http://i61.tinypic.com/s33gjp.jpg
Printable View
[QUOTE=s.vasudevan;1231758]Courtesy: Tamil Hindu
‘நடிகர் சங்கம் மீது நம்பிக்கை இல்லை’: சிவாஜி மணிமண்டபத்தை அரசே கட்ட வலியுறுத்தல் - ஜூலை 21-ல் உண்ணாவிரதம்
சரத்குமார்.....ராதாரவி....காளை ....இவர்களை போல உள்ள அரசியல்வாதிகள் நடிகர் சங்கத்தில் இருக்கும் வரை மணிமண்டபம் பகல்கனவே !
நடிகர் திலகம் அவர்கள் உழைப்பில் மேற்பார்வையில் கட்டிடம் மற்றும் ஞாயிறு விடுமுறை போன்ற நற்காரியங்கள் கண்ட சங்கம்...இடித்து தரைமட்டமாக்கி ...கமிஷன் வாங்கிகொண்டு லீசுக்கு கொடுத்த புண்ணியவான்கள் மேற்கூறிய அந்த மூவர்....!
இவர்கள் பச்சை அரசியல்வாதிகள்....நடிகர்சங்கம் வளர இவர்களுக்கு என்ன அக்கறை.....இப்போது விஷால் மூலமாக சங்கத்திற்கு விடிவுகாலம் வர ஒரு வாய்ப்பு ...பார்க்கலாம்....!
திரு சந்திரசேகர் முயற்சிக்கு வாழ்த்துக்கள் !
RKS
முரளி /ராகவேந்திர சார் - vbkp பற்றி ஏதாவது செய்தி உண்டா ? படம் எப்பொழுது வெளிவரும் ? இதைப்போல ராஜபார்ட் ரங்கதுரை என்னவாயிற்று ?
அன்புடன்
ராஜ் குமார்,
நீங்கள் இங்கேயே பதிவிட்டிருக்கலாமே? சுருங்க சொன்னால் இந்த பதிவிலிருந்து எனக்கு புரிவது.
1)கடமையை செய் பலனை உரியவர்களுக்கு விட்டு விடு.
2)அவரவர் தொழிலை சரியாக செய்ய வேண்டியது அவரவர் கடமை.
3)செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமைதான் நமது செல்வம். அதில் சொந்த கருத்துக்களை குழப்பி திணித்தல் நல்லதல்ல.
4)ஒரு வெள்ளந்தியான உரையாடல். ஊர் உன் திறமையை சரியாக உபயோக படுத்தி பலனடையட்டும் .நீ அடையும் பொருளின் பலன் உன் செழுங்கிளை தாங்கும் உரமாகட்டும்.
அமைதிக்குப் பின் புயல் குறுந்தொடர் பகுதி 2 : தெய்வ மகன்
https://www.youtube.com/watch?v=Sy76CYBBZWkQuote:
தன்னைப் போலவே முகவிகாரத்துடன் பிறந்த குழந்தையை உளவியல்ரீதியாக தான் அனுபவித்த சித்திரவதைகளை ஏளனங்களை மனரணங்களை அவனும் அனுபவிக்க வேண்டாமே என்ற பாச மேலீட்டில் தனது டாக்டர் நண்பனிடம் கொன்றுவிட சொல்லும் மிக சிக்கலான உணர்வுக் கோலங்களை வெளிப்படுத்த வேண்டிய சவாலான பாத்திரத்தில் நடிகர்திலகம் தவிர்த்து யார் பொருந்த இயலும்?
மகனைத் துறந்த கணத்தோடு அவன் இறந்து விட்டதாக மனைவியை நம்ப வைத்து இன்னொரு அழகம்சம் மிக்க மகனையும் தந்து பழைய நினைவுகளை அறவே நீக்கி அமைதியாக வாழ்க்கை ஓடம் செல்கையில் இறந்து விட்டதாக நம்பிய தெய்வமகன் தனது முன்னே வந்து நின்று மடை திறந்த வெள்ளமாக பதிலளிக்க முடியாத கேள்விகளால் மடக்கும் போது ....அமைதி முடிவுக்கு வந்து புயல் ஆரம்பித்து மனநிம்மதி இழந்து உறங்கிக் கிடந்த பாசமும் உயிர்பெற்று....எவரால் தர முடியும் இந்த தகப்பனின் சோதனைகளால் அடிபடும் வேதனை முகபாவங்களை ?
புயலே உருவாக தந்தையை எதிர்கொள்ளும் தெய்வமகன் தம்பியைக் கண்டதும் சர்வமும் ஒடுங்கி பாச வெள்ளத்தில் தத்தளிப்பதில் வெளிப்படுத்தும் நயம்
எந்த ஒரு வேற்று கலைஞராலும் தொட முடியாத உயரமே !!
ஒரு பணக்கார வெகுளிப் பையனாக அழகியல் பாவனைகளையும் மிக வித்தியாசமாக வெளிப்படுத்துகிறாரே !
மூன்று சிவாஜிகளும் அவரவர் பாணியில் நடிப்புக் கலைக் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் காலங்களை வென்ற காட்சியமைப்பு !!
Gap filler
புறக்கணித்த / சூழ்நிலையால் பிரிக்கப்பட்ட தாயை கண்டறியும் மகன்களின் மனநிலை !!
நடிகர்திலகத்தின் பரிதவிப்பு!
கர்ணன்
https://www.youtube.com/watch?v=pslsqW3vslk
தெய்வமகன்
https://www.youtube.com/watch?v=mU-GlbPlong
குங்குமம் படத்தில் இடம்பெற்ற மயக்கம் எனது தாயகம் என்ற பாடலை மகாபலிபுரத்தில் அதிகாலையில் படமாக்க வேண்டும் .அதற்காக சிவாஜியை அழைத்து வரும் பொறுப்பை இயக்குனர்கள் கிருஷ்ணன் -பஞ்சு என்னிடம் விட்டிருந்தனர்.அதனால் நான்
காலை யில் 3 மணிக்கு எழுந்து சிவாஜி வீட்டுக்கு போனால் அவர் 3.30க்கெல்லாம் நெப்டியூன் ஸ்டுடியோ(சத்யா ஸ்டுடியோ)போய்விட்டார்.அங்கிருந்து 5 மணிக்கெல்லாம் மகாபலிபுரம் போய்விட்டோம்.ஆறு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கிஏழேகாலுக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.ஒன்னேகால் மணி நேரத்தில் ஒருபாடலை படமாக்கி முடிப்பது சாதாரணமல்லவே.
