Dear Gopal,
Happy Pongal to you and all your family members
Dear Gopal,
Happy Pongal to you and all your family members
இன்று பொங்கல் தினம். நம் கோடீஸ்வரனை நினைக்காமல் இருக்க முடியுமா? பொங்கல் ராசியை, எங்க மாமா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போனாலும், சிவந்த மண், எங்க மாமா போன்றவற்றில் சிவாஜியின் அழகு ,இளமை,துடிப்பு அவ்வளவு பிரமாதம். இந்த படம் முதலில் எம்.ஜி.ஆரை வைத்து எடுப்பதாக இருந்து, நம் முகாமுக்கு மாறியது. லைட் weight ரோல், மூல படம் பிரம்மச்சாரி என்ற ஷம்மி நடித்த ,பிரம்மாண்ட வெற்றி படம்.
எனக்கென்னவோ ,இந்த படம் முதலில் பிடித்தே இருந்தது. பாவை பாவைதான்,என்னங்க(தாளம் அருமை), சொர்க்கம் பக்கத்தில், எல்லோரும் நலம் வாழ பாடல்கள் அருமை. குகநாதன் வசனம் ரொம்ப சவ,சவ என்று இருக்கும். திருலோகச்சந்தர் ,சிவாஜிக்கு செய்த முதல் கலர் படம், இன்னும் நன்றாக treatment பண்ணியிருந்தால், range எங்கேயோ போயிருக்கும். ஆனால் தலைவர், சொர்க்கம் பக்கத்தில் துள்ளல், என்னங்க பாட்டில் ஜாலி டான்ஸ், எல்லோரும் நலம் வாழ பியானோ உருக்கம் ,என்று நம்மை சொக்க வைத்து விடுவார்.
தலைவரின் உடையலங்காரம், அவ்வளவு அழகாக ,வடிவமைக்க பட்டு, தலைவரால் இன்னும் மெருகு பெரும். (தெலுங்கு தயாரிப்பாளர்கள் சூழாத பொற்காலம் உடையலங்காரங்கலில் ).சங்கு மார்க் லுங்கி விளம்பரத்தில் ,இந்த பட தலைவரின் pose ஒன்றை விளம்பரம் செய்தனர். இதற்கு முன் புது நாடகத்தில், ஊட்டி வரை உறவு pose ஒரு பனியன் விளம்பரத்தில் உபயோக படுத்த பட்டது. பின்னிருந்து ,தயாரித்தவர்கள் ஏ .வீ.எம். (ஜேயார் மூவீஸ் ) என்று கேள்வி.
சுமாரான வெற்றி படம் என்றாலும், நடிகர்திலகத்தின் தோற்றம் best என்றால்,இந்த படம்தான்.
எனக்கு பெரும்பாலும் NT தனது natural hair style இல் வந்தால் தான் பிடிக்கும். அப்படி பார்க்கும்போது, சிவந்த மண், மற்றும் ஊட்டி வரை உறவில் அவர் மிகவும் அழகாக இருப்பார். B &W படங்களிலும் பேசும் தெய்வம், பாலாடை போன்றவை. அவர் இன்னும் இளமையாக இருந்தபோது மனோஹரா மற்றும் அம்பிகாபதி இல் (wig வைத்திருந்தாலும் கூட) குழந்தை போன்ற தோற்றத்துடன் காணப்படுவார். மனோஹராவில் அவரையும் கிரிஜா (?) வையும் பார்த்தால் teenage ஜோடி போலிருக்கும்.
