-
6th May 2013, 01:02 AM
#11
கோபால் அவர்களே,
எடுத்துக்கொண்ட ஒரு காரியத்தை அதன் வீரியம் கெடாமல் முன்னெடுத்து செல்ல வேண்டிய நேரத்தில் வழக்கம் போல் உங்கள் விளையாட்டுத்தனம் குறுக்கே வந்து எழுதும் நோக்கத்தை சிதைப்பதை நீங்கள் உணரவில்லையா?
நான் திரியிலிருந்தும் சரி வேறு இடங்களிருந்தும் சரி விருப்ப ஒய்வு எதுவும் பெறவில்லை. இதை உங்களிடம் அலைபேசியிலும் சொன்னேன். நீங்கள் ஒரு தவத்தில் ஈடுபட்டிருக்கீறீர்கள். அதாவது ஹாலிவுட் மற்றும் பல மேலை நாட்டு திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் எவ்வாறு தங்கள் நடிப்பை வரையறுத்துக் கொள்கிறார்கள் அந்த பாணிகள் ஒவ்வொன்றையும் எப்படி வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஒன்று சேர்த்து இவை அனைத்தையும் நடிகர் திலகம் எப்படி கையாண்டார் என்பதை அழகாக தொகுத்து வருகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் பல விஷயங்களும் எனக்கு புதிய செய்திகள் நீங்கள் எழுதுவதைப் பற்றி ஓரளவிற்கு அறிந்தவர் ராகவேந்தர் சார் அவர்கள்.அதனால் அவர் சில inputs கொடுக்கிறார். நண்பர் சாரதியும் நானும் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒன்று குறிப்பிட்டார் அதாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிகர் திலகம் எப்படி நடித்தார் என்பதை எங்களால் எழுத முடியும். ஆனால் அவை எந்த school of acting கீழ் வருகிறது என்பது பற்றியெல்லாம் எங்களுக்கு point out பண்ண தெரியாது. அதனால்தான் உங்கள் எழுத்துக்களுக்கு ஒரு இடையூறாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் பதிவுகள் இடவில்லை.
நீங்கள் சில நேரத்தில் விளையாட்டாக சில விஷயங்களை கையாள்வதுண்டு. அது சிலரை காயப்படுத்தி விடுகிறது என்பதை தாங்கள் உணர மறுக்கிறீர்கள். இன்று எழுதியதும் அப்படிதான். நான் மீண்டும் பதிவுகள் இட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி எழுதினீர்கள் என்றால் என் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கலாமே! தேவையில்லாமல் ராகவேந்தர் சார் பெயரை எழுத வேண்டிய அவசியமில்லையே!
எனக்காக ஒன்றை குறிப்பிடுகிறீர்கள் என்றால் என்னை பற்றி மட்டும் சொல்லவும். என்னை சீண்டுவதற்காக இந்த திரியில் வேறு யாரும் எழுதி புகழ் பெறுவதை நான் விரும்ப மாட்டேன் என்று கூட சொன்னீர்கள். அதை கூட நான் ஆமாம் என்று சிரித்துக் கொண்டேதானே பதிலளித்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்!
இனிமேலாவது இந்த மாதிரி விஷயங்களில் யார் பெயரையும் குறிப்பிடாமல் எழுதுங்கள் எனபதே என் விருப்பம்! நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள பணி இணையதளத்தில் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்கப் போவது உறுதி! அதிலிருந்து கவனம் சிதறி விடாமல் இலக்கை அடைய முன்னேறுங்கள்! அட்வான்ஸ் வாழ்த்துகள்!
அன்புடன்
-
6th May 2013 01:02 AM
# ADS
Circuit advertisement
Bookmarks