http://i1065.photobucket.com/albums/...psynnidopr.gif
Printable View
https://scontent-sin1-1.xx.fbcdn.net...0d&oe=561370BA
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Nadigar Thilagam Maraium Thilagamalla Endrum Makkal Manathil Nilaithu Nirkum Thilagam.
Mr Senthilvel,
Congratulation for your 1000 wonderful posts. Keep the momentum going.
Regards
https://fbcdn-profile-a.akamaihd.net...ca7e375cc114ab
Malai Murasu Murali added 2 new photos.
# ஜூலை 21 - சிவாஜி கணேசன் நினைவு நாள்...!
சமீபத்தில் நடந்தது அது....
“வீரபாண்டிய கட்டபொம்மன்” மறு வெளியீட்டுக்கான , டிரைலர் வெளியீட்டு விழா என நினைக்கிறேன்.. .
பிரபு மேடையில் அமர்ந்திருக்கிறார்......
வைரமுத்து பேசுகிறார் :
“சிவாஜியின் மரணத்தைப் பார்த்தபோது நினைத்தேன்...
இறந்து கிடப்பவன் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் மட்டும்தானா..?
ஒரு உடலில் நூறு ஜென்மங்கள் வாழ்ந்தவர் சிவாஜி கணேசன்...
இந்த உடம்புக்குள் அப்பர் இறந்து கிடக்கிறார்...
இந்த உடம்புக்குள் ராஜ ராஜ சோழன் இறந்து கிடக்கிறான்...
இந்த உடம்புக்குள் கரிகால் பெருவளத்தான் சேரன் செங்குட்டுவன் இறந்து கிடக்கிறான்...
இந்த உடம்புக்குள் ஜூலியஸ் சீசர் இறந்து கிடக்கிறான்...
இந்த உடம்புக்குள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இறந்து கிடக்கிறான்...
இந்த உடம்புக்குள் வீரபாண்டியகட்டபொம்மன் இறந்தும் இறவாமல் கிடக்கிறான் என்றுதான் நினைத்துக் கொண்டேன்...
யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு..?
சிவாஜி என்ற நடிகனுக்கு சாவே கிடையாது..”
# வைரமுத்து பேசப் பேச பிரபு கண்களில் கண்ணீர் வழிந்தோடியது....
பிரபுவுக்கு மட்டும்தானா..? பார்த்துக் கொண்டிருந்த என் கண்களும் பனித்துப் போனது....!
உண்மைதானே ...? அந்த உண்மைக் கலைஞன் , உன்னத நடிகனுக்கு ஏது இறப்பு..?
ஜான் ஆசீர்
https://scontent-ord1-1.xx.fbcdn.net...0e&oe=561B438E
https://scontent-ord1-1.xx.fbcdn.net...8a&oe=5613DBA4
நடிகர் திலகமே உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு
எப்பொழுதும் உங்கள் நினைவுதான்
உலகம் உங்களை என்றும் மறவாது
ஆயிரம் பதிவுகளை கண்ட அன்பு நண்பர் செந்தில்வேல்
மேலும் பல ஆயிரம் பதிவுகள் காண வாழ்த்துக்கள்
Vikatan EMagazine
ஜூலை 21: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று..
இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்தின் நினைவுநாள் இன்று...
https://scontent-ord1-1.xx.fbcdn.net...fe&oe=5610F706
மன்னவன் சென்றானடி! இன்று சிவாஜி கணேசன் நினைவு தி
21 ஜூலை
2015
06:09
பதிவு செய்த நாள்
ஜூலை 21,2015 00:31
http://img.dinamalar.com/data/largen...ge_1300530.jpg
காலத்தாலும் எண்ண ஓட்டத்தாலும் உலகமெல்லாம் இருக்கும் தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற்ற நிறைந்து இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படத்தில் 'சக்சஸ்' என்ற முதல் வசனத்தைப் பேசி நடிப்பில் பிரபலமானார். 'சிவாஜி கண்ட இந்து ராஜியம்' என்ற நாடகத்தில் நடித்ததைக் கண்டு இவருக்கு 'சிவாஜி' என்ற பட்டத்தை பெரியார் கொடுத்தார். காதல், வீரம், சோகம் என்ற அனைத்து கதாபாத்திரத்திலும் தனது முத்திரையை பதித்தவர். நடிப்பில் இவரை மிஞ்சியவரை காண்பது அரிது என்று நேருவால் பாராட்டப் பெற்றவர்.நடிகர் திலகம், நவரசத் திலகம், சிம்மக்குரல் கணேசன், கலைகுரிசல் கணேசன், பத்மஸ்ரீ கணேசன் என சிவாஜி கணேசனை அழைப்பதில் பெருமைப்படுகிறேன் என தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் புகழாரம் சூட்டப்பெற்றவர்.
'பராசக்தி' முதல் 'பூப்பறிக்க வருகிறோம்' என 288 படங்கள் வரை நடித்துள்ளார். இதில் 100 க்கும் மேற்பட்டவை வெள்ளி விழா படங்கள். நடிக்கும் போது அந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது இவரது சிறப்பு.1959 ல் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம். 200 நாட்களுக்கு மேல் இப்படம் ஓடியதால், 1962 ல் உலகத் திரைப்பட விழாவிற்கு எகிப்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற சிறப்பு பெற்றது.காமராஜரின் விசுவாசியாக இருந்ததால் காங்கிரசின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார். 1967 ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தோல்வியை கண்டு துவண்டு விடாமல் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டியவர் சிவாஜி கணேசன். தமிழக ஜனதா தள தலைவராகவும் சிவாஜி கணேசன் இருந்தார்.
எல்லோரிடமும் அன்பாகவும், நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். நவரச திலகமாக ஒன்பது வேடங்களில் நடித்த நவராத்திரி, அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் பாசமலர், செக்கிழுத்த செம்மலாக நடித்த கப்பலோட்டிய தமிழன், புரட்சி வீரனாக நடித்த சிவந்தமண் போன்ற எண்ணற்ற படங்கள் சிவாஜி கணேசனின்பெருமையை எடுத்துக் கூறும். காலத்தால் மறக்க முடியாத அந்த மாபெரும் நடிகர் மண்ணை விட்டுமறைந்தாலும், மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம்பெற்றிருப்பார்.- ஏ.எஸ்.பி.சிவசுந்தரம், மதுரை
தினமலர்
1000 பதிவுகள் அள்ளி வழங்கிட்ட செந்தில்வேல் சாருக்கு என் மனப்பூரவமான வாழ்த்துக்கள்.
