்கு சூர்யாவைப் பாக்காம மனசுக்குள்ள நம நமங்குது..
காதலிக்கும் பெண்ணின்
கண்ணை விட
காதலிக்கும் ஆணின்
நெஞ்சம் அதிகம் துடிக்கும் நு ஆன்றோர் சொன்னாற்போல அவனுக்கு ஹ்ருதயம் அடிச்சுக்குது.. சுமா எங்க போறதா சொன்னா..அந்த ஊர் தானே..அந்த ஊர் தானே சூர்யாவும் போய்ருக்கான்னு அதே ஊருக்குக் கிளம்பி காலைல போய் இறங்கினா..
வாசல்ல கோலம் போட்டுக்கிட்டிருக்கா சுமா..இவனப் பாத்துடறா..இவன்கண்ணையும் பாத்துடறா..
பாதகத்தி சொல்லாம போனதினால் அங்கே
..படபடன்னு செவந்திருக்கும் கண்களையும் பார்த்தாள்
வேதனையைச் சொல்லாம சிரிக்கின்ற அவனின்
…வெளிறித்தான் போனமுகம் சொன்னதுவே கதையை
ஹலோ சுரேஷ் சார்..எப்படிங்க இங்கிட்டுங்கறா.. இல்ல..இங்க தானே சூர்யா வந்தா..ங்கறான் சுரேஷ்..
ஓ அவ கிராமத்துக்குன்னா போயிருக்கா.. நாளைக்குக் காலைல வந்துடுவா..
ஓ அப்படியா சுமா நான் கிளம்பறேன்..
சுரேஷ் சார்.. இருந்துட்டு சுமாவப் பார்த்துட்டே போய்டுங்களேன்.. அப்படிங்கறா சுமா..இல்லை இல்லை சொல்ல வச்சுடுத்து விதி..
கொஞ்சம் யோசிச்சு சரின்னு தங்கிடறான்..
அப்புறம் என்ன ஆச்சு.. இரவும் பகலும் டச்சிங் டச்சிங்க்ல இருக்கற அந்திப் பொழுது வந்து இரவும் வந்துடுது..
இவனுக்கோ லவ்வர் இல்லை.. அவளை நினைச்சுக்கறான்..சுமாவும் அந்தப் பக்கம் அறையில இருக்கா..அவளுக்கும் எதையெல்லாமோ எண்ண எண்ண எண்ணப் போராட்டம்..இரவு இளமை தனிமை … என்னாகும்..பட்டாசுத் திரிமேலே எரியற ஊதுபத்தி போட்டா மாதிரி பட்டுன்னு உணர்வெல்லாம் வெடிச்சுடுது… ரெண்டு பேரும் தாச்சித் தூங்கிடறாங்க!
அப்புறம் தாங்க அவங்களோட வாழ்க்கைப் பாதை திசை மாறிப் போய்டுது..
இதுல சுமாக்கு சுரேஷ் மேல அபிலாஷை அதாவது ஒரு ஈர்ப்பு இருந்ததுன்னு சொன்னேன்ல அந்த ஈர்ப்புல முன்னாலேயே ஒரு கனவு காணறாங்க.. அஃப்கோர்ஸ் சுரேஷை உமர் கயாமாகவும் தன்னை காதலியாகவும் நினச்சுக்கிட்டு..
அந்தப் பாட்டோட வரிகள்..
**
கிண்ணத்தில் தேன் குடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்..
*
படம் தெரிஞ்சுருக்குமே..இளமை ஊஞ்சலாடுகிறது கமல்ஹாசன் ஜெய்சித்ரா.. ( சுரேஷ் சுமா) சூர்யாவா ஸ்ரீப்ரியா, அப்புறம் ரஜினி உண்டு.. வெகு அழகான பாடல்களும் வெகு சுவாரஸ்யமாகவும் போகும் படம்..
அது சரி ஆணிப் பொன் நா என்னவாக்கும்.. ஆணிப் பொன் என்றால் சுத்தமான பொன் சுத்தத் தங்கம் 24 காரட் .999 கோல்ட்..ஆணிப்பொன் தேர்கொண்டுன்னு ஒரு பாட்டு கூட உண்டே..அச்சோ அத இன்னொரு எம் என் எம்க்கு யூஸ் பண்ணிக்கலாமே..!@ :)
RARE ADVTS
http://i62.tinypic.com/s419bd.jpg
மது அண்ணா!
1983-ல் ராஜேஷ்கண்ணா, ஷபனா ஆஸ்மி நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட 'அவ்தார்' இந்திப் படம் தமிழில் நடிகர் திலகம், அம்பிகா நடித்து 'வாழ்க்கை' (1984 ) யாக வெளிவந்து தூள் கிளப்பியது. 'வாழ்க்கை'யும் மலையாளத்தில் 'ஜீவிதம்' ஆனது. மது, கே.ஆர்.விஜயா நடிக்க பாலாஜி தயாரித்த படம் இது.
இப்போது ஒரு சிறு சந்தேகம். தாங்கள் குறிப்பிட்டுள்ள 'பூப் பூவா பூத்திருக்கு' படத்தின் இந்தி அவதாரம் வேறு 'அவதாரா'?
தமிழில் 'காலம் மாறலாம்...நம் காதல் மாறுமா' டூயட் மலையாளத்தில் எங்கன இருக்கும்?
