கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.
http://i61.tinypic.com/spkikz.jpg
Printable View
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.
http://i61.tinypic.com/spkikz.jpg
http://i1170.photobucket.com/albums/...psca0be23d.jpg
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் ..... கூட இருந்தே குழி பழித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும் .....
இது மக்கள் திலகத்தின் படத்தில் வரும் பாடல் ... என்ன பொருத்தம் , இது அவரை விட வேறு யாருக்கும் பொருந்தும் ?
1967 ஜனவரி 12 ... மக்கள் திலகம் எம் ஆர் ராதாவால் சுடப் பட்டார் என்பதுஅனைவருக்கும் தெரியும் .... அந்த வழக்கு குறித்த தீர்ப்பு நவம்பர் 4 1967 அன்று வெளியானது .... எம் ஆர் ராதாவுக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப் பட்டது ....
ஆனால் வழக்கில் ஒரு முக்கிய அறிக்கை , தடய அறிவியல் துறையின் சோதனை அறிக்கை அது , அதில் குறிப்பிடப் பட்ட விஷயம் , அதன் சோதனையின் முடிவு என்னவென்றால் , அருகருகே இருந்த மக்கள் திலகத்தை எம் ஆர் ராதா துப்பாக்கியால்
சுட்டப் பொழுதும் , அவர் உயிர் தப்பியது எப்படி என்பது குறித்தது ....
எம் ஆர் ராதா உபயோகித துப்பாக்கியில் இருந்த குண்டுகள் ( ரவைகள் ) 11 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப் பட்டவை , அவை உபயோகத்திற்கு முன்னர் பல ஆண்டுகளாக ஒரு தகர டப்பாவில் வைக்கப் பட்டிருந்தன , அப்பொழுது அவை ஒன்றுடன் ஒன்று உராயிந்ததன் காரணமாக வீரியம் இழந்து போயிருந்தன என்பது தடய அறிவியல் சோதனையில் தெரிய வந்தது , அதனால் தான் அவை மக்கள் திலகத்தின் உயிரை குடிக்கவில்லை ....
மக்கள் திலகத்தை அவரது தர்மம் தான் உயிர் காத்தது என்பதை இதை வைத்தே புரிந்துக் கொள்ள முடியும் தானே
http://i1170.photobucket.com/albums/...ps54fe6db3.jpg
கண்கண்ட தெய்வம்
கடவுள் இல்லைஎன்பார்
கண்ணெதிரே காட்டு என்பார் - நாத்திகர்
காற்றுண்டு உருவம் உள்ளதா
காப்பவன் இருப்பது உண்மை - இது ஆத்திகர்
இதோ என்பதில்
நாத்திகரே கேளுங்கள் நடமாடும் தெய்வம் - தமிழ்
நாட்டினை ஆண்ட எம்ஜிஆர் உண்டே!!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - குறள்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
பெங்களூர் நகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஏற்பாடு செய்த
அருமையான வேலைப்பாடமைந்த மலர் மாலைகள் காண்போரின்
கண்களை கவர்ந்தது என்று சொன்னால் மிகையாகாது.
http://i61.tinypic.com/2rzxumb.jpg
புழுகு மூட்டை - இந்த செய்தி நாம் திரி நண்பர்கள் பார்வைக்கு. பார்வைக்கு மட்டும் அல்ல ...........
http://www.thalaivansivaji.com/sivaji-kural-19/ dated 22/6/2014
http://i57.tinypic.com/ezfrwz.jpg
All of you please feel free to write your comments.
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ....
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளிலாடும்
பல வரட்டு கீதமும் பாடும்
வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்கு குணம்
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா ....."
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து
திருடன் என்றே உதைக்குது
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது
காலநிலையை மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது -
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலை பிடிச்சி ஆட்டுது -
வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு
காசை தேடி பூட்டுது -
ஆனால் காதோரம் நரச்ச முடி
கதை முடிவை காட்டுது
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது
புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா
Rks sir what happened your mail to nanjil inba?
NANJIL INBA COOL ARE U READY DISCUSS WITH OUR THALAIVAR AO VICTORY IN COMMON PLACE<span style="color: rgb(0, 0, 0); font-size: xx-large; background-color: rgb(250, 250, 250);">http://youtu.be/-lPt7WzpiWI
இனிய நண்பர்களுக்கு
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - மறு வெளியீடு பற்றிய ஆராய்ச்சிகள் - எப்படி வெற்றி படம் ? - படம் தோல்வி .
திரு சொக்கலிங்கம் இந்த படத்தால் பெருத்த நஷ்டம் அடைந்தார் . படம் வசூலே ஆகவில்லை ரசிகர்களால் .ஒட்டப்பட்டது என்றெல்லாம் மற்றவர்கள் கவலையுடன் தங்கள் பதிவுகளை அவரவர் மன திருப்திக்கு ஏற்றவாறு கூறிக்கொண்டு வருவதை நாம் ஏன் கண்டு கொள்ள வேண்டும் ?
ஆயிரத்தில் ஒருவனின் தயாரிப்பு செலவு - விளம்பர செலவு - கிடைத்த லாபம் - இவையெல்லாம் திரு சொக்கலிங்கம்
அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை . இதுவரை திரு சொக்கலிங்கம் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தால் தனக்கு தோல்வி என்றோ - லாபமில்லை என்றோ ஒரு இடத்திலும் கூறவில்லை .
ஆயிரத்தில் ஒருவன் - மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக கடந்த 100 நாட்கள் சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் அரங்கில் கொண்டாடப்பட்டது .25,50,75, 100 நாட்கள் விழாக்கள் நடந்ததன் மூலம் பல்வேறு எம்ஜிஆர் மன்றங்கள் ஒன்று சேர்ந்து மாநிலம் முழுவதும் இருந்தும் , வெளி மாநிலத்தில் உள்ள எம்ஜிஆர் மன்றங்களும் இணைந்து கொண்டாடினார்கள் .
பதிலுக்கு பதில் என்ற ரீதியில் ''குரல்களுக்கு '' சில கசப்பான உண்மைகளை நாமும் பதிவிட முடியும் . நாகரீகம் கருதி
அமைதி காக்கின்றோம் .உணர்பவர்கள் உணர்ந்தால் சரி .
மக்கள் திலகத்தின் சாதனைகள் - அவருடைய படங்கள் பற்றிய செய்திகள் - நிகழ்வுகள் என்று பதிவிட நம்முடைய கவனத்தை செலுத்துவோம் . தேவை இல்லாத பதிவுகளுக்கு பதில் தருவைதை விட அவைகளை ஒதுக்கிவிட்டு நம்
பயணத்தை தொடர்வோம் ..
மக்கள் திலகம் எம்ஜிஆர் - என்றென்றும் வரலாற்று நாயகன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் - வசூலில் அமுத சுரபி
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் - எண்ணிலடங்கா பெருமைகளுக்கு 64 ஆண்டுகளாக சொந்தக்காரர்கள் ..
மக்கள் திலகத்தின் திரை உலக வெற்றி - அரசியல் வெற்றி - உலகமே பாராட்டும்போது ''குரல்''ஓசை யாருக்கு கேட்கும் ?
மக்கள் திலகத்தின் புகழுக்கு பலர் பல விதத்தில் பெருமைகளை சேர்த்துள்ளார்கள் . மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில்
அவருடைய திரை உலக பயணத்தில் மாதமிருமுறை இதழ்களாக ''திரை உலகம் '' - ''திரைச்செய்தி '' தொடர்ந்து பல வருடங்கள் வெளி வந்தன .
1987க்கு பிறகு மக்கள் திலகத்தை பற்றிய எண்ணற்ற புத்தகங்கள் வெளிவந்தன .மாத இதழ்களும் வந்தன .
2013 ல் புதுமை முயற்சியாக மக்கள் திலகத்தின் திரை உலக ஆல்பம் - மலர் மாலை -1 புத்தக பதிப்பாக வந்து உலகமெங்கும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களால் அமோக ஆதரவு பெற்று விற்பனையில் சாதனை படைத்தது [ மக்கள் திலகத்தின் படங்களை போல].
மீண்டும் மக்கள் திலகத்தின் திரை உலக தகவல் களஞ்சியமாக - மலர் மாலை -2 விரைவில் வர உள்ளது .
மலர் மாலை -2 விளம்பர பதிவு இங்கு பதிவிடப்பட்டுள்ளது . மலர் மாலை -1 எப்படி பிரமாண்ட வெற்றி கண்டதோ அதே போல மலர் மாலை -2 வெற்றி பெற நாம் வாழ்த்துவோம் .
http://i57.tinypic.com/2rclgyt.jpg
http://i57.tinypic.com/2116tmh.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் வியப்பாக பார்க்கிறாரே ?
ஆயிரத்தில் ஒருவனை என்னுடைய ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியாக்கி விழாவாக கொண்டாடி விட்டார்களே என்று
பெருமையுடன் பார்க்கிறார் .
aayirthil oruvan 16th week running sucessfully albert complex and studio 5 bookings open for weekend days
Dear MGRRamamoorthi,
We are already discussing about AO on the open domain only - yes, internet is the open domain and a common place. What better common place do you want? Every genuine MGR fan agrees that as Times of India claimed during last March edition AO rerun was a flop, except in these 2 theaters with 1 show as a forced run. I heard even in Madurai Meenakshi theater, whose owner is a MGR fan, the movie was removed after 1 week, along with other theaters in the city. In Chennai, I am 100% sure that the movie has been running only because the state is now ruled by ADMK. The very fact that only Sunday evening shows are almost full shows that it is a politicized run. If it were not ADMK ruling TN now, the movie would have gone from these 2 theaters too. Plus, I have just checked the online booking status at Albert complex and all tkts are available for next 7 days.
BTW, to attract today's younger hip hop internet generation, you need to give something interesting and different. AO, being a run-of-the mill robin hood story wouldn't attract the crowd and in my view, that's the reason why it failed.
That is why I earlier claimed that Mr. Chockalingam must have incurred loss and said better luck next time. Until then, you can self congratulate and enjoy 100 days of AO - ஓட்டப்படுகின்ற படம்.. My discussion about AO is ending here.
Regards.
'சுடரும் சூறாவளியும்' படத்தின் மூலம் பட அதிபராக உயர்ந்த வி.சி.குகநாதன், அந்தப் படத்தின் கதாநாயகி ஜெயாவை காதலித்து மணந்தார். வி.சி.குகநாதன் எழுதிய கதைகள் படங்களாக வெளிவந்து கொண்டு இருந்தன. ஆனால் அவரது பெயர் வெளிவரவில்லை.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர். திடீரென்று ஒரு நாள் குகநாதனை அழைத்து, 'எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?' என்று கேட்டார். சினிமாவை விரும்புவதாக குகநாதன் கூற, 'சினிமாவில் எந்தத்துறை உங்களுக்கு பிடிக்கும்?' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.
'கதை-வசனம் எழுதுவது' என்று பதிலளித்தார், குகநாதன். 'அப்படியானால் ஒரு கதை சொல்லுங்கள்' என்றார், எம்.ஜி.ஆர். கதையை உன்னிப்பாக கேட்டார், எம்.ஜி.ஆர். கதை அவருக்குப் பிடித்துவிட்டது. 'கதை பிரமாதம்' என்று அவர் சொன்ன நேரத்தில், டைரக்டர் சாணக்யா அங்கே வந்தார்.
உடனே எம்.ஜி.ஆர், 'இவர் நன்றாக கதை எழுதுகிறார். உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்' என்று அவரிடம் சொன்னார். தொடர்ந்து 'ஜேயார் மூவிஸ்' தயாரித்த படத்திற்கு குகநாதனை கதை எழுதும்படி சொன்னார். 1968-ம் ஆண்டு குகநாதன் 'புதிய பூமி' படத்திற்கு கதை எழுதினார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
டாக்டராக இருக்கும் எம்.ஜி.ஆர்., கிராமத்திற்கு சென்று ஏழை மக்களுக்கு வைத்தியம் செய்வார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் கொள்ளையனை பிடித்துக்கொடுப்பதுதான் கதை.
('புதிய பூமி'க்கு கதை எழுதியபோது, குகநாதனுக்கு வயது 18. அப்போது அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். பின்னர் 'பி.காம்' பட்டம் பெற்றார்.)
1971-ம் ஆண்டு 'குமரிக் கோட்டம்' படத்திற்கு குகநாதன் கதை எழுதினார்.
THANKS PAMMALAR SIR
http://i1110.photobucket.com/albums/...c1aea50e02.jpg
ஜே யார் மூவிஸ் ''புதிய பூமி ''
மக்கள் திலகத்தின் 98வது படம் .
வெளியான நாள் . 27-6-1968
46 ஆண்டு நிறைவு நாள் .
மக்கள் திலகம் எம்ஜியார் - திருமதி ஜானகி இவர்களின்
பெயரில் ஜானகி எம்ஜியார் என்பதை ,சுருக்கி ஜே யார் மூவிஸ்
என்று 1966ல் துவங்கி 1968ல் படம் வெளியானது .
மக்கள் திலகம் டாக்டராக . கதிரவன் என்ற பெயரில் நடித்த படம் .
இயக்குனர் குகநாதன்
கதாசிரியர் thennarasu அறிமுக படம் .
பாடலாசிரியர் பூவை செங்குட்டவன் எழுதிய மிகவும் புகழ்
பெற்ற பாடல் '' நான் உங்கள் வீட்டு பிள்ளை ''
கண்ணதாசனின் இரு பொருள் வாக்கியமான ''வளை '' என்ற
''சின்னவளை முகம் சிவந்தவளை''
''விழியே விழியே உனக்கென்ன வேலை ''
போன்ற இனிய பாடல்கள் .
இனிமையான பொழுது போக்கு நிறைந்த படம் .
மக்கள் திலகம் மிகவும் சிறப்பாக நடித்து இருப்பார் .
THANKS TFM LOVER SIR
http://i58.tinypic.com/2rnda9d.gif
புதிய பூமியில் தோன்றிய புதுமை!
ஜேயார் மூவிஸ் தயாரிப்பில், ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘ஒளிவிளக்கு’, ஆகிய அருமையான படங்களை இயக்கிய ‘சாணக்யா’ இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில், 27.6.1968 அன்று வெளிவந்த படமே ‘புதியபூமி’
இப்படம் தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு விரைந்து வெளியிடப்பட்ட படமாகும்.
இப்படத்தில் எம்.ஜி.ஆர். மக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவராக நடித்தார். தென்காசித் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.கழக வேட்பாளர் பெயர் சம்சுதீன் என்ற கதிரவன். எனவே எம்.ஜி.ஆரும் கதிரவன் என்ற பெயரிலேயே படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
படத்தின் வசனத்தை தென்பாண்டிச் சிங்கம், அன்றைய இராமநாதபுரம் மாவட்டத் தி.மு.கழகச் செயலாளர் எஸ்.எஸ். தென்னரசு எழுதினார்.
படத்தின் பாடல்களை எழுதியவரோ கவியரசர் கண்ணதாசன். தேர்தலை மையமாக வைத்துப் பிரச்சாரப் பாடல் ஒன்று தேவை. அதனைக் கவியரசர் எழுதாமல், பூவை செங்குட்டுவனை எழுதுமாறு செய்தார்.
அப்பாடல்தான்,
“நான் உங்கள் வீட்டுப்பிள்ளை!
இது ஊரறிந்த உண்மை!
நான் செல்லுகின்ற பாதை!
பேரறிஞர் காட்டும் பாதை!”
என்ற பிரபலமான பாடலாகும்.
இக்கருத்தமைந்த பாடலை கவியரசர் எழுதாமைக்குக் காரணம்; அவர் பெருந்தலைவர் காமராஜரின் காங்கிரஸ் பேரியக்கத்தில் பெரும் பற்றுக் கொண்டிருந்தமேயே எனலாம்.
இங்கேதான் கவியரசருக்கும், புரட்சி நடிகருக்கும் இருந்த ஆழமான நட்பு; பரஸ்பரமாக விட்டுக்கொடுக்கும் பாங்கு; கவியரசரின் கவிதைகளுக்குப் புரட்சிநடிகர் தந்த மதிப்பு ஆகிய பெருந்தன்மைகள் வெளிப்படுகின்ற விதங்கள் தெளிவாகின்றன.
கவிசருக்கும், புரட்சிநடிகருக்கும் அவரவர் இயக்கங்கள் தேவை. கலையுலகப் பயணத்திலோ மாறுபடாத மனங்கள் தேவை. எனவே அறிந்து, தெரிந்து செயல்பட வேண்டிய விதங்களில் முடிந்தவரை இருவர் மனங்களும் செயலாற்றிய மேன்மை இங்கே புலப்பட்டன எனலாம்.
இதனைப் ‘புதியபூமி தோன்றுவித்த புதுமை’, என்றுகூடக் கூறலாம்.
படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பார்ப்போமே!
“நெத்தியிலே பொட்டு வச்சேன்!
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்!”
எனத் தொடங்கும் இனிமையான பாடலொன்று, கதாநாயகி கலைச்செல்வி நடித்த பாடல் காட்சிக்காக எழுதப்பெற்றதாகும்.
அடுத்து;
“விழியே! விழியே! உனக்கென்ன வேலை!
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை!…”
எனத் தொடங்கி;
“விருந்து என்றாலும் வரலாம்! வரலாம்!
மருந்து தந்தாலும் தரலாம்! – அதில்
நாளையென்ன நல்ல வேளையென்ன! – இங்கு
நான்கு கண்களும் உறவாட!….”
என்றே, தொடரும் நாயகன் எம்.ஜி.ஆர்; நாயகி ஜெயலலிதா நடிக்கும் காதல் காட்சிக்காகக் கனிந்து வந்த பாடலொன்றாகும்.
இனிவரும் பாடலொன்றைப் பாருங்களேன்!
ஆண்: “சின்னவளை முகம் சிவந்தவளை – நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு!
என்னவளை காதல் சொன்னவளை – நான்
ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு!
பெண்: வந்தவளைக் கரம் தந்தவளை – நீ
வளைத்துக் கொள்வாய் வளையிட்டு!
பூங்குவளைக் கண்கள் கொண்டவளைப் – பது
பூப்போல் பூப்போல் தொட்டு!…..”
பாடலைப் பார்த்தீர்களா?
ஏற்கனவே,
“சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் – இந்தச்
சின்னவரைப் போய்க் கேளும்!”
என்று, ‘தனிப்பிறவி’ படத்தில், எம்.ஜி.ஆரைப் பார்த்து ஜெயலலிதா, ‘சின்னவர்’ என்று, கூறுமாறு பாட்டமைத்தார் கண்ணதாசன்.
அதேபோல் சின்னவருக்கு ஏற்ற சின்னவளாக ஜெயலலிதாவை, எம்.ஜி.ரே குறிப்பிட்டுப் பாடுமாறு செய்தவரும் கண்ணதாசனே!
