-
21st June 2015, 08:11 PM
#11
Junior Member
Seasoned Hubber
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ...
திரு.சிவாஜி செந்தில் சார், வணக்கம்.
800 பதிவுகளுக்காக தாங்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. மக்கள் திலகம் திரியிலேயே உங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தேன். நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி.
‘நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள்’ பதிவுகளை ரசித்தேன். ஒரே பாடலைத்தான் எல்லாரும் பார்க்கிறோம் என்றாலும், உங்களுக்கு எப்படி விதவிதமாக தோன்றுகிறது? பாராட்டுக்கள்.
இன்று ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் காதல் மன்னர் பாடி நடிக்கும் ‘இளமை கொலுவிருக்கும்..’ பாடல் பற்றிய பதிவை மதுரகானம் திரியில் பதிவிட்டேன். பல மணி நேரம் கழித்துத்தான், ‘ அடடா, இது நடிப்பு செல்வத்தின் பாட்டாயிற்றே? இங்கு பதிவிடலாமே?’ என்று தோன்றியது. உடனே தோன்றாமல் போனதற்கு மன்னிக்கவும். நன்றி.
-------------------
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். பி.பி.எஸ். தேன்குரலில் திரு.ஜெமினி கணேசன் அவர்கள் பாடும் ‘இளமை கொலுவிருக்கும்...’ பாடல். (சுசீலா அவர்களின் குரலில் சாவித்திரி அவர்கள் பாடும் காட்சியை பெண்கள் தினத்தில் சின்னக்கண்ணன் பதிவிட்டதாக நினைவு. நான் சொல்வது பி.பி.எஸ் பாடுவது) மனதை மயக்கும் பாடல். மெல்லிசை மன்னர்களின் இசையில் நாமே நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற உணர்வு. கவிஞரின் அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் வரிகள்.
இந்தக் காட்சியில் திரு.ஜெமினி கணேசன் அவர்கள், காதல் மன்னர் என்பதை நிரூபித்திருப்பார். நீச்சல் குளத்தில் அவரது ஜலக்ரீடை தாங்க முடியாது. கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் குளத்தில் மேலேயிருந்து குதிக்கும்போது பின்னால் திரும்பி நின்றபடி டைவ் அடிப்பார்.
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே...
பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா
ஒரு பூவைக்கு மாலையிடும் மனம் வருமா?
...எவ்வளவுதான் பொன் நகையும் பொருட்களும் இருந்தென்ன?
அவையெல்லாம் இனிய மொழி பேசுமா? பூவைக்குத்தான் அவை மாலையிடப் போகிறதா?
இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா?
...செல்வம் நிலையற்றது என்பதை எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார் கவிஞர். அதை அனுபவபூர்வமாய் உணர்ந்தவர் கவிஞர். அப்போதெல்லாம் இந்தியாவில் ஜனாதிபதிக்குத்தான் அதிக சம்பளம். இப்போது போல இல்லை. அதனால்தான் கவிஞர் ஒருமுறை தன் நிலைபற்றி இப்படிக் குறிப்பிட்டார். ....‘இந்திய ஜனாதிபதியை போல சம்பளம் வாங்குகிறேன். இந்தியாவைப் போல கடன்பட்டிருக்கிறேன்’’ என்று தனது நிலையைக் கூட கவித்துவமாய் குறிப்பிட்டார்.
அப்படிப்பட்ட நிலையற்ற செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? என்று கேட்கிறார். அமுது நமக்கு எப்படி கிடைக்கப் போகிறது? நாம் என்ன தேவர்களா? சோறுதான். ஆனால், இன்முகத்துடன் சிரித்தபடி மனைவி அந்த சோற்றை பரிமாறினாலே அது அமுதாம். நயமான உவமை.
இயற்கையின் சீதனப் பரிசாய் விளங்கும் பெண்களின் பல சிறப்புகளை கவிஞர் குறிப்பிட்டிருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மகுடமாக விளங்கும் வார்த்தைகள்.
‘அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ’
பெண்களுக்கு ஆயிரம் சிறப்புகள் இருந்தாலும் தாய்மை என்பதுதான் பெண்மையின் உயர்ந்த சிறப்பு. அந்த தாயன்புக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இல்லையே.
உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் கூட தான் மிகவும் நேசித்த காதலி (கடைசி நேரத்தில் மணந்து கொண்டார்) இவா பிரானுடன் தற்கொலை செய்து கொண்டபோது (தற்கொலை செய்யவில்லை என்று இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது) மார்போடு ஒரு புகைப்படத்தை அணைத்தபடி இறந்திருந்தார். அது இவா பிரான் படமல்ல. அவரது தாயின் படம். இது ஒன்றே போதுமே, கல்லுக்குள்ளும் ஈரம் வைக்கும் தாயின் சிறப்பை விளக்க.
நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
21st June 2015 08:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks