இது மட்டுமல்ல. முன்-பின் உள்ள சிலகாட்சிகளிலும்.
Printable View
கோபால் சார்,
பார்த்தால் பசி தீரும் படத்தில் இறந்துபோனதாக கருதப்பட்ட முதல் மனைவி உயிருடன் இருப்பதை அறிந்தது முதல் அவர் ஒருமாதிரியான மனநிலையிலேயே இருப்பார். அதனால்தான் சௌகார் கேட்கும் கேள்வி ஒன்றுக்கு, (பார்வையற்ற சாவித்திரியை நினைத்தவாறே) "டாக்டரிடம் காட்டினால் கண் பார்வை சரியாயிடும்னு சொன்னாங்களே" என்பார்.
இதே போல ஒரு சிச்சுவேஷன் 'இருகோடுகள்' படத்திலும் வரும். இறந்துபோனதாக கருதப்பட்ட முதல் மனைவி உயிருடன் இருப்பதை அறிந்தது முதல் அவர் ஒருமாதிரியான மனநிலையிலேயே இருப்பார். ஆனால் இரண்டுக்கும்தான் எத்தனை வேறுபாடு.
இரண்டு பெண்கள் டாமினேட் செய்த அப்படத்தில் அமைதியாக ஸ்கோர் அடிப்பார். ஜெமினி இப்படியென்றால், சௌகாரின் நடவடிக்கைகளை எல்லாம் ஜெயந்தி அலட்டிக்காமல் 'ஜஸ்ட் லைக் தட்' பாஸ் பண்ணி போய்க்கொண்டே இருப்பார்.
''கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது.''
மக்கள் திலகம் எம்ஜிஆர் .
அனந்தராமன் என்கிற திரு ஆதிராம் அவர்களே
உங்கள் விளக்கத்தை படித்தேன் . கடந்த 8 ஆண்டுகளாக எல்லா திரிகளையும் படித்தவன் என்ற முறையில்
எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு பதில் இது வரை கிடைக்கவில்லை .இருந்தாலும் உங்களுடைய பதிவை மேற்கோள் காட்டி என்னுடைய பதிவினை உங்கள் முன் வைக்கிறேன் .
''என்னுடைய பதிவுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதபோது' - ஆதிராம் 1
என் பதிவு .1
நீங்கள் அப்படியென்ன உலகத்தில் யாரும் கேட்காத சட்ட கேள்விகள் கேட்டு விட்டீர்கள் உங்களுக்கு பயந்து மற்றவர்கள் தப்பிக்க உபாயம் தேடுவதற்கு.
''இதற்கு கல்நாயக் போன்ற சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்'' - ஆதிராம் -2
என் பதிவு -2
நீங்கள் சொல்பவரே நீங்கள்தான் என்று சொல்கிறார்கள். அதுவும் நான் சொல்லல அய்யா!அதுவும் உங்கள் திரியிலேயே பலர் சொல்லி நான் படித்திருக்கிறேன். அது உண்மையாய் இருந்தால் உங்களுக்கு நீங்களே விளக்கம் கொடுத்துக் கொள்வது போல ஆகி விடுமே! அது உண்மையில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் இல்லை இல்லை உங்கள் விருப்பமும். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
நீங்களே ஒரு பெயரில் பதிவிட்டு ஒரு கால் மணி நேரமோ அரை மணி நேரமோ சென்றபின் நீங்களே உங்களுக்குண்டான வேறு பெயரில் (பெயர்களில்) உங்களுக்கு லைக்குகள் போட்டுக் கொள்கிறீர்களாமே! சிரிக்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
ஆனால் நான் கூட பல சமயங்கள் பார்த்திருக்கிறேன். who is online பார்க்கும் போது நீங்கள் குறிப்பிட்ட அந்த வேறு ஒருவரும் பச்சை விளக்கில் இருக்கிறார் அடுத்த வினாடி உங்கள் பெயர் லாகின் ஆகி பச்சை விளக்கில் மின்னுகிறது. உடன் நாயகர் லாக்-ஆப் ஆகி பச்சை விளக்கு அணைகிறது. அப்புறம் உங்களுடையது அணைந்து பரணி சாம்ராஜ்யம் என்று லாகின் ஆகி விளக்கு எரிகிறது.
