Thank you sarathy sir
Printable View
டியர் சதீஷ் சார்Quote:
நிலை உயரும் போது பணிவு கொள்பவன் மனித வடிவில் தெய்வம்
தங்கள் பிறந்த நாள் இனிமையாக அமைந்து தாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள். தங்களுடைய அவ்வளவு அலுவல்களுக்கடையிலும் இங்கு ஒவ்வொருவரின் வாழ்த்தினையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவிக்கும் பக்குவம் தங்களுக்குள்ள உயர்ந்த மாண்பினைக் காட்டுவதோடு மேற்குறிப்பிட்ட வரிகளுக்குத் தாங்கள் உதாரணமாக வாழ்ந்து வருகிறீர்கள் என்பதற்கும் சான்றாக விளங்குகிறது.
தங்களுக்கு மீண்டும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்
சங்கத் தமிழ் வளர்த்த நமது நான்மாடக்கூடலிலே
சிங்கத் தமிழ் பேசியவனின் சிறப்பை சொல்ல
ஏழு வயதினிலே எட்டடி பாய்ந்த்வரே
எங்கள் தங்க ராஜாவின் புகழ் பரப்பும் தங்க நட்சத்திரமே!
ஆஸ்ட்ரேலியாவில் தான் உங்கள் உடல் வாசம் ; ஆனாலும் என்றுமே
"அலங்காரில்"தான் உங்கள் மன வாசம்
இன்று பிறந்த நாள் காணும் சதீஷ் அவர்களே!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
Dear Sathish sir,
Wish you many more many more happy returns may God bestow you good health, wealth, prosperity, peace
தமிழின் முதல் அகன்றதிரை திரைப்படம் எப்படி திரை உலக சித்தரின் இராஜ இராஜ சோழனோ, அதே போல மலையாள திரை உலகின் முதல் அகன்றதிரை திரைப்படம் "தச்சோளி அம்பு". மலையாள திரை உலகம் அவர்களுடைய முதல் அகன்றதிரை திரைப்படமாம் தச்சோளி அம்புவை தயாரிக்க திரு.அப்பச்சன் முடிவுசெய்தவுடன், அதில் "தச்சோளி" என்ற வரலாற்றின் மாபெரும் வீரனாக விளங்கிய "தச்சோளி உதயனன்" என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நமது நடிகர் திலகத்தை தவிர வேறு ஒருவர் இருக்க முடியாது என்பதை உணர்ந்து நமது நடிகர் திலகத்தை அணுகினர். கேரளாவை பொறுத்த வரை, கேரளா மக்களிடம் நமது நடிகர் திலகம் மிகுந்த செல்வாக்கும் மரியாதையையும் பெற்றிருந்தார். கேரளா மக்களிடையே தமிழ் நடிகர்களில் அதிக செல்வாக்கும் மரியாதையையும் பெற்றவர் நமது நடிகர் திலகம் ஆவர். நடிகர் திலகமும் அவர்கள் விருபத்திர்கினைந்து அதில் நடித்தார். இந்த திரைபடத்தில் கேரளா திரை உலகினர் நம்முடைய நடிகர் திலகத்திற்கு "டைட்டில்" முதலில் அவர் பெயர் இடுவதில் இருந்து முதல் காட்சியிலிருந்தே நடிகர் திலகம் தோன்றுவது போல காட்சி அமைக்க செய்தனர்.
நடிகர் திலகம் தோன்றும் காட்சிகள் எல்லாம் அருமையாக படமாக்கபடிருக்கும். இதில் நடிகர் திலகம் "சுருள் வாள்" கொண்டு சண்டையிடும் காட்சி அனல் பறக்கும் !
http://www.youtube.com/watch?v=hA7g0qHBn-g
நடிகர்திலகம் ശിവാജി ഗനെസാൻ நடித்த தச்சோளி அம்பு இடுகை நன்று.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-20
விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.
அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.
தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.
தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.
ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.
ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.
மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.
இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.
----To be continued .
நடிகர் திலகம் மீது அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் இந்த நடிகர் திலகம் 83ர்ட் பிறந்த நாள் விழா காட்சியினை சமர்பிக்கிறேன்...
இதில் திரு.ஏவிஎம் சரவணன் அவர்களும் SRM பல்கலை கழக நிறுவனர் திரு.பாரிவேந்தர் aka PACHAIMUTHU அவர்களும், பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள், நடிகர் திலகத்தை பற்றிய தங்கள் எண்ண அலைகளை பகிர்ந்துகொள்கிறார்கள். இது வெறும் உதட்டில் இருந்து வரும் வார்த்தைகள் அல்ல. உள்ளத்தில் இருந்து வருபவை.
சாதுர்யம், ஆதிக்ய வெறிகொண்டு அடக்கியாளும் திறன், தலைகனம், திமிர், மற்றும் இதுபோல பல பயமுறுத்தும் குணங்களால் நம் நடிகர் திலகம் இவர்களை பேச வைக்கவில்லை.