1000 பதிவுகள் அள்ளி வழங்கிட்ட செந்தில்வேல் சாருக்கு என் மனப்பூரவமான வாழ்த்துக்கள்
நான் மறக்க நினைக்கும் கருப்பு தினம்
என் உயிரில் கலந்த உறவே, நான் மறந்தால் தானே நினைப்பதற்கு?
இறக்கும் வரை என்றும் தங்களின் நினைவுகளுடன்.
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்....எந்நாளும் எங்கள் உயிரோடு கலந்த உன்னை எப்படி மறப்பது...
எங்களை வாழ்வின் எல்லா செயல்பாட்டிலும் வியாபித்துள்ள நினைவோடு நாளை கழிக்கும் ஒரு சாமானியனின் மன ஓட்டம் இது...
சுந்தர பாண்டியன்
பதினாலு வருடம் வனவாசம் போனான் கோசலை மைந்தன்
பாதுகா பட்டாபிஷேகம் நடத்தி அரியணை காத்தான் கைகேயி குமாரன்
பதினாலு வருடம் முன்பு விண்வாசம் போனான் ராஜாமணி புதல்வன்; அவன்
(திரைப்)படங்களையே பட்டாபிஷேகம் செய்து சிம்மாசனம் காத்தோம் ரசிக கண்மணிகள்.
சீதாராமன் திரும்பி வந்தான் சீரும் சிறப்புமாய் ஆட்சி செய்தான்.
கணேசமூர்த்தியே! கமலாமணாளனே!
உன் மீள்வரவு எப்போது?
நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் நடிகர் திலகமே! யுக கலைஞனே
யுகங்கள்தோறும் காத்திருப்போம்!
கலையுலக சாம்ராஜ்ஜிய சிம்மாசனத்தை உனக்காக பாதுகாத்திருப்போம்!
என்றும் உன் நினைவில்
என்றென்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் நடிப்புலக மாமன்னனுக்கு 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
Dear senthilvel sir,
my heartiest congratulations for completing 1000 valuable and unique postings in this thread.
இன்று உங்கள் நினைவு நாள், இன்று மட்டும் உங்களை நினைக்கும் பத்திரிகைகளுக்கு, ஊடகங்களுக்கு, மற்றவர்களுக்கு
எப்போதும் உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமந்திருக்கும் எங்களுக்கல்ல.
நடிப்பில் நவரசம் என்று வகுத்தனர் நீங்கள் பிறக்கும் முன்னர். அதைப் பொய்ப்பித்து ரசங்கள் ஒன்பதாயிரம் என்று வகுத்தவர் நீங்கள்.
அவற்றை அணுஅணுவாக ரசித்து மகிழ்வது நாங்கள். ரசித்து முடிப்பதற்குள் எங்கள் ஆயுள் முடிந்திடுமே. அதுதான் நீங்கள் புரிந்த விந்தை.
நூறு முறை பார்த்த காட்சியை நூற்றி ஒன்றாவது முறை பார்க்கும்போதும் அதில் புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க முடிகிறதே அதுதான் உங்கள் மாயாஜாலம்.
உலகம் உள்ளவரை உங்கள் நினைவு போற்றப்படும்.
யார் அந்த சமூக ஆர்வலன்கள்..?.
அரசாங்க செலவில் யார் யாரோ ஊர் பேர் தெரியாதவனுக்கெல்லாம் மணிமண்டபம், நினைவிடம் என்று அமைக்கப் படும்போது பொத்திக் கொண்டிருப்பவன்களுக்கு, அயல்நாடுகளிலும் தமிழனின் பெருமைகளை தலைநிமிர செய்த நடிகர்திலகத்துக்கு அமைக்கச் சொல்லும்போது மட்டும் எதிர்த்து வாய் கிழிகிறதே எப்படி?.
நடிகர்திலகத்தை எது சொன்னாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியம்தானே?.
தெருவில் இழுத்துப்போட்டு நாலு சாத்தினால் தெரியும்.
என்னைப் போய் சிவாஜி ரசிகன் என்று சொல்கிறார்களே ?
இவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று சிவாஜி கணேசன், நடிகர்த் திலகம் என்ற பெயரை கேட்டிருக்கேன்?
அகில உலக நடிகராமே? எனக்குத் தெரியாது நான் அறிந்து பழகினது ஒரு
சாதாரண நாடக நடிகன் வி சி கணேசன்
அவன் சரஸ்வதி தேவியை வணங்கினான்
தேவி பெருமாளிடம் (முருகப் பெருமானும், வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளும் ,அருணகிரி நாதர் இருண்டு பேரையும் பெருமாள் என்று குறிப்பிடுவான்) சிபாரிசு செய்து, சினிமா உலகில் அதே பேரில் இருக்கும் பெருமாளிடம் கூட்டி சென்று கணேசனுக்கு சான்சு கேட்டார்
அப்பொழுது மாதா பராசக்தியும் தன் மகன் கணேசனுக்கு ஒரு அறிய வாய்ப்பு கேட்க,
பெருமாள் யோசித்தார, காரணம்?
பலர் கணேசனுக்கு எதிராக கொடி தூக்கினார்கள் பெருமாள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்?
யார் பேச்சையும் நான் கேட்கப் போவதில்லை?
குழந்தையின் பால் வடியும் முகத்தை நன்றாக பார்த்தேன்,
கண்கள,ஆக,என்னமா கதை சொல்கிறது,
ஒரு வாய் அசைப்பில் ஒரு காவியமே சொல்லத் துடிக்கிறதே,
யசோதா பாக்கியம் செய்தாளோ தெரியாது, நான் கொடுத்து வைத்தவன்
இவன்
உயர்நத மனிதன்,
ஏன் இவன் தான் மனிதன் ,
படிப்பு எதற்கு? இவன் தான் படிக்காத மேதையே?
இப்படியாக என்னவெல்லாமோ நினைத்து படத்தில் கதாநாயகனாக நடை,( ஆகா என்ன நடை என்று பலரும் வியந்த வண்ணம் ) போட வைத்தான்
பெருமாள் தேவிகள் இருவரும் இரண்டு பேரை கூப்பிட்டு நீங்களும் எப்போதும் எங்கள் செல்லக் குழந்தை கணேசனுடன் இருந்து மூன்று பேரும் சேர்ந்து கலை உலகில் பேரும் புகழுடன் வாழுங்கள் என்று வாழத்தினாள்
அவர்கள் கண்ணதாசனும் விசுவநாதனும் தான் இவர்களைத் தான் நான் அறிவேன்
நன்றி: திரு கல்யாணம் முகநூல் (https://www.facebook.com/kalyanam.iyer1?fref=nf)
'நெஞ்சிருக்கும் வரை'
http://musiclounge.in/wp-content/upl...kkum-Varai.jpg
தெய்வமே!