இதுமட்டுமல்லாமல் 'ஊர்வசி', கிரிஜா என்று பொம்பளைகள் பெயரில் அடிக்கடி வேறு உங்கள் பின்னாலேயே விளக்குகளாய் லாகின் ஆகி மாறி மாறி மின்னி மின்னி அணைகின்றன. நண்பர்கள் தங்கள் 'எண்ணங்கள் எழுத்துக்களை' சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
எழுத்தாளர் சுஜாதா ஆண் என்று அனைவருக்கும் தெரியும்.ஆனால் பெண் பெயரில் எழுதுவார். ஆனால் அவர் பெண்ணாக மாற முடியுமா? ஜீன்ஸ் பேன்ட் போட்டு அத்தை மகனுடனோ சித்தி பையனுடனோ பின்னாடி பைக்கில் கால் தூக்கிப் போட்டு எறி குஜாலாக படம் பார்க்க போக முடியுமா? குளித்துக் கொண்டிருக்கம் போது ரவிச்சந்திரன் மேட்டர் வந்தால் அப்படியே வர முடியுமா? பெண் புனைப் பெயர்தானே .ஆனால் அவர் ஆண்தானே! ஆனா ஆணே இங்கு பெண்ணாக மாறி விட்ட அதிசயமெல்லாம் நடந்துது என்று நான் சொல்லி சிரிக்கல சார். சொல்றாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான். பெண் இல்ல.
அது எப்படி உங்கள் பெயர் வரும் போது மட்டும் இவர்கள் பின்னாலேயே உங்களைத் தொடர்ந்து வருகிறார்கள் என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. ஒருவேளை உங்களுக்கும் மிஞ்சிய ஒற்று வேலை பார்ப்பவர்கள் போல் இருக்கிறது. நீங்கள் எப்போது ஹப்பில் அமர்வீர்கள் என்று வேலை வெட்டி இல்லாமல் இவர்கள் பார்த்துக் கொண்டு நீங்கள் வந்ததும் உங்கள் பின்னாடியே ஓடி வந்து விடுகிறார்களே! அப்படி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
நாயகர் பதிவிடும் போது ஆதிராமும் லாகினில் இருக்கிறார். ஆனால் உஷாராக பதிவு போடாமல் இருக்கிறார். அப்புறம் சந்தேகம் கொண்டு யாராவது கேட்டால் அரை மணி நேரத்தில் ஆதிராம் ஓடி வந்து நாயகருக்கு லைக் போட்டு விட்டு தற்காப்பு நாடகம் நடத்தி ஓடி விடுகிறார்..அப்போது நாயகர் லாக்-ஆப் ஆகி விடுவார். ஏனென்றால் நாயகருக்கு நான் லைக் போட்டேன் என்று சொல்லி நாங்கள் இருவரும் வெவேறு நபர்கள் என்று தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா! அப்படின்னு சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்'' - ஆதிராம் -3
என் பதிவு -3
ஓஹோ! இந்தக் குற்றச்சாட்டு துவக்கத்திலேயே வந்து விட்டதா? நான் ஒரு மாங்கா. இப்பத்தான் உங்களை மாதிரி துப்பு துலக்கி கண்டு பிடிச்சுட்டேன்னு பெருமைபட்டா மக்கா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டார்களா? சதிகாரர்கள். இவர்களை சும்மா விடக் கூடாது நாயகரே சாரி ஆதிராம் . சாரி அனந்த ராமன்
அது சரி.எந்த மாடரேட்டர்கள் ஆராய்ந்து சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா? ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நான் உங்களை குறை சொல்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறேன். ஒரு மனுஷரை இப்படியா சந்தேகப்படுவது? இருந்தாலும் மாடரேட்டர்கள் உங்களையேவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் ஆதிராம் ஒருவர்தான் வேறு பெயரில் வரவில்லை என்று எங்காவது அறிவித்திருக்கிறார்களா? அப்படி என்று நான் கேட்கவில்லை. கேட்கிறார்கள். சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார்'' -ஆதிராம் 4
என் பதிவு 4
முத்துராமன் மட்டுமா கொளுத்திப் போட்டார். அதற்கு முன்னும் பின்னும் பலர் கண்டு பிடித்து விட்டார்களே. உங்களுக்கும் பாரிஸ்டர் என்று அப்போது இருந்த ஒருவருக்கும் இது சம்பந்தமாக பக்கம் பக்கமாக வாக்குவாதம் நடந்ததே. சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''இந்த ஆராய்ச்சி இன்றோடு முடியட்டுமே'' -ஆதிராம் -5
என் பதிவு - 5
ஏன் பயப்படுகிறீர்கள் சார். நீங்கள்தான் மற்றவர்கள் இல்லையே. யாராவது ஏதாவது ஆராய்ச்சி பண்ணிவிட்டுப் போகட்டுமே. நீங்கள்தான் யோக்கியர் ஆயிற்றே. அப்புறம் ஏன் இந்த நடுக்கம். பயப்படாதீர்கள். நாங்கல்லாம் இருக்கோம். விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் இப்படி பயப்பட்டால் நீங்கள் செய்வது எல்லாம் உண்மை என்று ஆகிவிடும். இன்னும் வகையாக மற்றவர்கள் பேச நீங்களே வழி செய்து கொடுத்தது போல் ஆகி விடும்.