உங்க பேர் கொண்டவரும்,:) 'புன்னகை அரசி'யும் பாடுகிறார்கள். இசை ராஜாவின் தம்பியாமே!
'என் மானசும் என்னும் நிண்டே ஆலயம்'
https://youtu.be/dJIvpJvn96g
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 18: வன தேவதைகளின் விருப்பப் பாடல்
மாலைக்கும் இரவுக்கும் இடைப்பட்ட நேரம். குளிர்காற்று வருடும் வனப் பாதை ஒன்றில் ஊர்ந்து செல்கிறது வாகனம். அதன் விளக்கொளியில் கரும்பச்சைக் குவியல்களாகத் தெரிகின்றன புதர்க் காடுகள். வனத்தின் மவுனத்தைக் கலைத்தபடி குளிர்க்காற்றுடன் கலந்து பரவத் தொடங்குகிறது வாகனத்தின் மியூசிக் சிஸ்டத்திலிருந்து ஒலிக்கும் அந்தப் பாடல்.
‘ராசாவே ஒன்ன நான் எண்ணித்தான்’. அருகில் எங்கோ ஒரு மலைக் கிராமத்துப் பெண் தனது காதலனை நினைத்துப் பாடிக்கொண்டிருக்கிறாள் என்று நினைக்க வைக்கும் உயிர்ப்பான பாடல் இது. வி.சி. குகநாதன் இயக்கத்தில் ரஜினி, தேவி, ப்ரியா நடித்த ‘தனிக்காட்டு ராஜா’ (1982) படத்தில் இடம்பெற்றது. ஜெய்சங்கர், ஆர்.எஸ். மனோகர், செந்தாமரை, சங்கிலி முருகன், விஜயகுமார் என்று ஏகப்பட்ட வில்லன்களை எதிர்த்து நிற்கும் கோபக்கார இளைஞன் பாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினி. இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. ரஜினியின் காதலியாக வரும் தேவி, அவரைக் காப்பாற்ற வில்லன் ஜெய்சங்கரை மணந்துகொள்வார். வெற்றி பெறாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்பவர்கள் உண்டு.
குளிர்க் காற்றை ஊடுருவிச் செல்லும் கூர்மையான குரலில் எஸ்.பி. ஷைலஜா பாடிய பாடல்களில் ‘ராசாவே உன்ன நான் எண்ணித்தான்’ பாடலும் ஒன்று. பாடலின் தொடக்கத் தில் ஜலதரங்கமும் புல்லாங்குழலும் இணைந்த இசைக் கலவையைக் கரும் பாறையில் பட்டுத் தெறிக்கும் சாரலாக ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மழை ஈரம் படிந்த குன்றின் மீது வரிசையாக வைக்கப்பட்ட விளக்குகளின் காட்சியை மனதுக்குள் எழுப்பும் இசை இப்பாடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.
காதலனின் நினைவில் நாயகி பாடும் இப்பாடல் முழுவதும் அவளது தோழிகளின் ஆறுதல் மொழியாகப் பெண் குரல்களின் ஹம்மிங் பயன்படுத்தப்பட்டிருக்கும். ‘ராசாவே’ எனும் பல்லவியின் முடிவில் நாயகியின் காதல் மனதுக்கு வாழ்த்துச் சொல்லும் தோழிகளின் ஹம்மிங் ஒலிக்கத் தொடங்கும். ‘தனதம் தம்தம் தம்தம் தம்தம்’ எனும் அந்த ஹம்மிங் செறிவான மரங்கள் அடர்ந்த வனப் பாதையில் ஒரு கற்பனை உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும். துல்லியமான ஒலியமைப்பில் மெலிதான தாளக்கட்டும் கிட்டார் இசையும் துணைக்கு வரும். குளிர்ந்த ஓடையின் நீர்ப்பரப்பில் மிதக்கும் கிட்டாரை மீட்டி ஒலிப்பதிவு செய்திருப்பார்களோ என்று தோன்றும் அளவுக்கு கிட்டார் கம்பிகளின் வழியே ஈரத்தைக் கசிய விட்டிருப்பார் இளையராஜா.
‘மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்’ எனும் வரியில் பெண் மனதின் காதல் பிரார்த்தனையை எளிய மொழியில் சொல்லியிருப்பார் வாலி. வன தேவதைகள் எனும் விஷயம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உங்கள் வாகனத்தில் ஒலிக்கும் இப்பாடலை அடர்ந்த மரங்களுக்குப் பின்னே வலம் வரும் அந்தத் தேவதைகள் ரசித்துக்கொண்டிருக்க வாய்ப்புண்டு. இப்பாடல் உருவாக்கும் கற்பனை வனத்துக்கும் பாடல் படமாக்கப்பட்ட விதத்துக்கும் அத்தனை பொருத்தம் இருக்காது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஒலிப்பதிவின் புதுமைக்கு உதாரணம் என்று சொல்லத்தக்க மற்றொரு பாடல் ‘சந்தனக் காற்றே’. எஸ்.பி.பி. – ஜானகி ஜோடியின் மாஸ்டர் பீஸ் பாடல்களில் ஒன்று இது. மேற்கத்திய இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பாடலும் அடர்ந்த வனத்தின் சித்திரத்தைக் கண் முன் நிறுத்தும். நெடிய மரங்களுக்கு நடுவே, முகத்தில் அறையும் சிலீர் காற்றைக் கிழித்துக்கொண்டு பைக்கை ஓட்டிச் செல்லும் உற்சாகத்தைப் பிரதிபலிக்கும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். வனப் பகுதியில் உலவச் செல்லும் நகரவாசியின் கண்களுக்குப் படும் காட்சிகளின் இசை வடிவம் என்று இப்பாடலைச் சொல்லலாம். வனப் பாதைகளில் பகல் நேரத்தில் ஒலிக்கும் சில்வண்டுகளின் ரீங்காரத்தின் சாயலை இப்பாடலில் உணர முடியும். பல்லவி மற்றும் சரணங்களின் முடிவில் எஸ்.பி.பி.-ஜானகி குரல்கள் சங்கமித்துக் கரைவதைப் போல் ஒலிப்பதிவை வடிவமைத்திருப்பார் இளையராஜா. ‘நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே’ எனும் வரி வாலியின் அற்புதக் கற்பனை.
