நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதன்முதலில் "கட்டபொம்ம"னை, திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள்தான் தனது 'ஜெமினி ஸ்டூடியோஸ்' பட நிறுவனம் சார்பாக, ஒரு முழுநீள திரைப்படமாக தயாரிக்க முடிவுசெய்து, 1953-ம் ஆண்டு அதற்கான விளம்பரத்தையும், அறிவிப்பினையும் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதில் 'கட்டபொம்ம'னாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் குறிப்பிடப்படவில்லை. அந்த அபூர்வ ஆவணங்கள் அன்புள்ளங்களின் பார்வைக்கு:
ஜெமினியின் 'கட்டபொம்மன்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 5.11.1953 (தீபாவளித் திருநாள்)
http://i1110.photobucket.com/albums/...GEDC5771-1.jpg
ஜெமினியின் 'கட்டபொம்மன்' அறிவிப்பு : ஆனந்த விகடன் : 8.11.1953
http://i1110.photobucket.com/albums/...GEDC5772-1.jpg
அதன் பின்னர் "கட்டபொம்ம"னுக்கான படத்தயாரிப்பு பணிகளும் 'ஜெமினி'யில் மும்முரமாக நடைபெறவில்லை. நாடக உலக ஜாம்பவான்களான டி.கே.எஸ்.சகோதரர்கள் தங்களது நாடக மன்றம் சார்பில் 'கட்டபொம்ம'னை, "முதல் முழக்கம்" என்ற பெயரில் நாடகமாக நடத்தினர். ஆரம்பத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்நாடகம், தொடர்ந்து பொதுமக்களிடம் போதிய வரவேற்பு பெற முடியாமல் போனதால் அவர்களின் "முதல் முழக்கம்" நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. இடையிடையே 'கட்டபொம்மன்' கனவு சிலருக்கும் வந்து அது பலிக்காமலும் போனது. அதன் பின்னர் 'கட்டபொம்மன்' சரிதையை, நமது நடிகர் திலகம் 'கட்டபொம்ம'னாக உருமாறி, 'வீரபாண்டிய கட்டபொம்மன்" என்ற பெயரில், தனது 'சிவாஜி நாடக மன்றம்' சார்பில், நாடகமாக உருவாக்கி 28.8.1957 புதனன்று, சேலம் கண்காட்சி கலையரங்கில் அரங்கேற்றம் செய்தார். "வீரபாண்டிய கட்டபொம்ம'னுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு. அவ்வகையில் 'கட்டபொம்மன்' கலையுலகில் கடந்து வந்த பாதையை விவரிக்கும் ஒரு கட்டுரை:
'கட்டபொம்மன்' கலையுலகில் கடந்து வந்த பாதை
வரலாற்று ஆவணம் : தென்றல் திரை : 5.10.1957
(சிவாஜியின் "கட்டபொம்மன்" நாடகச் சிறப்பிதழ்)
http://i1110.photobucket.com/albums/...GEDC5785-1.jpg
"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படம் வெளியாகும் வரை இந்நாடகம் 100 முறை மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்து ஓடிமுடிந்தபின்பும் ஒரு 12 முறை நடத்தப்பட்டது. ஆக, இந்த 112 முறையில், இந்நாடகத்தின் அபார வசூல் மூலம் நமது நடிகர் திலகம் பல்வேறு ஸ்தாபனங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் பல்வேறு நற்செயல்களுக்கும் அள்ளி அளித்துள்ள நன்கொடை மட்டும் ரூபாய் முப்பத்து இரண்டு லட்சம். இத்தொகை இன்றைய பொருளாதார மதிப்பீட்டில் பற்பல கோடிகளுக்குச் சமம்.
1957 முதல் மிகமிக வெற்றிகரமாக நடைபெற்று வந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை அதே பெயரில் திரைப்படமாக தயாரிக்க, நடிகர் திலகத்தின் ஆப்த நண்பரான 'பத்மினி பிக்சர்ஸ்' திரு.பி.ஆர்.பந்துலு அவர்கள் விருப்பம் தெரிவித்தார். இதற்கு வாசன் அவர்களும், நடிகர் திலகமும் சம்மதம் தெரிவிக்கவே, பி.ஆர். பந்துலுவின் 'பத்மினி பிக்சர்ஸ்' தயாரிப்பாக, நமது தேசிய திலகம் 'கட்டபொம்மு'வாக வாழ்ந்து காட்டிய "வீரபாண்டிய கட்டபொம்மன்", திரைப்படமாக வெளிவந்து வெள்ளிவிழா கண்டது. 1960-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்ட இத்திரைப்படம், நமது நடிகர் திலகத்துக்கு ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் என்ற மிகப்பெரிய விருதைப் பெற்றுத் தந்தது. திரை இசைத்துறையில் சிறந்த இசையமைப்பாளராக திரை இசை மாமேதை ஜி.ராமநாதன் அவர்களும் விருதுக்கு உரியவரானார். நடிகர் திலகத்தின் ஈடு-இணையில்லா நடிப்பாற்றலுக்கு என்றென்றும் கட்டியம் கூறும் காலத்தை வென்ற காவியமாக மறுவெளியீடுகளிலும் இக்காவியம் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய பெருமைகளுக்குரிய "வீரபாண்டிய கட்டபொம்மன்" வண்ணத் திரைக்காவியத்தின் துவக்க விழா பற்றி:
"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவியத் துவக்க விழா
வரலாற்று ஆவணம் : இந்தியன் மூவி நியூஸ் (IMN Singapore) : 1957
http://i1110.photobucket.com/albums/...GEDC5783-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5784-1.jpg
கட்டபொம்மன் களைகட்டுவார்...
பக்தியுடன்,
பம்மலார்.