அது
சிவாஜியாக
இருந்ததால் சாத்தியமாயிற்று
சொன்னவர்மோகன் ஆர்ட்ஸ் மோகன்
ஆகையால் தான் நடிகர் திலகம் அவர்களை வைத்து படமெடுத்து தம்மை ஒரு கௌரவமான தயாரிப்பாளர்களாக்கிகொள்ள பலர் நான் நீ என்று போட்டுகொண்டு நடிகர் திலகம் அவர்களை வைத்து படம் எடுத்து இன்று நல்ல நிலையில் உள்ளனர் !
தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களின் விடிவெள்ளி ஆயிற்றே நமது நடிகர் திலகம் !!! [/b][/color]
முத்தையன் அம்மு,
உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும்,வணக்கங்களும். என் மிக கடினமான தினத்தின் ஒரு மணி இடைவேளையில் பசி மறந்து ,என் தெய்வத்தை ஒரு மணி நேரம் குளிர குளிர தரிசித்தேன். சுடர் விடும் ஆண்மை, ஒளி விடும் திராவிட அழகு, பிரம்மன் தன படைப்பு திறன் முழுவதையும் காட்டிய கண்கள்,நாசி,மோவாய்,ஆண்மையின் சிகரமாக, பரத முனிவரை ஆலோசகராய் வைத்து சாமுத்திரிகா லட்சணத்தை அளித்து ,தமிழர்களுக்கு இந்த மனிதரை பரிசாக தந்தானோ??
தயவு செய்து சுமதி என் சுந்தரி,ராஜா, எங்கள் தங்கராஜா இவற்றை பதித்து எங்களை குளிர்விக்குமாறு வேண்டுகிறேன்.
[QUOTE=Gopal,S[/QUOTE]
https://www.youtube.com/watch?v=8D2zcW02RyA
:wave:
ஆனால் சுற்று சூழலை கெடுத்ததில் முன்னிலை வகிக்கும் நடிகர் நடிகர்திலகமே.ரசிகராக இருந்தாலும் ஒப்பு கொள்ளவே வேண்டும்.
இன்று உலகம் சூடாகி, எல்னினோ(Elnino )விளைவுகளுக்கு பொறுப்பாவது கார்கள் வெளியிடும் CO என்ற வாயுவே. நடந்து போய் கொண்டிருந்த எண்ணற்ற தயாரிப்பாளர்களை ,காரில் செல்ல வைத்து ,இதற்கு முக்கிய காரணகர்த்தாவானார் நடிகர்திலகம் .
ஆனால் இந்த விதத்தில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த போட்டி நடிகர், இவர்களை தன் பக்கம் இழுத்து சில வருடத்தில் மீண்டும் நடந்து போக வைத்து ,உலகத்தை பேரழிவிலிருந்து மீட்டார்.
அது உங்கள் பார்வை கோபால் சார்
நான் சுற்று சூழலை கெடுத்தவர்களில் முதன்மையாக கருதப்படுவது மறைந்த இயக்குனர் பாலச்சந்தர், பாரதிராஜா, மற்றும் இவர்கள் ஜாடையில் வந்த பலர்...இவர்கள்தான் ஒரு cultural calamity கொண்டுவந்தவர்களில் முதல்வர்கள் !
இவர்கள், இவர்கள் ஆயுளில் செய்த ஒரே புண்ணியம் ஒரு எதிரொலி, ஒரு முதல் மரியாதை !
இவர்களின் படைப்புகளை நீங்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப நடந்த கட்டாயம் என்று சப்பை கட்டு கட்டுவீர்கள் என்பதும் எனக்கு தெரியும் !
அடுத்த நிலையில் எண்ணிக்கை அடிப்படையில் நீங்கள் சொன்ன போட்டி நடிகர் திரு ஜெய்ஷங்கர் என்றால், அவர் உங்கள் ரவிச்சந்திரனை விட ஆயிரம் மடங்கு சொல்லால், செயலால் நல்லவர் என்பதை உலகறியும். தாங்கள் நேருவை குறிப்பிட்ட அந்த விசேஷ பித்து, தயாரிப்பாளர்களை தனது திறமையான கால்ஷீட் குளறுபடி செய்து நொந்து நூடில்ஸாக வைத்த மறைந்த ரவிச்சந்திரன் அவர்களை விட பன்மடங்கு உழைப்பால் தொழில் பக்தியில் உயர்ந்தவர் !
அப்படி ஜெய்ஷங்கர் அவர்களை நீங்கள் குறிப்பிடவில்லை என்றால் என்னுடைய ரவிச்சந்திரன் பற்றிய உண்மை கருத்து திருப்பி எடுத்துகொள்கிறேன்.
Sivaji Ganesan - Definition of Style 26
நானே ராஜா - வில்லாளன்
1956
http://i.ytimg.com/vi/iKyy_HhXVqQ/hqdefault.jpg
கதை - படத்தின் அறிமுக உரையின் படி
விஜயநகர சாம்ராஜ்யம் 16ம் நூற்றாண்டில் அழியத் தொடங்கிய போது பாளையக்கார்ர்கள் என அழைக்கப்ப்ட்டவர்கள் தமிழகத்தில் குடி பெயர்ந்து அவரவர்களும் தாங்களே நானே ராஜா என முடி சூட்டி ஆளத்தொடங்கினர். இதனை அடிப்ப்டையாக வைத்து உருவாக்கப்பட்ட கற்பனைக் கதையே நானே ராஜா படத்தின் கதை. வேல்பாளையம், பனிப்பாளையம் என இரண்டு குறுநில மன்னர்களின் பகையே படத்தின் கதையாக இங்கே உருவெடுத்துள்ளது. தாரைக்காடு பனிப்பாளையத்திற்கு உதவி புரிந்து வந்த்து.
இந்த இடத்தில் அறிமுக உரை முடிவடைந்து படம் துவங்குகிறது.
