குறும்பு , தண்ணீரை எங்கு பார்த்தாலும் ஒதுங்குவதால் தான் சி.காவின் பதிவை ஒதுக்கி விட்டீரா பாருங்கள் குழந்தை கோவித்து கொண்டுவிட்டது ..
Printable View
ராகவ் ஜி . நீங்கள் தான் பழைய படங்களில் வரும் மாமனார் போல வீட்டில் இடியே விழுந்தாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே போல பொங்கும் பூம்புனலை சலிக்காமல் அள்ளி வழங்கி கொண்டிருக்கிறீர்கள் .. நெஞ்சார்ந்த நன்றிகள் ...
இதோ சங்கமா சங்கமாவின் தெலுங்கு வடிவம்
http://www.youtube.com/watch?v=tPouwijp6_Y
பொங்கும் பூம்புனல்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் தமிழ் உச்சரிப்பிற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் அடியேனும் அடக்கம். வேறு சில பாடகர்கள் மொழியை சிதைக்கும் போதெல்லாம் சீர்காழியார் பாடியிருக்கலாமே என மனதில் தோன்றும். அப்போது நம் மனதிற்குள் இப்படியெல்லாம் எண்ணங்கள் தோன்றும் என்று முன்கூட்டியே யூகித்ததைப் போல இந்தப் பாடல் வரிகள் அமைந்திருப்பதைப் பாருங்கள்..
தமிழ்க்கலைதனில் ஊறிய களையெடுப்பாய்...
பாடலின் பல்லவியே இந்த அளவிற்கு தைரியமாக உள்ளது வியப்பைத் தருகிறதல்லவா..
என்னதான் முடிவு திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் என் நினைவு தெரிந்த நாள் முதல் இது வரை ஒரு முறை கூட வானொலியிலோ கல்யாணம் கச்சேரி போன்ற பொது நிகழ்ச்சிகளிலோ கேட்ட நினைவு இல்லை. முதன் முறை படத்தில் பார்த்த போது கேட்டது பார்த்த வாய்ப்பிற்குப் பிறகு இப்போது தான் டிவிடியில் மூலமாக கிடைத்தது.
நீங்களும் பாட்டைக் கேளுங்கள் பாருங்கள்..
http://www.youtube.com/watch?v=ungtfrjVcCw
மாமனார்கள் மாறுவதில்லை.. எவ்வளவு தலைமுறைகளானாலும் ராஜேஷ் சார்...
வாசு ஜி , கிருஷ்ணா ஜி, மற்றும் கோபால் ஜி
உங்களை மயக்க இரு பாடல்கள் இதோ
கண்டசாலாவின் இசையில் கன்னட தெலுங்கு மொழியில் ஒரே பாடல்
தெலுங்கில் பந்திபொட்டு (என்.டி.ஆர் - கிருஷ்ணகுமாரி)
கன்னடத்தில் வீரகேசரி (ராஜ்குமார்- லீலாவதி மிகவும் ஹிட் ஜோடி)
ஊஹலு குச குட லாடே
மெல்லுசிரே சவி கானா
http://www.youtube.com/watch?v=-Ry8xeDKnRY
http://www.youtube.com/watch?v=q8Qi0Ua3ZXI
பொங்கும் பூம்புனல்
கணக்குப் பார்த்து காதல் வந்ததா காதல் வந்ததால் கணக்கு வந்ததா... விடை தெரியாத பல கேள்விகளில் இதுவும் அடக்கம்..
இங்கே ஒரு காதல் ஜோடி அசலையும் வட்டியையும் வசூலிப்பதைப் பற்றி ஆராய்வதைப் பாருங்கள்...
அதுவும் எங்கே...குளியலறையில்...
ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்குமாம்...
கோபால் சார்... இது உங்களுக்காக...
மறக்க முடியுமா படத்திலிருந்து மெல்லிசை மன்னர் டி.கே.ஆரின் கைவண்ணத்தில்...
http://www.youtube.com/watch?v=OZ3iOYKjDro
அய்யய்யோ! அப்படி இல்லை சி.க.சார். உங்களுக்கு எப்போதோ பாராட்டு பதில் படித்து ரசித்து ரெடி செய்து விட்டேன். அதற்குள் டிராக் மாறியதால் கொஞ்சம் லேட். ரொம்ப ரசித்துப் படித்தேன்
அதுவும் அந்த 3 கூறுக்கு (ஒன்னு ஓசி வேற) பத்து ரூவா டிக்கெட்டுக்கு போதுமா கிழவிக்கு? வெத்திலை பாக்குக்கு நம்ம சி.க. தருவாரோ! அருமை சி.க.சார்.
இப்படித்தான் சார் நல்ல பதிவுகள் சிலராலே அடிபட்டுப் போகும். ஆனா நம்ம திரியில் அப்படி இல்ல. கவனிக்கப்பட்டு ரசிக்கப்பட்டு விடும்.
நேற்று இரவு கூட உங்கள் பதிவைப் படிச்சுட்டு பதில் போட்டேனே!