உங்கள் தலைவர் நடித்த ராஜா ராஜ சோழன் படத்தில் ஒற்று வேலை பார்க்க நம்பியார் சிவாஜியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவது போல் நடிப்பார். ஆனால் மனோரமாவை வைத்து நம்பியாரையே ஒற்றும், வேவும் பார்த்து அவரை கையும் களவுமாக பிடிப்பார் சிவாஜி. அது மாதிரி நீங்க எங்க மக்கள் திலகம் எம்ஜிஆர திரியில் வந்து ஒற்று வேலை பார்க்கும் போது உங்களைப் பற்றி எங்க திரியிலே இருந்து வந்து ஒற்று வேலை செஞ்சி எங்க ஆளுங்க கண்டு பிடிச்சதுதான் இவ்வளவு விஷயமும். என்ன தைரியம் இருந்தா அந்த ஆளு இங்கே வந்து ஒற்று வேலை பார்த்திருப்பாரு அப்படின்னு இங்க உள்ளவங்க கேக்குறாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''என் உண்மைப்பெயர் கூட ஆதிராம் இல்லை. அனந்தராமன்'' - ஆதிராம் -6
என் பதிவு -6
ஓ...இருக்கிற பேரெல்லாம் போதாது என்று இன்னொரு பேரா. தாங்கல ஆதி ! இப்போ மத்தவங்க சொல்றத நான் நம்பித்தான் ஆகணும் போல இருக்கு. என் பெயரே எனக்கு மறந்துடும் போல் இருக்கு. அஞ்சாறு பெயர்ல நீங்க எப்படித்தான் கில்லாடித்தனமா இவ்வளவு நாள் சாமர்த்தியமா குப்பை கொட்டுறீங்களோ தெரியல. ஒற்றர் வேவு வேலை பார்த்து எங்க திரியை உங்க திரி போல வேகமாக பாகம் கடக்க வச்சதுக்கும், இன்னும் கொஞ்ச நாள்ல உங்களையும் மிஞ்சி நாங்க அடுத்த பாகம் போக உதவி செஞ்சதுக்கும் உங்களுக்கு நன்றி.
ஆமா! நாயகரை ரொம்ப ரெண்டு மூணு நாளா காணோமே. ரொம்ப அப்செட்டோ. நீங்க மட்டுமே வரீங்க. சரி இப்பதான் சொல்லிட்டோமில்ல. அவரும் நீங்களும் இப்போ ஒண்ணா வந்து நாங்க ரெண்டு பெரும் வேற வேற ஆள்னு நம்ப வச்சுடுவீங்க. நவராத்திரி வேஷம் கட்டினவரே உங்களிடம் தோத்துப் போகணும். உங்களையெல்லாம் ரசிகரா வச்சிருந்தாரே..அவரை சொல்லணும்.
சரி வருத்தப்படாதீங்க. சுவிட்சை மாத்தி மாத்தி போடுங்க.
ஆதிராம்
என்னோட பொது வாழ்க்கையில் உங்களை போன்று பன்முக ஆற்றல் கொண்ட ஒருவரை இப்போதுதான் பார்கிறேன் .
வேண்டுகோள்
உங்கள் அழகு திருமுகத்தை திரியில் பதிவிடுங்களேன் . எல்லோருடைய குழப்பமும் தீரும் .பதிவீர்களா ?
கல் நாயக் சென்னையில் இருப்பதால் அவரை நேரில் சந்திக்கிறேன் .
கடைசியாக மக்கள் திலகத்தின் பொன்னந்தி மாலை - பாடலை பதிவிட்ட திரு கார்த்திக் எங்கே ?