என் 'நெஞ்சிருக்கும் வரை' உங்கள் நினைவிருக்கும்.
இதோ உங்கள் நினைவு நாளில் உங்களுக்கு நான் செலுத்தும் நினைவாஞ்சலி.
தனக்குச் சேர வேண்டிய சொத்துக்களுக்காக வழக்குப் போட்டு அது வெற்றி பெறும் கட்டத்தை அடைகிறான் ஏழை சிவராமன் என்கிற சிவா. அவனுக்கு ஆதரவு கொடுத்த ஆருயிர் நண்பன் ரகுவிற்கோ செய்தி கேட்டு தாளாத மகிழ்ச்சி. இன்னொரு ஃபிரெண்ட் பீட்டருக்கோ பீறிட்ட உற்சாகம்.
எல்லாவற்றுக்கும் மீறிய எல்லை தாண்டிய அமைதி, சந்தோஷம் அந்த ஏழைப் பெண் ராஜிக்கு. ஏனென்றால் அவளின் காதல் தெய்வம் சிவா அல்லவா!
வறுமையைத் தவிர வேறு ஒன்றும் அறியாத அந்தக் குடிசையே குதூகலிக்கிறது சிவாவுக்குக் கிடைக்கப் போகும் சீர்மிகு வாழ்வை நினைத்து. கள்ளம் கபடமில்லாத அன்பு ஆத்மாக்கள். தூய உள்ளங்கள்.
ராஜியின் அப்பா உட்பட. (அந்த பழைய வீட்டின் ஓனர்.)
அனைவரிடமும் விடை பெற்று வழக்கின் முடிவுக்காக ஊருக்குக் கிளம்புகிறான் சிவா தன் உயிருக்குயிரான காதலியை நண்பன் ரகுவின் கண்காணிப்பில் விட்டுவிட்டு. ரகு முன்னம் ராஜியை உள்ளூர ஒருதலையாய்க் காதலித்தவன் என்றாலும் ராஜியின் விருப்பம் சிவா மீதுதான் என்பதைத் தெரிந்து கொண்டு, உணர்ந்து கொண்டு, குழம்பாமல் தெளிந்து விட்டவன். மனதை சமநிலைப் படுத்திக் கொண்டவன். ஆனால் நோயாளி நண்பன் பீட்டரின் இ(ழ)றப்பு இன்னொரு தாங்க முடியாத இன்னலாய், இடியாய் அவன் நெஞ்சில் இறங்கியது
இப்போது ராஜியும் தன் தந்தையை இழந்து தவிக்கும் போது ரகு மட்டுமே அவளுக்கு உற்ற துணையாய், அவளுடைய உடன்பிறவா சகோதரனாய், அவளை தன் தங்கையாக நினைத்தே அவளைப் பாதுகாக்கிறான். ஊருக்குச் சென்றிருக்கும் சிவா திரும்ப வந்து ராஜியைக் கல்யாணம் செய்து கொள்வான் என்ற நம்பிக்கையோடு அந்த அண்ணன் தங்கையின் வாழ்க்கை நகர்கிறது. சிவாவுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள் ராஜி.
ஊருக்குச் சென்ற சிவா கேஸில் ஜெயித்து பெரிய நிலைக்கு உயர்கிறான். அவனுக்கு சேர வேண்டிய சொத்துக்கள் லட்சக்கணக்கில் திரும்ப கிடைக்கின்றன. கிளாஸ் பாக்டரி, எஸ்டேட், ஆபீஸ், வேலை ஆட்கள் என்று எட்டாத உயர் நிலை அடைகிறான்.
ஆனால் சிவா ராஜியை மறந்தவன் இல்லை. ராஜியைப் பார்க்க, அவளை மணக்க, அவளுக்கு வாழ்க்கை தர பெங்களூரில் இருந்து சென்னைக்குக் காரில் பறக்கிறான். தன்னை ஆதரித்த அந்தக் குடிசையை, அந்தக் குடிசையில் உள்ள அன்பு இதயங்களைக் காணச் சென்றால்? விளைவு வேறுவிதமாக மாறிப் போகிறது.
அங்கிருக்கும் காலிகளாலும், தேவையற்ற வதந்திகளாலும் ரகு, ராஜியை சந்தேகப்படும் சூழ்நிலை சிவாவுக்கு ஏற்படுகிறது. சூழல்கலும் அதற்கு சாதகமாய் பொருந்த, சந்தேகப் பேய் சந்தர்ப்பம் பார்த்து அவனுள்ளே வசதியாக நுழைந்து கொள்ள, தான் ரகுவாலும், ராஜியாலும் ஏமாற்றப்பட்டோம், வஞ்சிக்கப்பட்டோம் என்ற தவறான முடிவெடுத்து, மனப்புழக்கத்துடன் திரும்ப பெங்களூரே சென்று விடுகிறான் சிவா ராஜியை சந்திக்காமலேயே.
இங்கே சென்னையில் ரகு சிவாவிடமிருந்து எந்த பதிலும் இல்லையே என்று தவித்து ஊர்க் காலிகளின் பொய் பிரச்சாரங்களில் மனம் நொந்து, அவர்களை அடித்து நொறுக்கி, அங்கிருக்கப் பிடிக்காமல் ராஜியை அழைத்துக் கொண்டு சிவாவை சந்திக்க பெங்களூர் வருகிறான்.
சிவாவோ ராஜி, ரகு இருவரும் தனக்கு துரோகம் செய்வதாக தப்புக் கணக்குப் போட்டு, தாள முடியாத ஆத்திரத்திலும், துயரத்திலும் மூழ்கி இருக்க, ராஜியை லாட்ஜில் அறை எடுத்துத் தங்க வைத்துவிட்டு, சிவாவின் ஆபிஸைக் கண்டு பிடித்து அவனைச் சந்திக்க வருகிறான் ரகு.
இப்போது ரகு, சிவா என்ற பெயர்களை மறந்து விடுங்கள். நடிகர் திலகம், முத்துராமன் இருவரையும் அந்தப் பெயரில் வைத்துப் பாருங்கள்.