உள்ளூர்ப் பண்ணையாரான ஜெய் சங்கரின் அடக்குமுறைக்கு எதிராக விவசாயிகளை ஒன்றுதிரட்டி ரஜினி பாடும் ‘கூவுங்கள் சேவல்களே’ எழுச்சியூட்டும் இசையும் புரட்சிகரமான பாடல் வரிகளும் கொண்ட பாடல். வயலின்கள், ட்ரம்பெட் இசையுடன் அதிரும் தாளக்கட்டுடன் தொடங்கும் பாடல் இது. ஆவேசத் துடிப்புடன் எஸ்.பி.பி. பாடியிருப்பார். ‘திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து தலை எண்ணெய்க்கும் வக்கு இல்லை’ என்ற வரிகளில் ஏழை மக்கள் மீது நாயகன் காட்டும் கரிசனத்தைப் பதிவுசெய்திருப்பார் வாலி. இப்பாடலின் தொடக்க இசை, வானொலி நிகழ்ச்சியொன்றின் முகப்பு இசையாகப் பயன்படுத்தப்பட்டது.
இப்படத்தில் ‘நான்தான் டாப்பு’, ‘நான்தாண்டா இப்போ தேவதாஸ்’ ஆகிய இரண்டு பாடல்களும் உண்டு.
எண்ணத்தில் தேனூறி ஏற்றபல கொண்டுவரும்
கண்ணில் வழிந்தோடிக் கற்பனைக்கு வித்தாகும்
திண்மைச் சிரிப்பில் திசையெங்கும் பொங்கிவிழும்
மென்மை மழையதுவா மே…
*
மழையது வென்றிங்கே மாந்தரவர் போற்றிக்
குழைந்து வணங்கிகை கூப்பி – கலையாமல்
இன்னும் பொழிகவென ஏதோ சொலிவணங்க
மின்னலிடி தந்திடுவாள் தான்
*
தானாய்க் கருமேகம் தக்கபடி உண்டாக
மானாய்ப் புவியின் மடியினிலே – மீனாய்
விழுந்தே பலவாறாய் வித்தைகள் செய்யும்
குழுவாய் மழைத்துளிகள் ஆம்..
*
ஆமென்றால் இல்லையென ஆர்ப்பாட்டம் பலகொண்டு
போமென்றால் போய்யாபோ போட்டியுடன் – தாமென்ற
எண்ணமெதும் கொள்ளாமல் எத்தனையோ நாட்டியம்தான்
வண்ணமழை ஆடிடுமே வா..
*
வாவென்றே வஞ்சிவிழி வாகாகப் பார்ப்பதுபோல்
தாவென்றே நெஞ்சைத் தயக்கமின்றி கேட்டுவிடும்
வேழமது கர்ஜனையாய் விண்ணில் இடிமுழக்கி
ஆழமாய்ப் பெய்யும் மழை..
*
மழையென எண்ணியிங்கு மாண்பாய்க் கவியைக்
கலையுடன் கற்பனையைச் சேர்த்தே – வலையிலே
இட்டேன் அடியேன் எழிற்குறைவு என்றாலோ
சுட்டித்தான் இங்குசொல்வீ ரே..
*
காலையில்கேட்ட அழகிய மழைப்பாடல்.. இத்துடன் திடீரென்று பாட்டுக்கள் எழுதிப்பார்க்கலாம் என இப்போது நினைத்து எழுதியது….. ( மேற்கண்ட பாக்கள் வடிக்க நான் எடுத்துக்கொண்ட நிமிடங்கள் பத்து..ஓ.கேயாங்க..?)
குடும்பத்தலைவன் சரோஜா தேவி.. வெகு அழகான பாடல்..வரிகளும் தான்..
*
https://youtu.be/tdxrpD7QQpM
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
உள்ளம் துடித்துக் கொண்டே இருக்கும்
கண்கள் விழித்துக் கொண்டே இருக்கும்
தென்றல் தழுவிக் கொண்டே வரும்
இரவைக் கண்டே பெண்மைதவித்துக் கொண்டே இருக்கும்
ஆயிரம் யானை பலமிருக்கும்
அல்லிக்கொடி போல் மனமிருக்கும்
தாயின் பாசம் நிறைந்திருக்கும்
தாவியணைத்தால் மெய் சிலிர்க்கும்
இன்று கூட்டுக்குள்ளே இருக்கும்
நாளை வீட்டுக்குள்ளே இருக்கும்
எங்கள் கூட்டுக்குரல் இன்பக்கோட்டைக்குள்ளே
என்றும்கேட்டுக்கொண்டே இருக்கும்
பின்ன வாரேன் :)
சிக்கா...