நன்றி ராகவேந்திரர் சார்..கோமல் சுவாமி நாதன் எழுதிய நாடகத்தை வெகு அழகாகப் படமாக்கியிருப்பார் பாலச்சந்தர்.. வசனம்,, திருநெல்வேலி பாஷை வசனப்பயிற்சி கொடுத்திருந்தவர் நாயர்.கே.ராமன்..அவரும் நடித்திருப்பார் முக்கிய கதாபாத்திரமாக..
பருவத்தோடு அது அதுக்கும் நேரம் வரணும்..
பொண்ணப்பார்த்து மயங்கும் ஆளு வருவதெப்போது.. ம்ம் முதன் முதலில் கேட்கிறேன் ராகவேந்தர் சார்.. நன்றி..ஆமா யாராக்கும் அந்தக் கன்னுக்குட்டி:)
நூறு ஜன்ம பலசி…சங்கமா.. மொழி தெரியாவிட்டாலும் பாடல் நன்னாயிட்டு இருக்கு ராஜேஷ்..ஆமாம் யாராக்கும் ஆர்த்தி..
கோபம் இல்லை ராஜேஷ்....நேற்று மாலை எழுத நினைத்து இரவில் தான் எழுத முடிந்தது.. ஒழுங்காக வந்திருக்கிறதா இல்லையா என்று ஒரு சம்சயம் அது தான்..
பொங்கும் பூம்புனல்
இதுவும் மறக்க முடியுமா திரைப்படத்திலிருந்து தான். பல்லவி சற்று சிரமமான நடையில் அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். மிகவும் தேர்ந்த பாடகர்களால் மட்டுமே பாட முடியும். சற்று தடுமாறினாலும் ஸ்ருதி பிசகி நாராசமாகி விடும் வகையில் பல்லவி அமைந்திருப்பது வியப்பிற்குரியது. பாடகர் திலகம் என்ற பெயருக்கேற்ப டி.எம்.எஸ். அவர்களால் மட்டுமே பாட முடியும் என்பது இப்பாட்டில் நிரூபித்திருக்கிறார்.
எட்டி எட்டி ஓடும் போது கொதிக்குது நெஞ்சம்..
http://www.youtube.com/watch?v=xzWwqOWv68c
அந்த நடந்ததடி ஈ..ஈ சமீபத்தில் இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கையில் அப்படியே மெய் மறந்து சுசீலாம்மாவை தொலைபேசியில் அழைத்து அந்த நடந்ததடிக்கே சர்க்கரை போட வேண்டும் என்று கூறினேன் .. மாமாவின் இசையில் மிகவும் வித்தியாசமான பாடல்
http://www.youtube.com/watch?v=aSp13YmPbA4
யா வாசு சார் நன்றி..அதைப்பற்றி எழுத நினைத்து விட்டுப் போய் விட்டது.. :) இங்கே மஸ்கட் கொஞ்சம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிற்து.கொஞ்சம் மெல்லிய பூங்காற்று குளிர் கலந்து வீசுகிறது சூழ்லுக்கு ஏற்ற ஒரு பாடல் தாருங்கள் பார்க்கலாம்
மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விடும் நேரம் தேவ மயக்கம்.. என் மனசிலோடும் பாட்டு இது கேட்டோ..
ராஜேஷ் கன்னடப் பாட்டுக்கு மலையாள பதிலாக்கும்..
பொங்கும் பூம்புனல்
எம்.ஜி.ஆருக்கு பாடல்கள் அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்.. அதுவும் மெல்லிசை மன்னர் கேட்கவே வேண்டாம்... இவர்கள் இருவரின் இணையில் வந்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை... இவற்றைக் கேட்டால் கொஞ்ச நேரம் என்ன .. ஜன்மம் முழுவதுமே நம்மை நாம் மறந்து விடுவோம்.. அப்படி ஒரு பாடல் சிரித்து வாழ வேண்டும் படத்தில் இடம் பெற்ற கொஞ்ச நேரம் நம்மை மறந்தேன்..
இந்த மாதிரியான கஷ்டமான பாடல்கள் ஜானகி அவர்களுக்கு ஜூஜூபி... சும்மா ஊதித் தள்ளி விடுவார்.. இந்தப் பாடலை ஒரு லட்சம் முறை கேட்டாலும் சலிக்காது...
மெல்லிசை மன்னர் ... சொல்லவே வேண்டாம்.. அதுவும் இரண்டாம் சரணத்திற்கு முந்நதைய பிஜிஎம்.... திடீரென்று இசை நின்று மழை சொட்டும் ஓசை மட்டும் கேட்கும்.. பின்னர் வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே என ஜானகி ஆரம்பிக்கும் போது நாமே மழையில் நனைந்து உடல் சிலிர்ப்பது போல் ஒரு உணர்வு நம்மை ஆட்கொள்ளும்..
http://www.inbaminge.com/t/s/Sirithu%20Vaazha%20Vendum/
கொஞ்ச நேரம் வெகு அழகியபாடல்..செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக தந்திட வந்தேன் காணிக்கையாக..ம்ம் எனக்குப் பசிக்குது ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடப் போறேன் :)
தோட்டத்திலே உதிர்ந்த மலரை காற்று கடவுள் சந்நிதியில் சேர்ப்பது போலே...