அன்பு, தன்னடக்கம், பாசம், பண்பு, மற்றவர்களை மதிக்கும் பாங்கு, தொழில் மீது கொண்ட அசாத்ய நம்பிக்கை, பக்தி, மற்றும் பல நல்ல குணங்களால் இவர்களது அன்பை சம்பாதித்தார்.!
நடிகனாக மட்டுமே அவர் இருந்திருந்தால் இன்று நானோ நீங்களோ இதை எழுதிக்கொண்டு இருக்கவும் மாட்டோம், படித்துகொண்டு இருக்கவும் மாட்டோம்...
திரைப்படங்களையே பார்த்துகொண்டிருக்கும் கண்களுக்கும், திரை சம்பந்தமான விஷயங்களையே இவ்வளவு நாள் கேட்டுகொண்டிருந்த காதுகளுக்கும், சிறிது மாறுதலுக்காக இங்கே இடுகை செய்கிறேன் !
http://www.youtube.com/watch?v=ZvJIX3nOmHw
மனித சமுதாயத்துக்கும், மாணவ சமுதாயத்திற்கும், நடிகர் திலகத்தின் வாழ்கை ஒரு சாராம்சமாக பாடப்புத்தகத்தில் வரவேண்டும் என்று கூறும் திரு.பச்சைமுத்து அவர்கள்.....கேளுங்கள் ! சத்தியமான வார்த்தைகள் தொடர்கிறது .......
http://www.youtube.com/watch?feature...e2S5Fo5xw&NR=1
நடிகர் திலகம் அவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள அத்துணை உயிர்களுக்கும் ஓர் அரிய கண்ணொளி -
பேராசிரியர் திரு. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் நம் நடிகர் திலகத்தை பற்றிய ஆராய்ச்சியில் சிவாஜி - ஒரு பண்பாட்டியர் குறிப்பு என்ற இந்த கண்ணொளியை சமர்பித்திரிகிறார்.
நடிகர் திலகம் திரைத்துறையில் இல்லையெனில் வறண்ட ஒரு திரைஉலகமாக தான் வறட்சியுடன் இருந்திருக்கும் என்கிறார் !
கற்றவர்கள், கல்லாதவர்கள், உள்ளவர்கள், இல்லாதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், ஆஸ்திகர்கள், நாஸ்திகர்கள் மற்றும் இது போன்ற அனைவருக்கும் நம் நடிகர் திலகம் ஒரு ஆச்சர்யமும், அதிசயமும், விந்தையும், விநோதமும், சந்தோஷமும், ஆர்வமும் ஒருங்கே பெற்ற ஓர் ஆராய்ச்சி வடிவமாகும் !
http://www.youtube.com/watch?v=M3w9ii5GlxA
http://i1146.photobucket.com/albums/...psbb08075d.jpg
மேலே உள்ள படத்தில் காணப் படுபவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பல படங்களுக்கும், தேவர் பிலிம்ஸ், இயக்குநர் ப. நீலகண்டன் இவர்களிடம் ஆஸ்தான அளவிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரு ராமமூர்த்தி அவர்கள். தமிழ்த் திரையுலகில் ஈடு இணையற்ற ஒளிப்பதிவு மேதை எனப் போற்றப் படுபவர். வசதிக்குறைவான அந்தக் கால கட்டத்திலேயே ACTION SEQUENCES எடுப்பதில் நிகரற்று விளங்கியவர். நடிகர் திலகத்தின் படங்களில் இவர் பணியாற்றியிருக்கிறார். அதில் குறிப்பிடத் தக்கது கர்ணன். நேற்று - 03.05.2013 தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய பேட்டி மறு ஒளிபரப்பு செய்யப் பட்டது. இந்தப் பேட்டியில் இவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் புதியதாகும்.
கர்ணன் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி கிட்டத்தட்ட 960 அடிகளுக்கு எடுக்க திட்டமிடப் பட்டதாம். ஒரு யூனிட் பிலிம் 1000 அடிகளாம். அது ஒரு வட்ட டிராலி ஷாட். மிகவும் குறுகிய காலத்தில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். அதைப் பயன்படுத்துவதிலும் பல நிர்ப்பந்தங்கள். பிலிம் பற்றாக்குறை வேறு. டப்பிங் இல்லாத காரணத்தால் வசனத்தையும் ஒரே டேக்கில் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம். குரலும் தெளிவாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். இப்படி பல்வேறு நிர்ப்பந்தங்களையும் சந்தித்து அந்த காட்சியை படம் பிடித்து முடிக்க நடிகர் திலகம் எடுத்துக் கொண்டது ...
JUST ONE TAKE AND ONE SHOT ...