பனிப்பாளையத்தின் அரசர் விந்தியர் (நரசிம்ம பாரதி), அரசி தேன்மொழி (ஸ்ரீரஞ்சனி), விந்தியரின் சகோதரர் தனஞ்ஜெயன். (வி.கோபால கிருஷ்ணன்). தாரைக்காட்டு இளவரசி ஊர்மிளா, தனஞ்ஜெயனைக் காதலிக்கிறாள். தனஞ்செயனும் அவளைக் காதலிக்கிறான்.
சந்தர்ப்பவசத்தால் தனஞ்செயனைக் காணும் மாங்கனியும், அவனைக் காதலிக்கிறாள். மணந்தால் அவனைத் தான் மணப்பேன் எனத் தன் சகோதரர் வில்லாளனிடம் கூறுகிறாள். இதற்கு செங்கண்ணனும் உடந்தையாகிறான். வில்லாளன், தேன்மொழியையும் அவள் கணவனையும் சிறைபிடித்து விடுகிறான். அதன் மூலம் ஊர்மிளாவை தனஞ்செயனை விட்டு விலகச் செய்து தனஞ்செயனுக்கும் மாங்கனிக்கும் திருமணம் நடத்தி வைப்பதே அவர்களின் திட்டம்.
மாங்கனி எவ்வளவு முயற்சித்தும் தனஞ்ஜெயன் மனம் மாறுவதாயில்லை. பழிவாங்கத் துடிக்கும் மாங்கனி, தன் சகோதரன் வில்லாளனிடம் தன் கோபத்தைக் கொட்டுகிறாள். எப்படியாவது அவனைப் பழி வாங்க வேண்டும் எனக் கூறுகிறாள்.
அடிப்படையில் மிகவும் நல்லவனான வில்லாளன், தங்கையின் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியாமல் முதலில் சம்மதிக்கிறான். அதன் ஒரு அம்சமாக, மதுபோதையில் தேன்மொழியை காம வெறியுடன் நெருங்க முயல்கிறான். அந்த போதை தலைக்கேற விக்கல் வந்து விடுகிறது. அந்த விக்கலுடன் அவளை நெருங்கப் பாட்டு பாடுகிறான். (இந்தப் பாடல் எது என சொல்லவும் வேண்டுமோ... மந்த மாருதம் தவழும் பாடலே அது). ஆனாலும் மனம் வராமல் அவளை விட்டு சென்று விடுகிறான் வில்லாளன்.
வில்லாளன் (நடிகர் திலகம்) வேல்பாளையத்து அரசன். செங்கண்ணன் (எஸ்.வி.சுப்பய்யா) அவனுடைய தம்பி. மாங்கனி (எம்.என்.ராஜம்) இவர்களின் சகோதரி.
வில்லாளன் மற்றும் செங்கண்ணன் இருவருமே சகோதரியின் மேல் பாசம் வைத்துள்ளவர்கள் என்றாலும் அண்ணனான வில்லாளன் நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவன் மனசாட்சியின் சொல்லை மறுக்காதவன். ஆனால் செங்கண்ணனோ எதற்கும் அஞ்சாதவன், சுயநலம் ஒன்றே அவன் குறிக்கோள். கொடுங்கோலாட்சியை நடத்த முற்பட்டு அண்ணனையே சிறை பிடிக்கிறான். இதற்கிடையே தங்கையை மணக்க மறுக்கும் தனஞ்செயனைக் கொல்ல விஷம் கலந்த பழரசத்தைக் கொடுத்தனுப்புகிறான். சந்தர்ப்ப வசத்தால் அந்த பழரசத்தை மாங்கனி அருநதி விடுகிறாள்.
இதற்கிடையே மாறுவேடத்தில் உலவுகிறான் அண்ணன் வில்லாளன். இது தெரியாமல் வில்லாளன் இறந்து விட்டான் எனக் கூறி ஆட்சியைப் பிடிக்கிறான் செங்கண்ணன்.
வில்லாளன் செங்கண்ணனின் தவறான போக்கைக் கண்டிக்கிறான்.
தர்பாரில் தனஞ்செயனைக் கைது செய்து அழைத்து வரச் செய்கிறான் செங்கண்ணன். ஆனால் வருவதோ...
அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே நடக்கும் விவாதமே இவ்வாய்விற்கான களம்.
https://www.youtube.com/watch?v=iKyy_HhXVqQ
காட்சி 2.27.14ல் தொடங்குகிறது. தர்பாரில் தேன்மொழியை அழைத்து வருகிறாள். அவன மீது செங்கண்ணன் குற்றஞ்சாட்டுகிறான், அண்ணனை மயக்கி மதுகொடுத்து அவனை பித்தனாக்கி அலையவிட்டதாக அவள் மீது குற்றஞ்சாட்டுகிறான் செங்கண்ணன்.
இந்தக் காட்சியில் கவியரசரின் வசனம் மிகவும் அருமையாக எதுகை மோனையாக அமைந்திருக்கும். ஒவ்வொருவராக அவளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேணடும் எனக் கூறு, செங்கண்ணன் தேன்மொழியை நோக்கி உனக்கென்ன வேண்டும் எனக் கேட்க, சட்டென்று சிறிதும் யோசியாமல் தேன்மொழி உங்களுக்கெல்லாம் மூளை வேண்டும் என உரைப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தர்பாரில் தனஞ்செயனை அழைத்து வருமாறு ஆணையிடுகிறான் செங்கண்ணன். முகமூடியுடன் அவனை அழைத்து வருகிறார்கள் சேவகர்கள் (இந்தப் படத்திலேயே இரும்பு முகமூடியுடன் வருகிறார் நடிகர் திலகம். உத்தமபுத்தினுக்கு முன்பே இதில் இரும்பு முகமூடியுடன் வருவது பலருக்கு வியப்பாக இருக்கும்).
முகமூடியைக் கழற்றியவுடன் அங்கே அரசர் வில்லாளன் காட்சிதர, அவையில் அனைவர் முகத்திலும் வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.
இங்கே துவங்குகிறது நடிகர் திலகத்தின் மிகவும் வித்தியாசமான இயல்பான, பாத்திரத்தேற்ற நடிப்பு.
பொதுவாக இது போன்ற தர்பார் காட்சிகளில் நடிகர் திலகம் க்ளைமாக்ஸில் வசனம் பேசும் போது அனல் தெறிக்கும், வீராவேசமாக இருக்கும்.
ஆனால் இங்கோ ... முற்றிலும் வித்தியாசமான முறையில் அவர் இந்தப் பாத்திரத்தை அணுகியுள்ள முறை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எப்பேர்ப்பட்ட நடிகரை தமிழகம் பெற்றிருக்கிறது என்று மனம் குதூகலிக்கிறது.
காட்சி இடம் 2.32 மணித்துளி..
முகமூடியைக் கழற்றியவுடன் நடிகர் திலகம் நிற்கும் தோரணையைப் பாருங்கள். அங்கே ஒரு உண்மையான மன்ன்னின் கம்பீரம், அந்நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை அதனால் தனக்குள்ள உரிமை அனைத்தையும் ஒரு சேர அந்த நிற்கும் தோரணையிலேயே பிரதிபலிக்கின்ற விந்தையைப் பாருங்கள்.
கைகளைக் கட்டிக் கொண்டு தன் தம்பிபை அவர் பார்க்கும் பார்வையில், இதையெல்லாம் மீறி தன் தம்பி இப்படி நடந்து கொள்கிறானே என்கின்ற வருத்தமும் வெளிப்படுகிறது.
ஏனடா திகைக்கிறாய், ன்ஹ.. எனக் கூறிவிட்டு முடிந்த கதை முழுக்கதையாக மீண்டும் தொடங்கி விட்டதா என்றா...என்று கூறி விட்டு ஒரு அலட்சியப் புன்னகை புரிவதைப் பாருங்கள்...
என்றுமே சாவு கிடையாதடா நெறி கெட்டவனே என சொல்லும் போது பாருங்கள்.. அதில் ஒரு கண்டிப்பு தென்படுகிறது. ஒரு உறுதி தொனிக்கிறது. சூதும் சூழ்ச்சியும் வெற்றியடைந்து கொண்டே போனால் என்று சொல்லும் போது அதில் ஒர் எச்சரிக்கை விடுக்கும் தொனி ஒலிக்கிறது. உடன் பிறந்தே கொல்லும் வியாதியே எனக் கூறும் போது ஓரடி முன்னால் எடுத்து வைத்து உன்னால் நான் கெட்டேன் எனத் தன் தவறை உணர்ந்து வருந்துகிறார். உணர்ச்சி வசத்தில் மதியிழந்தேன் எனும் போது ஓர் ஒப்புதல், தங்கை என்ற பெயரிலே வந்த சண்டாளி அதற்கு தூபம் போட்டாள் எனும் போது அவள் மீதான கோபம் வெளிப்படுகிறது, பாளையத்தின் பெயர் மாசு பட்டது..
தொடர்கிறார்.. ஒரே வயிற்றில் பிறந்தோம்.. ஒரே படுக்கையில் உறங்கினோம் எனத் தங்களுடைய குடும்ப உறவின் மேன்மையைக் கூறும் போது அதிலுள்ள பெருமையை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக தன் கால்களை சற்றே அகலப் படுத்தி இடது கையை இடுப்பில் வைத்து அதன் மூலம் அந்த கர்வத்தை எடுத்துக் காட்டுகிறார்.
ஆனால் இப்போது இருவரில் ஒருவர் தான் இருக்க வேண்டும் என்கிற நிலை வந்து விட்டது எனும் போது வேறு வழியில்லை எதற்கும் தயார் என்கிற மனோநிலையை உணர்த்துகிறார். நிச்சயமாக நானிருக்க விரும்பவில்லை என்கிற வரியின் போது தன் தம்பிக்காக தன் உயிரையும் தரத் தயாராக இருக்கும் ஓர் பாசமிகு அண்ணனை வெளிப்படுத்துகிறார். அடுத்த வரியிலேயே நிச்சயமாக நீ இருந்தால் நாடு தாங்காது எனக் கூறும் போது பொறுப்புள்ள ஓர் தேச பக்தனாக மாறி விடுகிறார். அந்த நேரத்தில் அண்ணன் என்னடா தம்பி என்னடா தேசம் தான் முக்கியம் என்கிற நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார்.
இந்த நேரத்தில் தம்பியான மன்ன்ன் கோபமாக உரையாடுகிறான். அதில் வேகம் வெளிப்படுகிறது.
ஆனால் அண்ணன் வில்லாளனோ சற்றும் நிதானம் இழக்காமல் பேசுகிறான். நானா உனக்கு அண்ணன், என்னை பகைவன் என்றழை என்கிறான்.
வில்லாளா முடியப் போகிறது உன் வாழ்வு என ஆத்திரத்துடன் செங்கண்ணன் குரல் கொடுக்க, இல்லையடா விடியப் போகிறது பொழுது என சற்றும் தளராமல் நம்பிக்கையுடன் பதிலளிக்கிறான் வில்லாளன்.
பைத்தியக்காரா நீ பேசுவது உன் தம்பியிடமல்ல, ஆள் பலமும் அதிகார பலமும் உள்ள செங்கண்ணனிடம் என மன்ன்ன் கொக்கரிக்கிறான்.
இப்போது பாருங்கள் ஓர் மந்தகாச சிரிப்பு, வேல்பாளையத்து அதிபதி.. ஹ..ஹ..ஹா.. என லேசான அதே சமயம் அலட்சியமாக சிரிக்கிறார் நடிகர் திலகம். யார் கொடுத்த பட்டம், எப்போது வந்த வாழ்வு எனக கேள்வி மேல் கேள்வி கேட்கும் போது அந்த முகத்தில் தெரியும் உரிமையான அதே சமயம் அலட்சியமான உணர்வுகளை அனாயாசமாக சிரித்துக் கொண்டே அவர் வெளிப்படுத்தும் போது நம்மையறியாமல் நம் கரங்கள் கரகோஷத்தை எழுப்பத் துடிக்கின்றனவே...
