Pradeep Sir please note the person who had lent voice to our MGR in hindi movies playback and as well as dubbing.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Printable View
Pradeep Sir please note the person who had lent voice to our MGR in hindi movies playback and as well as dubbing.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
moh rafi roop sir and thanks
ரவிச்சந்திரன் சார்,
அபாரமான உழைப்பு. அற்புதமான வண்ணப் படங்கள் தொடரட்டும் தங்களது பணி.
1300 அருமையான பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
பிரதீப் பாலு சார்,
இது வரை கேட்டிறாத மக்கள் திலகத்தின் இந்தி மொழி டப்பிங் பாடல்களைப் பதிவு செய்து ஓர் புதிய அனுபவத்தினை ஏற்படுத்தியமைக்கு நன்றி. இதே போல் மக்கள் திலகம் சொந்தக் குரலில் பேசி நடித்த ஒரே மலையாளப் படமான ஜெனோவா படத்தினை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். தெலுங்கு படம் ஏற்கனவே நமது திரியில் பதிவு செய்துள்ளோம். இந்திப் படத்திலிருந்தும் சில உணர்ச்சிகரமான காட்சிகளை எதிர்ப்ர்க்கிறோம். ஏக்தா ராஜா படம் மக்கள் திலகம் அவர்கள் இந்தி பேசி நடித்திருந்தும் கூட வேறு ஒருவர் குரல் கொடுக்கப்பட்டதாக மக்கள் திலகம் அவர்களே குறிப்பிட்டுள்ளார். (வசனங்களை மக்கள் திலகம் அவர்களே இந்தியில் பேசி நடித்துள்ளார்.)
Roop sir,
Your posts are rocking sir
Is any MGR movie going to be re released with good prints, sound waiting to see 1000thil oruvan, Padagotti, Ragasiya Police, Idayakani, Rickshawkaran, Nam Naadu & many more good movies of Vathiyar . Kindly provide the info
மக்கள் திலகத்தின் அபிமன்யு திரைப்படத்தை முதல் முறையாக சின்ன திரையில் முழு படத்தை காணும் வாய்ப்பு நேற்று கிடைத்தது . மக்கள் திலகத்தின் அன்றைய இளமை தோற்றம் - வளமான குரல் எல்லாமே நன்றாக இருந்தது .65 ஆண்டுகள் முன் வந்த படம் .
பிரதீப் சார்
1970 ஆண்டு அடிமைப்பெண் இந்தி மொழி டப்பிங் படம் வந்தது .நானும் அந்த படத்தை பார்த்துள்ளேன் . ஆனால் முதல் முறையாக மக்கள் திலகம் திரியில் தாயில்லாமல் நானில்லை என்ற இந்தி பாடலை பதிவிட்டமைக்கு நன்றி .
குலேபகாவலி - மயக்கும் மாலை பாடலும் மிகவும் அருமை . நன்றி சார்
ரவிசந்திரன் சார்
நீரும் நெருப்பும் மக்கள் திலகத்தின் அட்டகாசமான போஸ். பின்னணியில் கோட்டை .சூப்பர்
[QUOTE=ragulram11;1023330]Is any MGR movie going to be re released with good prints, sound waiting to see 1000thil oruvan, Padagotti, Ragasiya Police, Idayakani, Rickshawkaran, Nam Naadu & many more good movies of Vathiyar . Kindly provide the info
திரு ராகுல்ராம்
உங்களை போலவே நாங்களும் ஆவலுடன் எதிர்பார்கிறோம் . இன்று வரை யாருமே மக்கள் திலகத்தின் படங்களை புதிப்பிக்கவோ -டிஜிட்டல் படமாக்கவோ முன் வரவில்லை என்பது கவலை தரும் தகவல் . மக்கள் திலகத்தின் பழைய படங்கள் இருக்கும் நிலையிலேயே ஓடிக்கொண்டு வருகிறது .
[QUOTE=P_R;1023277]Hope you guys are watching Abhimanyu on Murasu TV now.
MGR as Arjunan - impressive!