இனி நெஞ்சம் நிறைந்தவரின் நெற்றியடி அசைவுகள்.
ஆபீஸில் பிஸியாக பிஸினஸ் பேசிக் கொண்டிருக்கும் முத்துராமனிடம் நடிகர் திலகம் அவரைச் சந்திக்க வந்திருப்பதாக ஆபிஸ் பாய் வந்து சொல்ல, முத்துராமன் முகத்தில் அதிர்ச்சி. மேனேஜர் மாலி சந்திக்க மறுக்கும்படி சொல்ல, எதிர்பாராமல் 'வணக்கம் சார்' என்று சொல்லியபடி நடிகர் திலகம் அங்கு வந்து நிற்பார்.
மாலி 'ஏன் உள்ளே வந்தே?' என்று மிரட்டியவுடன் கைகளால் சைகை செய்து நிறுத்தி, நடிகர் திலகம் அவரைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் 'நான் ஐயாவுடன் பேச வந்தேன்' என்று அலட்சியமாக நடந்து முத்துவிடம் வருவார்.
சொந்த விஷயம் பேசப் போவதாகக் கூறி அங்கிருப்பவர்களை வெளியே போகும்படிக் கேட்டுக் கொள்வார். எல்லோரும் போய் விட்டவுடன் டைப் மிஷின் மட்டும் அடிக்கப்படும் சப்தம் கேட்டு நேராக டைப்பிஸ்ட்டை நோக்கிச் சென்று,
'Madam! Will you kindly go out for five miniutes?'
என்று வெகு அழகாக ஆங்கிலத்தில் போகச் சொல்லிக் கேட்பார். டைப்பிஸ்ட் எழுந்தவுடன் 'தேங்க் யூ' என்று அழகாகக் கைகளை நீட்டியபடி அவரை வெளியே அனுப்புவார். முகத்தில் எந்தச் சலனமும் இருக்காது. பின் கதவைத் தாளிட்டுவிட்டு, அப்படியே அங்கிருந்து மகிழ்ச்சிக் கைகொட்டி, முகம் மாற்றி, நிறைய சிரிப்புடன், நட்போடு ஓடிவந்து, முத்துராமனின் டேபிளின் மீது 'ஜம்'மென்று சந்தோஷமாக உட்காருவார். முத்துராமனின் நிலை சொல்லி பெருமையுடன் சந்தோஷப்பட்டு கொள்வார். ('டேய் சிவா! உண்மையிலேயே எதிர்பார்க்கவே இல்லைடா!) உடலைக் குறுக்கி, கைகளை விரத்த நிலைகளில் வைத்து, முத்துவின் முன்னேற்றம் கண்டு, அதைச் சொல்லி பூரித்துப் போகும் உடல்மொழி காட்டுவார்.
http://i59.tinypic.com/6tizdd.jpg
'பட்ணத்துல உன்னைப் பார்த்ததுக்கும், இப்ப உன்னைப் பார்க்குறதுக்கும்'
என்று சொல்லி கைகளைக் கொட்டி,
'ஓ...மை குட்லக்! ஆளே கம்ப்ளீட்டா மாறிட்டடா' (முத்துராமன் மார் மீது ஒரு அலட்சிய செல்லத் தட்டு தட்டுவார்.)
என்று வலதுகால் மேல் தூக்கிப் போட்டிருக்கும் இடது கால் முட்டி மீது கைகளை அணைத்துக் கட்டிக் கொள்வார். (வலதுபுற தோள்பட்டையில் ஷர்ட் கிழிந்திருக்கும்) உதடுகள் கடித்து சிரிப்பை சிறகடிக்க வைப்பார். முத்துராமனின் ஏகபோக நிலை கண்டு பூரிப்பும், அவர் முன்னேற்றம் கண்டு பெருமிதமும், வியப்பும், ஆச்சரியமும், சந்தோஷமும், அது தவிர அவர் மீது கொண்ட நட்பும் ஒரே சேர தன் அங்கங்களில் அங்கே சங்கமிக்க வைத்து சரித்திரம் படைப்பார் நடிப்புலக சாதனை சக்கரவர்த்தி.
வந்த விஷயத்தை சொல்லுமாறு முத்துராமன் முகம் கொடுத்துப் பேசாமல் கடுகடுக்க,
அப்படியே கையை விசிறி,
'டேய்! என்னடா பணக்கார பாணியிலே பேசி என்னை பயமுறுத்தப் பாக்குற?
உன்னுடைய நடிப்புல நான் ஒன்னும் ஏமாற மாட்டேன் தம்பி!' (கட்டை விரல் ஆடி அப்படியே சவால் விடும் சவால்.)
என்று போடுவாரே ஒரு போடு பார்க்கலாம்!
(நடிப்பிலே அவரை ஏமாற்ற இன்னொருத்தரா? முடியுமா? செம டைமிங் டயலாக்)
'கொஞ்சம் இறங்கி பழைய நிலைமைக்கு வாடா ஃ பூல்' (இரண்டு கைகளையும் 'அடங்கு' என்பது போல மேலிருந்து கீழாக அசைத்துக் காட்டுவார்)
அப்படியே கண்கள் அலைபாயும். விழிக்கும். முழிக்கும். சுருங்கும். விரியும். மிரட்டும். அடக்கும். கெஞ்சும். கொஞ்சும்.
'முதல்ல இந்த இடத்தை விட்டு இறங்கு கீழே'
என்று முத்துராமன் அதட்டியவுடன்,
சிரிப்பு அப்படியே அடங்கி கொஞ்சமாக இவரின் முகம் மாறும். அமைதி அதிர்தலில் பணிவாகவே எழுந்திருப்பார்.
'சிவா! என்னடா?'
குரல் அப்படியே உள்ளே போகும்.
கே.ஆர் விஜயாவைப் (ராஜி) பற்றி பேச்சு வரும். ஞாபகப்படுத்துவார்.
'யாரையும் ஏத்துக்க நான் தயாரா இல்ல... ராஜியை நான் மறந்தாச்சு... மறந்தாச்சு'
முத்துராமன் சொன்னவுடன் 'காரணம்?' என்று தீர்க்கமாகப் பார்ப்பார்.
'உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை' இது முத்துராமன்.
அடுத்த செகண்ட் வினாடி கூட தாமதியாமல்
http://i60.tinypic.com/2u5yg7r.jpg
'தப்ப முடியாது' என்று நிறுத்தி (ஆட்காட்டி விரல் சுட்டி மிரட்டும் தொனி காட்டுவார்)
'காரணத்தை சொல்லித்தான் தீரணும்'
என்பார்.