பல்லவியில் தண்ணீர் வரும் பாடல்களில் சில..
தூரச் சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே
தண்ணிக்குடம் எடுத்து தனிவழியே போற குட்டீ
போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
குத்தாலத்தில் தண்ணி இல்லேன்னா வெறும்
பாறை மட்டும்தான் பாட்டு படிக்கும்
இந்த அல்லித்தண்டு என்னைக் கண்டு
தண்ணிக்குள்ளே விக்கி நிக்குது
மரத்தை வச்சவன் தண்ணியை ஊத்துவான் தெரிஞ்சுக்க மாமா
இன்னும் சரணங்களில் இருக்கும் பாடல்கள்
தேவை என்றால் அது உங்களுக்கே தண்ணி பட்ட பாடு இல்லையோ ?
Courtesy: Tamil Hindu
திரை விலகிய சென்னையின் முகம்!
தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, கதை நடப்பது நகரத்தில் என்று வைத்துக்கொண்டால் அந்த நகரம் பெரும்பாலும் சென்னையாகவே இருக்கும். “என் மகன் வேலை தேடிப் பட்டணத்துக்குச் சென்றிருக்கிறான்” என்று ஒரு ஏழைத் தாய் விட்டத்தைப் பார்த்துக் கவலைப்படும் காட்சிக்குப் பின்னர், சென்ட்ரல் ரயில் நிலையத்தை கேமரா கீழிருந்து பிரம்மாண்டமாகக் காட்டும் காட்சி கண்டிப்பாக வரும்.
அறுபதுகள், எழுபதுகளில் வெளியான திரைப்படங்கள் என்றால் வாகன நெரிசலற்ற அகலமான மவுண்ட் ரோடு இடம்பெறும். எண்பதுகளில் வெளியான பெரும்பாலான படங்களில் பி.ஏ., படித்த நாயகன் எந்த வேலையும் கிடைக்காமல் மெரினா கடற்கரையின் காந்தி சிலைக்குக் கீழ் நின்று நியாயம் கேட்டுப் பாட்டுப் பாடுவான்.
இப்படியாகச் சில டெம்ப்ளேட் ‘லொக்கேஷன்’கள் தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும். விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், சென்னையில் நடக்கும் கதை என்று ஓரளவு நம்பகத்தன்மையுடன் எடுக்கப்பட்ட படங்கள் எண்ணிக்கையில் குறைவுதான். பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் கதை நடக்கும் நகரிலேயே பீச் இருக்கும், மலைவாசஸ்தலம் இருக்கும். ரசிகர்கள் அதைப் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வார்கள்.
எண்பதுகளின் இறுதியில் இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் வந்தது. குறிப்பாக கமல் ஹாஸனின் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘சத்யா’, மணிரத்னம் இயக்கிய ‘மவுன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’, வஸந்தின் ‘கேளடி கண்மணி’, கதிர் இயக்கிய ‘இதயம்’, விக்ரமனின் ‘புதுவசந்தம்’ போன்ற திரைப்படங்களில் மாநகர சென்னையின் அடையாளம் வெளிப்பட்டிருந்தது. சென்னைச் சாலைகளின் வாகனப் பரபரப்பு, அலுவலகக் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், கல்லூரிகள் போன்றவற்றை அவற்றின் இயல்புடன் இப்படங்கள் சித்தரித்தன.
நகர வாழ்வைச் சித்தரிப்பதில் ஓரளவு தேர்ந்தவர் என்று சொல்லத்தக்க இயக்குநரான மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமுடன் இணைந்து, மர நிழல்கள் அடர்ந்த நகரப் பகுதிகளின் அழகைக் காட்சிப்படுத்தினார். குறிப்பாக, ‘மிஸ்டர் சந்திரமவுலி’யை ஒரு கப் காபி சாப்பிட கார்த்திக் அழைக்கும் காட்சியைச் சொல்லலாம் (அநேகமாக வுட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலில் இக்காட்சி எடுக்கப்பட்டிருக்கலாம்.)
‘அஞ்சலி’ படத்தில் வரும் அபார்ட்மெண்ட் குடியிருப்பும், உயர் நடுத்தர மக்களின் வாழ்க்கையும் தமிழ்த் திரைப்படங்களில் அதுவரை காட்டப்படாத ஒன்று. அபார்ட்மெண்ட் காட்சிகள் ‘செட்’களில் எடுக்கப்பட்டவை என்றாலும் மது அம்பட்டின் ஒளிப்பதிவு அதை உயிர்ப்புடன் காட்டியது. ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் மின்சார ரயில் காட்சிகளை அதன் அசல் ஒளியில் படமாக்கியிருப்பார் மணிரத்னம். ‘சத்யா’ படம் சென்னை தெருக்களில் உலா வரும் இளைஞர்களின் உலகைப் புதிய கோணத்தில் சித்தரித்தது.
