சிறப்பாக இல்லையென்றால் விமரிசிக்கும் உரிமை. சரியா படி ராஜா.
எல்லாரும் மேலத்தான் படிக்கிறீங்களே தவிர அடில்லெ உள்ள matter ஐ படிக்க
மாட்டேன்றீங் களே? ----இப்படிக்கு ரங்கன்.
Printable View
என்னது....எனக்கு ராகவேந்தர் சார் ஒரு advance congrats போட்டவுடனேயே திரியில ஒரு தீஞ்ச நாத்தம் வருதே......அதுவும் வெளியூரிலேர்ந்து வர்ற தீஞ்ச நாத்தம் மாதிரி இருக்கு ?
திருபரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருக திருத்தணி மலைமீது எதிரொலிக்கும் இந்த பாடல் அன்று...அதே பாடல் சற்று மாற்றி....சென்னை மாநகரில் நீ பாராட்டினால் ராகவேந்திர...VIETNAAM நாட்டில் இருந்து தீஞ்ச நாத்தம் வரும்...இது இன்று..!
வாசுதேவன் சார்....அந்த phenoil அல்லது room freshner edunga சார் !!! ஹி..ஹி..
DEAR RAGHAVENDRAN SIR,
MANY MANY THANKS FOR YOUR KIND WISHES....WITH OUR SIDHDHAR's BLESSINGS and ALL WISHES OF OUR FRIENDS IN HUB, I SHALL TRY TO CONTRIBUTE WHATEVER THAT I COULD TO BRING OUT SIDHDHAR's LAURELS TO THE YOUNGER AND FUTURE GENERATIONS.. !
MY SPECIAL THANKS TO GOPAL SIR.... :-) NEYVELIYAAR :-) MR.KARTHIK, Mr.RAGULRAM, Mr.GOLDSTAR SATISH, MURALI SRINIVAS SIR (SPECIAL MENTION) & OUR GOOD & MOST UNDERSTANDING FRIENDS - VINODH Sir, MAASANAM SIR !
அன்புள்ள நண்பர்களுக்கு,
இரண்டு பக்கங்களுக்கு முன் நான் பதித்திருந்த நடிகர்திலகத்தின் நினைவு இல்லம் பற்றிய பதிவுக்கு தனி மடலில் பல கண்டனங்கள் வந்துள்ளன. அப்பதிவை நான் நீக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளன. மாற்று முகாம் நண்பர்களிடம் இருந்து “உதாரணத்துக்கு எங்கள் தலைவர் நினைவு இல்லத்தை இழுக்காதே” என்று வந்த கண்டனத்தையாவது ஒப்புக்கொள்ளலாம். ஆனால் நமது நண்பர்கள் சிலரே கூட எனது பதிவைப் புரிந்துகொள்ளாமல், பதிவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். (அந்தக் கண்டனங்களை திரியிலேயே பதித்திருந்தால் பலரும் படித்து உண்மையை உணர்ந்திருக்க முடியும்).
இருப்பினும் எனது பதிவில் ஆட்சேபத்துக்குரிய விஷயம் ஏதும் இல்லையாதலால், பதிவை நீக்காதது மட்டுமல்ல. அதில் ஒரு புள்ளியைக்கூட எடிட் செய்யாமல் அப்படியே விட்டிருக்கிறேன். பார்ப்போர் உண்மையை தெரிந்துகொள்ளட்டும்.
