உண்மை வாசு சார்
ராகவேந்தர் பின்னி பெடல் எடுத்து விட்டார்
ஒரு வேளை அவர் சொன்ன மாதிரி குருஜி ராகவேந்தர் (இன்று அவர் ஆராதனை ) அவர் உள்ளே புகுந்து விட்டாரோ என்னவோ
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
(அருள்மிகு...ராம நாமம் ஒரு வேதமே)
அவன் தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன்தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்
(ராம நாமம் ஒரு வேதமே)
ஓர் நவமி் அதில், நிலவெலாம் புலர, நினைவெலாம் மலரவே - உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறை எலாம் துதிக்கவே - தயரதனின்
வம்சத்தின் பேர் சொல்ல, வாழ்த்துக்கள் ஊர் சொல்ல - விளங்கிய திருமகனாம்
ஜனகர் மகள் வைதேகி பூச்சூட, வைபோகம் கொண்டாட, திருமணம் புரிந்தவனாம்
மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்
ஸ்ரீ... ராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும் நெஞ்சே...
மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்...
தினம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது
(ராம நாமம் ஒரு வேதமே)
இசைஞானி இளையராஜா போட்ட அக்மார்க் மரபிசைப் பாடல் இது...
சந்தங்கள் கொஞ்சும் பாடல்....மாய மாளவ கெளளை ராகத்தில்...வேகமான பாட்டு.
கூடவே சேர்ந்து பாடினால், இன்னும் இனிக்கும்!

Bookmarks