என்ன மனிதரய்யா இவர் தெய்வப் பிறவி என்றால் இவரன்றோ அதற்கு பொருத்தமானவர்.. தயாரிப்பாளர் தொழில் நுட்பக் கலைஞர்கள் சக கலைஞர்கள் என்று ஒரு லைட்பாயின் கஷ்டத்தைக் கூட உணர்ந்து யாருக்கும் சிரமம் வைக்காமல் தன் தொழிலை தெய்வமாய் மதித்து பணியாற்றிய இவருக்கு ஈடுண்டோ.
இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி அவர்கள் சொன்ன இன்னொரு விஷயம் ...
நடிகர் திலகம் உருக்கமாக நடிக்கும் போது ஒளிப்பதிவு செய்வது மிகவும் சிரமம் என்றார். உணர்ச்சி வசப்படாமல் பணியாற்றுவது கடினம் என்றும், ஒளிப்பதிவு செய்யும் போது தம்முடைய கண்களில் கசியும் கண்ணீர் அந்த காமிரா லென்ஸையே மறைத்து விடுமாம்.
...
சரி அந்தக் காட்சி எது ...
கர்ணன் தன் தாயை சந்திக்கும் மிகப் பிரபலமான காட்சியே.
நீங்கள் சொன்னவுடன் என் கண்களில் அப்படியே அந்த காட்சி வந்து நின்றுவிட்டது...நடிகர்திலகம் அந்த கேமரா சுழலதொடங்கியதிலிருந்து முடியும் வரை...மிக நேர்த்தியாக அந்த "rotation ஐ, மிகவும் லாவகமாக கையாண்டிருப்பார். வேறு நடிகர்கள் நடித்திருந்தால் இந்தளவு நேர்த்தி, லாவகம் நிறைந்திருகுமா என்பது சந்தேகமே. ஒரு இடத்தில் அவர் தன் மார்பிலே போர்த்தியிருக்கும் தன் தாயின் பட்டுசேலை வழுக்கி விழுவதுபோல சரியும் ...நடிகர் திலகம் ஒரு 10 டிகிரி காமேரவிர்க்கு தக்க திரும்பும்போதே அதை வசனம் பேசிகொண்டே மிகவும் யதார்த்தமாக அந்த பட்டு சேலையை அதன் ஒரிஜினல் position உக்கு அட்ஜஸ்ட் செய்துவிடுவார் பாருங்கள்....அடேயப்பா ! ஒரு நடிகன் நீண்ட வசனம் பேசுகிறார் அதுவும் ஒரே டேக் இல் எடுக்க எல்லவரும் தயாரானநிலையில் அந்த சேலை சரிந்து விழபோகிறது என்று தெரிந்து அதை காட்சிக்கு பங்கம் விளைவிக்காமல், அதே நேரம் பார்பவர்களுக்கு அது அப்பட்டமாக தெரியாமல்இருக்க அதை லாவகமாக சரிசெய்து அதுவும் வசனம் பேசும்போதே எதெல்லாம் செய்கிறார் என்றால்.....அவர் சித்தர் அன்றி வேறு யார் ? நிச்சயம் அவர் திரை உலகின் முழு முதற் கடவுள் கணேச மூர்த்தி தான் ! ஐயமில்லை !
இதுவன்றோ சாதனை - வசந்த மாளிகை திருநெல்வேலியில் வெள்ளி மற்றும் சனிகிழமை (அதாவது இன்று) ஆறு காட்சிகள் முடிய ருபாய் 87,635 வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.
புதிய திரைப்படங்கள் அரங்கு நிறைவு காண தவறி, வசந்தமாளிகை இன்று மாலை காட்சி அரங்கு நிறைவு மற்றும் இரவு காட்சி கிட்டத்தட்ட அரங்கு நிறைவு ஏற்பட்டிருப்பதாக ஊராட்சி ஒன்றிய செயலாளரும் என் இனிய நண்பருமான திரு.குருமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
நாளை மாலை ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம் மற்றும் சீருடை இளைஞர் அணி சார்பாக வழங்கபோவதாக அறிவித்துள்ளார்..!
"தொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இந்த சக்கரம் சுற்றுதடா ....ஹா...ஹா....அதில் நான் சகரவர்தியடா ஹே...ஹே....! " - நிரூபித்துவிட்டீர்களே மறுபடியம் ஒருமுறை நடிகர் திலகமே !
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-21
விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.
விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.
இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.
கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.
இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).
குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.
அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.
ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...
ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...
பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..
சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....
இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?
------To be continued .(தற்போதைய உத்தம புத்திரன் பதிவுகள் 318-3175, 321-3204, 326- 3251, 326-3259)
இந்த மாதிரி தொடர் எழுத்துக்களை எப்படி index பண்ணி தொகுத்து படிப்பவர்கள் வேலையை சுலபமாக்குவது?திரியிலிருந்து voluntary retirement வாங்கிவிட்ட முரளியோ அல்லது ராகவேந்தர் சாரோ விளக்கலாம்.
