-
23rd June 2013, 01:14 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ள நண்பர்களுக்கு,
இரண்டு பக்கங்களுக்கு முன் நான் பதித்திருந்த நடிகர்திலகத்தின் நினைவு இல்லம் பற்றிய பதிவுக்கு தனி மடலில் பல கண்டனங்கள் வந்துள்ளன. அப்பதிவை நான் நீக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளன. மாற்று முகாம் நண்பர்களிடம் இருந்து “உதாரணத்துக்கு எங்கள் தலைவர் நினைவு இல்லத்தை இழுக்காதே” என்று வந்த கண்டனத்தையாவது ஒப்புக்கொள்ளலாம். ஆனால் நமது நண்பர்கள் சிலரே கூட எனது பதிவைப் புரிந்துகொள்ளாமல், பதிவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். (அந்தக் கண்டனங்களை திரியிலேயே பதித்திருந்தால் பலரும் படித்து உண்மையை உணர்ந்திருக்க முடியும்).
இருப்பினும் எனது பதிவில் ஆட்சேபத்துக்குரிய விஷயம் ஏதும் இல்லையாதலால், பதிவை நீக்காதது மட்டுமல்ல. அதில் ஒரு புள்ளியைக்கூட எடிட் செய்யாமல் அப்படியே விட்டிருக்கிறேன். பார்ப்போர் உண்மையை தெரிந்துகொள்ளட்டும்.
இத்தனைக்கும் தவறான எந்த கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. எம்.ஜி.ஆர். அவர்கள் ராமவரம் தோட்ட இல்லத்துக்குச் சென்றபின் தி.நகர் ஆற்காடு முதலி தெரு இல்லம். 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்' அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அதைத்தான் ஜானகி அம்மையார் 'எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக' மாற்றியமைத்தார். அதேபோல ராயப்பேட்டை பெசன்ட் ரோடு 'சிவாஜி பிலிம்ஸ்' அலுவலக கட்டிடம்தான் (போக்ரோடு 'அன்னை இல்லத்தில்' குடியேறும் முன்னர்) நடிகர்திலகத்தின் இல்லமாக இருந்து வந்தது. கடைசி மகள் தேன்மொழி தவிர மற்ற அனைவரும் அங்கு பிறந்தவர்கள்தான். இப்போது அந்த 'சிவாஜி பிலிம்ஸ்' கட்டிடத்தைப் புதுப்பித்து அதை நடிகர்திலகம் நினைவு இல்லமாக மாற்றினால் என்ன?. இதற்கு எந்த அரசைக்கேட்க வேண்டும்?. எந்த நடிகர் சங்கத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் வேண்டும்?. எதுவும் தேவையில்லை. ஜானகி அம்மையார் தனியொருவராக தன கணவருக்கு நினைவு இல்லம் அமைக்க எடுத்த முயற்சியை, (தற்போது மூன்றாவது தலைமுறையும்கூட நடிக்க வந்திருக்கும் நிலையில்) நடிகர்திலகத்தின் வாரிசுகளால் நிறைவேற்றி தந்தைக்கு மரியாதை செலுத்த முடியாதா?.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஏழு நகரங்களில் நடிகர்திலகத்தின் முழு உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நடிகர்திலகத்தின் வாரிசுகளின் பங்களிப்பு எதுவுமில்லை (சிலை திறப்பு விழாக்களில் கலந்துகொள்வது தவிர).
எனவே நினைவு இல்லமாவது அமைத்து தந்தைக்கு பெருமை சேர்க்கட்டுமே என்ற தொனியில் கேட்டிருந்தேன். அதற்கு வந்த எதிர்ப்பைப்பார்த்து மலைத்தேன். நடிகர்திலகத்தின் நினைவு இல்லத்துக்கு நமக்குள்ளேயே இவ்வளவு எதிர்ப்பா? என்று எண்ணி அதிர்ந்தேன்.
வாழ்க அவர்கள்.... ஒழிக நான்......... (இனியும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திரியிலேயே எதிர்க்கலாம். மறைமுகம் தேவையில்லை)..
-
23rd June 2013 01:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks