கூட்டுஸ்தாபனம் மூலம் வெளியான படங்கள் என்றால் என்ன ?
தயவு செய்து விளக்கவும் எஸ்வி சார்
கேட்பதற்கு காரணம் தங்களுக்கு வந்தடைந்த தகவலில் தவறு இருக்க நிறைய வாய்ப்புள்ளது என்பதால்
Printable View
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i57.tinypic.com/2po37ly.jpg
வெற்றியில் சொந்தம் கொண்டாடுவது - இதில் சமரசம் செய்து கொல்லாத தார்மீக உரிமை- எனும் ரீதியில் உரிய வெகுமதி பெறுவது என்பது எப்பொழுதும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., படைப்புகளே!!! என்பது ஊர் அறிந்த, உலகம் அறிந்த உண்மை...இதுதான் மக்கள்திலகம் அவர்களுக்கும், மற்ற பிற நடிகர், நடிகைகளும் உள்ள பெருத்த வித்தியாசம்?!!!!! ஆதலின் mgr., அவர்களின் திரைப்பட வசூல் வெற்றிகளோடு பிற நடிகர்களின் சாதனை என எதனையும் ஒப்பிடுவது மாபெரும் தவறு - என ஆணித்தரமாக, பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறோம்... நன்றி...
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=cbZhWJpYn6Y
திரு ரவி கிரண்
யாழ் நகரில் இருந்த பாரத் எம்ஜிஆர் மன்ற அமைப்பாளர் திரு டேவிட் என்பவர் கடந்த காலத்தில் எங்களுக்கு அனுப்பிய
மக்கள் திலகத்தின் படங்கள் - வசூல் பட்டியல் - இதர நடிகர்களின் படங்கள் பற்றிய செய்திகள் பற்றி இங்கு பதிவிட்டவுடன் உடனே துள்ளி குதித்து கேள்விகளை தொடுத்து அவசர கோலத்தில் ஆத்திரமாக பதிவுகளை வழங்கி இருக்கீறார்கள் .
நிதானம் தேவை நண்பரே
இன்னும் நான் அந்த இலங்கை பட பதிவுகளை முழுமையாக போடவில்லை .
எந்த நிலையிலும் நான் என் பதிவை ஆவணம் என்று கூறவில்லை .எதுவும் பத்திரிகை விளம்பரம் இல்லை .
நான் போடும் பதிவுகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று கூறவில்லை .
உங்களுக்குத்தான் பொறுமை இல்லையே ரவிகிரண்
நீங்கள் மட்டும் 55 கடந்தவராக் இருந்தால் உங்களின் ஆர்வத்திற்கும் , கடினமான உழைப்பிற்கும் , உங்கள் அபிமான
நடிகரின் அன்பை பெற்று நீங்கள் இந்நேரம் அந்த அபிமான நடிகரை வைத்து படம் எடுத்து வெற்றி கண்டு இருப்பீர்கள் .
அல்லது அவரது பெயரால் பத்திரிகை துவங்கி பெரிய ரசிக மன்ற தலைவராக் வளர்ந்திருப்பீர்கள் . எதுவும் இல்லை என்றால் அவரது கட்சியில் பெரிய தலைவராக வலம் வந்து இருப்பீர்கள் . என்ன செய்வது . வயதும் அனுபவமும்
உங்களுக்கு கிடைக்கவில்லையே.
இனிமேலாவது பக்குவமாக நிதானமாக பொறுமையுடன் செயல் படவும் .
இன்று முதல் நீங்கள் சாதாரண ரவிகிரண் இல்லை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் -14 துவக்கியவர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் .மிகவும் பொறுப்புடன் செயல் பட்டு எல்லா புகழும் பெற்று நல்ல பெயர் எடுக்க நாங்கள் வாழ்த்துகிறோம் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு
விரைவில் புதிய மாத இதழ் உங்கள பார்வைக்கு .........
மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்க்கும் உன்னத படைப்பு
புதுமையான வடிவில்
மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றை கண் முன் நிறுத்தும் பக்கங்கள் .