'அவளை நான் வெறுக்கிறேன்' என்பார் முத்துராமன்.
உடனே,
'இம்பாஸிபிள்'
என்று அழுந்தத் திருந்த சொல்வார் நடிகர் திலகம்.
இடி போல வார்த்தை இப்போது வந்து இறங்கும்.
"அது அவ்வ்வளவு சுலபமில்லே! ஒரு பெண்ணைக் காதலிக்கிறது.... அவ உள்ளத்தில ஆசையை வளர்க்கிறது... ஆயிரக்கணக்கான வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறது... இதெல்லாம் சில பணக்கார வாலிபர்களோட பெர்மனெண்ட் விளையாட்டுகள்டா... அந்தக் கூட்டத்துல நீயுமா சேர்ந்துட்டே?!"
ஆத்திரமாய் வார்த்தைகள் வந்து விழும். கைகள் இரண்டையும் மூடியபடி வைத்திருப்பார். பார்வை முத்துராமன் மேல் கோபமாய் ஏறி இறங்கியபடியே இருக்கும்.
அப்படியே சற்று அடங்கி ராஜி நிலை குறித்து அமைதியாக விளக்குவார்.
'இப்போ உன்னை நம்பித்தான் அவ இங்கே வந்திருக்கா'
என்ன சொல்லப் போகிறான் தன் ஆருயிர் நண்பன்? என்று முத்துராமனை நோக்கியபடி அவரிடமிருந்து பதிலை பரிதாபமாக ஆவல்மிக எதிர்பார்ப்பார்.
ராஜியின் பரிதாப நிலையை அந்தக் கைகள் முத்துராமனுக்கு விளக்கப் பாடுபடும். முகத்தில் அந்த சமயம் இரக்க நிலை மேலோங்கும். அதில் ராஜியின் நல்வாழ்வு வேண்டி போராட்டம் துவங்க ஆரம்பித்திருப்பது தெரியும்.
'என்னை நம்பியா? என் பணத்தை நம்பியா?'
என்று முத்துராமன் ஏகத்துக்கும் ஆரம்பிக்க,
'சட்'டென்று கொஞ்சமும் தாமதியாமல் அந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காதவராய்
'டோன்ட் டாக் ரப்பிஷ்'
என்று முழங்கி,
முத்துராமன் பின் புறம் நிற்பவர் அவரின் இடது பக்கம் வந்து, தன் கைகளால் அவர் தோளைத் திருப்புவார். முறைப்பு அநியாயத்துக்கு இருக்கும்.
'அப்படியெல்லாம் வாய் கூசாம பேசாதே!' (ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பார்)
தாங்க மாட்டாமல் அடங்கிப் பொங்குவார்.
அடுத்த கணம் சிங்கம் தன் ஒரிஜினல் கர்ஜிப்பைக் காட்டும். குரல் உச்சத்தில் கம்பீரத்தை அங்கு கொண்டு வந்து நிறுத்தும். குலை நடுங்க வைக்கும்.
"என்னடா பெரிய பணம்?! இந்தப் பணத்தை வச்சுகிட்டு என்னடா சாதிச்சிடப் போற?... மெட்ராஸுக்கு வரும் போது நீ எப்படிடா வந்தே?.. இந்த பணத்தையெல்லாம் எதிர்பார்த்துதான் அவ உன்னைக் காதலிச்சாளா? கொஞ்சம் மனிதத் தன்மையோடு சிந்திச்சிப் பாரு"
(கைகளைக் குறுக்கி இதயம் சுட்டிக் காட்டுவார்)
என்று கோபத்துடன் பதறுவார்.
அடடா! என்ன மாடுலேஷன்! குரல் ஏற்ற இறக்கங்கள் யாரும் வர்ணிக்க முடியா விந்தைகள். சட்டென்று தென்றல் வீசும். படாரென புயல் உருவாகும். வார்த்தைகள் மென்மையாகும். அப்படியே சடாரென தடித்து எழும்பும். இவை அனைத்திற்கும் முகமும் சரிசமமாக இணைந்து கை கொடுக்கும். எங்கே எந்த சமயம் எது நடக்கும் என்று கடவுளுக்குக் கூடத் தெரியாது.
முத்துராமன் சற்று முன்னாடி வர, சைட் போஸில் அங்கேயே நின்றபடி நடிகர் திலகம் அவர் பக்கம் திரும்புவார். முகம் வெறுப்பின் உச்சம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கும். மீசை தோதாய் அதை உணர்த்தும்.
'நல்லா சிந்திச்ச பிறகுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ரகு! என்னோட நேரத்தை வீணாக்காதே!"
என்று முத்துராமன் சொன்னதுதான் தாமதம்...
அடுத்த வினாடி அப்படியே நடிப்புப் பிரளயம் நடத்துவார்.
சட்டென்று,
'ஏய் லுக்'.
இடது கை ஆட்காட்டிவிரல் முத்துவின் இடது புற நெஞ்சில் அப்படியே துப்பாக்கி போலப் பதியும். கண்களை ஒரு செகண்ட் மூடியிருப்பார்.
'எனக்குத் தேவை உன்னுடைய ஒரே நிமிஷம்
உன்னுடைய ஒரே பதில்'
இறுதியாக உறுதி நிலைக்கு வந்து விடுவார் இனி வேலைக்கு ஆகாது என்று. .
நண்பன் மேல் பார்வையைத் தீர்க்கமாக வைத்தபடி, விழிகள் முரட்டுத்தனம் புரிந்தபடி, ஆட்காட்டி விரலை அவன் நெஞ்சில் வைத்தபடி அடுத்த கேள்வி ஒன்று கேட்பார்.
ஸ்டைல் என்பது பொதுவாக சந்தோஷத்தின் போது அனைவரும் செய்வது.
ஆனால் இந்த மனிதர் கேட்கும் கேள்வியிலேயே... அதுவும் கோபத்தின் போது ஸ்டைலைக் காட்டும் விதம் எவர் நினைத்துப் பார்க்க முடியும்?
அதுவும் இப்போது கேள்வி ஆங்கிலத்தில்.
'ஆர் யூ கோயிங் டு மேரி ராஜி ஆர் நாட்?'
'ராஜியைக் கல்யாணம் செய்துக்கப் போறியா இல்லையா?'
