Originally Posted by
kaliaperumal vinayagam
உரிமைக்குரல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்..உரிமைக்குரல் ஸ்ரீதர் படம் என்றாலும் பெரும்பாலான காட்சிகள் எம்ஜிஆரின் ஆலோசனைப்படியே எடுக்கப்பட்டது..உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டுமானால், விழியே கதை எழுது பாடல்...முதலில் இந்த பாடல் முழுவதும் ஆற்றங்கரையிலே சோகப்பாடலாக எடுக்க தீர்மானிக்கப்பட்டது..அப்போது மக்கள் திலகம் குறுக்கிட்டு இதில் ஒரு கனவு காட்சியை சேருங்கள் என்று சொல்லியிருக்கிறார்..ஸ்ரீதர் அவர்களுக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை..வேண்டாமே அப்படியே இருக்கட்டும் என்றார்..ஆனால் தலைவர் அவர்களோ நீங்கள் கனவு சீன் வையுங்கள்..நிச்சயம் நன்றாய் இருக்கும்..அனைவரையும் இழுக்கும் என்றார்...ஸ்ரீதர் அரை மனதோடு ஒத்துக்கொண்டார்..மேலும் அந்த கனவு காட்சியில் தேவ தூதர்கள் போல இறக்கை வைக்க சொல்லவும் ஸ்ரீதருக்கு மிகவும் பயமாக போய்விட்டது..எம்ஜிஆர் வற்புறுத்தலால் அதுவும் நிறைவேறியது..படம் ரிலீஸ் ஆகி அந்த பாடலுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்ததும்தான்..எம்ஜிஆரின் மீது ஸ்ரீதருக்கு மேலும் மதிப்பு கூடியது..இவர் இயக்குனருக்கே இயக்குனர் என புகழ்ந்தார்...அந்த பாடல் இன்னும் சாகா வரம் பெற்றிருக்கிறது..மேலும் ஒரு தகவல்...பல படங்கள் எடுத்து ஸ்ரீதரின் சித்ராலய நிறுவனம் பெரும் கடனில் சிக்கியபோது, ஹீரோ 72 (பின்னர் வைர நெஞ்சம்) என்ற படத்தை முடிக்க முடியாமல் தவித்தபோது..எம்ஜிஆரை வைத்து படம் எடுங்கள் உங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்று யோசனை சொன்னவர் ஹிந்தி நடிகர் ராஜேந்திர குமார்..தலைவரும் ஆபத்தாண்டவனாக ஸ்ரீதருக்கு குறுகிய காலத்திலே ஒரு பெரிய வெற்றி படத்தை முடித்து கொடுத்து ஸ்ரீதரின் கடன் சுமையைக் குறைத்து அவர் வாழ்க்கையில் விளக்கேற்றி ஒளிவிளக்கானார்.
நன்றி..மாலை மலர்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...