''புதிய பூமி''
http://i61.tinypic.com/2lxw5g3.jpg
வண்ண மாத இதழ் .
விபரங்கள் விரைவில் ........
REPRODUCED- TO OPEN EYES.
நன்றி ... நன்றி ... நன்றி ..
14.4.2013 இன்று மக்கள் திலகத்தின் மகத்தான புகழுக்கு மலர் மாலை சூடிய திருநாள் .
பெங்களூர் - இந்திரா நகர் - கோகுல் ஓட்டலில் இன்று காலை புத்தக வெளியீட்டு விழா இனிதே துவங்கியது .
சிறப்பு அழைப்பாளர்கள்
திரு முனியப்பா - முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் .
திரு சம்பத் - சிமோகா நகர அதிமுக தலைவர் .
திரு மணி - பெங்களூர்
சூலூர் ரோகிணி குமார் -அவர்களின் இனிய மக்கள் திலகத்தின் பாடலுடன் விழா துவங்கியது .
சென்னை பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் உணர்சிகரமான உரையுடன் வரவேற்புரை துவங்கியது .அவரது உரையில் மக்கள் திலகத்தின் மாண்புகளை , பல்வேறு கடந்த கால நிகழ்வுகளை கோர்வையாக தொகுத்து வழங்கினார் .
பின்னர் நூல் ஆசிரியர் திரு பம்மலார் அவர்கள் அறிமுகபடுத்தபட்டார் .
திரு முனியப்பா அவர்கள் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகம் வெளியிட திரு ஞானபிரகாசம் அவர்கள் பெற்று கொண்டார் .
திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் விழா நிகழ்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார் .
பெங்களூர் திரு மோகன் குமார் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது .
விழா செய்தி துளிகள்
விழாவில் கலந்து சிறப்பித்த நண்பர்கள் .
சென்னை - திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார் - திரு லோகநாதன் - திரு நாகராஜ் - திரு பெருமாள் -சேலம் - முருகேசன் - கொளத்தூர் திரு ஜெய்சங்கர்- மாஸ்டர் வள்ளி நாயகம்
திருப்பூர் திரு ரவிச்சந்திரன் - திரு ரோகிணி குமார் - திரு தேனி ராஜாதாசன் - புதுவை கலியபெருமாள் - திருவண்ணாமலை திரு கலீல் - சிமோகா திரு சிவகுமார் மற்றும் பெங்களூர் மக்கள் திலகம் நண்பர்கள் உட்பட சுமார் 60 நண்பர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்ப்பித்தனர் .
மக்கள் திலகம் மலர் மாலை உருவான விதம் பற்றி திரு பம்மலார் அவர்கள் மிக அருமையாக விவரித்து கூறினார் .
உண்மையிலே திரு பம்மலார் அவர்கள் பத்திரிக்கை உலகில் ஒரு புரட்சியினை உருவாக்கி உள்ளார் .
உலக சினிமா புத்தக வரலாற்றில் முதன் முறையாக
டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் . உயர்தர வழ வழப்பு தாளில் a 4 - தாளில் 150 பக்கங்களுடன் பிரமாண்டமான மக்கள் திலகத்தின் 134 படங்களின் அருமையான பட தொகுப்பினை பிரமாதமாக அச்சிட்டு மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் திரு சுவாமிநாதன் .
திலகங்கள் சங்கமம் - சந்திப்பின் மூலம் உருவான இந்த அரிய சாதனை உருவாக மூல கர்த்தர்
திரு சுப்பு அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமை பட்டுள்ளேன் .
நடிகர் திலகத்தின் தீவிர விசுவாசிகளான திரு ராகவேந்திரன் - திரு நெய்வேலி வாசுதேவன்
மற்றும் அலைபேசி மூலமும் , திரி யுலும் வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் நண்பர்கள்
மற்றும் மக்கள் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
மக்கள் திலகத்துக்கு முதல் முறையாக மிகவும் உயர்ந்த விலையில் வெளி வந்த
மக்கள் திலகம் மலர் மாலை விழா முடிவுறும் தருவாயில் விற்பனைக்கு வந்த 100 புத்தகங்களும் விற்று சாதனை படைத்தது .
