நடிகர் திலகத்துக்கு (என்னை பொறுத்த வரையில்) பொருந்தாத கதாநாயகியர்:
1- ஜி. வரலக்ஷ்மி (?). படம்: நான் வணங்கும் தெய்வம். அழகான, இன்னும் இளமையான சிவாஜிக்கு இவர் அக்கா போலத்தெரிவார். இவர் தான் ஹரிச்சந்திரா படத்திலும் NT உடன் நடித்தார் என்று நினைக்கிறேன். சம்பூர்ண ராமாயணத்தில் கைகேயியாக நடித்தவர் இவரா?
2. பானுமதி: இதைப் பலர் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். ஆனால் என்னதான் திறமை, அழகு இருந்தாலும் அவரும் சிவாஜிக்கு அக்கா மாதிரித்தான் தெரிகிறார். குறிப்பாக 'மாசிலா நிலவே' பாடலில். இவர் MGR க்கு நல்ல பொருத்தம். NT -பானுமதிக்கிடையில் எந்த விதமான chemistry (or biology for that matter!) ஐயும் என்னால் பார்க்க முடியவில்லை. நான் பானுமதி fan இல்லை. அவர் பாடும்போது நன்றாகவிருந்தாலும் பேசும்போது; குறிப்பாக அவர் கீச்சுக்குரலில் 'சுவாமி' என்னும்போதும் 'பிரபு' என்னும்போதும் எரிச்சலாகவிருக்கும்.

(தயவு செய்து பானுமதி ரசிகர்கள் என்னை மன்னிப்பார்களாக). '-ver acting' வேறு! (please note: I have omitted the 'o' word)
3. ஸ்ரீதேவி: too young to start with. ஸ்ரீதேவி NT க்கு மகளாக பல படங்களில் நடித்துவிட்டார். பின்னர் ஜோடியாகப்பார்க்கும்போது பொருந்தவில்லை. (சிவாஜி தனது திறமையான நடிப்பினால் அதைச் சரிப்படுத்தி விட்டார் என்பது வேறு விடயம்). ராதா, ஸ்ரீதேவியை விடவும் இளமையானவர் என்றாலும் 'முதல் மரியாதை'யில் அதன் கதைக்கேற்றபடி கச்சிதமாக பொருந்துகிறார்.
4. மனோரமா: 'பொம்பளை சிவாஜி' என்று வர்ணிக்கப்படும் இவரை comedy role களில் பார்த்துப்பழகி விட்டதால் நடிகர் திலகத்தின் ஜோடியாகப் பார்க்க முடியவில்லை. மற்றபடி நடிப்பில் இவரை மிஞ்ச யாருண்டு?
5. ஸ்ரீ பிரியா: ஜோடிப்பொருத்தம் ஓரளவு பரவாயில்லை என்றாலும் நடிப்பில் எந்த வகையிலும் NT க்குப் பொருத்தமானவரில்லை.
6. M N ராஜம்: நல்ல நடிகை, ஆனால் ஜோடிப்பொருத்தம் 50-50 தான், குறிப்பாக 'பாவை விளக்கு'. அந்த infatuated கல்லுரி மாணவி role க்கு சரோஜாதேவி (தோற்றத்தளவில்) பொருத்தமாக இருந்திருப்பார்.
7. பத்மபிரியா: வைரநெஞ்சம் படத்தில் தலை காட்டியவர். கொலு பொம்மை போல நிற்பார், பாவமாக இருக்கும். நடிப்பில் சிவாஜிக்கு கிட்ட நிற்கக்கூட பொருத்தமில்லாதவர்.
8. K.R விஜயா (திருடன், தவப்புதல்வன் போன்ற படங்களில் மட்டும்): NT உடன் மிக அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் சில படங்களில் வேறு யாரையாவது போட்டிருக்கலாமோ என்று தோன்றும். முக்கியமாக slim ஆன NT க்கு ரொம்ப குண்டான விஜயா.
Bookmarks