90-களின் பிற்பாதியில் வஸந்த் இயக்கிய ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, அகத்தியனின் ‘காதல் கோட்டை’ போன்ற திரைப்படங்கள் சென்னையின் அசல் நகரத் தன்மையை ஓரளவுக்கு வெளிப்படுத்தின. ’காதல் கோட்டை’ படத்தில் மழைக் காலத்துச் சென்னையை அசலாகக் காட்டியிருப்பார் அகத்தியன். இக்காலகட்டத்தில் தமிழ்த் திரையிசையில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்தியிருந்தார் தேவா. சென்னையின் பிரத்யேக இசை வடிவமாகக் கருதப்படும் கானா பாடல்களின் வரவு, சென்னைகுறித்த சித்திரத்தைத் திரைப்படங்கள் ஓரளவு அசலாக வெளிப்படுத்த உதவியது. ‘உதயம் தியேட்டரிலே என் இதயத்த தொலைச்சேன்’, ‘விதவிதமா சோப்பு சீப்புக் கண்ணாடி’, ‘குன்றத்துல கோயில கட்டி’ போன்ற பாடல்கள் வட சென்னையின் வாழ்க்கையைப் பிரதிபலித்தன.
வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’, பாரதிராஜாவின் ‘என் உயிர்த் தோழன்’ போன்ற படங்கள் சென்னை குடிசைப் பகுதிகளின் வாழ்வைச் சித்தரித்தன. என்றாலும், படமாக்கப்பட்ட விதம், சூழல் ஆகியவற்றில் நம்பகத்தன்மை சற்று குறைவாகவே இருந்தது. அதேபோல், சென்னைத் தமிழ் பேசப்பட்ட படங்கள் பல வெளியாகியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை ‘செட்’ களில் எடுக்கப்பட்டவை அல்லது பொருத்தமற்ற கதைச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. கதை நடக்கும் இடம் இதுதான் என்ற தெளிவுடன் படமெடுக்கத் தொடங்கிய இளைஞர் பட்டாளம்தான் சென்னையின் அசல் முகத்தைச் சித்தரிப்பதில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.
‘புதுப்பேட்டை’யில் சென்னை ரவுடி களின் நிழல் உலகத்தை செல்வராகவன் காட்டிய விதம் அசலுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது. குடிசைப் பகுதிகளின் இருள் வாழ்க்கை, ’ஏரியா’ பிரித்துக்கொள்வதில் ரவுடிகளுக்கு இடையிலான ‘புரிந்துணர்வு’, பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களை இப்படம் துல்லியமாக முன்வைத்தது. வெற்றி மாறன், ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் இவ்விஷயத்தை மேலும் முன்னெடுத்துச் சென்றார். அப்படத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் கிஷோருக்கும் டேனியல் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சியில் வெளிப்பட்டிருக்கும் அசல் தன்மை, தமிழ்த் திரைமொழிக்கு மிகவும் புதியது. இந்தப் படத்தில் வெளிப்பட்ட சென்னை மொழியின் தன்மை பிரமிப்பூட்டக்கூடியது.
இதே காலகட்டத்தில் வெளியான, வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’, சென்னை இளைஞர்களின் கிரிக்கெட் காதலை அற்புதமாகச் சித்தரித்தது. நண்பர்களுக்குள் நடக்கும் சிறு உரசல்கள், நண்பனின் தங்கையுடனான காதல், பிரிவு என்று பல்வேறு விஷயங்களை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்திய படம் இது. மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ போன்ற திரைப்படங்கள் இரவு நேரச் சென்னையின் மர்மங்களை, அழகியலுடன் வெளிப்படுத்தின. சுதந்திரத்துக்கு முந்தைய சென்னையை விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டினம்’ கற்பனை வளத்துடன் சித்தரித்தது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் வாழ்க்கையை ரசனையுடன் சித்தரித்த ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சித், ‘மெட்ராஸ்’ படத்தில் வட சென்னைப் பகுதி மக்கள் வாழ்வில் அரசியல் குழுக்கள் ஏற்படுத்தும் பாதிப்பைச் சிறப்பாகச் சித்தரித்தார். சந்தோஷ் நாராயணன் - கானா பாலாவின் பாடல்கள் சென்னையின் அசல் குரலாகவே ஒலித்தன.
இன்றைய தேதிக்குத் தமிழில் வெளியாகும் பல படங்கள் சென்னையின் நடுத்தரக் குடும்பங்கள், குடிசைப் பகுதி மக்கள், தாதாக்கள், காவல்துறையினரின் பணி வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களை முடிந்தவரை நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் வந்த ‘நான் மகான் அல்ல’ படத்தில் சென்னையில் உள்ள சில அபாயகரமான போக்குகளும், திட்டமிட்டு ஆளைக் கொலை செய்வதில் உள்ள கச்சிதத்தன்மையும் பதைக்கவைக்கும் விதத்தில் பதிவாகியிருந்தன.
பல்வேறு வண்ணங்களாலான சென்னையின் அசல் உருவத்தை இளம் கரங்கள் சிரத்தையுடன் திரை ஓவியமாக வரைந்துகொண்டிருக்கின்றன.
ஆமாம் மது அண்ணா! எனக்கும் மாசூம் இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. பிரபு ரோலுக்கு ஷா, சரிதாவுக்கு ஷபனா, அமலாவிற்கு சுப்ரியா பதக். பூ.பூ.பூ சக்கை போடு போட்டது. தமிழிற்கு இசை டி.ஆர்.
'வாசம் சிந்தும் வண்ணச் சோலை'
நல்லாவே இருக்கும்.
இன்னொரு அம்புலிமாமா பாடல் உண்டுதானே!
'உங்கப்பா வாங்கி வந்த குதிர'
https://youtu.be/ew53HCZbSMI
இந்தாங்கோ!
சிவக்குமார் நொந்து போய் 'சொர்க்கம் நரகம்' படத்தில் பாடுறார்.
'தண்ணீரை நெருப்பு என்று சந்தேகம் கொண்டவர்கள்
கண்ணீரைக் காணாமல் ஓய்ந்ததுமில்லை
அவர்கள் கண்மூடித் தலையணையில் சாய்ந்ததுமில்லை'
https://youtu.be/svfDtOlnFbk
அதே சிவக்குமார்
'தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்'
அப்படின்னு இன்னும் நொந்து பாடுவாரே!
சரத்பாபுவும், ஸ்ரீப்ரியாவும் 'நினைவுகளி'ல் மூழ்கி
'ஓடைத் தண்ணீரில் மீனாட
ஊதாப் பூவோடு தேனாட
கண்ணில் கஸ்தூரி மானாட
வந்தேன் உன்னோடு நான் ஆட'
பாட, சின்னாவால் ஓர் ரேர் பாடல் கிடச்சுது. தேங்க்ஸ் சின்னா!
அப்பாடி! எத்தனை நாள் ஆச்சு இந்தப் பாடலைக் கேட்டு! ஸ்ரீபிரியா செம குளுகுளு. வாணி ரகளை.
https://youtu.be/wE1lMvMGkGk
'ஓடத்துல தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா?
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா?
கரை கடந்த குறத்தியின் இல்லை இல்லை ஒருத்தியின் தண்ணீரு... கண்ணீரு... பாவமான பாவம். ஜானகி அடி தூள்.
தண்ணிப் பாட்டு
தண்ணீரில் தள்ளாடும் மண் வீடு போலாச்சு......வரவு நல்ல உறவு
கண்ணாடி மேனியடி... தண்ணீரில்ஆடுதடி ..... சின்னாவுக்குப் பிடித்த பாட்டு
தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார்?
தாகத்துக்குத் தண்ணி குடிச்சேன்
தண்ணி இல்லேன்னா தாங்காது மீனு .....பக்கத்து வீட்டு ரோஜா
தண்ணீர் வீட்டோ வளர்த்தோம்
தண்ணிக் குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா...
தண்ணிக் கொடம் எடுத்து தனி வழியே போற குட்டி...
என்னடிப் பாப்பா சௌக்கியமா? தண்ணியிலே உள்ள சுகம்...
தண்ணீரில் ஏதடி நெருப்பு....உயிர்
தண்ணிக்குள் நிக்குது தாவணி....
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
தண்ணியிலே நனைஞ்சா இது தங்கமின்னு ஜொலிக்கும்
எந்நாளும் தண்ணியிலே எங்க பொழப்பு
தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
NTR's admiration for NT!!
நடிகர்திலகத்தின் வீர பாண்டிய கட்டபொம்மன் அதிரடிக் கலக்கலாக டிஜிடலில் மறு வெளியீடு கண்டுள்ள இவ்வேளையில் NTR அவர்களின் அசத்தலான இப்பாடல் காட்சியும் நடிகர் திலகத்துக்கான சிறந்த நினைவஞ்சலியே !!Quote:
நடிகர் திலகத்தின் உற்ற நண்பரும் தீவிர ரசிகருமான
என் டி ராமாராவ் அவர்கள் தெலுங்கில் நிகரற்ற சூப்பர்ஸ்டாராக வலம் வந்த போதும் நடிகர்திலகத்தின் விருப்பத்திற்கிணங்க கர்ணன் திரைப்படத்தில் விசுவரூப கிருஷ்ண பரமாத்மாவாக சிறப்புத் தோற்றமளித்து பெருமைப்படுத்தினார்.
அவ்வண்ணமே நடிகர்திலகமும் நட்பின் புரிதலாக
என் டி ஆரின் சாணக்கிய சந்திரகுப்தா திரைப்படத்தில் மாவீரர் அலெக்சாண்டராக சிறப்புத் தோற்றம் ஏற்று கௌரவப்படுத்தினார் !!
நடிகர்திலகத்தின் பிரிக்க முடியாத பாத்திரப் படைப்பின் திரைத் தோற்றங்களான வீரசிவாஜி மற்றும் கட்டபொம்மன் கெட்டப்புகளில் அப்படியே பொருந்தி நடிகர் திலகத்துக்கு பெருமை சேர்த்தார் என் டி ஆர் தனது மேஜர் சந்திரகாந்த் படம் வாயிலாக ..
https://www.youtube.com/watch?v=rC0g0719uBM
செந்தில் சார்,
திருப்தியா பார்த்துக்கோங்க.
http://2.bp.blogspot.com/-PfZ1AwAxrj...g+Pics+(3).jpg
http://3.bp.blogspot.com/-PO0DsF7JLD...g+Pics+(4).jpg
http://1.bp.blogspot.com/-G44J6Tk321...g+Pics+(5).jpg
http://2.bp.blogspot.com/-5b0V_g2hpY...g+Pics+(6).jpg
http://3.bp.blogspot.com/-4osPfISafD...g+Pics+(2).jpg
http://1.bp.blogspot.com/-h1NNuoKnnP...g+Pics+(1).jpg
ஆஹா..மதுண்ணா, வாசு சார் மிக்க நன்றி தண்ணீர் பாடல்கள் லிஸ்டிற்கு..ம்ம் ஒடைத்தண்ணீரில் நீராட இப்போ தான் பார்க்கிறேன் வெகு அழகானபாடல்..சொன்னாற்போல ஸ்ரீப்ரியாவும் அழகு (கன்னக்குழி விழும் நடிகை வேறு யார் இருக்கிறார்கள்..?!) (என்.டி.ஆர்க்கெல்லாம் பக்கெட் எடுக்கணுமா நற நற)
தண்ணிக்குள் நிக்குது தாவணி ஆடியோ மட்டும் தான் கிடைக்குது..