நிறைவாக
மக்கள் திலகத்தை நேரிலே பார்ப்பது போல பிரமையை உண்டாக்கிய
ஆவணதிலகம் பம்மலார்
பாராட்ட வார்த்தை இல்லை .
இன்று முதல் மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்களில் குடி புகுந்த உயர்ந்த உள்ளம் கொண்ட
பம்மலார் - இனி எங்கள் வீட்டு பிள்ளை பம்மலார் .
மக்கள் திலகம் மலர் மாலை - மதிப்புரை
திரு பம்மலார் சுவாமிநாதன் அவர்கள் முதல் முறையாக மக்கள் திலகத்துக்கு வெளியிட்ட பிரமாண்டமான நூல் .
இதுவரை மக்கள் திலகத்துக்கு பலர் புத்தகங்கள் வெளியிட்டு உள்ளனர் .
திரு பம்மலாரின் அயராத உழைப்பில் இந்த புத்தகம் சிறப்பாக வந்துள்ளது .
சிறப்பு அம்சங்கள்
a 4 அளவில் வந்த முதல் டிஜிட்டல் மலர் .
மக்கள் திலகம் நடித்த 134 படங்களின் சோலோ ஸ்டில்ஸ் மட்டும் இடம் பெற்றுள்ளது .
விளம்பரங்கள் இன்றி எல்லா பக்கமும் படங்களுடன் வந்த முதல் மலர் .[ உலகளவில் சினிமா வரலாற்றில் ஒரு நடிகரின் முழு பட ஆல்பம் ]
காவிய நாயகனுக்கு பம்மலார் சூட்டிய தலையங்கம் - வைர வரிகள் .
மக்கள் திலகம் நடித்த 134 படங்கள் - பட்டியல் அருமை .
இதுவரை காணாத மக்கள் திலகத்தின் அரிய் நிழற் படங்கள்
மக்கள் திலகம் அவர்கள் உலக பட வரலாற்றில் சாதனை
வீரம்
விவேகம்
ஆவேசம்
ஆனந்தம்
சாந்தம்
புன்னகை
வியப்பு
என்ற பலதரப்பட்ட நடிப்பாற்றல் கொண்ட நடிகப்பேரசரின்
விதவிதமான தோற்றங்கள் காண்போரின் நெஞ்சை அள்ளுகிறது .
என்ன ஒரு மயக்கும் வசீகரமான மக்கள் திலகத்தின்
அட்டகாசமான படங்கள் ..
மொத்தத்தில் இந்த புத்தகம் காண்போரின் உள்ளங்களில் மக்கள் திலகம் நேரிலேயே தோன்றி அவர்களுடன் பேசுவது போல் உள்ளது .
எல்லா துறைகளிலும் முதன்மை இடத்தை பிடித்து வரலாற்று சாதனை புரிந்தவர் நம் மக்கள் திலகம் .
திரைப்படத்துறை விட்டு 36 ஆண்டுகள் மற்றும் விண்ணுலகம் சென்று 25 ஆண்டுகள் ஆனபின்னும்
அவரது புகழுக்கு புகழ் மாலை அணிவித்து அழகு பார்த்த
திரு பம்மலாரின் துணிச்சலான முயற்சிக்கு பாராட்ட வார்த்தையில்லை .
அவரது அடுத்த படைப்பான மக்கள் திலகத்தின் பிரமாண்டமான மக்கள் திலகம் தகவல் களஞ்சியம் என்ற புத்தகம் விரைவில் வந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் .
Thanks thiru jai sankar [our hubber]
பம்மலார் சார்,
பார்க்கப் பார்க்க பரவசம் அளிக்கும் அற்புதமான தொகுப்பு தங்களது தமிழ்த்திரைக்களஞ்சியம் மக்கக் திலகம் மலர் மாலை-1 . மக்கள் திலகத்தின் மணிமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல். இதுவரை பார்க்காத பல அரிய படங்கள். எத்தனையோ
புத்தகங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட படங்கள் கூட தரமான டிஜிட்டல் பிரிண்ட்டிங்கில் பார்க்கும் போது புதியதாகப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு புகைப்படத்தினைப் பற்றியும் விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றியது.
முதல் படம் சதிலீலாவதி தொடங்கி கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அனைத்து திரைப்படங்களிலிருந்தும் (இரண்டு படங்கள் தவிர) தலைவரின் தனி புகைப்படங்களைத் தொகுத்து நேர்த்தியாக வழங்கியுள்ள தங்களது கடின உழைப்புக்கும் கலைத்திறனுக்கும் சபாஷ் . அனைத்து புகைப்படங்களிலும் எனது மனதினை மிகவும் கவர்ந்தது பெற்றால் தான் பிள்ளையா படத்தின் புகைப்படம் தான்.
அந்தப் புகைப்படம் ஒன்றே ஆயிரம் கதைகளைச் சொல்கிறது. அடுத்த பக்கத்தைப் புரட்ட மனமே வரவில்லை. அவ்வளவு அழகு. குழந்தையின் அழகோடு போட்டி போடும் மக்கள் திலகத்தின் அழகு. கள்ளமில்லாச் சிரிப்பு . மனதைவிட்டு என்றும் அகலாது. அடுத்து கலங்கரை விளக்கம் படத்தில் அழகோவியத்தின் அருகில் உயிரோவியமாய் மக்கள் திலகம் அமர்ந்திருக்கும் காட்சி. இதுவரை பார்க்காதது. பார்க்கப் பார்க்க பரவசமளிப்பது.
அடுத்து அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் அழகுக் கோலம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புகைப்படத்தினைப் பார்க்கும் பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுத்த தங்களுக்கு பல்லாயிரம் வணக்கங்கள். மலைக்கள்ளனின் மாறுவேடக்காட்சியை புதுப்படத்தின் புகைப்படம் போல பளபளக்கும் மெருகுடன் பதிவிட்டமைக்குப் பாராட்டுகள். நாடோடி மன்னன் திரைப்படம் என்றாலே நமக்கு ஞாபகம் வரும் வழக்கமான புகைப்படங்களுக்கு மாறாக வித்தியாசமான புகைப்படம் தந்தமைக்குப் பாராட்டுக்கள்.
நாடோடி படத்தில் நவரசம் ததும்பும் முகபாவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள். நவரத்தினம் படத்தில் தலைவர் பிலியட்ஸ் விளையாடும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தாழம் நிறைந்த தங்களது தலையங்கம். இப்படி எத்தனை பாராட்டுக்கள் சொன்னாலும் தகும். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
இப்படி ஓர் அருமையான புத்தகத்தை வெளியிட்ட தங்களுக்கும் அற்புதமான புகைப்படங்களை அளித்த திரு.ஞானம் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த வினோத் சார் அவர்களுக்கும், இந்நூல் நல்ல முறையில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற தோன்றாத் துணையாக இருந்த அத்துணை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் நன்றி.
திரு எஸ்வி சார்
உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது வந்தனங்கள் !
என்ன சார் செய்வது யாருக்கு என்ன குடுப்பினை இருக்கிறதோ அவர் அவர்களுக்கு அதுதானே கிடைக்கும்.
எல்லாரும் நடிகர் திலகமோ அல்லது மக்கள் திலகமோ ஆகமுடியும் என்றால் இந்த தமிழகத்தில் பல நடிகர் திலகங்களும் மக்கள் திலகங்களும் இருப்பார்களே !
குருட்டு அதிர்ஷ்டம் கூட எல்லாருக்கும் கிடைபதில்லையே !