படிப்பவர்கள் வசதிக்காக-----(இந்தியாவின் ஒரே உலக அதிசயம்- பாகம் 1 இலிருந்து பாகம் 17 வரை.)
பக்கம் - பதிவு எண்
235 2348
235 2349
236 2356
236 2357
236 2358
236 2359
236 2360
237 2364
241 2403
243 2422
245 2441
266 2658
269 2681
271 2704
271 2708
285 2848
விரைவில் "பண்பாளன்""பராக்ரமசாலி" பெற்ற தாய் மட்டும் அல்ல பெறாத தாயின் உத்தமபுத்திரன் பார்த்திபன் பற்றிய எனது கருத்துக்கள் !
உங்களுடைய நடை நடிகர் திலகத்தின் பல அழகான நடைகளை போல அருமையாக உள்ளது திரு.கோபால் அவர்களே.
அவர் கால்களாலும் நடந்தார் நீங்கள் சொற்களால் மட்டும் நடக்கிறீர்கள்.
உங்கள் அழகு நடைக்கு இந்த அழகு பாடல் பரிசு கோபால் சார் !
http://www.youtube.com/watch?v=q21g7kBJLnA
நண்பர்கள் என்றுமே உதவி என்றால் ஓடி வருவார்கள். அதில் எந்த வித தயக்கமோ சந்தேகமோ இல்லை. அதற்காக இப்படியா..Quote:
voluntary retirement வாங்கிவிட்ட முரளியோ அல்லது ராகவேந்தர் சாரோ விளக்கலாம்.
டியர் கோபால்,
I didn't expect such an arrogant attitude in you. I am very deeply hurt. Your excuse or sorry can not compensate. You are not mending your ways and continue to enjoy hurting other people.
I don't know how Murali Sir takes it. But I can't take it lightly.
இது சுயமரியாதையை பாதிக்கும் விதமான கருத்து. தங்களிடமிருந்து இப்படிப்பட்ட அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவில்லை.
பல முறை கூறியும் தாங்கள் தங்களுடைய பாணியை - மற்றவர்களை கேவலமாக எழுதுவது, மனம் புண்படும் படி எழுதுவது போன்றவற்றை விடுவதாக தெரியவில்லை.
ஆணவமும் மமதையும் ஒரு மனிதனை எங்கு கொண்டு போய் விடும் என்பதை காலம் தான் உணர்த்தும்.
தங்களுக்காக அனைத்துப் பதிவுகளின் இணைப்புகளையும் நான் ஒன்று விடாமல் இங்கே பதியும் வகையில் ஒழுங்கு படுத்தி வைத்துள்ளேன். இன்னும் சில பதிவுகள் - அதாவது 25 பதிவுகள் வந்தவுடன் மொத்தமாக அந்த இணைப்புகளை கொடுக்கலாம், என்று தாங்கள் கேட்கும் முன்னரே அதற்கான தொகுப்பினை செய்துள்ளேன்.
தங்களுடைய இந்த மாதிரியான தாக்குதல்களும் கிண்டல்களும் எகத்தாளமும் ...
சே....
திரு ராகவேந்திரன் சார்
நானும் இப்பொழுதுதான் பார்த்தேன் திரு.கோபால் சார் பதிவை.
நிச்சயம் அப்படி எழுதியது தவறுதான். மாற்றுக்கருத்து இல்லை. அவர் நய்யாண்டி செய்வதற்கு எழுதினாரா அல்லது தமாஷுக்கு எழுதினாரா அல்லது சீண்டுவதற்கு எழுதினாரா என்று தெரியவில்லை. எதற்கு எழுதினாலும் இந்த இரண்டு வார்த்தைகள் தவிர்த்திருக்கவேண்டிய வார்த்தைகளாகும்.
இனி வரும் காலங்களிலாவது திரு.கோபால் அவர்கள் அஹிம்ச வழியை பின்பற்றுவார் என்று நம்புவோம் !
கட்டபொம்மன் வசனம் தான் நினைவிற்கு வருகிறது " நல்லவர்கள் நினைப்பதொன்று தான் நடப்பதில்லை இந்த நாட்டிலே !
திரியில் ரொம்ப நாள் வராததால் திரியிலிருந்து voluntary retirement என்று கிண்டலடித்ததில் arrogance எங்கே வந்தது என்று விளக்குவீர்களா? முரளிக்கு வக்கீலாக உங்களை நியமித்தாரா? அவர் வந்து பேசட்டும்.சாதாரண நகைச்சுவைக்கும் திமிர்தனத்துக்குமுள்ள வித்யாசம் எல்லோருக்கும் புரியும் சார். சாக்கு எங்கே என்று ஏன் அலைகிறீர்கள்?(டும் டும் டும் பட விவேக் ,மாதவனுக்கு against ஆக இப்படித்தான் மணிவண்ணனிடம் build up கொடுப்பார்.)