ஹேர் ஸ்டைல்
nam sivaji ஒரு படத்தில் உபயோஹா படுத்திய விக் வேறு படங்களில் உபயோஹா படுத்தியதில்லை -engo padithathu
நடிகர்திலகம் ரசிகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
இந்த திரியின் விலைமதிப்பில்லா பொக்கிஷம் திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களை மனம் நோக செய்த ஆதிராமுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அதே நேரத்தில் அதை தவறென்று உணர்ந்து மன்னிப்பு கேட்டதற்காக மிக்க நன்றி
திரு கோபால் சார்,
திரு ராகவேந்தர் அவர்கள் ஒரு குழந்தையை போன்றவர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் .தயவு செய்து அவரை விமர்சிக்கும்போது கடும் சொற்களை பயன்படுத்தாதீர்கள் என்று மிக்க பணிவோடு தங்களை கேட்டுகொள்கிறேன்
ஏன் சார்,
நான் மட்டும் கல்லா,இரும்பா, அவருக்கு ஏன் advise பண்ணாமல் ,என்னை மட்டும் திருத்தும் முயற்சி? நான் அவர் வழிக்கே போகாமல் ,என் போக்கில் போய் கொண்டிருந்தேன். பாராட்ட மனம் வேண்டாம். அதை அவரிடம் எதிர் பார்க்க முடியாது. ஆனால் சொல்லாததை திரித்து எழுதி, போக்கை திசை திருப்பி, நல்ல பதிவுகளை குட்டி சுவர் ஆக்கினால்,சும்மா இருக்க சொல்கிறீர்களா?
We must all united in propagating the Glory of
our Acting God.
//ஏன் சார்,
நான் மட்டும் கல்லா,இரும்பா, அவருக்கு ஏன் advise பண்ணாமல் ,என்னை மட்டும் திருத்தும் முயற்சி? நான் அவர் வழிக்கே போகாமல் ,என் போக்கில் போய் கொண்டிருந்தேன். பாராட்ட மனம் வேண்டாம். அதை அவரிடம் எதிர் பார்க்க முடியாது. ஆனால் சொல்லாததை திரித்து எழுதி, போக்கை திசை திருப்பி, நல்ல பதிவுகளை குட்டி சுவர் ஆக்கினால்,சும்மா இருக்க சொல்கிறீர்களா? //
கோபால் சார்,
அது முடிந்து போன ஒன்று, தாங்களே சற்று அதிகபடியாக சொல்லிவிட்டேன் என்று வருத்தம் வெளியிட்டீர்கள்.
பின்பு மீண்டும் இது போன்ற கடும் சொற்கள் தேவையா? என்று தான் தங்களிடம் வைக்கும் வேண்டுகோள்.
சரிதான், நாங்கள் இப்போது சிவாஜி கணேசனைப்பற்றி மறுபடியும் பேச ஆரம்பித்திருக்கிறோம். தயவு செய்து பழசைக் கிளறாதீர்கள். பழசாகிப்போன விவகாரத்தை மறுபடியும் எடுப்பதைப்பார்த்தால் flop ஆகிப்போன ஒரு படத்தை re -release செய்ய முயல்வது போல இருக்கிறது.
To brothers; Radhakrishnan and Harish: All misunderstandings are done and dealt with. Please do not start that again. Please do not try changing the flow of this thread again.
நமது திரியில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து 'களை' களைக் களைந்த மதிப்பிற்குரிய மாடரேட்டர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
Welcome Vasudevan Sir,
Start your postings soon about NT's Fighting capabilities. Hope your
official responsibilities are over. Take your Viswaroopam at the
earliest.
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971- பகுதி-1
1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.
மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலக்ருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.
விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். . ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.
இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.
வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.
(தொடரும் )
சவாலே சமாளி- 1971- பகுதி-2
சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.
வீ.எஸ்.ராகவன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.
பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.
நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.
(தொடரும்)
சவாலே சமாளி- 1971- பகுதி-3
சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.
வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள் )
இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.
ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.
நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)
எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
(முற்றும்)
நமது திரியில் எனக்கு உறுதுணையாய் நின்ற ராகவேந்திரன் சார், முரளி சார், ராதாகிருஷ்ணன் சார், என் செல்லத் தம்பி செந்தில், புதிதாக அறிமுகமாகி தூய தமிழ் நடையில் வித்தியாசமான முறையில் பதிவுகளை ரசிக்கும்படி அளித்து வரும் சகோதரர் Ganpat அவர்களுக்கும், மற்றும் சித்தூர் வாசுதேவன் சார் அவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அன்பு பம்மலார் அவர்களுக்கும், அன்புத் தங்கை வனஜா அவர்களுக்கும், பதிவுகளைப் பெருமைப்படுத்திய அன்புத் தோழர் கோபால் அவர்களுக்கும், மற்றைய ஏனையோருக்கும் என் மனமார்ந்த நன்றி!
அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
மிக மகிழ்ச்சி வாசு சார்.
சகோதரர் வாசுதேவன் அவர்களுக்கு நன்றி. 'களை'களை பறித்ததனால் புதுக்களையோடு வந்திருக்கிறீர்கள். ஒரு தீமையிலும் நன்மையிருக்கிறது போலும், உங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க நீங்கள் 'அஞ்ஞாத வாச'த்தை இடையில் நிறுத்தி மறுபடியும் இந்த திரிக்கு வந்துவிட்டீர்கள்! மிகவும் மகிழ்ச்சி!.
Mr Vasudevan Sir,
Thanks for your Pongal Greetings. Come Soon after your official work.
Mr Raghavendra Sir,
Thanks for uploading the Pongal Function Photo's held at our
Temple in our website. Pls upload the same here for the benefit
of million's of our NT's Fans.
ராகவேந்திரா சார்,
நமது website இல் உள்ள பொங்கல் photo க்கள் அருமை. பம்மலாரை நேரில் சந்தித்த உணர்வு. photo க்களை போடும் போது ,நீங்கள் edit பண்ணும் அழகு, ஒரு தேர்ந்த editor இடம் கூட பார்த்ததில்லை. கார்த்திகை கொண்டாட்டங்களையும், பொங்கல் கொண்டாட்டங்களையும் site இல் பார்ப்பவர்கள் ,இந்த அபார திறமையை உணர்வார்கள்.
திரியில் நீண்ட நாட்கள் காணாமல் போய்விடுபவர்களை மீளவும் இங்கு கொண்டுவந்து சேர்ப்பதற்குரிய தந்திரம், அவர்களைப்பற்றி இஷ்டப்படி சொல்வதுதான் என்று ஆகிவிட்ட நிலையில், சிறிது நாட்களாக திரிக்கு வராத எமது 'நாட்டாமை' திரு முரளி அவர்களை இங்கே கொண்டுவர என்ன வழி? அவர் ஊர் தூங்கும் நேரம் தமது 'தீர்ப்பு'களை திரியில் எழுதிவிட்டு, பகலில் இங்கே 'பிராது' கொடுப்போருக்குப்பயந்து (?) ஒதுங்கிவிடுவார். அவரையும் 'நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு' என்று ஒரு கட்டத்தில் கேட்டாகிவிட்டது. முந்தைய வருடங்களில் பந்தி பந்தியாக கட்டுரைகளை எழுதிக் குவித்துக்கொண்டிருந்தவர் இப்போது ஏன் மௌனமாகிவிட்டார்?
முரளி சார், பம்மலார், பார்த்தசாரதி சார், நெய்வேலி வாசுதேவன் சார் (ராகவேந்திர சாரை கோபப்பட வைத்தாலும் வராமல் இருக்கமாட்டார்) போன்றோருக்கு வேண்டுமானால் இப்படி பயமுறுத்தி எழுத வைக்கலாம். என்னைப் போன்றவரை பயமுறுத்தினால் மூன்று நாளைக்கு ஒரு முறை 'உள்ளேன் அய்யா' மட்டும்தான் போடமுடியும்.
Everyone will come soon. Due to their official work our
Senior Most hubbers are not coming. They will definitely
come till such time the chariot will run with the help of
contribution from NT's fan like Madam,Mr Gopal and others.
நடிகர் திலகம் பராசக்தியில் நடிக்க ஆரம்பித்தபோது, அவருக்குப்பதிலாக, அப்போது பிரபலமாகவிருந்த KR ராமசாமியைப் போடவேண்டுமென AVM விரும்பியதாகப்படித்தேன். ஆனால் பராசக்தி release ஆன ஒரு இரவிலேயே சிவாஜி கணேசன் நட்சத்திர அந்தஸ்தைப்பெற்றுவிட, பின்னர் அந்த KR ராமசாமி என்ன ஆனார்? அப்போது பிரபலமாகவிருந்த மற்ற நடிகர்கள் என்ன ஆனார்கள்?
In Indian Cinema history NT is the only person who get the status
of Super Star in his first movie and till date this record remains unbroken. It will not
be broken forever.