தண்ணியிலே நனைஞ்சா இது தங்கமின்னு ஜொலிக்கும் - இதுவும் கேட்டதில்லை..கிடைக்கவுமில்லை..
என்னடி பாப்பா செளக்கியமா தண்ணியிலே - உங்க புண்ணியத்துல நான் பார்த்தேனாக்கும்..ரொம்ப நாளாச்சு தாங்க்ஸ்..
தண்ணிக் கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது - ஒல்லி ப்ரஷாந்த்(முதல் படமா என்ன)
அட சந்தனக் கொடத்துத் தேனே நான் சந்திச்ச இளமானே (ஹை..இதிலயும் தேன் வருதே) இப்ப தான்பாக்கேன்..
தண்ணிக் கொடமெடுத்து த் தனிவழியே போற குட்டி - ம்ஹூம் தேடினதுல கிடைக்கலை..
ஆமா எங்கிட்டிருந்துங்கோ இப்படிப் பாட்டெல்லாம் கண்டு பிடிக்கறீங்க..க்ரேட் அண்ட் தாங்க்ஸ்..
தமிழில் வெகுஜனரஞ்சக இலக்கிய மதுர கீதங்களில் இலந்தைப் பழம் மாம்பழம் இளநி வரிசையில் ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு பாடலுக்கும் தண்ணியிலே மிதப்பதில் தனிப் பங்குண்டு!
ஆனால் இது எந்தப் படத்திலென்று வாசு வாசு பண்ணிப் பார்த்தேன்...கிடைக்கவில்லையே சிக!
தண்ணியிலே மீனுண்டு தரையிலே மானுண்டு மாத்தி வெச்சா தீர்ந்துவிடும் கணக்கு ..ஜிஞ்சினுககாம் சின்னக்கிளி பாடலும் சேருமா?
சி.செ :) :)
நானும் வாசு வாசு பண்ணிப்பார்க்கறேன்.. சிக்குதான்னு..
தண்ணியிலே மீனுண்டு தரையிலே மானுண்டு மாத்திவச்சா தீர்ந்து விடும் கணக்கு..அந்த வரிகள் அந்தப் பாடல் ஆக்டிங்க் ரேஞ்சே வேற .. அதுவும் சேரும்..(ம்ஹூஹூம் நான் சோக மோட்க்குப் போக மாட்டேன் இப்போ)
சரி சரி தண்ணீர் பற்றி ப் பாடல்கள் வழங்கிய மதுண்ணா வாசு சி.செ விற்காக ஒரு மலை ரோஜா ஆடப் போகிறது..(இப்பத் தான் பாட் கேட்டேன் அண்ட் பார்த்தேன்..ஸ்ரீப்ரியா டயட்டில் இருந்தாரோ என்னவோ பயங்கர ஒல்லி.. (சங்கிலி படம் பார்த்ததில்லை..)
https://youtu.be/1XaRtNyqcCk
மலை ரோஜாப் பூவு ஒண்ணு மடியில் விழுந்து
மகராஜா கொண்டாரய்யா காதல் விருந்து..
இதழெங்கும் பனி ஊஞ்சல் இடையோடு கருங்கூந்தல் சொல்லட்டும் என்னவாம் அர்த்தம்..ச்சும்மா மெட்டுக்கு வார்த்தையைப் போட்டு ஃபில் அப்பப் பண்ணியிருக்காங்க போல..
//தமிழில் வெகுஜனரஞ்சக இலக்கிய மதுர கீதங்களில் இலந்தைப் பழம் மாம்பழம் இளநி வரிசையில் ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு பாடலுக்கும் தண்ணியிலே மிதப்பதில் தனிப் பங்குண்டு!
ஆனால் இது எந்தப் படத்திலென்று வாசு வாசு பண்ணிப் பார்த்தேன்...கிடைக்கவில்லையே சிக!//
செந்தில் சார்,
நீங்க கேட்டு இல்லாமலா? திருப்தியா பார்த்துக்கோங்க.
கேட்டு ரவுண்டு அடிங்க. உலகம் இவ்வளவுதான். அப்படி ஜகா வாங்குங்க.
ஜின் குடிச்சேன் ஜின் குடிச்சேன்
ஜிங்காலக்கடி ஜின்னு
ஆஹா! ரம் குடிச்சேன் குடிச்சேன்
ரம்மாலக்கடி ரம்மு
https://youtu.be/5-ESQnjpMX8
சின்னா!
'தண்ணியிலே நனைஞ்சா இது தங்கமின்னு ஜொலிக்கும்'
பாடல் கேளடி கண்மணி படமாம். ஆனால் படத்தில் இப்பாடல் இடம் பெறவில்லை. பாடியது யார் தெரியுமா? என் பேவரைட் உமா ரமணன். செம பாட்டு சின்னா! இளையராஜா இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இனிமை...ரகளை.
கேட்டுட்டு சொல்லுங்க.
http://www.starmusiq.com/tamil_movie...sp?movieid=576
சின்னா!