தொகுத்ததற்கு மிக்க நன்றி. நண்பர்களை சந்தேகிப்பதையும்,அரசியலையும் விட்டு விடுங்கள் சார். நமக்கு அது ஒத்தே வராது.
இப்படிக்கு தங்களால் மறக்க பட்ட
senior hubber
நிச்சயமாக...நீங்கள் கேட்டு அது இல்லாமலா ? இதோ உங்களுக்காக !
ஸ்டைல் சக்ரவர்த்தியின் மௌனம் கலைகிறது ....மயக்கம் தெளிகிறது !
http://www.youtube.com/watch?v=n7Qzz_2u-bQ
Mr Gopal,
Excellent analysis of Mr Vikraman.
Mr SRS,
awaiting your anlaysis on Mr Parthibhan
Mr Raghavendra Sir & Mr Vasudevan Sir,
After a long struggle today only with great difficulty I am entering our
God's Thread. So much has happened for the past 15 days with great
contributios from all the fans.
Regards
என்னை போல் ஒருவன்- சில நினைவுகள்.(நன்றி சௌரி ராஜன் சார்.)
நான் சென்னை வந்த புதிதில், அனைத்து புது படங்களையும் ஜெமினி colour lab இல் ரிலீஸ் முன்பே பார்த்து விடுவேன். அப்படி நான் நான் பார்த்த படங்களில் ஒன்று என்னை போல் ஒருவன். 1975 இல் Re -Recording செய்யாமல் ஒரு முறையும், செய்த பிறகு இரு முறைகளும் எல்லா projection இலும் பார்த்தேன்.
ராமண்ணா ,இந்த படம் வளரும் போது ,நிறைய சிறு படங்கள் எடுத்து , இந்த படம் லேபில் இருந்து clear பண்ண முடியாத சங்கடத்தில் மாட்டியிருந்தார். (ஸ்ரீதர் வைர நெஞ்சத்தின் போது இதே தவறை செய்தார்.அவளுக்கென்று ஓர் மனம்,அலைகள், ஒ மஞ்சு என்று). பிறகு இந்த படம் 1978 இல் வந்து நன்றாகவே ஓடியது.(லேப் ரிலீஸ் செய்த ஞாபகம். சென்னையிலும்,வெளியூர் களிலும் வேறு வேறு தினங்களில்) இது வந்திருக்க வேண்டிய 1973/1974 இல் வந்திருந்தால் வெள்ளி விழா கண்டு block buster ஆகியிருக்கும்.
சிவாஜி-ராமண்ணா இணைவில் வந்த மிக சிறந்த படம் இதுதான். படு விறுவிறுப்பான neat &clean திரைகதை. சக்தி கிருஷ்ணசாமி வசனங்கள் படு crisp .ராமண்ணா மிக நன்றாக இயக்கி இருப்பார். ஹிட் பாடல்கள். சாரதா,உஷாநந்தினி,ஆலம் (படு cute pair .வேலாலே,மௌனம் இரண்டுமே என் favourite .)மற்றவர் காணாத ஒரு கட் ஆன பாடலை நான் லேப் projection இல் பார்த்தேன். அது கிளைமாக்ஸ் காட்சியில் உஷா நந்தினியுடன் இழு இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் என்கிற ஹிப்பி டான்ஸ்.
சிவாஜியின் ஆரம்ப காட்சிகள் அமர்க்களம். அம்மாவிற்கு மருந்து,சிகிச்சை பற்றி துச்சமாக பேசி shock குடுப்பார்.(இமேஜ் ஆவது மண்ணாவது, பாத்திரம்தான் எங்கள் தலைவருக்கு).சாரதாவுடன் ஒரு duet வைத்திருக்கலாம்.நல்ல ஜோடி.
ஆள் மாறாட்ட காட்சிகளில் அத கள காமெடி. மாறு வேடங்கள் ரொம்ப (christian father ,electrician ) sensible ஆக கையாள பட்டிருக்கும்.சிவாஜி படு casual ஆக இரண்டு ரோல்களை பண்ணியிருப்பார். பொழுது போக்கு படத்திற்கு உரிய relaxed நடிப்பு. பிரமாதமாய் வந்திருக்கும். ரொம்ப நாள் தயாரிப்பினால் உருவத்தில் கொஞ்ச continuity மிஸ் ஆகும் சில காட்சிகளில் மட்டும். ஆனால் நடிப்பில் consistency காட்டி NT குறை தெரியாமல் கவனித்து கொள்வார். அனாவசிய காமெடி track கிடையாது.படம் படு சுறுசுறுப்பு. ரெண்டு பார்ட் கிளைமாக்ஸ் -ரெண்டுமே விறு விறுப்பு .
என்னுடைய favourite entertainer .
மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரையாக மலர்ந்து வரும் இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரின் முந்தைய பாகங்களுக்கான இணைப்புகள். இவையனைத்தும் அந்தந்த பதிவுகளுக்கான இணைப்புகள்.
