ராகவ் ஜி... Thanks for T.M.S. version of Venkittu ..
அப்படியே சுசீலாம்மா வெர்ஷனையும் கொடுங்க ஜி..
ஆடை துவைக்க ஆள் கிடைத்தானே.. கிடைத்தானே..
அதுதான் இனிமேல் பிரம்ம்மாதம் பிரம்மாதம்...
Printable View
ராகவ் ஜி... Thanks for T.M.S. version of Venkittu ..
அப்படியே சுசீலாம்மா வெர்ஷனையும் கொடுங்க ஜி..
ஆடை துவைக்க ஆள் கிடைத்தானே.. கிடைத்தானே..
அதுதான் இனிமேல் பிரம்ம்மாதம் பிரம்மாதம்...
மது சுசீலா version ready யாக இல்லை. கூடிய விரைவில் தேடித் தருகிறேன்.
பொங்கும் பூம்புனல்
பொதுவாக ஒருவரைத் திட்டும் போது நீயெல்லாம் ஒரு மனுஷனா என்று கேட்போம்.. ஆனால் காதலர்கள் இருவர் ஒருவருக்கொருவர் தங்களைத் தாமே இவ்வாறு பாடுவதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா..
அப்படித்தான் துவங்குகிறது இப்பாடல்.. பாதியில் இருவரும் கருத்தொருமித்து நானும் ஒரு ஜீவனே எனதும் ஒரு ஹ்ருதயமே என கூறுவதைக் கேளுங்கள்..
1956ம் ஆண்டு வெளிவந்த மறுமலர்ச்சி திரைப்படத்திலிருந்து..
http://www.inbaminge.com/t/m/Marumalarchi%20OLD/
பொங்கும் பூம்புனல்
பராசக்தி வெளிவந்த 1952ம் ஆண்டின் திரைப்படப் பாடல்கள் எப்படியிருக்கும் என்று லேசாக ஒரு எண்ணம் நம்மில் பலருக்கு ஒரு கட்டத்தில் தோன்றியிருக்கும்..
முதன்முதலாக குரலில் yardling கொண்டு வந்தவர் கிஷோர் குமார் என்பார்கள். ஆனால் உண்மையில் 1952ல் சந்திரபாபு அவர்கள் சின்னதுரை படத்தில் இடம் பெற்ற போடா ராஜா பொடி நடையாக என்ற இந்தப் பாடலிலேயே அதனைச் செய்து விட்டார்...
சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்...கேளுங்கள்...
பாடலிலுள்ள கருத்தையும் கவனியுங்கள்..
http://www.inbaminge.com/t/c/Chinnadurai/
பொங்கும் பூம்புனல்
http://www.inbaminge.com/t/j/Jameendhar/
ஆஹா.. வெறும் கிடாரை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பாடலை இசையமைத்தால் அது நிச்சயம் மெலோடியாகத் தான் இருக்கும். புதுமையாகத் தான் இருக்கும். இதுவும் 1952லேயே நடந்துள்ளது. ஜமீன்தார் படத்தில் ஏ.எம்.ராஜா ஜிக்கி டூயட் பாடலான வானில் நிலாவுமே உலாவுதே... இந்தப் பாடல் கேட்கும் பொழுதெல்லாம் பரவசமூட்டும் பாடல்.. தாள இசைக்கருவிகள் ஏதுமின்றி முழுப்பாடலையும் கிடாரை மட்டுமே வைத்து தந்திருப்பது ஆஹா...ஓஹோ.. பேஷ் பேஷ் என நம்மை ரசிக்க வைக்கிறது.
கேளுங்கள்..
பொங்கும் பூம்புனல்
சக்ஸஸ் சக்ஸஸ்.. இந்த வார்த்தைகளுடன் தொடங்கிய ஒரு கலைஞனின் வாழ்க்கை அதை நிரூபித்தும் விட்டது... 1952ல் பராசக்தியில் தொடங்கிய நடிகர் திலகத்தின் சக்ஸஸ், இறுதி வரை அப்படியே தொடர்ந்தது.
அந்த சக்ஸஸ் ஒரு பாடல் முழுதுமே ஒலித்ததும் 1952ல் தான்... கல்யாணி திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலும் சூப்பர் ஹிட். இதில் டக்டக்டக் என்ற பாடலும் மிகப் பிரபலம். சக்ஸஸ் பாடல் மிகவும் பிரபலமானது என கேள்விப் பட்டுள்ளேன். யாராவது ஏதாவது கேட்டால் வரும் பதில் இந்த சக்ஸஸ் பாட்டாகத் தான் அந்தக் காலத்தில் இருக்குமாம்.
நீங்களும் கேளுங்களேன்.. இன்று மட்டுமின்றி என்றுமே நீங்கள் சக்ஸஸைப் பெற வேண்டும். அதற்கு இப்பாடல் உறுதுணையாக இருக்கட்டும்.
http://www.inbaminge.com/t/k/Kalyani%201952/
அநைத்துப் பாடல்களையும் கேட்டுப் பாருங்கள். மிகவும் விரும்புவீர்கள்.
பொங்கும் பூம்புனல்
சி.ஆர். சுப்பராமன்... இன்னும் நீண்ட நாட்கள் இருந்திருக்கக் கூடாதா என ஏங்க வைத்த இசையமைப்பாளர்.. வித்தியாசமான மெட்டுக்கள் ... இசைக் கருவிகளின் பிரயோகங்கள்.. இவரிடம் மெல்லிசை மன்னர் பெற்ற பயிற்சி இன்று வரை இவரை அசைக்க முடியாத உயரத்தில் இடத்தில் வைத்திருக்கிறது என்பதே சி.ஆர்.எஸ். சிறப்பிற்கு சான்று.
இவர் இசையமைத்த இந்த தர்மதேவதா படத்தில் இடம் பெற்ற லம்பாடி லம்பாடி என்ற இப்பாடல் வித்தியாசமாக அமைக்கப் பட்டிருக்கிறது. தாளம் திடீரென்று வேகமெடுக்கிறது. எப்போது என்பது நாமே தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் அந்த அளவிற்கு smooth transitionல் வேகமெடுக்கிறது இப்பாடல். ஜிக்கியின் குரலில் இப்பாடலைக் கேட்கும் பொழுது நாம் இந்த வித்தியாசத்தை நன்றாக உணர்வோம்.
http://www.inbaminge.com/t/d/Dharma%20Devatha/
TO DAY'S PIC & SONG
http://i61.tinypic.com/2j65s78.jpg
http://youtu.be/6xgzRMWtw08
பொங்கும் பூம்புனல்
1952ல் வெளிவந்த காதல் திரைப்படத்தில் கண்டசாலா பானுமதி பாடிய இப்பாடல் சிலோன் ரேடியோவின் மிக விருப்பமான பாடல்களின் பட்டியலில் அடிக்கடி பல நேயர்களுக்காக இடம் பெறும்..
ஜீவிதமெல்லாம் ஸ்வீட்டாக செய்யும் பிரேம டிங்டாங் பெல்.. என் ப்ரியராணி நைட்டிங்கேல்... (அது யாரைச் சொல்கிறார் என்பது வேறு விஷயம்.. அதற்குள் நாம் போக வேண்டாம்)..
பாட்டு சூப்பர் ...
http://www.inbaminge.com/t/k/Kaadhal/
ராகவ் ஜி , இன்றைக்கு நீங்கள் தரும் பாடல்கள் எல்லாமே அருமையோ அருமை .
என் இனிய ரசிகன் வாசுவே
இருமலரில் என் படத்தை போட்டுவிட்டு பலரின் உமிழ் நீர் சுரப்பதற்கு காரணமான உன்னை ...
மேரா நாம் ஜோக்கரை எப்படி மறந்தாய் வாசு ?
பலரின் தூக்கத்தை கெடுத்த உன்னை ......
http://youtu.be/fb2jefcNcTI
விண்ணிலிருந்து
பத்மினி
https://anandsp1.files.wordpress.com...avendraru1.jpg
இன்று மஹான் ஸ்ரீராகவேந்திரரின் ஆராதனை தினம். 700 ஆண்டுகள் வரை அவருடைய ஆன்மா நம்மையெல்லாம் சுற்றி வந்து கொண்டே இருக்கும் என ஒரு நம்பிக்கை. இன்றை மதுரகானத்தில் மஹான் ராகவேந்திரர் இயற்றிய ஒரே பாடலான இந்து எனகே கோவிந்தா பாடலை பகிர்ந்து கொள்வதில் பக்தி கொள்கிறேன். மந்த்ராலய மஹாத்மியே என்ற கன்னடப் படத்தில் ராஜ்குமார் ராகவேந்திரராகவே வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் பி.பி.எஸ் .குரலில் பைரவி ராகத்தில் ராகவேந்திரரின் பாடல் ..
https://www.youtube.com/watch?v=1UdgYts1Sd8
இந்த அழகு நடிகை யாரென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.
ராஜேஷ்ஜி, மதுஜி, ராகவ்ஜி மூவரும் பிளீஸ் 'மூச்' விடப்படாது.
http://cinemachaat.files.wordpress.c...bruhannala.png
N.t. Rama rao
ராகவ் ஜி பக்தி பாடல் போட்ட தாக்கம் எனக்கும்
இதோ
சிவ பக்த மார்க்கண்டேயா என்ற கன்னட படத்தில் எம்.ரங்காரவின் இசையில் இசையரசி இசைத்தது
சிவனு பந்தா கைலாசதிந்தா மனகே பந்தா அம்மா எந்தா ...
அந்த சிவனே கைலாசத்திலிருந்து வந்தான் என்னை அம்மாவென்றழைத்தான் ..
அதுவும் கடைசியில் “ நனகாகே ஆ சிவனே மகுவாகி பந்தா “ என்று முடிக்கும் வரி அருமை ..
shivanu banda-shiva bhaktha markandeya-m.rangarao,ps.mp3
அடுத்த பாடலும் அதே போல்
மஞ்சின ஹனிகளு தும்பிசிதந்தா
https://www.youtube.com/watch?v=B1nelP4sSZQ
கரெக்ட். அவரேதான் மது சார். 'இருவர் உள்ளம்' படத்தில் மெயின் வில்லி இவர்தான். நடிகர் திலகத்தை பிளாக் மெயில் பண்ணுவார். நடிகர் திலகம் கில்லியடிக்கும் மங்கையர் மலர்க் கூட்டத்தில் இவரும் ஒருவர். 'பறவைகள் பலவிதம்' பாடலிலும் வருவார்.
இதோ அவரது நிழற்படம்.
http://cinemachaat.files.wordpress.c...la_urvashi.png
அதே வரிசையில்
ஸ்வாமி ஸ்ரீனிவாசா முத்து வேங்கடேசா (குரல் இசையரசி திரையில் அத்வானி லெக்*ஷ்மி)
https://www.youtube.com/watch?v=vfw-TmI-CZw
நன்ன சந்த்ரா நன்னா கந்தா
https://www.youtube.com/watch?v=VlDQYEiu8Ao
'நர்த்தனசாலா' தெலுங்குப் படத்தில் பிரியதர்ஷினி இந்திரலோகத்தில் ஊர்வசியாக ஆடிப்பாடும் பாடல்.
'நரவரா ஓ குருவரா'....
https://www.youtube.com/watch?featur...&v=oebf-civ8g0
வாசு ஜி..
இதோ உங்களுக்கு ஸ்பெஷல்
ஷரபஞ்சரா - புட்டண்ணா வின் இயக்கத்தில் கல்பனாவின் மிகச்சிறந்த படம் ..
இதோ மன நலமின்றி இருந்து பின் வீடு திரும்பிய நாயகி , சீதா எப்படி 14 ஆண்டுகள் வனவாசத்தில் வாடி பின் நாடு திரும்பினாளோ அதைப்போல் தன் வாழ்க்கையை ஒப்பிட்டு பாடுவதாக அமைந்த பாடல்
இசையரசி இந்த பாடலை பாட வில்லை கல்பனாவின் கதாப்பாத்திரமாகவே மாறியிருப்பார் என்பது உண்மை .
விஜயபாஸ்கரின் இசை.. மனதை என்னவோ செய்யும் .. இதோ
https://www.youtube.com/watch?v=2buMagdSLgA
http://myfunnyreaction.com/media/k2/...cb5b6689b8.jpg
5000 பதிவுகளுக்கான அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்த வினோத் சார், ராஜேஷ்ஜி, அன்பு ராகவேந்திரன் சார், கிருஷ்ணாஜி, கோபால்ஜி மற்றும் வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! தங்கள் ஆதரவு மட்டுமே என் ஆதாரம். நன்றி!
http://www.tollysites.com/Upload/Med.../025048327.jpg
அந்த கண்ணை பாருங்க ராஜேஷ் சார் ,வாசு சார்
ஊமை விழிகள் படத்தில் ரவிச்சந்திரன் சொல்வார்
'கண்கள் ....ஒ கண்கள் '
ராகவேந்திரன் சார்,
இன்று என்ன ஆயிற்று? 'பொங்கும் பூம்புனல்' விஸ்வரூபம் எடுத்து விட்டது. எதை விடுவது எதை எடுப்பது என்று ஏகக் குழப்பம். சத்து சாத்து என்று சாத்தி விட்டீர்கள்.
அதிலும் குறிப்பாக 'ஜீவிதமெல்லாம் ஸ்வீட்டாக செய்யும் பிரேம டிங்டாங் பெல்' அட்டகாசம் போங்கள். என் ஐ பாடிலிருந்து இதுவரை நான் அழிக்காத ஒரு பாடல். அப்போதே தமிழில் கலந்த ஆங்கில வார்த்தைகள்.
http://static.gaana.com/images/album...x175_17231.jpg
'காதல்' படத்தில் எல்லாப் பாடல்களுமே அமரத்துவம் பெற்ற பாடல்கள். பானுமதி அம்மா பாடல்களையெல்லாம் நான் தொடவே இல்லை. அதற்கு தனி இழை ஒன்று தேவைப்படும் நிச்சயமாக.
'பிரேமா' என்று தெலுங்கில் வெளியான இந்தக் காவியம் தமிழில் 'காதல்' ஆனது.
'இன்பக் காவியம் ஆகும் வாழ்வே காதலினாலே
இருமனம் ஒன்றாய் கூடும் நாளிலே'
கண்டசாலாவும், அஷ்டாவதானியும் பாடும் பாடல் வாழ்வில் மறக்கவே முடியாதது.
இரவின் மடியில் கேட்டால் நூறு தூக்க மாத்திரைகள் போட்ட எபெக்ட்.
http://www.inbaminge.com/t/k/Kaadhal/
http://4.bp.blogspot.com/_sY8GKY2sAX...BMuvva1978.jpg
ராஜேஷ் சார்
சிரி சிரி முவ்வ
ஜும்மந்தி நாதம் எதனை தடவை கேட்டாலும் அலுக்காது சார்
பாலா அவர் பங்குகுக்கு கலுக்குவர் சார்
'மாவுரு தேவுடு அம்மா '
'கஜ்ஜ கல்லு மண்டுண்டி '
'ரா ரா திகிரா திகி '
'அந்தனிக்கி அந்தம் எபுதடிபோம்மா '
http://www.youtube.com/watch?v=Wsr7mYPzm8o
உண்மை வாசு சார்
ராகவேந்தர் பின்னி பெடல் எடுத்து விட்டார்
ஒரு வேளை அவர் சொன்ன மாதிரி குருஜி ராகவேந்தர் (இன்று அவர் ஆராதனை ) அவர் உள்ளே புகுந்து விட்டாரோ என்னவோ
http://www.youtube.com/watch?v=mhbbMs0qF9w
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
(அருள்மிகு...ராம நாமம் ஒரு வேதமே)
அவன் தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன்தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்
(ராம நாமம் ஒரு வேதமே)
ஓர் நவமி் அதில், நிலவெலாம் புலர, நினைவெலாம் மலரவே - உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறை எலாம் துதிக்கவே - தயரதனின்
வம்சத்தின் பேர் சொல்ல, வாழ்த்துக்கள் ஊர் சொல்ல - விளங்கிய திருமகனாம்
ஜனகர் மகள் வைதேகி பூச்சூட, வைபோகம் கொண்டாட, திருமணம் புரிந்தவனாம்
மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்
ஸ்ரீ... ராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும் நெஞ்சே...
மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்...
தினம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது
(ராம நாமம் ஒரு வேதமே)
இசைஞானி இளையராஜா போட்ட அக்மார்க் மரபிசைப் பாடல் இது...
சந்தங்கள் கொஞ்சும் பாடல்....மாய மாளவ கெளளை ராகத்தில்...வேகமான பாட்டு.
கூடவே சேர்ந்து பாடினால், இன்னும் இனிக்கும்!
http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9...s320/ragav.jpg
வாலி ஐயா ... சாஷ்டாங்க நமஸ்காரம்
அவன் தான் நாரணன் அவதாரம் அருள் சேர் ஜானகி அவன் தாரம்
அதுவும் ஏசுதாஸ் பாடுவது .. முழு ராமாயணத்தை 5-6 வரிகளில் என்ன அற்புதமாக சொல்லியிருப்பார்
கிருஷ்ணா ஜி . அருமை அருமை
...
விஜியின் கண்கள் படத்திற்கு நன்றி
சிரி சிரி முவ்வாவில் எல்லா பாடல்களுமே அற்புதம் ... அதே வரிசையில் இன்னும் நிறைய உள்ளன மேக சந்தேசம், சுவர்ணகமலம் என .. அடுததடுத்து தூள் கிளப்புவோம்
வினோத் சார்,
ஏன்னா நீங்க எங்கே போறேள்?
ஒன்னு தெரியறது. டாப் கியர்ல போறேள். இன்னைக்கு என்னைத் தூங்க விடாம பண்றதுக்கா? பழிக்குப் பழியா? வச்சுக்குறேன்.:)
கிருஷ்ணா சார்
ராம நாமமே ஒரு அற்புதம்தானே! அதை நீங்கள் இங்களித்து மேலும் பரிமளிக்கச் செய்து விட்டீர்கள். (ஆமாம்... பிள்ளை என்ன காலங் காத்தால பக்தியில் ஆழ்ந்துடுத்து?:)
கிருஷ்ணா சார்,
அந்த ஆட்டுக் கதை. வயிறு புண்ணாகி மட்டன் கடைக்கு ஓடுறேன்.
தலைவர் வந்து சூர்யகலாவைக் கேக்கப் போறாரு.:) நேத்து வேற வீராப்பா எவளவு அடிச்சாலும் தாங்குவோம்னு வேற எழுதிட்டேன். என்ன பண்ணப் போறேனோ தெரியல.:)