நடிகர் திலகத்துக்கு (என்னை பொறுத்த வரையில்) பொருந்தாத கதாநாயகியர்:
1- ஜி. வரலக்ஷ்மி (?). படம்: நான் வணங்கும் தெய்வம். அழகான, இன்னும் இளமையான சிவாஜிக்கு இவர் அக்கா போலத்தெரிவார். இவர் தான் ஹரிச்சந்திரா படத்திலும் NT உடன் நடித்தார் என்று நினைக்கிறேன். சம்பூர்ண ராமாயணத்தில் கைகேயியாக நடித்தவர் இவரா?
2. பானுமதி: இதைப் பலர் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். ஆனால் என்னதான் திறமை, அழகு இருந்தாலும் அவரும் சிவாஜிக்கு அக்கா மாதிரித்தான் தெரிகிறார். குறிப்பாக 'மாசிலா நிலவே' பாடலில். இவர் MGR க்கு நல்ல பொருத்தம். NT -பானுமதிக்கிடையில் எந்த விதமான chemistry (or biology for that matter!) ஐயும் என்னால் பார்க்க முடியவில்லை. நான் பானுமதி fan இல்லை. அவர் பாடும்போது நன்றாகவிருந்தாலும் பேசும்போது; குறிப்பாக அவர் கீச்சுக்குரலில் 'சுவாமி' என்னும்போதும் 'பிரபு' என்னும்போதும் எரிச்சலாகவிருக்கும்.:banghead:(தயவு செய்து பானுமதி ரசிகர்கள் என்னை மன்னிப்பார்களாக). '-ver acting' வேறு! (please note: I have omitted the 'o' word)
3. ஸ்ரீதேவி: too young to start with. ஸ்ரீதேவி NT க்கு மகளாக பல படங்களில் நடித்துவிட்டார். பின்னர் ஜோடியாகப்பார்க்கும்போது பொருந்தவில்லை. (சிவாஜி தனது திறமையான நடிப்பினால் அதைச் சரிப்படுத்தி விட்டார் என்பது வேறு விடயம்). ராதா, ஸ்ரீதேவியை விடவும் இளமையானவர் என்றாலும் 'முதல் மரியாதை'யில் அதன் கதைக்கேற்றபடி கச்சிதமாக பொருந்துகிறார்.
4. மனோரமா: 'பொம்பளை சிவாஜி' என்று வர்ணிக்கப்படும் இவரை comedy role களில் பார்த்துப்பழகி விட்டதால் நடிகர் திலகத்தின் ஜோடியாகப் பார்க்க முடியவில்லை. மற்றபடி நடிப்பில் இவரை மிஞ்ச யாருண்டு?
5. ஸ்ரீ பிரியா: ஜோடிப்பொருத்தம் ஓரளவு பரவாயில்லை என்றாலும் நடிப்பில் எந்த வகையிலும் NT க்குப் பொருத்தமானவரில்லை.
6. M N ராஜம்: நல்ல நடிகை, ஆனால் ஜோடிப்பொருத்தம் 50-50 தான், குறிப்பாக 'பாவை விளக்கு'. அந்த infatuated கல்லுரி மாணவி role க்கு சரோஜாதேவி (தோற்றத்தளவில்) பொருத்தமாக இருந்திருப்பார்.
7. பத்மபிரியா: வைரநெஞ்சம் படத்தில் தலை காட்டியவர். கொலு பொம்மை போல நிற்பார், பாவமாக இருக்கும். நடிப்பில் சிவாஜிக்கு கிட்ட நிற்கக்கூட பொருத்தமில்லாதவர்.
8. K.R விஜயா (திருடன், தவப்புதல்வன் போன்ற படங்களில் மட்டும்): NT உடன் மிக அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் சில படங்களில் வேறு யாரையாவது போட்டிருக்கலாமோ என்று தோன்றும். முக்கியமாக slim ஆன NT க்கு ரொம்ப குண்டான விஜயா.
Mr Raghavendra Sir,
Pongal Celebration photos held at Soorakottai is very good.
My humble request is pls upload the same here for the benefit of
millions of our NT's Fans