P_ R SIR
we enjoyed abhimanyu movie with great pleasure- first time seen . very nice role by makkal thilagam .
thanks
Thanks Raghulram.
good to see you all here ! awesome post s'
Regards
மக்கள் திலகம் சரோஜாதேவி நடித்த ராஜாவின் பார்வை ராணியில் பக்கம்
அன்பே வா கனவுக்காட்சியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல மொழிகளில்
அதே போல குதிரை சவாரி வானுலக பவனி என்று பலவிதமாய் கனவுகள் ஊர்வலம் காட்டிய போதிலும்
மக்கள் திலகம் சரோஜாதேவி டி எம் எஸ் பி சுஷீலா எம் எஸ் வி வாலி கூட்டணி அளவுக்கு
மனங்கவர் இனிமை வலம் வரவில்லை
நாகேஷ் அவர்கள் நடித்த சர்வர் சுந்தரத்தை இந்தியில் 1971 இல் Main Sunder Hoon என்று எடுத்த போது
ராஜா ராணி பார்வையை இப்படி பயன்படுத்தியிருந்தார்கள்
http://www.youtube.com/watch?v=N-nABcjl5j0
Regards
மக்கள் திலகத்தின் பழைய பேட்டி - "மக்கள் பொக்கிஷம்" என்ற மாத இதழில் சமீபத்தில் (February 2013) பிரசுரிக்கப்பட்டது.
For Viewers - To Refresh
http://i50.tinypic.com/2zylqhe.jpg
http://i46.tinypic.com/ormgsn.jpg
http://i50.tinypic.com/i5aww9.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கும் திரு tfmlover அவர்களுக்கு நன்றி .
அன்பே வா - படத்தில் மக்கள் திலகம் - சரோஜாதேவி தோன்றும் கனவு பாடல் - எந்த காலத்திலும் யாராலும் நெருங்க முடியாத காவிய பாடல் .
பாரத் பட்டமளிப்பு விழாவில் மக்கள் திலகம் அவர்களின் உரை மிகவும் பொருத்தமான நேரத்தில் பதிவிட்டு
இது வரை மக்கள் திலகத்தின் பெருமையினை உணராத சிலருக்கு புரிய வைக்கும் பதிவு இது . நன்றி செல்வகுமார் சார் .
மக்கள் திலகத்தின் நாம் திரைப்படம் 5.3.1953 - 60 ஆண்டுகள் நிறைவு .
http://i48.tinypic.com/fwqgpt.jpg
மக்கள் திலகம் நடித்த நவரத்தினம் -5-3-1977 - 36வது ஆண்டு நிறைவு நாள் .
http://i45.tinypic.com/r0uxk7.jpg
'நவரத்தினம்" நன்றாக ஓடவில்லை என்றும், அதனால் ஏ.பி.நாகராஜனும், அவர் குடும்பத்தினரும் நலிவடைந்தனர் என்றும் திரைப்பட உலகில் ஒரு பேச்சு உண்டு. இதுபற்றி நாகராஜனின் குடும்ப நண்பர் ஒருவர் கூறியதாவது:-
"நவரத்தினம், எம்.ஜி.ஆர். நடித்து ஏ.பி.நாகராஜன் தயாரித்த படம். அப்படத்தை நாகராஜன் நல்ல விலைக்கு ஏற்கனவே விற்றுவிட்டார். அதனால் அவருக்கு லாபம்தான். விநியோகஸ்தர்களுக்கு கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது உண்மை. அவர்கள் ஏற்கனவே திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களின் மூலம் நிறைய லாபம் சம்பாதித்தவர்கள். எனவே, இப்போதைய சிறு நஷ்டம் அவர்களைப் பாதிக்கவில்லை." இவ்வாறு நாகராஜனின் குடும்ப நண்பர் கூறினார்.
மாலை மலர் - சினிமா செய்தி
tfmlover sir,
nice video to refer. When the movie Anbe Vaa was released in 1966, I was NO.
But heared the songs in radio and speaker sets, and was waiting with great expactation about that movie, particularly this song 'rajavin paarvai'. When I watched in rerelease in theatre, no hesitate to accept that I met disappointment. They showed the horse's head only for just two seconds in the beginning, after that no horse, but only the foot sound.
the chariot is nothing but a cycle rickshaw with some attachments in the front, and the wheel running also artificial. In the back projection there were only colors and no any sceneries. But the costumes of MGR and Sarojadevi is excellent and their face expressions also very good.