இது எதற்காகக் கவிஞர் எண்ணத்தில் எழுந்ததோ? ஒருவேளை… அந்தச் சின்னவருக்குப்பின், இந்தச் சின்னவளே எம்.ஜி.ஆரின் வாரிசாய் வலம் வருவார் என்ற எண்ணமோ? இதைச் சொன்னால் கூட வலிந்து கூறுவதாக வாதம் செய்வார்கள்! சரி விட்டுவிடுவோம்!
பாடலின் நயத்தைப் பாருங்களேன்!
சின்னவளை – முகம்
சிவந்தவளை
என்னவளை – காதல்
சொன்னவளை!
வந்தவளை – கரம்
தந்தவளை
பூங்குவளை – கண்கள்
கொண்டவளை…..
எத்தனை ‘வளை’ என்னும் சொல்லாடல் மீண்டும் மீண்டும் புதிது புதிதாய்ப் பூத்து வரும் ‘வளை’ கொண்ட பாடல் நம் மனங்களை வசம் செய்து, வாசமும் செய்யுமல்லவா!
இன்னும் பாருங்களேன்!
தூயவளை – நெஞ்சைத்
தொடர்ந்தவளை!
- பால் மழலை மொழி
படித்தவளை!
- வான்மழைபோல்
ஆனவளை! -
நீயவளை -
எனத் தொடரும் ‘வளை’ எனும் சொல் கொண்டு, கவியரசர் நம்மையும் ஏன்? எம்.ஜி.ஆரையும் கவித்திறத்தால் வளைத்து வசியம் செய்திட்ட பாங்கை எப்படித்தான் புகழ்வது!
அதனால்தானோ, சினிமா உலகச் சின்னவர், இந்தச் சிறுகூடற்பட்டிக் கண்ணதாசன் கவிதைகளில் தன் எண்ணத்தைப் பறிகொடுத்து, தமிழக அரசவைக் கவிஞராக ஏற்றி வைத்தாரோ?
தொடர்ந்து வெளியிடப்பட்டும், மறு வெளியீட்டில் ஆயிரத்தில் ஒருவனின் வெற்றியை பொறுக்க முடியாமல் வயிற்றெரிச்சலால் புலம்பும் இந்த நல்ல மன நிலையில் உள்ளவருக்கு? பதில் சொல்லும் நேரத்தை நம் திரியில் நல்ல ஆக்க பூர்வமான பதிவுகளுக்கு பயன்படுத்த்தலாமே. நம் தலைவன் அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு அவதூறாக பொய் பிரசாரம் செய்ய சொல்லித் தரவில்லை. இது போன்ற நாகரீகத்தை இவர் எவரிடமிருந்து கற்றார்? எம்ஜிஆர் ரசிகர்கள் nt திரியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா? அதை ஒரு போதும் செய்ய மாட்டார்கள். அதுதான் எங்கள் தலைவர் எங்களுக்கு கற்று தந்த நாகரீகம். நாகரீகம் தெரிந்திருந்தால் இது போன்ற தரமற்ற செயல்களில் ஈடுபடமாட்டீர்கள் என்று நம்புகிறோம். இதுவெல்லாம் ஒரு பிழைப்பா? நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற எங்கள் தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப முதலில் உங்கள் உண்மையான முகத்தைக் காட்டுங்கள்?
இனிமேல் இது போன்றவர்கள் பதிவிடும் பதிவுகளை மேற்கோள் காட்டவேண்டாம் என்று நம் திரியின் நண்பர்களைக் கேட்டுகொள்கிறேன். மேலும் இவர் போன்றவர்களுக்கு பதில் சொல்லி யாரும் நேரத்தை வீணடிக்கமாட்டோம் என்று உறுதிகொள்வோம்.
திரு. வினோத் சார். குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற தேவையில்லாத பதிவுகளை நீக்க இத்திரியின் உரிமையாளர்களுக்கு தாங்கள் வலியுறுத்த வேண்டுகிறோம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்