பாகம் – 1
பாகம் – 2
பாகம் – 3
பாகம் – 4
பாகம் – 5
பாகம் – 6
பாகம் – 7
பாகம் – 8
பாகம் – 9
பாகம் – 10
பாகம் – 11
பாகம் – 12
பாகம் – 13
பாகம் – 14
பாகம் – 15
பாகம் – 16
பாகம் – 17
பாகம் – 18
பாகம் – 19
பாகம் - 20
பாகம் - 21
கோபால் சாரின் பட்டியலில் விட்டுப் போன 14, 18, 19, 20, 21ம் பதிவுகளும் இணைக்கப் பட்டுள்ளன. இனி வரும் பதிவுகள் ஒவ்வொரு பத்து பதிவுகள் முடிந்த பின்னும் இணைக்கப் படும்.
டியர் சித்தூர் வாசுதேவன் சார்
நீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் வருகை. இனி தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம்.
கோபால் அவர்களே,
எடுத்துக்கொண்ட ஒரு காரியத்தை அதன் வீரியம் கெடாமல் முன்னெடுத்து செல்ல வேண்டிய நேரத்தில் வழக்கம் போல் உங்கள் விளையாட்டுத்தனம் குறுக்கே வந்து எழுதும் நோக்கத்தை சிதைப்பதை நீங்கள் உணரவில்லையா?
நான் திரியிலிருந்தும் சரி வேறு இடங்களிருந்தும் சரி விருப்ப ஒய்வு எதுவும் பெறவில்லை. இதை உங்களிடம் அலைபேசியிலும் சொன்னேன். நீங்கள் ஒரு தவத்தில் ஈடுபட்டிருக்கீறீர்கள். அதாவது ஹாலிவுட் மற்றும் பல மேலை நாட்டு திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் எவ்வாறு தங்கள் நடிப்பை வரையறுத்துக் கொள்கிறார்கள் அந்த பாணிகள் ஒவ்வொன்றையும் எப்படி வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஒன்று சேர்த்து இவை அனைத்தையும் நடிகர் திலகம் எப்படி கையாண்டார் என்பதை அழகாக தொகுத்து வருகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் பல விஷயங்களும் எனக்கு புதிய செய்திகள் நீங்கள் எழுதுவதைப் பற்றி ஓரளவிற்கு அறிந்தவர் ராகவேந்தர் சார் அவர்கள்.அதனால் அவர் சில inputs கொடுக்கிறார். நண்பர் சாரதியும் நானும் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒன்று குறிப்பிட்டார் அதாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிகர் திலகம் எப்படி நடித்தார் என்பதை எங்களால் எழுத முடியும். ஆனால் அவை எந்த school of acting கீழ் வருகிறது என்பது பற்றியெல்லாம் எங்களுக்கு point out பண்ண தெரியாது. அதனால்தான் உங்கள் எழுத்துக்களுக்கு ஒரு இடையூறாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் பதிவுகள் இடவில்லை.
நீங்கள் சில நேரத்தில் விளையாட்டாக சில விஷயங்களை கையாள்வதுண்டு. அது சிலரை காயப்படுத்தி விடுகிறது என்பதை தாங்கள் உணர மறுக்கிறீர்கள். இன்று எழுதியதும் அப்படிதான். நான் மீண்டும் பதிவுகள் இட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி எழுதினீர்கள் என்றால் என் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கலாமே! தேவையில்லாமல் ராகவேந்தர் சார் பெயரை எழுத வேண்டிய அவசியமில்லையே!
எனக்காக ஒன்றை குறிப்பிடுகிறீர்கள் என்றால் என்னை பற்றி மட்டும் சொல்லவும். என்னை சீண்டுவதற்காக இந்த திரியில் வேறு யாரும் எழுதி புகழ் பெறுவதை நான் விரும்ப மாட்டேன் என்று கூட சொன்னீர்கள். அதை கூட நான் ஆமாம் என்று சிரித்துக் கொண்டேதானே பதிலளித்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்!
இனிமேலாவது இந்த மாதிரி விஷயங்களில் யார் பெயரையும் குறிப்பிடாமல் எழுதுங்கள் எனபதே என் விருப்பம்! நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள பணி இணையதளத்தில் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்கப் போவது உறுதி! அதிலிருந்து கவனம் சிதறி விடாமல் இலக்கை அடைய முன்னேறுங்கள்! அட்வான்ஸ் வாழ்த்துகள்!
அன்புடன்
கோபால்,
இரண்டு நாட்களுக்கு முன் உங்கள் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த போது தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் பாடல் தொகுப்புகள் ஒளிப்பரப்பட்டுக் கொண்டிருந்தது! அவற்றில் விக்ரமனும் விஜய்யும் இடம் பெற்றார்கள்.