இத்தனைக்கும் தவறான எந்த கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. எம்.ஜி.ஆர். அவர்கள் ராமவரம் தோட்ட இல்லத்துக்குச் சென்றபின் தி.நகர் ஆற்காடு முதலி தெரு இல்லம். 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்' அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அதைத்தான் ஜானகி அம்மையார் 'எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக' மாற்றியமைத்தார். அதேபோல ராயப்பேட்டை பெசன்ட் ரோடு 'சிவாஜி பிலிம்ஸ்' அலுவலக கட்டிடம்தான் (போக்ரோடு 'அன்னை இல்லத்தில்' குடியேறும் முன்னர்) நடிகர்திலகத்தின் இல்லமாக இருந்து வந்தது. கடைசி மகள் தேன்மொழி தவிர மற்ற அனைவரும் அங்கு பிறந்தவர்கள்தான். இப்போது அந்த 'சிவாஜி பிலிம்ஸ்' கட்டிடத்தைப் புதுப்பித்து அதை நடிகர்திலகம் நினைவு இல்லமாக மாற்றினால் என்ன?. இதற்கு எந்த அரசைக்கேட்க வேண்டும்?. எந்த நடிகர் சங்கத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் வேண்டும்?. எதுவும் தேவையில்லை. ஜானகி அம்மையார் தனியொருவராக தன கணவருக்கு நினைவு இல்லம் அமைக்க எடுத்த முயற்சியை, (தற்போது மூன்றாவது தலைமுறையும்கூட நடிக்க வந்திருக்கும் நிலையில்) நடிகர்திலகத்தின் வாரிசுகளால் நிறைவேற்றி தந்தைக்கு மரியாதை செலுத்த முடியாதா?.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஏழு நகரங்களில் நடிகர்திலகத்தின் முழு உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நடிகர்திலகத்தின் வாரிசுகளின் பங்களிப்பு எதுவுமில்லை (சிலை திறப்பு விழாக்களில் கலந்துகொள்வது தவிர).
எனவே நினைவு இல்லமாவது அமைத்து தந்தைக்கு பெருமை சேர்க்கட்டுமே என்ற தொனியில் கேட்டிருந்தேன். அதற்கு வந்த எதிர்ப்பைப்பார்த்து மலைத்தேன். நடிகர்திலகத்தின் நினைவு இல்லத்துக்கு நமக்குள்ளேயே இவ்வளவு எதிர்ப்பா? என்று எண்ணி அதிர்ந்தேன்.
வாழ்க அவர்கள்.... ஒழிக நான்......... (இனியும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திரியிலேயே எதிர்க்கலாம். மறைமுகம் தேவையில்லை)..
திரு கார்த்திக் அவர்களுக்கு
நீங்கள் எழுதிய கருத்தை நானும் படித்தேன். அது முழுவதும் உங்களுடைய கருத்துதான். அதை எழுதவும், பிரசுரிக்கவும் தங்களுக்கு முழு உரிமை மற்றும் அதிகாரம், சுதந்திரம் இருக்கிறது.
நீங்கள் எழுதிய பதிவு மிகவும் ஞாயமானதாகும் மற்றும் மறுப்பதற்கோ அல்லது எதிர்பதர்க்கோ அதில் ஒன்றுமே இல்லை.
இந்த கருத்தை நானும் வழிமொழிகிறேன். !
நல்ல பேரை எடுக்கவேண்டும் என்பதற்காக ஜால்ரா தட்டுவது மட்டும் ஒரு உண்மையான ரசிகனின் கடமையல்ல என்பதை அதை மட்டுமே செய்பவர்கள் உணரவேண்டும் என்பதுதான் எனது விருப்பமும் கூட.
திரு.முசிரிபுத்தன் அவர்கள் மற்றும் திரு.சின்ன அண்ணாமலை அவர்களிடயே, அவர்களுக்குள்ள உள்ள வித்தியாசத்தை திரியில் எழுதினால் மட்டும் போதாது. திரு.முசிரிபுத்தன் அவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை atleast நாமாவது கற்றுகொள்ளலாமே ?
மாற்று முகாம் நண்பர் யாராக இருப்பினும், அவருக்கு அவரது கருத்தை உரைக்க சுதந்திரம் இருக்கிறது.
அதே நேரத்தில் உங்களை அதை செய்யாதே இதை செய்யாதே என்று கூறும் அதிகாரம், உங்களுடைய சுதந்திரத்தில் தலையிடும் உரிமை அவர்களுக்கும் அறவே கிடையாது, அது ஞாயமான விஷயமாக இருக்கும் பட்சத்தில் !
நல்லது கெட்டதை தக்க தருணத்தில் எடுத்துரைப்பது ஒரு உண்மையான ரசிகனின் கடமையாகும் என்பது எனது கருத்து !
நீங்கள் எழுதிய பதிவு 100% உண்மை. ஆகையால் உங்கள் பதிவை தயவு செய்து நீங்கள் நீக்கவோ edit செய்யவோ வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன் !
பங்கு இருக்கிறது.
அதில் பங்கு பெற வந்தவர்களின் செலவுகளை இவர்கள் ஏற்றது ! எவரிடமும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், வரும் காலங்களில் இவர்கள் வெளியே பேசும்போது "நாங்க சிலை திறப்பு விழாவிற்கு போனோம் ஒரு காபி கூட அவங்க பசங்க வாங்கித்தரல என்று தூற்றும் கேடுகெட்ட கும்பல் இவர்கள் என்பது நடிகர் திலகத்தின் வாரிசுகளுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் அவர்களின் எல்லா செலவையும் இவர்கள் ஏற்றுகொண்டார்கள். எவனுடைய ஓசி சேவையும் தேவை இல்லை என்பதால்.
விமான கட்டணம் மற்றும் தங்கும், போக்குவரத்து செலவு, உணவு மற்றும் பிற செலவுகள் நடிகர் திலகத்தின் வாரிசுகள் செலவு செய்ததுதான். நம் நடிகர் திலகத்தின் மேல் உண்மையிலயே அபிமானம் இருந்திருந்தால் அதில் பங்குபெற வந்தவர்கள் தங்கள் சொந்த செலவில் வந்து சென்றிருபார்கள்.
செலவை அன்னை இல்ல வாரிசுகள் ஏற்றுகொண்டதால் இவர்கள் வந்தார்கள் ! இல்லையேல் ? வீட்டில் வெட்டியாக இருந்தால் கூட ....."ஷூட்டிங் இருந்துச்சு அதனால வரமுடியல என்ற புளித்துப்போன புளுகை அவிழ்த்துதான் விட்டிருப்பார்கள்.
நமக்கு தெரியாதா பங்குபெற வந்தவர்கள் யோக்யதையை பற்றி?
"நடிகர் திலகத்தை பார்த்து தான் நான் சினிமாவுக்கு வந்தேன்...பேசகற்றுகொண்டேன்...பல்விளக்க கற்றுகொண்டேன்...குளிக்க கற்றுகொண்டேன்" என்று அடித்தளத்தில் உள்ள சாமான்ய ரசிகனை(Front Benchers) உசுப்பிவிடும் விதத்தில் பேசி நடித்து விசில் அடிக்கவும், கைதட்டல் பெறவும் மைக் கிடைத்தவுடன் சம்ப்ரதாயதுக்கு பேசி செல்லும் கூட்டம்தானே !
அன்புள்ள சௌரி சார்,
என்னுடைய பதிவின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கும், அதற்கு நீங்கள் அளித்திருக்கும் 100 சதம் ஆதரவுக்கும் மிக்க நன்றி. நடிகர்திலகத்தின் சிலை திறப்பு விழாக்களின்போது அவரது வாரிசுகளின் பங்களிப்பை சிறப்பாக உணர்த்தியமைக்கு நன்றி. அதுபோல ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளன்று கலைத்துறை வித்தகர்களுக்கு விருதும் பணமுடிப்பும் வழங்கும் சேவையையும் கையாண்டு வருகின்றனர் என்பதும் உண்மை. இவைகளின் உச்சமாக 'நினைவு இல்லத்தையும்' நிறுவி நடிகர்திலகத்துக்கு நிரந்தரப் புகழையும், ரசிகர்களின் கனவையும் ஒருசேர நிறைவேற்றிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
நாம் வேறெதையும் கேட்கப்போவதில்லை...