//'தண்ணியிலே நனைஞ்சா இது தங்கமின்னு ஜொலிக்கும்'
பாடல் கேளடி கண்மணி படமாம். ஆனால் படத்தில் இப்பாடல் இடம் பெறவில்லை. பாடியது யார் தெரியுமா? என் பேவரைட் உமா ரமணன். செம பாட்டு சின்னா! இளையராஜா இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இனிமை...ரகளை.// வாசு சூப்பர்.. இந்தப் பாட்டு கேட்டதேயில்லை.. நைஸ்..படத்துல எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை..
உமாரமணனின் பூங்கதவே தாழ் திறவாய் மறக்க முடியுமா...பொன் மானே கோபம் ஏனோ மறக்க முடியுமா.
மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவே..உங்களுக்காக.. ச்சும்மா கண்மூடியே கேக்கலாம்.. நல்ல பாட்டு..
https://youtu.be/25p9EQA4Hsc
They are talking about prohibition in Tamilnadu. People are talking about 'thaNNi' here ! :lol: Must be generation gap ! :)
ராஜ் ராஜ் சார் அது வேற இது வேற :)
*
வாஸ்ஸு... உமா ரமணன்னு கிளப்பி விட்டுட்டீங்க அவங்கன்னு தெரியாமலேயே எத்தனப் பாட்டு கேக்க மட்டும் செஞ்சுருக்கேன் (வாணின்னு நெனச்சுருந்தேனாக்கும்)
*
காதல் வயப்பட்ட கள்ளமனக் கண்ணுக்குள்
மோதலாய்ச் சீண்டியே மோகத்தை - ஊதியே
தூக்கி நிறுத்தியே துன்பத்தை மேல்நிறுத்தும்
பூக்களும் வண்ணமாய்ப் போ..!
*
பூத்துப் பூத்துக் குலுங்குதய்யா பூவு
அதப் பார்த்து பார்த்து மனசுக்குள்ளே நோவு..
https://youtu.be/DbvU49SfgYY
மீண்டும் உமா ரமணன் இன் தண்ணீர்..
*
குயிற்பாட்டை இங்குதான் கூட்டிவந்த நண்பா
மயிலாக மாறினேன் பார்..
*
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு இன்னார் தான் சாமி சொன்னதம்மா.. முரளி சாரதாப்ரீதா (கிட்டத்தட்ட கனகா இல்லியோ)..
https://youtu.be/2iVSZYjlZbU
உமா ரமணனின் பாடல்கள் நானிப்போது கேட்கப் போவது...
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
மேகம் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதடி..
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
ஆனந்த ராகம் கேட்கும் காலம்...
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே..
தாங்க்ஸ் வாசு..
மாற்றார் தோட்ட மதுர கீதங்கள் ! பகுதி 35 : the sound of music (1965)
Dedicated to our daughters / grandchildren if applies!!
பொம்மலாட்ட / பொம்மையாட்டப் பாடல்கள் ! puppet show melodies!!
Quote:
மனிதராகிய நாமெல்லோருமே இறைவன் கைப் பொம்மைகளே ! ஆட்டுவிக்கிறார்....ஆடுகிறோம்!! வாழ்க்கையே பொம்மலாட்டமே!!!
பொம்மலாட்டப் பாடல்களில் சிகரம் சவுண்டு ஆப் மியூசிக் படத்தில் சாந்தி நிலையக் குழந்தைகள் நடத்தும் மேடைப் பொம்மலாட்டமே !!
https://www.youtube.com/watch?v=gtZyAf8JqDI
தமிழில் காத்தவராயனில் சந்திரபாபு போடும் பொம்மையாட்டம் !
https://www.youtube.com/watch?v=6Q_d-KM9Lek
மீண்டும் வாழ்வேன் பாரதி பொம்மையாட்டமும் ரசனையே !
ஜெய் லட்சுமி பெண்ணல்ல நீ ஒரு பொம்மை ...ஓகே!
appadiya? sari! :) Here is a 'thaNNi' song for you ! :)
kodaiyile ilaippaatrikkoLLum vaga kidaitha kuLir tharuve tharu nizhale
..................
odaiyile oorugindraa theenchuvai thaNNeere.........
http://www.youtube.com/watch?v=KkdY71gPNFE
T.R.Mahalingam in Naam Iruvar !
Here's my contribution to the list of தண்ணி/தண்ணீர் பாடல்கள்! :)
படம்: மைதிலி என்னை காதலி:
தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத் தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால்
உன் மனதை யார் அறிவார்...
படம்: மைதிலி என்னை காதலி:
தண்ணீரில் மீன் ஆழுதால்
கண்ணீரை கண்டது யார்
தனியாக நான் அழுதால்
என்னோடு வருவது யார் யார் யார்...
படம்: முப்பெரும் தேவியார்:
தண்ணீரில் ஒரு பௌர்ணமித் திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவியக் கண்கள்
ரசிக்க வந்ததோ...
படம்: நாடோடிக் காதல்:
தண்ணியிலே மானம்மா தரையிலே மீனம்மா
என்ன சொல்ல எங்கள் வாழ்க்கை கானல் நீரம்மா...
படம்: புது மனிதன்:
வலைக்கு தப்பிய மீனு மாமு
ஓலைக்கு வந்தது பாரு
பொறந்தது தண்ணீரிலே
மீனு அழிவது வெண்ணீரிலே...
(Most of the videos are available on youtube)