காத்திருப்பான் கமலக்கண்ணன் பாடல்! அங்கே பார்த்திபன் அமுதாவிற்காக காத்துக் கொண்டிருக்க இங்கே மகாராணியின் முன் மாட்டிக் கொண்ட அமுதா தன தோழி (ராகினி) கிருஷ்ணர் வேடம் புனைய ராதையாக ஆடும் காட்சி! அந்த காட்சியில் விக்ரமனின் உடல் மொழி! காதல் கனிவு பாசம் போன்ற எந்த பாசாங்கும் இல்லாமல் ஆதி மனிதனின் உடல் சார்ந்த வேட்கையை ஆசனத்தில் அமரும் முறையிலே உணர்த்தி விடும் உடல் மொழி! நான் உங்களிடம் குறிப்பிட்ட ஷாட் அதாவது நம்பியாரின் காதோடு [அவர் தன தாய் மாமன் என்ற உறவு முறையெல்லாம் மறந்து] ஒரு காமம் சார்ந்த என்று நமக்கு தோன்றும் விதம் அடிக்கும் கமண்ட், பத்மினி அலட்சியமாக சுழன்றாட இரண்டு கைகளையும் நாற்காலியின் கைபிடிகளை சற்று அழுத்தமாக பிடித்து காட்டும் gesture, நான்கே நிமிட பாடலில் விக்ரமன் என்ற அந்த கேரக்டர்-ஐ அவர் establish செய்யும் அழகு!
இந்த nuances என்று சொல்லப்படுகிற நடிப்பின் நுண்ணியல்புகளை நீங்கள் எழுதும் விதம் பிரமாதமாக அமைந்திருக்கிறது. அதிலும் இன்றைய பதிவு! தொடருங்கள்.
இரணடாவது காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் பாடல் காட்சி! அதில் spoiled child விஜய் தன மனம் கவர் பெண்ணோடு ஆடி பாடும் காட்சி. பாடலின் இறுதியில் இங்கும் அந்த கதாபாத்திரத்திற்கு சற்றே காமம் தலை தூக்க அவர் நகத்தை கடித்துக் கொண்டே [la Sridhar?] நாயகியை பார்ப்பது, வேறு புறம் பார்ப்பது என்று மாறி மாறி செய்து விட்டு நாயகியை தூக்கி கொண்டு செல்லும் அந்த காட்சி! எத்துனை வித்தியாசம்!
செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட ஒரு செல்வந்தர் வீட்டு பிள்ளையின் அத்துணை மானரிசங்களையும் வெளிப்படுத்தும் பாங்கு! அந்த convent educated language! வில்லன் ஆட்களால் கட்டி வைக்கப்படும்போது கூட thirstyயாக இருக்குடா! ஐஸ் வாட்டர் கொடுங்கடா என கேட்கும் அந்த பாத்திர தன்மை! அவரால் மட்டுமே முடிந்த ஒன்றல்லவா!
அது போல கண்ணன் பாத்திரத்தை எப்படி ஒரு மிருகமாகவே வார்தெடுத்திருக்கிறார் என்பதை நேர்த்தியாக எழுதியிருந்தீர்கள்! குறிப்பாக தன்னுடன் அன்பாக பேசும் நிம்மியின் கனிவை காதல் என்று தவறாக நினைத்து டாக்டரிடம் காதல் பற்றி சந்தேகம் கேட்க டாக்டர் சொல்லும் ஒதெல்லோ டெஸ்டிமோனா காதல் கதையை கேட்டு விட்டு உணர்ச்சி மிகுதியால் டாக்டரின் கையை நொறுக்குவது போல் அழுந்தப் பிடிப்பது போன்ற உடல் மொழியிலே அந்த பாத்திரத்தை எப்படி பார்வையாளனின் மனதில் பதிய வைக்கிறார்!
சங்கர் எப்படி தன் பணத்தினாலும் வெற்றிகரமான தொழிலதிபர் என்ற அந்தஸ்தினாலும் தன் மேல் எல்லையற்ற அன்பு செலுத்தும் மனைவியினாலும் தன் குறையை அதாவது தன் முக விகாரம் அவன் வாழ்க்கையை பாதிக்காத வகையில் அமைத்துக் கொள்கிறான் என்ற புதிய கோணத்தை சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.
சங்கர் டாக்டர் ராஜூவை சந்திக்க வரும் காட்சியைப் பற்றியும் சிலாகித்து சொல்லியிருக்கிறீர்கள்! காமிராவிற்கு பதிலாக அவர் கண்களே டாக்டர் படியிறங்கி வருகிறார் என்பதை பார்வையாளனுக்கு உணர்த்தி விடும் எனபதை சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்! ஆனால் இதை அவர் 9 வருடங்களுக்கு முன்பே செய்து விட்டார். 1960-ல் வந்த விடிவெள்ளி படத்தில் கொடுத்துப் பார் பார் உண்மை அன்பை பாடல் காட்சியில் இறுதி சரணத்திற்கு முன்னால் வைக்கோல் போர் அமைக்கப்பட்டிருக்கும் பரண் மீது ஏணிப்படி வழியாக சரோஜாதேவி ஏறி செல்கிறார் எனபதை நடிகர் திலகத்தின் கண்கள் வழியாகவே ஸ்ரீதரும் வின்சென்டும் பார்வையாளன் உணரும் வண்ணம் காட்டியிருப்பார்கள்.
இன்னும் இப்படி பலவற்றையும் எழுதலாம்! நேரம் கிடைக்கும்போது அதை செய்வோம்!
அன்புடன்
வாசு அவர்களே,
உத்தம புத்திரன் விளம்பரம் அருமை! நான் ஒரே நாளில் வெளிவந்த இரண்டு விளம்பரங்களையும் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் பார்த்ததில்லை. அதை பதிவிட்டதற்கு நன்றிகள் பல!
என்னுடைய நினைவு சரியாக இருக்குமென்றால் இந்த விளம்பரம் 1956-ல் வெளிவந்தது என்று படித்திருக்கிறேன். அமர தீபம் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்த பின் வீனஸ் பிக்சர்ஸ் தங்கள் அடுத்தப் படத்தையும் அதே combination-ல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து படத்திற்கான கதையை தேடியபோது முன்னாட்களில் PU சின்னப்பா அவர்கள் நடிப்பில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான உத்தம புத்திரன் படத்தை மீண்டும் எடுத்தால் என்ன என்று யோசித்து அதை செயல்படுத்தும் நேரத்தில்தான் அதே கதையை எம்.ஜி.ஆர் அவர்களும் எடுக்க இருக்கிறார் என்ற செய்தி வந்து விளம்பரமும் வெளிவந்தது என்று சொல்வார்கள். பின் அவர் அந்த படத்தை drop செய்துவிட்டு நாடோடி மன்னன் எடுத்தார்.
இதுதான் நடந்த உண்மையே தவிர ஸ்ரீதர் முதலில் அவரை வைத்து எடுக்க இருந்தார் என்பதெல்லாம் தவறான தகவல்கள். காரணம் ஸ்ரீதர் அன்று வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு பங்குதாரரே தவிர இந்தப் படத்தை பொறுத்தவரை வசனம் மட்டுமே அவர் பொறுப்பில் இருந்தது.இயக்குனர் பிரகாஷ் ராவ் அவர்கள்.
நண்பர் srs எழுப்பிய ஒரு சந்தேகத்திற்கும் ஒரு பதில். நடிகர் திலகம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது 1957-ல். அது முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது 1957 தீபாவளிக்கு வெளிவந்த அம்பிகாபதி படத்தில்தான்.இந்த விளம்பரமோ 1956-ல் வெளிவந்தது. ஆகவேதான் நடிகர் திலகம் என்ற அடைமொழி சேர்க்கப்படவில்லை.
வாசு அவர்களே!
உங்கள் தாம்பத்தியம் பதிவை பற்றியும் குறிப்பிட வேண்டும்! மிக சிறப்பாக அதை கையாண்டிருந்தீர்கள். கருடா சௌக்கியமா, காவல் தெய்வம், துணை போன்ற தங்கள் முத்திரை பதித்த பதிவுகளில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.படத்தை பற்றிய positive எண்ணங்கள் உருவாக்குவதில் மீண்டும் தங்களுக்கு வெற்றி. தொடருங்கள்!
அன்புடன்
மிக்க நன்றி முரளி. மிக்க நன்றி ராகவேந்தர் சார். நாராயண, நாராயண, நன்மையிலேயே முடிந்தது.
"சிவாஜி" என்பதுதான் அவருக்கு கிடைத்ததிலேயே உன்னத பட்டம். அது அவர் முதல் படத்திலிருந்தே பயன் படுத்த பட்டு வருகிறது. அது ஒரு உன்னத நடிப்பின் brand name ஆகவே 1952 முதல் பயன் படுத்த பட்டு வருகிறது. இன்றும் கூட ஏதாவது உணர்ச்சியை வெளியிட முயல்வோரை பார்த்து, இவர் பெரிய சிவாஜி என்று சொல்லும் வகை உள்ளது. இது என் நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை அப்படியே.
ஆறு காட்சிகளில் பல படக்களின் ஒரு வார வசூலை வசந்த மாளிகை முறியடித்து திருநெல்வேலியில், இதே வசந்த மாளிகை மதுரை சரஸ்வதி திரை அரங்கில் ஒரே நாளில் பல பழைய படக்களின் ஒரு வார வசூலை முறியடித்து, அப்போதும் இப்போதும் இனி எப்போதும் வசூல் சக்கரவர்த்தி நிலை நாட்டும் நடிகர் திலகமே உன்னை வணக்குகிறோம்