ஆயிரத்தில் ஒருவனை - மிக நேர்த்தியாக விமர்சனம் செய்த சாரதா பல வருடங்களாக காண வில்லையே ?
ஒரே ஒருவரின் சாமர்த்தியம் - பலரை எப்படி அலை கழிக்கிறது ?
மாடரேட்டர்கள் ஏமாறலாம் . பதிவாளர்கள் ஏமாறலாம் . பார்வையாளர்கள் ஏமாறலாம் .
பைபிள் - பகவத் கீதை - குரான் மீது நம்பிக்கை கொண்டவன் நான் .
சிரித்து வாழ வேண்டும் படத்தில் மக்கள் திலகம் பாடுவார்
''யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
அஸ்ஸலாமு அலைக்கும் !
ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தார் ....ராஜபோகம் பெற வந்தார்!!
ராஜா மகள் ரோஜாவுடன் வரவேற்பதில் வியப்பென்ன ? .Quote:
ராஜா ராணி டைப் படங்களிலும் அந்தக்கால ஜெமினிகணேசன் சிக்கென்ற உடல்கட்டோடு அழகும் கம்பீரமும் வீரமும் வெளிப்படுத்தினார் !
https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac
நாகராணியும் காதல் மன்னரின் மகுடிக்கு தலையாட்டுவது இயற்கையே.
https://www.youtube.com/watch?v=01a25aWERI8
தேவலோக மங்கையும் காதல் மன்னரின் குழலிசைக்கு அடிமையாகி இறங்கி வருவதும் விந்தையே !
https://www.youtube.com/watch?v=8a91oS0B_B4
In Parthiban Kanavu...
வைஜயந்திமாலா ஜெமினிக்கு சரோ சாவியை விட பொருத்தமான ஜோடியே !
https://www.youtube.com/watch?v=m3Ud6w3XtGE
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ...
திரு.சிவாஜி செந்தில் சார், வணக்கம்.
800 பதிவுகளுக்காக தாங்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. மக்கள் திலகம் திரியிலேயே உங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தேன். நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி.
‘நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள்’ பதிவுகளை ரசித்தேன். ஒரே பாடலைத்தான் எல்லாரும் பார்க்கிறோம் என்றாலும், உங்களுக்கு எப்படி விதவிதமாக தோன்றுகிறது? பாராட்டுக்கள்.
இன்று ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் காதல் மன்னர் பாடி நடிக்கும் ‘இளமை கொலுவிருக்கும்..’ பாடல் பற்றிய பதிவை மதுரகானம் திரியில் பதிவிட்டேன். பல மணி நேரம் கழித்துத்தான், ‘ அடடா, இது நடிப்பு செல்வத்தின் பாட்டாயிற்றே? இங்கு பதிவிடலாமே?’ என்று தோன்றியது. உடனே தோன்றாமல் போனதற்கு மன்னிக்கவும். நன்றி.
-------------------
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். பி.பி.எஸ். தேன்குரலில் திரு.ஜெமினி கணேசன் அவர்கள் பாடும் ‘இளமை கொலுவிருக்கும்...’ பாடல். (சுசீலா அவர்களின் குரலில் சாவித்திரி அவர்கள் பாடும் காட்சியை பெண்கள் தினத்தில் சின்னக்கண்ணன் பதிவிட்டதாக நினைவு. நான் சொல்வது பி.பி.எஸ் பாடுவது) மனதை மயக்கும் பாடல். மெல்லிசை மன்னர்களின் இசையில் நாமே நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற உணர்வு. கவிஞரின் அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் வரிகள்.
இந்தக் காட்சியில் திரு.ஜெமினி கணேசன் அவர்கள், காதல் மன்னர் என்பதை நிரூபித்திருப்பார். நீச்சல் குளத்தில் அவரது ஜலக்ரீடை தாங்க முடியாது. கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் குளத்தில் மேலேயிருந்து குதிக்கும்போது பின்னால் திரும்பி நின்றபடி டைவ் அடிப்பார்.
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே...
பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா
ஒரு பூவைக்கு மாலையிடும் மனம் வருமா?
...எவ்வளவுதான் பொன் நகையும் பொருட்களும் இருந்தென்ன?
அவையெல்லாம் இனிய மொழி பேசுமா? பூவைக்குத்தான் அவை மாலையிடப் போகிறதா?
இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா?