After half song, the beat changes and it goes to ooty garden. (even it was told as simla many scenes were shoot at ooty and kodaikanal). In ooty scenes MGR's make-up and costumes are good, but sarojadevi's make-up is over. And the color smoke also unnecessary, even it is a dream song.
but this song is very very popular between public and every VIP when talking about movie songs, never failed to mention this song.
இணையத்திலிருந்து புலவர் புலமைப்பித்தன் அவர்களது கட்டுரை
கோபத்திலும் கொடைவள்ளல் குணம் மாறாது.
Posted on April 4, 2012
1980 ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பிறகு நடந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்கள் திலகம் முதல்வராக வந்தார். அப்போது இந்தியப் பிரதமராக இந்திராகாந்தி இருந்தார். கருணாநிதியோடு இந்திரா காந்திக்கு அரசியல் நட்புறவு இருந்தது. கூடா நட்பு தமிழ்நாட்டுக்குக் கேடாய் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக இந்திராகாந்திக்கும், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் ஒரு சுமூகமான சூழ்நிலை இல்லாமல் இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக இந்திரா காந்தியின் மன இறுக்கம் குறைந்து கொஞ்சம் நேசப் பார்வை அரும்பி இருந்தது. ஒரு பிரதமருக்கும் ஒரு மாநில முதல்வருக்கும் இடையே கசப்பும் வெறுப்பும் இருத்தல் நல்லதல்ல. அந்த வகையில், இருவருக்கும் இடையே இருந்த விரிசல் நீங்கி நட்புறவு மலரத் தொடங்கியிருந்தது.
இந்த நிலையில்
1981 ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழருக்கும் வாய்த்த தவப்பேறு புரட்சித் தலைவர் அவர்கள் தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கினார். அதன் தொடக்கவிழா 1981-ம் ஆண்டு ஜனவரி திங்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன்னர் ஈழத்தில் நம் உறவுகள் 58 பேர் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். அது என் நெஞ்சில் தீராத வேதனையை ஏற்படுத்தி இருந்தது!
தமிழ் பல்கலைக்கழகத் துவக்க விழாவின் காலை நிகழ்ச்சியாகக் கவியரங்கம்! எனக்குள் இருந்த ஆவேசம் என் கவிதையில் வெளிப்பட்டது. இந்திரா காந்தியைப் பார்த்து சொல்வதாக,
சஞ்சயினை இழந்துவிட்ட
புத்திர சோகச்
சஞ்சலத்தை உணர்ந்தவள் நீ
தவிக்கும் எங்கள்
பஞ்சைகளை பராரிகளை
ஏறெடுத்துப்
பார்க்காமல் இருப்பதென்ன
முறையா! அம்மா
கொஞ்சம் நீ மனது வைத்து
முறைத்துப் பார்த்தால்,
கொழும்புக்கு கொழுப்படங்கும்
இல்லை என்றால்
வஞ்சனை நீ செய்கின்றாய்!
என்று சொல்ல
வாய் மறுக்கும்; ஆயினும்
என் மனம் சொல்லாதா?
என்று என் நெஞ்சின் துயரத்தைக் கவிதையில் வெளிப்படுத்தினேன். கூடியிருந்த கூட்டம் அதைக் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றது.
இந்தச் செய்தியை, நான் கவிதையில் கொட்டிய கனலை புரட்சித் தலைவரிடம் ஓர் அமைச்சர், பார்த்தீர்களா! இப்போதுதான் நமக்கும் மத்திய அரசுக்கும் இணக்கமான சூழல் உருவாகி வருகிறது. இந்திரா அம்மையாரிடம் ஒத்துப் போகும் சூழல் உருவாகி இருக்கிறது.