விழிகள் எங்கே வெளியே வந்து விடுமோ என்று அஞ்சும் அளவிற்கு இப்போது இன்னும் பெரிதாகி அகன்றிருக்கும். (என்ன கண்கள் சாமி அது! கோலி குண்டு போல, வெண்ணெய் உருண்டை போல் உருண்டு, திரண்டு). வன்மம் கொப்புளிக்கும். உறுதி பாம்பன் பால சங்கர் சிமெண்ட்டை விடவும் அதிகமாய் இருக்கும். எண்ணி வந்த செயலை முடிக்காமல் போகக் கூடாது என்ற வெறி ஓங்க ஆரம்பித்திருக்கும். ('இனி 'மயிலே மயிலே' என்றால் இறகு போடாது' என்ற முடிவுக்கு வந்திருப்பார்.)
'முடியாது'----- முத்துராமன்.
இவர் ஆணித்தரமாக,
'முடியும்... ராஜியை நீ கல்யாணம் செய்துக்கத்தான் போற!'
முத்துராமன் முடிவெடுக்கும் முன் இவர் முடிவெடுத்து விடுவார்.
'மிரட்டலா?'
என்று முத்துராமன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே,
"இல்லை... உன்னுடைய அயோக்கியத்தனத்துக்கு சவால்"
பதில் பட்டென்று வந்து விழும்.
'இந்த அறையை விட்டு வெளியே போறியா இல்லையா?'
என்று முத்துராமன் கத்தியவுடன்
http://i61.tinypic.com/21dfndi.jpg
அதுவரை வாய் மூலம் வாக்குவாதங்களை நிகழ்த்தியவர் அப்படியே செய்கை மூலம் முத்துராமனின் கோட்டைக் கொத்தாக பிடித்துத் தூக்கி அருகில் உள்ள டேபிளில் கிடத்துவார் முரட்டுத்தனமாக.
'போறேன்..உன்னை இதே இடத்துல பிணமாக்கிட்டு நான் நேரா தூக்கு மேடைக்குப் போறேன். நான் எதுக்கும் துணிஞ்சவன்னு உனக்குத் தெரியுமில்லே!
டேய் சிவா!
(கொத்தாக கோட்டைப் பிடித்திருந்தவர் வலது கையை விடுத்து முத்துராமனின் கன்னத்தில் ஒரு குத்து குத்தி திரும்ப கோட்டைப் பிடிப்பார்)
சாவைப் பார்த்து சிரிக்கிறவண்டா நான். உன்னுடைய பணம், அந்தஸ்து, செல்வாக்கு, அடியாட்கள் யார் வந்தாலும் சரி! (தலையை பக்கவாட்டில் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்புவார் எவன் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்ற அர்த்தத்தில்)
'இந்தப் பிடியிலிருந்து நீ தப்பவே முடியாது. (பிடியை இறுக்குவார்) இப்ப நீ சரின்னு சொல்லல?' ....
ஆத்திரத் தாண்டவம் ஆடி விடுவார்.
"ஓ..அந்த அளவுக்குத் துணிஞ்சிட்டியா நீ?" என்று முத்துராமன் ஒரு முடிவுக்கு வந்து எழுந்தவுடன், கோட்டிலிருந்து 'விருட்'டென்று கைகளை எடுப்பார் வேகமாக. செம ஸ்பீட்.
முத்துராமன் சற்று முன்வந்து நிற்பார். தலைவர் தலையைத் திருப்பியபடி முறைத்தவாறு அங்கேயே நிற்பார்.
'இப்போ நான் என்ன சொல்லணும்?'
முத்துராமன் கேள்வி இது.
'ராஜியைக் கல்யாணம் செய்துக்கிறேன்னு சொல்லணும் '.
தலைவர் கட்டளை இது.
சொல்லும்போது இடது கையை இடுப்பில் செம கம்பீரமாக வைத்தபடி சொல்வார்.
"அவ்வளவுதானே!'----முத்துராமன்.
'அடுத்த வாரத்துக்குள்ள அது நடக்கணும்'
நடிப்பின் ஆண்டவர் ஆணையிடுவார். கட்டளையிடுவார்.
'பிறகு?'
அதே போஸில்,
"அவ சந்தோஷமா வாழறத நான் பார்க்கணும்"
என்று அப்படியே நிற்பார்.
'உன் இஷ்டப்படியே செய்யிறேன். நவ் யூ கேன் கெட் அவுட்'
முத்து சொன்னவுடன்
அப்படியே ஒரு சிறிய வெறிச் சிரிப்பு, வெற்றிச் சிரிப்பு, எதிர்பார்த்த பதில் வந்ததே என்ற சிறு திருப்திச் சிரிப்பு இவர் முகத்தில் வந்து படர்ந்து போகும்.
இடுப்பில் கைவைத்தபடியே அதே போஸில் பின்னோக்கி நகர்ந்து வருவார். முத்துராமனின் முகத்திற்கு நேராக பக்கவாட்டில் நின்றபடி,
'இதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காதே?!'
என்று முறைத்தபடி கேட்பார்.
முத்துராமன் இவர் நிலைமை புரிந்து,
"மாற்றத்தான் விட மாட்டியே?"
என்று நிர்க்கதியாய் நின்று, விரக்தியாய் வெறுப்பு உமிழ,
அப்படியே இந்த மனிதர்... இல்லை இல்லை...தெய்வம்
http://i57.tinypic.com/6edvud.jpg
நாக்கால் கீழுதட்டின் இடது ஓரத்திலிருந்து வலது ஓரம் வரை துழாவி, வெறி காட்டி
'நௌ யூ ஆர் ரியலைஸ்'
என்று மறுபடி முத்து மார்பில் விரல் குத்தி,
'இப்ப உணர்ற! இல்ல!'
என்று வன்முறை காட்டி நண்பனை உணரச் செய்த பெருமையோடு சற்றே தலையாட்டி,
'வர்றேன்' என்று செல்பவர்
முத்துராமன் சற்று யோசித்து,
"ஆனா ஒரு நிபந்தனை"
என்று குரலிட்டவுடன்
http://i57.tinypic.com/20u7587.jpg
அப்படியே 'சர்'ரென்று, 'சரக்'கென்று திரும்பி, இடது காலை தள்ளி வைத்து, வலது முழங்காலை சற்று மடக்கி, கைகளை லூஸாக ஆடவிட்டு, காமெராவின் கீழ் ஆங்கிளிலிருந்து என்னையும், முரளி சாரையும், இந்த உலகத்தையும் வாய்பிளக்க வைத்த அந்த அற்புத போஸ் கொடுப்பாரே!
என் இதய தெய்வம், மனித தெய்வம், எங்கள் குலவிளக்கு, எங்கள் சாமி, எங்கள் உயிர்
எங்களை விட்டுப் பிரிந்த தினம். நினைக்க நினைக்க மனம் ஆறுதல் அடையவில்லை. அழுகையும், ஆத்திரமும், துக்கமும் பெருகுகிறதே தவிர காலையில் இருந்து குறைந்தபாடில்லை.
கலைக் கடவுளே!
நீ இல்லாமல் நாங்கள் இல்லை.
தெய்வமே! உங்களுடன் எங்களையும் அழைத்துக் கொள்.
இதற்கு மேல் எழுத திராணியோ, சக்தியோ, தெம்போ எனக்கு மனதிலும் இல்லை... உடலிலும் இல்லை.
மன்னிக்கவும்.
வாசு சார் ... கடைசி வரிகள் படிக்கும் போது கண்கள் பனிக்கிறது...மனதாலும் நினைவாலும் ஆறுதல் அடைய முடியவில்லை...
அன்புள்ள திரு செந்தில்வேல் சார்,
நடிகர் திலகத்தின் புகழ் பாடல் பல ஆயிரம் விஷயம் இருக்கிறது ... ஓராயிரம் கடந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்...
சுந்தர பாண்டியன்
நடிகர் திலகம் உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி ஒரு ரசிகர்கள் இனி வேறு எந்த நடிகருக்கும் அமைவதும் இல்லை இனி அமையபோவதும் இல்லை. வாசு அவர்களே அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அந்த மகானுக்கே நாம் ரசிகர்களாக வேண்டும். மனதை நெருடும் மகத்தான பதிவு உங்களுடியது. மிக்க நன்றி சார்.
அதன் ஆசிரியர் திரு ஸ்ரீராம் அவர்களுடன் பேசிய பிறகு thats tamil .com அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. திரு ஸ்ரீராம் அவர்கள் உடனே கவனிப்பதாக வாக்குறுதி கொடுத்து காப்பாற்றினார். அவருக்கு நம் ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றி.
http://tamil.filmibeat.com/news/siva...ay-035815.html
http://tamil.oneindia.com/news/tamil...al-231566.html
http://tamil.oneindia.com/news/tamil...al-231566.html
Courtesy: Tamil Hindu
திருச்சியில் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாத சிவாஜி கணேசன் சிலை: விரைவில் திறக்க ரசிகர்கள் வலியுறுத்தல்
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி கணேசனின் சிலை. படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி கணேசனின் சிலை. படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள திரைப்பட நடிகர் மறைந்த சிவாஜி கணேசனின் சிலையை விரைந்து திறக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1928-ம் ஆண்டில் பிறந்த சிவாஜி கணேசனுக்கு இளம் வயது முதலே நடிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது இள வயதில் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரையுலகில் நுழைந்து ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக இவர் நடித்த பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் இவரது உணர்ச்சித் ததும்பும் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல.
தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்தவர். உயரிய விருதான செவாலியே விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற சிவாஜி கணேசன் 2001-ஜூலை 21-ல் மறைந்தார்.
இவரது மறைவுக்குப் பின்னர், திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் கடந்த திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டு 2011-ல் திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், சிலை துணியால் மூடப்பட்டது. சிலை திறப்பு கிடப்பில் போடப்பட்டது.
தமிழ்த் திரையுலகில் மாபெரும் நடிகராக விளங்கி மக்கள் மனதில் இன்றும் இடம்பிடித்துள்ள சிவாஜி கணேசன் திருச்சியில் தங்கி, நாடகங்களில் நடித்து வந்த சங்கிலியாண்டபுரம் பகுதி அருகிலேயே சிலை அமைக்க முழு முயற்சி எடுத்த அவரது ரசிகர்கள், சிலை திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பெரும் மன வருத்தத்துடன் உள்ளனர். இந்த சிலையை திறக்க வேண்டுமென வேண்டுமென திருச்சி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த விஷயத்தில் அரசு எவ்வித நடவடிக்கைகையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து அகில இந்திய சிவாஜி மன்ற சிறப்பு அழைப்பாளர் அண்ணாதுரை ‘தி இந்து’விடம் கூறியபோது, “செவாலியே விருது பெற்ற சிவாஜி கணேசன் பெயர் சென்னையில் ஒரு சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டில் அவர் மறைந்தபோது 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் வழங்கப்பட்டது. சென்னை கடற்கரைச் சாலையில் முழு உருவச்சிலை அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் அவரது சிலை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டும் சிலை திறக்கப்படவில்லை. இந்த சிலையை விரைந்து திறக்க வேண்டும் என்பதுதான் சிவாஜி ரசிகர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை” என்றார்.
என் வாழ்வின் நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னை முழுவதுமாக ஆக்கிரமித்த நடிகர் திலகமே, இந்த கணம் வரை உன்னை நினைக்காமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. இனி மேலும் கடக்கப்போவதில்லை.
உன்னை மறந்தால் தானே நினைக்க!
இரா. பார்த்தசாரதி
Awesome Post Vasu sir ,
Dear Vasu,
An expressive pose from Acting God - the body language says all. ஒரு மனிதனின் அனைத்து உணர்ச்சிகளையும் அவரின் இந்த ஒரு pose சொல்கிறது. இது போதும், நாம் அடித்து சொல்ல மற்ற அனைத்து நடிகர்களும் இவரின் கால் தூசிக்கு சமம்.
NT might have left us... but he still lives with us thru his extraordinary movies. Long live NT fame.
I thank you for your wonderful writing...please keep writing.
Regards.
வாசு சார்
தங்களுடன் தொலைபேசியில் உரையாடிய போது, நடிகர் திலகத்தைப் பற்றி ஓர் பதிவு தயார் பண்ணுவதாகவும் அப்போது நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டீர்கள் எனவும் கூறினீர்கள். தங்களுடைய தழுதழுத்த குரலில் அதைக் கேட்கும் போது நான் சொன்னேன், எழுதும் போது தாங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள், படித்த பின்பு நாங்கள் அப்படியாகி விடுவோம் எனக் கூறினேன். அது அப்படியே நடந்து விட்டது.
நெஞ்சை நெக்குருகும் எழுத்தைத் தரவல்லது நடிகர் திலகத்தின் ரசிகர்களால் மட்டுமே முடியும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இல்லை.