...செல்வம் நிலையற்றது என்பதை எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார் கவிஞர். அதை அனுபவபூர்வமாய் உணர்ந்தவர் கவிஞர். அப்போதெல்லாம் இந்தியாவில் ஜனாதிபதிக்குத்தான் அதிக சம்பளம். இப்போது போல இல்லை. அதனால்தான் கவிஞர் ஒருமுறை தன் நிலைபற்றி இப்படிக் குறிப்பிட்டார். ....‘இந்திய ஜனாதிபதியை போல சம்பளம் வாங்குகிறேன். இந்தியாவைப் போல கடன்பட்டிருக்கிறேன்’’ என்று தனது நிலையைக் கூட கவித்துவமாய் குறிப்பிட்டார்.
அப்படிப்பட்ட நிலையற்ற செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? என்று கேட்கிறார். அமுது நமக்கு எப்படி கிடைக்கப் போகிறது? நாம் என்ன தேவர்களா? சோறுதான். ஆனால், இன்முகத்துடன் சிரித்தபடி மனைவி அந்த சோற்றை பரிமாறினாலே அது அமுதாம். நயமான உவமை.
இயற்கையின் சீதனப் பரிசாய் விளங்கும் பெண்களின் பல சிறப்புகளை கவிஞர் குறிப்பிட்டிருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மகுடமாக விளங்கும் வார்த்தைகள்.
‘அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ’
பெண்களுக்கு ஆயிரம் சிறப்புகள் இருந்தாலும் தாய்மை என்பதுதான் பெண்மையின் உயர்ந்த சிறப்பு. அந்த தாயன்புக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இல்லையே.
உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் கூட தான் மிகவும் நேசித்த காதலி (கடைசி நேரத்தில் மணந்து கொண்டார்) இவா பிரானுடன் தற்கொலை செய்து கொண்டபோது (தற்கொலை செய்யவில்லை என்று இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது) மார்போடு ஒரு புகைப்படத்தை அணைத்தபடி இறந்திருந்தார். அது இவா பிரான் படமல்ல. அவரது தாயின் படம். இது ஒன்றே போதுமே, கல்லுக்குள்ளும் ஈரம் வைக்கும் தாயின் சிறப்பை விளக்க.
நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
[quote]To enhance the happiness upon reading your excellent essay I append the songs video so that each and every line you have carved will be simultaneously engraved in our hearts and minds! Kudos Kalaivendhan Sir!!
https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM
https://www.youtube.com/watch?v=F0wMgigPG1Y
அதே இளமை துள்ளிய காதல் மன்னர் அதே நீச்சல் குள சிச்வேஷனில் பின்னாளில் எப்படி மாறிவிட்டார் பாருங்களேன்!!
அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படத்தில்.....
https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ
வணக்கத்துடன் செந்தில்Quote:
தங்கள் வரவு நல்வரவாகட்டும் மதிப்புக்குரிய மக்கள் திலகப் புகழார்வலர் கலைவேந்தன் சார் !
ஜெமினிக்காக தாங்கள் பதிந்துள்ளவை எதிர்பாராத மகிழ்ச்சியலைகளை முகிழச்செய்து விட்டது
இத்திரியின் ஜாம்பவான்கள் ராகவேந்தர் வாசு கோபால் மற்றும் சின்னக் கண்ணன் அணியில் உங்களின் அற்புதமான எழுத்துநடையில் அமைந்த இக் கட்டுரையும் ஒரு கல்வெட்டுப் பதிவாக எக்காலமும் காதல் மன்னருக்கு பெருமை சேர்க்கட்டும்!
தமிழ்த்திரை மூவேந்தர் புகழார்வலப் பணியில் நானும் ஒரு அணிலாக உங்கள் அணியின் அடியொற்றி என் கடமையை தொடருகிறேன் நன்றிகள்
Gap filler/Monotony breaker : Pandha Paasam : Idhazh mottu virindhida song
https://www.youtube.com/watch?v=r5JxvtpwRfs
Page filler / Monotony breaker!
Enjoy part of Kairaasi movie starring GG!
https://www.youtube.com/watch?v=zxN8F64LKJE
Gap filler song from Kairasi!
https://www.youtube.com/watch?v=TSrZokr2Zag
Another song from Kairasi!
https://www.youtube.com/watch?v=L3fJ34yJU1g
https://www.youtube.com/watch?v=TIVPKqfqDXo