நம்ம புலவர், இந்திரா காந்தியைக் கண்டித்து இப்படிக் கவிதை படிக்கலாமா?என்று என் மீது புகார்க் கடிதம் வாசித்தார். மக்கள் திலகத்துக்கு உண்மையிலேயே என் மீது கடுமையான கோபம்! அவரது கோபத்தில் நியாயம் இல்லை என்று நான் சொல்லமாட்டேன்! தலைவரிடம் என் நண்பர் ஒருவர் போட்டுக் கொடுத்த செய்தியை, அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் அண்ணன் இராசாராம் என்னிடம் சொல்லி, ஏன் இப்படி எல்லாம் தலைவருக்கு நெருக்கடியை உருவாக்குகிறீர்கள்? என்று என்னைக் கடிந்துகொண்டார்.
நான் இரவு புறப்பட்டுச் சென்னை வந்து சேர்கிறேன். மறுநாள் காலை 6.30 மணி. தலைவரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்த எடுப்பிலேயே, நீங்கள் இனிமேல் என் முகத்தில் விழிக்காதீர்கள் என்று மிகக் கடுமையான தொனியில் சொன்னார். சரி, நான் உங்கள் முகத்தில் விழிக்கமாட்டேன் என்றேன்.
நான் சொல்லி முடிப்பதற்குள் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். பிறகு நான் அவரைத் தொடர்புகொள்ளவும் இல்லை. சட்டப்பேரவைக்கும் மேலவைக்கும் அவரும் வருவார்! நானும் மேலவைக்குச் சென்றுவருவேன்! நேருக்கு நேராகப் பார்க்க நேர்ந்தாலும் அவர் எதிரே வந்தாலும் நான் பார்க்காதது போல சென்றுவிடுவேன். அந்த வகையில், தலைவரின் சொல்லைத் தட்டாத தொண்டனாகத்தான் நடந்து கொண்டேன். இப்படி ஏழெட்டு மாதங்கள் கடந்துபோயின.
அதே 1981-ம் ஆண்டு ஃபிஜி தீவில் காமன்வெல்த் மாநாடு(C.P.A. Conference) நடந்தது. அந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் சட்ட மேலவை துணைத்தலைவர் என்ற வகையில் நான் கலந்துகொள்ளவேண்டி இருந்தது. 1981-ம் ஆண்டு நவம்பர் மாத வாக்கில் நான் புறப்படவேண்டி இருந்தது. அதுவரையும் எங்களுக்குள்ளே இருந்த ஊடல் தணியாமல்தான் இருந்தது. நான் புறப்படும் நாள் மாலையில், அவருக்கு மாலைபோட்டு மரியாதை தெரிவித்துவிட்டு விடைபெற வேண்டியிருந்தது. அது தவிர்க்க இயலாதது.
நான் குடும்பத்தாரோடும், என் நண்பர்கள் சிலரோடும் தோட்டத்துக்குப் போனேன். ஆனால், தலைவர் கீழே இறங்கி வரவில்லை. மிகப்பலர் அவரைக் காண்பதற்காகக் கூடியிருந்தார்கள். என்னைப் பார்ப்பதைத் தவிர்க்க நினைத்து அவர் யாரையும் சந்திக்கக் கீழே வரவில்லை.
நான் வாங்கிச் சென்ற மாலையை அங்கேயே வைத்துவிட்டு விமான நிலையத்துக்குப் புறப்பட்டுப் போனேன். என் மனைவிக்கும், என் மகள் கண்ணகி, என் மகன் புகழேந்தி ஆகியோருக்கும் தாங்க இயலாத மனவேதனை!
என்னை அவர் புறக்கணித்துப் பார்க்காமல் அனுப்பி வைத்ததால், அவர்களின் சோகம் நிரம்பிய முகங்கள் எனக்கு மிகுந்த துயரத்தை உருவாக்கியது. நான் அதுபற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. விமானம் ஏறி கோலாலம்பூர் சென்றேன். அங்கே மூன்று நாள் தங்கி இருந்தேன்.
அப்போது சிங்கப்பூரில் இருந்து ஒருவர் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, நீங்கள் எப்போது சிங்கப்பூர் வருகிறீர்கள்? என்றார்.
நீங்கள் யார்? என்றேன்.
அதைப் பிறகு தெரிந்துகொள்ளலாம். எப்போது வருகிறீர்கள்? என்றார்.
இன்றிரவு என்றேன். Transit journey யா? என்றார்.