வீராதி வீர்ர்கள் வெற்றி முரசு கொட்டிய சாம்ராஜ்ய அதிபர்களே இருந்த இடம் தெரியவில்லை, என தன் இடது கையை மேலே தூக்கியவாறே ஸ்டைலாக நின்று நடிகர் திலகம் அந்த வசனத்தைப் பேசும் போது மெய் மறந்து விடுகிறோமே...ஹ.. நீ எந்த மூலை. என்று முடிக்கும் போது தியேட்டர் இரண்டாகி விடாதா... வசனம் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து இன்றும் பொருந்துகிறதே...
ஆவேசத்துடன் கூக்குரலிடுகிறான் செங்கண்ணன், கொக்கரிக்காதே கொன்று விடுவேன் தலையை என்கிறான். உடனே வில்லாளனின் முகத்தில் இதை சட்டை செய்யாத வகையில் ஒரு சிரிப்பு...
அதைத் தான் பார்க்கப் போகிறேனே எனக் கூறி விட்டு எதிர்பாராத வகையில் இடது கை வாளை உருவுகிறது. ஆஹா.. வாளை உருவும் ஸ்டைலுக்கும் நீதானே அதிபதி .. தலைவா..
மன்ன்ன் பிடியுங்கள் அவனை என்றவுடன் யாருமே முன்வரவில்லை. அப்போது திரும்பிப் பார்க்கும் ஸ்டைலைப் பாருங்கள்.. என்ன ஒரு நம்பிக்கை.. என்ன ஒரு தைரியம்... வாளை இருகைகளிலும் வைத்துக் கொண்டு அவர் தரும் போஸும் அந்தப் புன்னகையும்...
ஈடிணையில்லா ஸ்டைல் சக்க்ரவர்த்தி என்றால் அது நடிகர் திலகம் என்றல்லவா கட்டியம் கூறுகிறது..
அவர்களெல்லாம் நன்றியுள்ள மக்கள் என்று கூறிக்கொண்டே வாளை விரல்களால் வருடும் நேர்த்தி, அனாயாசம்,,
வா இறங்கி.. என்று கூறி வாட்போரைத் துவக்குகிறார்.
ஆஹா தொடர்வது கண்ணுக்கு மிகப் பெரிய விருநதல்லவோ.. வாளை தலைக்கு மேலே சுழற்றி அவனை நோக்கி நடிகர் திலகம் வீசும் ஸ்டைல், அதற்கு முன் படிக்கட்டில் ஏறும் வேகம், இடது கையைத் தூக்கி வலது கையால் வாளால் போர் புரியும் உக்கிரம்,
டூப்பில்லாமல் அந்த உலக மகா கலைஞன் வாட்போர் புரியும் போது,
இவரையா சண்டை போடத் தெரியாதவர் எனச் சொன்னார்கள் என்று கோபம் நமக்குள்ளே கொப்பளிப்பதை மறுக்க முடியுமா..
....
இந்தக் காட்சியில் என்ன விசேஷம் என்று கேள்வி எழலாம்.
தர்பார் காட்சியில் இவ்வளவு நிதானமாக நடிகர் திலகம் வசனம் பேசி நடித்த காட்சி அதுவும் க்ளைமாக்ஸில், நானே ராஜா மட்டுமாகத் தான் இருக்க முடியும். வசனங்களை நிதானமாகவும் அதே சமயம் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாகவும் சொல்ல முடியும் என்பதற்கு இந்தக் காட்சி ஓர் உதாரணம். ராஜா ராணி வேஷம், தர்பார் காட்சி என்றால் உடனே சிவாஜியின் வீரவசனம் என்ற இலக்கணத்தை வகுக்காமல் அதிலும் வித்தியாசத்தைக் கொண்டு வந்திருப்பார் நடிகர் திலகம். இதே போன்று மற்றோர் வித்தியாசமான கோர்ட் அ தர்பார் காட்சிக்கு உதாரணம் குறவஞ்சி என்றாலும் அதனுடைய பாத்திரத்தன்மை சற்றே மாறுபட்டது.
இவ்வாய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காட்சி, மிகவும் குறுகிய நேரக் காட்சி என்றாலும் அதனுள் நடிகர் திலகம் வகுத்திருக்கும் நடிப்பிலக்கணம் முற்றிலும் புதுமையானது.
What a casul and natural performance for this character, NT has given!
Oh God, I feel proud for ever moment of life for having born and brought up during Nadigar Thilagam's period.
What a subtle and subdued performance in this movie and for this character!
ராமாயணத்தை நினைவு படுத்தும் காட்சியமைப்புகள் என்றாலும் கடைசியில் சற்றே மாற்றி அமைத்து படத்தை நன்றாக எடுத்துச் சென்றுள்ளனர் இயக்குநர்கள்.
நானே ராஜா சிறப்பு செய்திகள்..
இரு இயக்குநர்கள் இயக்கிய திரைப்படம்.
டி.ஆர். ராம்நாத் அவர்களின் இசையில் பாடல்கள் இப்படத்தின் மிகப்பெரிய பலம்.
குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட எஸ்.வி.சுப்பய்யா வில்லனாக நடித்த படம்.
கவியரசர் திரைக்கதை வசனம் எழுதினாலும் ஒரு பாடல் கூட எழுதவில்லை என்பது வியப்பாக உள்ளது.
நானே ராஜா-
எனக்கு பிடித்த பேச படாத நடிகர்திலகம் படங்களில் ஒன்று.ராமாயண உல்டா எனினும், திரைக்கதையமைப்பு வித்யாசமானது. மந்தமாருதம் பாட்டும், சிவாஜியின் நடிப்பும்,இளமையும் அவ்வளவு அழகு,மெருகு.
ஆனால் surprise package எஸ்.வீ.சுப்பையா ... கப்பலோட்டிய தமிழன்,கண்கண்ட தெய்வம்,காவல் தெய்வம்,அரங்கேற்றம்,சொல்லத்தான் நினைக்கிறேன் என்று அவர் வித்தியாச பாத்திரங்களுக்கு நாம் பழகியிருந்தாலும்,உதட்டில் தேனையும்,உள்ளத்தில் விஷத்தையும் தேக்கிய ,தம்பி பாத்திரம் ,படு பிரமாதமாக தூள் கிளப்பியிருப்பார்.
வாழ்த்துக்கள் ராகவேந்தர்.
வீணை மீட்ட பட்டு ரொம்ப tired ஆக இருக்குமே என்று தடவி கொடுக்க படும் அன்போடு நவரத்னத்தில் .:-D:-D
நண்பர்களே,
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு எழுத ஆயிரம் விஷயம் உண்டு. எனக்கு உடன் பாடு இல்லாத விஷயத்தை தாக்கி எழுதுவதில் கூட எனக்கு உடன்பாடோ ,உவப்போ இல்லை.
உங்கள் தரப்பை மிகை படுத்தி புகழும் சாக்கிலோ, அல்லது இணையத்திலிருந்து,ரசிகர்மன்ற நோட்டீஸ் வைத்து, எங்கள் தெய்வத்தை குறை சொன்னால், எங்கள் தரப்பு அமைதியாக இருக்காது.
எங்கள் பல ஆதாரங்களுக்கு விடை தர முடியாத போது ,முரளியை தாக்கும் போக்கை அனுமதிக்க முடியாது. முரளி உண்மையை தவிர வேறு எதையும் எழுத தெரியாதவர். திரித்தல்,வளைத்தல்,பூசி மெழுகல் அவருக்கு வராது.
இனி அமைதி காப்போம். உண்மைகள் சரித்திரமாவதில்,ஆட்சேபணை இல்லை. எங்கள் அமைதியை எங்கள் பலமாக நினைத்தால் நீங்கள் புத்திசாலிகளே.
http://i1065.photobucket.com/albums/...pspmadrzoy.jpg
http://i1065.photobucket.com/albums/...psgluhppjc.jpg
http://i1065.photobucket.com/albums/...pspqm4j5vv.jpg
http://i1065.photobucket.com/albums/...pssz9d4hn3.jpg
http://i1065.photobucket.com/albums/...psgxtrkhyv.jpg
http://i1065.photobucket.com/albums/...psxkugrwep.jpg
http://i1065.photobucket.com/albums/...psfm4g4uoh.jpg
படைப்பாளிகளை விட படைப்பாளிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவர்கள் உண்மையிலேயே போற்றத்தக்கவர்கள்.
அந்த அடிப்படையில் நமது நெல்லை கோபு அவர்கள் இந்த மய்யம் திரியிலேயே அதிக அளவில் மற்றவர்களை ஊக்குவித்துள்ளார் தனது லைக்குகளின் எண்ணிக்கையின் மூலம். மய்யம் திரியிலேயே ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக மற்றவர்களின் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து முன்நிலையில் உள்ள கோபு அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து நம்முடைய பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் காலம் கலையுலகின் பொற்காலம் என்ற தலைப்பில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் தனது ரெளத்திரம் மாத இதழில் இந்த மாதம் (ஜூன் மாதம்) படிக்காத மேதையைப் பற்றி எழுதியுள்ளார்.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...fe8153009a90e3
ஒரு பிறவியில் நுாறு ஜென்மங்கள் வாழ்ந்த ஒரே உன்னத கலைஞன் சிவாஜி.
மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் காலம் கலையுலகின் பொற்காலம் என்ற தலைப்பில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் தனது ரெளத்திரம் மாத இதழில் இந்த மாதம் (ஜூன் மாதம்) படிக்காத மேதையைப் பற்றி எழுதியுள்ளார்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...b2&oe=55EE97CB
ஒரு பிறவியில் நுாறு ஜென்மங்கள் வாழ்ந்த ஒரே உன்னத கலைஞன் சிவாஜி.
மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் காலம் கலையுலகின் பொற்காலம் என்ற தலைப்பில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் தனது ரெளத்திரம் மாத இதழில் இந்த மாதம் (ஜூன் மாதம்) படிக்காத மேதையைப் பற்றி எழுதியுள்ளார்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...5f&oe=55E88D70
ஒரு பிறவியில் நுாறு ஜென்மங்கள் வாழ்ந்த ஒரே உன்னத கலைஞன் சிவாஜி.
மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் காலம் கலையுலகின் பொற்காலம் என்ற தலைப்பில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் தனது ரெளத்திரம் மாத இதழில் இந்த மாதம் (ஜூன் மாதம்) படிக்காத மேதையைப் பற்றி எழுதியுள்ளார்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...a1&oe=55EFCB23
ஒரு பிறவியில் நுாறு ஜென்மங்கள் வாழ்ந்த ஒரே உன்னத கலைஞன் சிவாஜி.
கோபு,
ரசிப்பதற்கு ,உற்சாக படுத்துவதற்கு ஒரு மனநிலை ,பக்குவம் வேண்டும். அது தங்களுக்கு கை வந்திருப்பது ,நாங்கள் செய்த நற்செயல்களின் பலன். வாழ்க.வளர்க. தங்களை வாழ்த்திய ராகவேந்தரும் எல்லோரையும் ஊக்குவிப்பவர்.
(அவருக்கு ஒவ்வாத சிலரிடம் சிறிதே பாரபட்சம்).தங்களிடம் அதையும் நான் காணவில்லை.
கோபால்,
இதில் பாதி உண்மை ஒத்துக்கொள்கிறேன். சிறிதே பாரபட்சம்.. உள்ளது. ஆனால் ஒவ்வாமை, அப்படியென்றால் என்ன...
பாராட்டுத் தேவைப் படுபவர்களுக்கு நிச்சயம் அளிக்கிறேன். தேவைப்படாதவர்களுக்கு அளிப்பதில்லை..
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா.. சர்க்கரை இனிக்கும், பாகற்காய் கசக்கும், கோபால் பதிவு சூப்பர்... இவையெல்லாம் யூனிவர்சல் ட்ரூத்.. எனவே கோபாலுக்கு பாராட்டெல்லாம் கிடையாது. Analytical reply மட்டுமே.
Gopal,
Let us refrain from talking about other actors in this thread unless and otherwise circumstances warrant it. As we have seen many times, such digressions take away our focus and the sheen of quality postings done by our hubbers is lost Let us enjoy our thread. Hope you are on the same page with me on this.
RKS,
Though I know that you had replied in response to Gopal's post, let us not invoke other actors' names for all wrong reasons.
Thanks for everyone's understaning
Regards
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
பட்டிக்காடா பட்டணமாவின் பிரம்மாண்டமான வெற்றி பற்றி பேசிக்கொண்டிருந்தோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
பட்டிக்காடா பட்டணமா சூறாவளியாக சுழன்று அடித்துக் கொண்டிருப்பதை பார்த்தோம். அதே நேரத்தில் வசந்த மாளிகை ரிலீசிற்கு தயாராகி கொண்டிருந்தது. வசந்த மாளிகை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரே வார்த்தை வெற்றி. அன்றைய காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரிப்பில் இருக்கும்போது அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள், படமாக்கப்படும் காட்சி அமைப்புகள், படத்தின் கதையை பற்றி வெளிவரும் தகவல்கள் மற்றும் பத்திரிக்கையில் வெளிவரும் ஸ்டில்ஸ் ஆகியவற்றை வைத்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு படத்தின் வெற்றி வாய்ப்பு ஆகியவை அலசப்படும். அது என்னவோ தெரியவில்லை 1972 ஜனவரியில் தெலுங்கில் வந்து வெற்றியடைந்த பிரேம் நகர் படத்தின் தமிழாக்கமாக வரப் போகிறது என்ற செய்தியுடன் பூஜை போடப்பட்டு வசந்த மாளிகை என்று பெயர் அறிவிக்கப்பட்டபோதே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்பது போலவே அனைத்து ரசிகர்களும் உணர்ந்தனர். படம் வளர வளர அந்த உணர்வு வலுபெற்றுக் கொண்டே இருந்தது.
படம் வெளிவருவதற்கு முன் பாடல்களும் வெளியாகி விட்டன. அதில் ஒ மானிட ஜாதியே இடம் பெறவில்லை. வெளிவந்த பாடல்களில் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் மயக்கமென்ன ஆகியவை பெரும் ஹிட் ஆகும் என்று தெரிந்து விட்டது. படத்தின் கிளைமாக்ஸ் பற்றி விவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. சோகமான முடிவு என்றும் இறுதியில் நடிகர் திலகம் ஏற்றிருந்த ஆனந்த் காதல் தோல்வியால் தான் கட்டிய வசந்த மாளிகையை இடித்து தரைமட்டமாக்கி விட்டு விஷம் குடித்து உயிர் துறப்பதாக கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருந்தனர். வசந்த மாளிகை செப்டம்பர் 29 ரிலீஸ் மதுரையில் நியூசினிமாவில் வெளியாகிறது என்று பத்திரிக்கை விளம்பரம் வந்துவிட்டது
நமக்கு எப்போதும் மகிழ்ச்சி தொடர்ந்து வந்தால் அதன் பின்னாலேயே வருத்தம் வருவது வழக்கம்தானே! இதில் பெரும்பாலான நேரங்களில் இந்த வருத்தமும் கோவமும் நமது ஆட்களாலேயே வரவழைக்கபப்டுவது நாம் வாடிக்கையாக கண்ட ஒன்று. அது வசந்த மாளிகைக்கும் நடந்தது. வசந்த மாளிகை ரிலீஸ் ஆகப் போகிறது என்ற சந்தோஷத்திற்கு நடுவே அது சென்னை சேலம் போன்ற பல ஊர்களில் எந்தெந்த திரையரங்குகளிலெல்லாம் பட்டிக்காடா பட்டணமா படம் மிகப் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்ததோ அதே அரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது என்பதுதான் அந்த வருத்தத்துக்குரிய கோவத்தை கிளறிய செய்தி.
நமது படங்களைப் பொறுத்தவரை குறிப்பாக சென்னை சாந்தி போன்ற அரங்கில் நடிகர் திலகத்தின் படம் எவ்வளவு நன்றாக ஓடிக் கொண்டிருந்தாலும் நடிகர் திலகத்தின் அடுத்த படம் வரும்போது ஓடிக் கொண்டிருக்கும் படத்தை எடுத்துவிட்டு புதிய படத்தை வெளியிடுவது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். சென்னையை பொறுத்தவரை சாந்தி கிரௌன் புவனேஸ்வரியில் பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் தர்மம் எங்கே, தவப்புதல்வன் என்ற இரண்டு படங்களிடமிருந்து தப்பித்ததே பெரிய விஷயம் எனும்போது வசந்த மாளிகைக்கும் எதிராக தாக்கு பிடிக்க முடியும் என நினைப்பதில் அர்த்தமில்லை என்ற போதிலும் பட்டிக்காடா பட்டணமா நான்கு ஊர்களில் [சென்னை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் நகரங்களில்] வெள்ளி விழா காணும் என நினைத்திருக்க வசந்த மாளிகையின் புண்ணியத்தினால் மற்ற மூன்று ஊர்களில் ஷிப்டிங் செய்யப்பட்டு வெள்ளி விழா கொண்டாட மதுரையில் மட்டும் நேரிடையாகவே வெள்ளி விழா கொண்டாடியது. இதற்கிடையில் எம்ஜிஆரின் கடைசி கருப்பு வெள்ளைப் படமான அன்னமிட்ட கை செப்டம்பர் 15 அன்று வெளியானது
செப்டம்பர் 29 படம் என்றவுடன் ஓபனிங் ஷோ போவதற்கான எங்களின் முயற்சிகள் ஆரம்பித்தன. காலாண்டு தேர்வு முடிந்து [Quarterly Exams] விடுமுறை காலம் என்பதனால் ஒரு பெரிய நிம்மதி. ஆனால் அந்த 1972-ஐ பொறுத்தவரை ஓபனிங் ஷோ டிக்கெட்டுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது.
(தொடரும்)
அன்புடன்
அண்ணாசாலையில் 35 ஆண்டுகள் எனது நிறுவனம்செயல்பட்டு வந்தது.ஒருநாள் மழையினால் அந்தக்கட்டிடம் இடிந்துவிழ,
நான் வெறுங்கையோடு வெளியேற வேண்டியதாயிற்று.என் மனக்கவலையை சிவாஜியின் சகோதரர் சண்முகத்திடம் சொன்னபோதுஅவர் அருகிலிருந்து இன்னொரு வீட்டின் சாவியைகொடுத்து (ராயப்பேட்டையிலிருந்தது)பயன்படுத்திக்கொள்ளச்சொன்னா ர்.