எங்கோ கேட்ட மாதிரி உள்ளதா.. ஆம் கடவுள் தந்த இருமலர்கள் பாட்டுத் தான்.. கிட்டத்தட்ட அதே வரிகள் ... அதே இரு பெண்களின் மனக் கஷ்டங்கள்... இங்கேயும்..
பத்து மாத பந்தம் திரைப்படத்திலிருந்து பூமாலை ஒன்று .. பாடல்
ஜிக்கி பி.சுசீலா குரல்களில்..
சங்கர் கணேஷ் இசையில்...
அங்கே கே.ஆர்.விஜயா பத்மினி
இங்கே சரோஜா தேவி ராஜஸ்ரீ
http://www.youtube.com/watch?v=aYZX6n5rwi0
மழைவருது மழை வருது குடைகொண்டுவா மானே உன் மாராப்பிலே.. வாவ் எனக்கு மிகவும்பிடித்த பாடல்களில் ஒன்று.. வீடியோ இப்போது தான் பார்க்கிறேன்..இது ராஜா கையை வச்சாவா (கெளஸ்ஸோட காதில் இருக்கும் குட்டி தங்க தோசைக்கல் அழகு :)//
isai arasi and isai arakki -
http://youtu.be/jlGlD41oxJg
கொஞ்ச நேரத்திற்கு சற்றும் சளைக்காத பாடல் .. இசையரசியின் இசை ராஜாங்கம்...
வாசு ஜி ஸ்பெஷல்
http://www.youtube.com/watch?v=stNUCAwX_A0
ஓகே நண்பர்களே... சற்றே இடைவெளி .... மீண்டும் சந்திப்போம்... அது வரையில்...
http://www.youtube.com/watch?v=-EcDiwC5zbU
கொஞ்ச நேரம்..க்கு தாங்க்ஸ் எஸ்வி சார்..
ஆனாலும்சரோஜாதேவி ஏவி எம் ராஜனுக்காக இவ்ளோ வருத்தப்பட்டிருக்க வேண்டியதில்லை :)
எஸ்.வி ஜி .. அருமை அருமை மலருக்கு தென்றல் பகையானால்.. 1000 லைக்குகள்...
கோபால் ஜி,வாசு ஜி
ராமமூர்த்தியின் இசையில் இசையரசியின் தேனினும் இனிய குரலும் பொன்னுசாமியின் ஹம்மிங்கும் என்னை என்றும் மயக்கும் பாடல்
அதுவும் இசையரசி கண்களை மூடு பைங்கிளியே பைங்கிளியே நாம் மெய் மறக்கத்தானே செய்வோம்
http://www.youtube.com/watch?v=Z9ObJpV-Fmc
ராஜேஷ் சார்!
வழக்கத்தைவிட அதிகமாக முத்துமுத்தான இசையரசியின் பாடல்கள். யாருக்கு நன்றி நவில்வது? நிச்சயம் நம் திரி நண்பர்களுக்கல்ல:)
என்ன ஆயிற்று காலையில். ஒரே மஜாவா! சும்மா புகுந்து விளையாடுகிறீர்கள். சாரதா சாந்த அழகு. அந்தக் கால சுஜாதா. வாணிஸ்ரீ, காஞ்சனா, அலாவுதீனும் அற்புத விளக்கும் ஜெயபாரதி, மிக அழகாக ராஜஸ்ரீ என்று போட்டு ஒரே அதம்?
சமரசம் உலாவும் திரி
நம் ஹப்பில் காணா
சமரசம் உலாவும் திரி.
நல்ல படங்களுக்கு நன்றி!
ராஜேஷ் சார்/ வினோத் சார்/சி.க.சார்
இன்னொரு இசையரசியின் நெஞ்சைத் தழுவும் பாடல்
'தண்ணீர் எனும் கண்ணாடி
தழுவுது முன்னாடி
பெண்ணின் உடலும் பேதை மனமும்
துள்ளுது சுகத்தில் தள்ளாடி தள்ளாடி தள்ளாடி'
என்ன இன்னைக்குத் தண்ணீர் தண்ணீர் என்றே வருகிறது?. எல்லாம் இந்த சி.க.ஜியைச் சொல்லணும்.:)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=S_dOJtHLp8w#t=17 0
ஆரம்ப ஹம்மிங் மட்டுமே போதும்
http://www.youtube.com/watch?v=TBSWiFyGeVQ
PADAGAR THILAGAM + ISAI ARASI - RAIN SONG
http://youtu.be/baVfueJXQvU
இதை விடவா செக்ஸி வாய்ஸ் , மற்றும் வேறு பட்ட பாடும் முறை உலகில் உண்டு?
https://www.youtube.com/watch?v=bvmxghzvaoE
இதையே தான் நான் கொடுத்த வீடியோவில் சரத் சொல்லுவார்.. கள்ளத்தனமில்லாத ரெண்டரிங் என்று ..