ஆம் என்றேன். அப்படியானால் நான் உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் சந்திக்க வருகிறேன் என்று சொன்னவர் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தை எனக்குத் தெரிவித்தார். நான் அவர் சொன்ன இடத்துக்குச் சென்றேன். நான் வேட்டியும் சட்டையும் அணிந்திருந்ததால், அவர் என்னை மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
வேகமாக என்னை நெருங்கி வந்து You are Mr. Pulavar?என்றார்.
Yes என்றேன். அவரது கையிலிருந்து 10,000 அமெரிக்க டாலரை என்னிடம் நீட்டினார்.
நீங்கள் யார்? எதற்காக இதை எனக்குத் தருகிறீர்கள்? என்று கேட்டேன்.
எல்லாம் நீங்கள் சிங்கப்பூருக்குத் திரும்பி வரும்போது சொல்கிறேன். தயவு செய்து இதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தி என்னிடம் கொடுத்துவிட்டு சிரித்துக் கொண்டே விடைபெற்றார். அந்தப் பணம், எப்படி யாரால் இவர் மூலம் எனக்கு வந்தது என்பதைப் புரிந்துகொண்டேன். எனக்குள்ளே சிரித்துக் கொண்டே விமானத்தில் புறப்பட்டு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சென்றடைந்தேன்
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் உருவாகிய விதம் .
மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர்கள் அவரது ரசிகர்கள் .
1950 களில் தமிழ் சினிமாவில் , சமஸ்கிருதம் கலந்த தமிழ் பாடல்கள் , நீண்ட வசனங்கள் ,
என்று ஆக்கிரமிப்பு நிறைந்த நேரத்தில் தமிழ் சீர்திருத்த கருத்துக்கள் - தூய தமிழ் வசனங்கள் . பாடல்கள் என்று ஒரு புரட்சிகரமான மாறுதல்கள் உருவாகிய நேரம் . இதற்கு மூல காரணம் திரு அண்ணா . திரு கண்ணதாசன் , திரு கருணாநிதி , திரு இளங்கோ ஆகியோரின் கை வண்ணத்தில் பல புதுமை படைப்புக்கள் சினிமா பார்க்கும் ஒரு தனி மனிதனை சிந்திக்க வைத்து ரசிகனாக மாற செய்தது .
மக்கள் திலகத்தின் சர்வதிகாரி - மந்திரிகுமாரி - மருத நாட்டு இளவரசி - குமாரி - நாம்- ஜெனோவா - என்தங்கை - படங்களில் ஏற்படுத்திய நடிப்பின் தாக்கம் அவரை ஒரு வீராராக , புரட்சி கருத்துகளை ,சமுதாய சிந்தனை தூண்டும் பாடல்கள் , என்று புரட்சி நடிகராக மாறியதின் உணர்வுகள்தான் ஒரு தனிப்பட்ட ரசிகரை மக்கள் திலகத்தின் ரசிகராக மாற செய்தது .
1952-1960
தமிழ் சினிமாவில் பல புதுமை படைப்புகள் வலம் வந்தன .பல திறமைகள் கொண்ட நடிகர்கள் -கதாசிரியர்கள் - இயக்குனர்கள் - தயாரிப்பாளர்கள் - இசைஅமைப்பாளர்கள் - தோன்றி சாதனைகள் படைத்தனர் .
ஒரு பக்கம் குடும்ப கதைகள் படங்கள் - தெய்வீக படங்கள் - பொழதுபோக்கு படங்கள் - என்று போட்டிபோட்டு படங்கள் வந்த நேரத்தில் தனக்கென்று ஒரு பாணியை நமது மக்கள் திலகம் தொடங்கினார் . அதன் விளைவு
மலைக்கள்ளன்
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரைவீரன்
புதுமைபித்தன்
சக்கரவர்த்தி திருமகள்
ராஜராஜன்
நாடோடிமன்னன்
போன்ற பல வெற்றி படங்களை தந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடித்து மெல்ல மெல்ல மக்கள் மனதிலும் இடம் பிடித்து புரட்சி நடிகர் - மக்கள் திலகமாக மாறினார் .
தொடரும் ........
.
மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் இமாலய வெற்றி அவருக்கு உலக புகழ் அளித்தது .
ரசிகர்களின் எண்ணிக்கையும், எம்ஜியார் மன்றங்களும் நாளுக்கு நாள் நாடெங்கும் உதயமானது .
1957ல் நடைபெற்ற தமிழக தேர்தலில் மக்கள் திலகம் தேர்தல் சுற்று பயணத்தில் எம்ஜியார் மன்றங்களும் முதன் முறையாக தேர்தல் பணியில் தங்களை ஈடு படுத்தி கொண்டனர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஒரு அரசியல் தொண்டனாக மாற காரணம் மக்கள் திலகத்தின் மேல் கொண்ட அளவு கடந்த பாசமும் , அவர் செய்த தான தர்மங்கள் , கொள்கை பிரசார படங்கள் என்றால் மிகையாகாது .
1959 -சீர்காழியில் நடந்த நாடக மேடையில் ஏற்பட்ட விபத்தில் மக்கள் திலகத்தின் கால் ஒடிந்து ஓராண்டு காலம் [1959ல் ஒரே படம் - தாய் மகளுக்கு கட்டிய தாலி] முழு ஓய்வில் இருந்தார் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாக இருந்தது .இந்த இடைவெளியில்தான் பல வெள்ளிவிழா வெற்றி படங்கள் வந்து தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருந்தது .
நடிகர்திலகம் - காதல் மன்னன் இருவரும் ஒருபக்கம் , -பலபுது முக நடிகர்களின் வரவு - மெல்லிசை மன்னரின் பொற்கால துவக்கம் -வெற்றிப்பட இயக்குனர்களின் புதுமை படைப்புகள் என்று தமிழ் சினிமா முன்னேறி கொண்டிருந்தது .
மக்கள் திலகம் தனக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து மீண்டு 1960 முதல் தன்னை சுற்றி இருந்த தமிழ் சினிமாவின் பலரின் வெற்றி மகுடங்களையும் ,தனது வெற்றிடத்தையும் புரிந்து கொண்டு மீண்டும் எடுத்தார் விஸ்வரூபம் - அதுதான்
மன்னாதி மன்னன்
பாக்தாத் திருடன்
ராஜாதேசிங்கு
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து மேல் விருந்து வைத்து பல வெற்றி படங்களை தந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார் .
1961- பொன்னான மக்கள் திலகத்தின் ரசிகர்களின் மறக்க முடியாத ஆண்டு .
தொடரும் .........
நமது மக்கள்திலகம் திரியில் தவிர்கமுடியாத வேலையின்
காரணத்தால் வர முடியவில்லை மன்னிக்கவும்
பல அற்புத பதிவுகள் தொடர்ந்து வழங்கி வரும் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்
சென்னை பிராட்வே திரையரங்கில் மக்கள்திலகத்தின் 100வது
காவியம் ஒளிவிளக்கு http://i47.tinypic.com/2ce2h3c.jpgகொண்டாட்ட காட்சிகள்
திருவண்ணமலையில் அருமை நண்பர் திரு எம்ஜியார் பித்தன் கலீல்பாட்சா அவர்கள் 01-03-2013 அன்று மக்கள்திலகத்தின் பிறந்தநாள் மற்றும் மக்களதிலகம் எம்ஜியார் மன்றம் துவங்கி 48 ஆம் ஆண்டு விழா கொண்டாடினார்கள். மிகவும் அற்புதமான விழா நிகழ்ச்சிகள் விழுப்புரம் செல்வராஜ் அவர்களின் இசையுடன் கூடிய நகைசுவை மற்றும் அகிலஉலக எம்ஜியார் மன்ற தலைவர் தமிழ் மகன் ஹுசைன் அவர்களின் தலைவரை பற்றிய அற்புதமான பேச்சு ,புகைப்பட கண்காட்சி ,அன்னதானம் ,திருவண்ணாமலை கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது .இவ்விழாவில் புரட்சிதலைவர் பக்தர்கள் சென்னை ,மதுரை ,கோவை ,புதுச்சேரி மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கலந்துகொண்டனர்
http://i49.tinypic.com/2hs66h4.jpg