எப்போதும் போல உங்களுடைய இந்த பதில்தான் நான் எதிர்பார்த்ததும் சார் ...அதாவது எனது பதிலை பற்றி ...அவசர கதி...ஆத்திரத்துடன்...துள்ளிகுதித்து கேள்வி தொடுப்பு..etc ...etc ....அதை சொன்னேன் ! :-))
எனது பதிவு உங்களுடைய பதிவிற்கு பதில் பதிவு அவ்வளவுதான்.
உங்களுடைய தகவல் என்று நான் கூறவில்லையே. உங்களுக்கு கிடைத்து பதிவிட்ட தகவல் என்றுதான் நானும் எழுதியுள்ளேன்.
தகவல் தவறாக இருக்கவே வாய்ப்பு என்பதால் நான் சொல்லும் தகவலுக்கு ஆதார ஆவணம் என் பதிலுடன் இணைத்தேன்.
இதில்..அவசரம் எங்கிருந்து ..ஆத்திரம் எங்கிருந்து...?
உடனுக்குடன் பதில் பதிவிட்டால் அது அவசரமோ... ஆத்திரமோ ஆகுமா ? உங்கள் கருத்து அதுவாகுமேயானால் அது விந்தையிலும் விந்தை !
இதனால் தான் சொன்னேன் எல்லாருக்கும் எல்லா திறமைகளும் இருக்காது என்று..பாருங்கள் உங்கள் திறமை எனக்குள்ளதா ? இல்லையே ? எவ்வளவு அழகாக எனது ஆதாரத்துடன் விளக்கியுள்ள கேள்வி எழுப்பிய பதிவை அவசரம்...ஆத்திரம்...என்று அழகான வார்த்தைகளால் வர்ணம் தீட்டியுள்ளீர்கள் பாருங்கள் ! உங்களுக்கு ஒரு சபாஷ் சார் !
ஒரு விஷயம் நிச்சயம் சார் ! நாகேஷ் பாணியில் !
உங்களுடைய அனுபவம் நிச்சயம் எனக்கும் ஒரு நாள் வரும் என்று நம்புகிறேன். அதாவது எப்படி கேள்விக்கு பதில் சொல்லாமல் இப்படி ஒரு மேலோட்டமாக பதில் எழுதுவது என்று.
சில சமயம் எனக்கு கூட தோன்றுவதுண்டு நீங்கள் tution சொல்லி கொடுத்தால் நானும் உங்களை போன்றே கைதேர்ந்தவனாக பதிவிட தெரிந்தவனாகிவிடுவேன்....
கற்றுக்கொள்ள நான் ரெடி சார் !
நட்புடன்
rks :-d
http://i1170.photobucket.com/albums/...psfee93f4c.jpg
எந்தவித கட்சி பாகுபாடும் இல்லாமல் ஒரு புகைப்படமாக மட்டும் நினைத்து இந்த போட்டோவை பாருங்கள்!!
ஒரு தலைவனுக்கும்
ஒரு சாதாரண குடிமகனுக்கும் இடையே நிகழும் மிகச்சிறிய உரையாடல் இது,
இதில் எந்தவித நடிப்போ நாடகமோ, பொய்யான புன்னகையோ எதுவுமே இல்லை, மிக இயல்பான மிக எளிமையான
ஒரு நலம் விசாரிப்புதான் இதில் தெரிகிறது,
ஒரு மன்னனுக்கும் மக்களுக்கும் இடையே இதுபோன்ற நெருக்கம் உண்டாகும் காலம் தான் நாட்டின் பொற்காலம் !! இன்றுவரை
MGR ஆரம்பித்த கட்சி என்கின்ற காரணத்திற்காக
நாங்கள் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலைக்கு தான் எங்கள் ஓட்டு.....
என்று சொல்லும் லட்சக்கணக்கான மக்களின் மனதில் அறியாமையைவிட
அந்த தலைவன் காட்டிய அன்புதான் நிறைந்திருக்கிறது என்பதே உண்மை!
WATCH THE VADACURRY MOVIE 56.15 ONWARDS TO 58.00 AN ORDINARY AUTO DRIVER TELL ABOUT OUR THALAIVAR THIS SCENE IS TURNING POINT OF THIS MOVIE ALL MEMBERS PL.WATCH THIS SCENE
http://www.tnsun.com/watch.php?vid=777c1687d
WATCH THE MANJAPAI MOVIE FROM 54.25 TO 54.32
http://www.tnsun.com/watch.php?vid=402abd717
மக்கள் திலகத்தின் ஆளுமைகளை ஜெயலலிதா தன்னுடய பாடல் காட்சிகளில் அவரை புகழ்ந்து பாடிய வரிகள் அத்தனயும் ஜீவனுள்ள வரிகள் . இந்த பொருத்தம் உலகில் எந்த ஒரு நடிகைக்கும் கிடைத்திராத பெருமை .
http://i60.tinypic.com/2czr1wp.jpg
உன்னை நான் சந்தித்தேன் .. நீ ஆயிரத்தில் ஒருவன் ... என் ஆலயத்தின் இறைவன்
உள்ளத்தால் வள்ளல்தான் ... ஏழைகளின் தலைவன்
நீ அருகில் இருந்தால் உலகம் எனக்கு தூசு .....
உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் .....
இளன் சூரியன் உந்தன் வடிவானதோ .....
ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன் .. நீ ஒரு தனிப்பிறவி ....
என்னை பாட வைத்தவன் ஒருவன் ... குற்றமில்லாத மனிதன் .. என் பாட்டுக்கு தலைவன் .
இன்று நாளை எண்ணி ...காவிய வள்ளலை புகழ் பாடுது ..
எத்தனை பிறவி சேர்ந்து வாழ்வோம் ....யாரறிவாரோ ....
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா அழகன் நீதான் நீதான் .....
இருப்பதில் கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
நீங்க நினைச்சா நடக்காதா .. நான் நினைச்சது நடக்காதா ....
காலத்தை வென்றவன் நீ .. காவியமானவன் நீ
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய ... புன்னகை புரிந்தாயே பூ முகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க
மன்னன் முகம் கனவில் வந்தது .....
கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன் . என்னை சேர்ந்தவன்
என் மன்னன் முகம் எங்கே எங்கே என்று தேடுதோ ....
நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு ...
பொருத்தமான பாடல் வரிகள் . ஜெயலலிதா நினைத்ததை முடித்தார் .
SUPER COSMIC POWER
http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8
SATHYAM CINEMAS - AAYIRATHIL ORUVAN - TODAY'S STATUS IST 3PM
http://i58.tinypic.com/24wej39.jpg
திரு சொக்கலிங்கம் அவர்களின் பிறந்த நாள் இன்று - இன்று போல் என்றும் வாழ எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஒரு சில பேர்கள் ஒரு சில காலங்கள் புகழின் உச்சிக்கு போவார்கள் ஆனால் காலங்கள் மாற மாற அடுத்தவர்கள் அந்த இடத்தை பிடிப்பது வாடிகையானது தான் . ஆனால் எங்கள் மன்னவன் மட்டும் தான் எக்காலதிலும் அவரின் புகழ் இம்மி அளவு கூட குறைவதில்லை .
திரையுலகில் இன்று வரும் படங்கள் கூட அவரின் பண்புகளையும் மக்கள் செல்வாக்கினையும் பிரதிபலிகின்றன . உதாரனமாக வடகறி மஞ்சப்பை, நெடுஞ்சாலை திரைப்படங்கள்
அரசியல் களத்தில் அவர் உருவாக்கிய கட்சி மாநிலத்தை ஆளுகிறது , மாற்று கட்சிகள் கூட அவரின் பெருமைகளை புகழ் பாடுவதை நம் பார்க்கிறோ ம் . திமுக வின் டிவி சேனல்கள் தலைவரின் படங்களை இடைவிடாமல் ஒளிபரப்புகிறது .