வாடகை எவ்வளவு?என்று கேட்டபோது என்னை முறைத்துப்பார்த்தார்.ஏழெட்டு ஆண்டு காலம் அங்கு வாடகை இல்லாமலேஅதைப் பயன்படுத்தினேன்.
இடுக்கண் வரும்போது நட்பு எப்படி உதவும்என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பாசமலர் மோகன்
திரியின் தூங்கா விளக்குகளை தூண்டுகோலாக இருந்து சுடர் விட்டுப் பிரகாசிக்க வைக்கும் பண்பாளர் கோபு அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்
senthil on behalf of NT/GG threads
டியர் முரளி சார்,
தங்கள் வரலாற்றுப் பதிவுகளுக்காக தவமிருக்கிறோம். நீங்களும் ஏமாற்றாமல் "உள்ளது உள்ளபடி" வரலாற்றுத் தகவல்களை அள்ளித் தந்துகொண்டு இருக்கிறீர்கள்.
சாந்தி தியேட்டர் நிர்வாகம் பற்றி நீங்கள் சொன்னது 100க்கு 100 சரியே.
இறைவனுக்கு நன்றி,
பாலாஜியின் 'நீதி' படத்தை 72 டிசம்பரிலேயே வெளியிட வைத்ததற்கு.
முன்பே திட்டமிட்டபடி 73 ஜனவரி 26 அன்று வெளியிட்டிருந்தால், சென்னையில் வசந்த மாளிகையின் வெள்ளிவிழாவும் அடிபட்டிருக்கும். 100 நாட்களைக் கடந்தது போதும் என்று சித்ராவுக்கோ பாரகனுக்கோ மாற்றி விட்டு நீதியை சாந்தியில் திரையிட்டிருப்பார்கள்.
பின்னர் பாரத விலாசுக்காக நீதியையும் 60 நாட்களில் தூக்கியிருப்பார்கள். தேவிபாரடைசில் திரையிட்டதால் 99 நாட்கள் என்ற கௌரவமான ஓட்டத்தைப் பெற்றது.
சாந்தியால் இரண்டு சங்கடங்கள்..
ஒருபக்கம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை தூக்கி, ரசிகர்களின் வயிற்றெரிச்சலை தேடிக்கொள்வார்கள்.
இன்னொரு பக்கம் 'சொந்த தியேட்டரில் ஒட்டினார்கள்' என்று எதிர்த்தரப்புக்கு தீனி போடுவார்கள்.
உண்மைநிலை நமக்குத்தான் தெரியும்.
வர வர இந்த ஆரூரானின் அழும்பு தாங்க முடியவில்லை.
வசனகர்த்தா என்ற நிலையை தாண்டி நண்பன் என்ற முறையில் அவரிடம் நடிகர்திலகம் பேசியதையெல்லாம் இப்போது பத்திரிகைகளில் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். இது தன்னை நண்பனாக நினைத்தவருக்கு செய்யும் துரோகம்.
அதுவும் ஸ்டேட்மெண்ட்டில் நடிகர்திலகம் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் வெறுமனே சிவாஜி, ஆனால் மற்றவர்களை குறிப்பிடும்போது விஜயாம்மா, தேவரண்ணன்.
சின்ன அண்ணாமலையின் மணிவிழாவில் அவர் தலையில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றியபோது இவரும் நடிகர்திலகமும் எதிரில் அமர்ந்திருந்தார்களாம். இவர் சொல்கிறார். ஆனால் அப்போது பத்திரிகைகளில் வந்த உண்மைசெய்தி என்னவென்றால் நடிகர்திலகம் காலையிலேயே சென்று வாழ்த்தி விட்டு வீடு திரும்பி விட்டார். சிலமணிகள் கழித்து சின்ன அண்ணாமலையின் மரண செய்திவர, அலறியடித்துக்கொண்டு மீண்டும் அவர் வீட்டுக்கு விரைந்துள்ளார். இதுதான் உண்மை.
தவறு உன்மீது இல்லை, உன்னையெல்லாம் நண்பனாக நினைத்து பழகினாரே அவரைச் சொல்லணும்.
அந்தக் காலத்திலேயே அண்ணாத்தை ஆடுறார் ஒத்திக்கோ ....நடிப்பின் முரட்டுப் புலி (வேஷம்)!
4:30 onwards
https://www.youtube.com/watch?v=s27Z9Z-sRds
27.11.73 அன்று நடைபெற்ற நடிகர் செந்தாமரை அவர்களின் பாராட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரையில்நடிகர்களுக்கு(எதிர்க்கட்சியினராயினும்)வாழ்வ ு கொடுத்த சிவாஜியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
"நான் பாளையங்கோட்டை சிறையில் இருந்த நேரத்தில்சிவாஜிக்கு எழுதிய கடிதத்தில் செந்தாமரையை அவருடைய நாடக மன்றத்தில் இணைத்துக்கொள்ளச்சொன்னேன்.தி.மு. .க வின் பிரதான எதிரியான காங்கிரஸின் ஆதரவாளராக சிவாஜி இருந்த நேரத்தில் செந்தாமரை சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்தார்.
அந்த அளவிற்கு நடிகர்களிடத்தில்
அவர்களுடைய வாழ்க்கையில்,
முன்னேற்றத்தில் இவர்கள் வாழ்ந்தால் எங்கே தன்னுடைய வளர்ச்சி கெட்டுவிடுமோ என்று எண்ணாத உள்ளப்பாங்கில் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.ஏனென்றால் அவருக்கு ஒரு தைரியம்.
நடிப்பில் தன்னையாரும்வென்றுவிட முடியாது என்று.அந்த அச்சம் வந்தால்தான்மற்றவர்களை
வளரவிட அஞ்சுவார்கள்.
ஆகவேதான் மற்றவர்களை அழித்துவிட வேண்டும்,வீழ்த்திவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது கிடையாது.ஏற்படவும் முடியாது.
மன்னவரு சின்னவரு சூட்டிங்கில்...
http://i1065.photobucket.com/albums/...psjlrbpueo.jpg