பத்திரிகை உலகில் அவர் பேரால் எத்தனை புத்தகங்கள் மாற்று முகாம் நண்பர் கூட தலைவரின் மக்கள் செல்வாக்கினை அறிந்து மலர் மாலை வெளியிட்டார் இதுவரைக்கும் 1000 மலர்கள் விற்று சாதனை புரிந்து உள்ளது மேலும் மலர் மாலை 2 விரைவில் வர போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படி எந்த துறையிலும் அவர் ஒரு தனிபிறவியாகவும் , யாரும் அவர் இடத்தை கனவில் கூட நெருங்கமுடியாத புகழ் மலை தொடருக்கு சொந்தகரராக உள்ள அந்த மனித தெய்வத்திற்கு நங்கள் எல்லோரும் பக்தர்கள் அக இருப்பதில் பெறு மகிழ்ச்சி அடைகிறோம்
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே போற்றி போற்றி
http://i1170.photobucket.com/albums/...psb4ecb710.jpg
மறக்கமுடியுமா அந்த மாமனிதரை
" கலைவாணர் மகள்களுக்கு அவர் இருந்தால் எப்படி திருமணம் நடத்தி வைப்பாரோ , அதுபோலவே ஒரு குறையும் இல்லாமல் நான் நடத்திவைப்பேன் என்று சொனார்கள் மரியாதைக்குரிய " மக்கள் திலகம் " MGR அவர்கள் ....
" பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் முன்னிலையில் ஒரு மாநாடுபோல் திருமணத்தை நடத்தி வைத்தார் மக்கள் திலகம் MGR அவர்கள்" ...
படம் :- கலைவாணர் மகள் NSK முத்துலட்சுமி அவர்கள் திருமணத்தில் .....மக்கள் திலகம் MGR , NSK வடிவா வரதராஜன் அக்கா , NSK கோலப்பன் அண்ணன் , தமிழ் அறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதம்:, பேறிஞர் அண்ணா மற்றும் முதறிஞர் ராஜாஜி .
http://i59.tinypic.com/34sjcwj.jpg
Thanks to Mr. Nallathambi NSK, FB.
எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி பெரிய அளவில் வசூலித்தன. அதிலும் ஆயிரத்தில் ஒருவன் சென்னையிலுள்ள இரண்டு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இந்த நிலையில், ரஜினி-கமல் நடித்த 16 வயதினிலே படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளரான ராஜ்கண்ணு களமிறங்கினார். அதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்த விழாவில் ரஜினி, கமல், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால், படத்தை வெளியிட தயாரானபோது, அப்படத்தின் சார்ட்டிலைட் உரிமத்தை வைத்திருக்கும் ஒரு சேனல், இவர்கள் படத்தை வெளியிடும்போது தாங்களும் 16 வயதினிலே படத்தை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டிருப்பது ராஜ்கண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அப்படி செய்தால் தியேட்டர்களுக்கு கூட்டம் வராதே என்று படத்தை ரிலீஸ் செய்வதில் தாமதம் செய்திருக்கிறார்.
இதன்காரணமாக, அப்படத்தை தானே தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதாக கூறியிருந்த ஒரு பிரபல தயாரிப்பாளர், அந்த சேனல் 16 வயதினிலே படத்தை வெளியிட தயாராகி விட்டதை அறிந்து, பின் வாங்கி விட்டாராம். அதனால்தான், டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்காக பல லட்சங்களை செலவு செய்து விட்டு, போட்ட காசை எப்படி எடுப்பது என்று தற்போது தடுமாறிக்கொண்டு நிற்கிறார் ராஜ்கண்ணு. அதையடுத்து, இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனால், சம்பந்தப்பட்ட சேனலிடம் நட்பு ரீதியான பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.
courtesy dinamalar
வேங்கையன் அறிமுக காட்சி
http://i1170.photobucket.com/albums/...psac9a1aa9.jpg
WATCH THE CLIPPING FROM 5.10 TO 7.00 FOR THE MOVIE OF NAAN RAJAVAKA POKIRAEN .THE SCENE TAKEN FOR ONE OF THE THALAIVAR MOVIE ENGAVEETUPILLAI RUNNING IN CHENNAI ALBERT THEATER.
http://www.youtube.com/watch?v=j3e_BWa1lqY