தங்களுக்கு என் உளமார்ந்த நெஞ்சம் நெகிழ்ந்த பாராட்டுக்கள்.
பி.கு.
தங்களையும் முரளியையும் சேர்த்து என்னை விட்டு விட்டீர்களே.. ஓ.. நாம் இருவரும் ஒன்றல்லவோ.. தனியே குறிப்பிடத் தேவையில்லை என எண்ணியுிருப்பீர்கள். அதுதனே உண்மை
கோபால்
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
Quote:
அதன் ஆசிரியர் திரு ஸ்ரீராம் அவர்களுடன் பேசிய பிறகு thats tamil .com அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. திரு ஸ்ரீராம் அவர்கள் உடனே கவனிப்பதாக வாக்குறுதி கொடுத்து காப்பாற்றினார். அவருக்கு நம் ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றி.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...a1ab76abaf7259
அருமை நண்பர் குடந்தை சீனிவாச கோபாலன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து...
தினமலர் இணைய தளம் சார்பாக இன்று காலை சிவாஜி ரசிகர்களின் எண்ண அலைகளைப் பேட்டியெடுத்து அவற்றைத் தொகுத்து இணைய தளத்தில் காணொளியாக வெளியிட்டிருக்கிறார்கள்.
My views included in this video
http://cinema.dinamalar.com/tamil_ci...?id=41206&ta=V
A fitting tribute to NT!
http://mlife.mtsindia.in/nd/?pid=428436&rgn=tn
கலைஞர் டீவீயில் ,19/7/2015 ,மானாட மயிலாட ,நடன நிகழ்ச்சி எம்.எஸ்.வீ ஸ்பெஷல் என்று சொல்லபட்டாலும் ,அவரோடு பிரிக்க இயலாத பந்தம் கொண்ட நடிகர்திலகம் ஸ்பெஷல் ஆகவும் அமைந்து விட்டது.
சரோஜாதேவியின் இதயத்தில் இன்றும் ஆக்கிரமிப்பது, பாலும் பழமும்,புதிய பறவைதான். (டெலிபோன் பேச்சில் 1979 என்று நினைவு.தன் பிரிய நடிகராக நடிகர்திலகத்தையே குறித்தார்)
சி.ஐ.டீ சகுந்தலா, மாலையிட்ட மங்கை பட பாடலில் குரூப் டான்சர் ஆக
இருந்ததை குறிப்பிட்டு விட்டு ,தவ புதல்வன் love is fine darling பற்றி சிலாகித்தார்.
முத்தாய்ப்பாக ஏ.எல்.எஸ் புதல்வி (மருமகள்???) ஜெயந்தி ,ஒன்றை குறிப்பிட்டார். எம்.எஸ் .வீ -டி.கே .ஆர் இணைந்தது ,நடிகர்திலகத்தின் பணம்(1952) என்கிற ஏ.எல்.எஸ் தயாரிப்பு. கடைசியில் பிரியும் முன் போட்ட கடைசி பாடல் யார் அந்த நிலவு.சாந்தி(1965) என்ற நடிகர்திலகம் நடித்த ஏ.எல்.எஸ் தயாரிப்பில் வந்த படமே.
நடிகர்திலகத்தின் 14 பாடல்களுக்கு நடனமாடினார்கள்.
http://i1146.photobucket.com/albums/...psypcempep.jpg
http://i1146.photobucket.com/albums/...psuu0u7lcx.jpg
http://i1146.photobucket.com/albums/...psicnrjjb5.jpg
http://i1146.photobucket.com/albums/...pslo77tfaz.jpg
http://i1146.photobucket.com/albums/...psj6m3hjuw.jpg
http://i1146.photobucket.com/albums/...psvohrnwhu.jpg
http://i1146.photobucket.com/albums/...pskdhgtysq.jpg
திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் திலகம் நினைவு நாள், திரு அண்ணாதுரை, சிறப்பு அழைப்பாளர், அகில இந்திய சிவாஜி மன்றம் அவர்களால் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிழற்படங்கள் நம் பார்வைக்கு. நன்றி திரு அண்ணாதுரை.
Vikatan EMagazine
Yesterday at 23:30 ·
நடிகர் சிவாஜி நினைவுகள்....பொக்கிஷ பகிர்வு
* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
... * 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
மானா பாஸ்கரன்
ஆனந்தவிகடன்/சிவாஜி 25ல் இருந்து..
இன்று நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு தினம்
https://scontent-ord1-1.xx.fbcdn.net...a3&oe=56141DBD
கனடாவில் இருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையில்
நடிகர் திலகத்தின் 14ம் ஆண்டு நினைவு நாளையொட்டி
பிரசுரிக்கப்பட்ட கட்டுரை
http://i58.tinypic.com/xfukhj.jpg
http://i62.tinypic.com/2rf9deo.jpg
http://i61.tinypic.com/2zoys06.jpg
சில விஷயங்கள்.
சோவும் ,கலைஞரும் இரு துருவங்கள் என்றாலும், மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருக்கும் மகளை காண சென்ற கலைஞர், அங்கே தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சோ வை காண சென்று அரசியல் மனிதம் வளர்த்து,தான் ராஜாஜி,காமராஜ்,அண்ணா கால நாகரிக அரசியல்வாதி என்று நிறுபித்துள்ளார். தலை வணங்குகிறோம்.
கலைஞர் தான் உண்டாக்கிய மது கேட்டை.,தானே களைய முற்பட்டது பாராட்டுக்குரியது.இதில் அரசியலை புகுத்தாமல்,எல்லோரும் பாராட்டலாம். தவறில்லை.
நடிகர்திலகத்தின் மணிமண்டபம் குறித்து சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சங்கர் என்ற பத்திரிகையாளர் அநாகரிகத்தின் எல்லை மீறியிருக்கிறார். தமிழர்கள் என்றாலே இளப்பம் என்று ஆகிவிட்டது போலும். மணி மண்டபத்தை குடும்பத்தினர் கட்ட வேண்டுமாம். பல பிரபல அரசியல்வாதிகளுக்கு சமாதியும்,சிலைகளும் வைத்தது குடும்பமா.அவர்களால் பலன் பெற்றவர்களா அல்லது அரசாங்கமா?பத்து கோடி தமிழர்களின் பெருமை,சொத்து நமது நடிகர்திலகம். அவர் தனது மக்களை மகிழ்வித்து,உயர்விக்கும் கலையில், தன்னை வருத்தி,உழைத்து,தன்னுடைய பிறவி மேதைமையை மக்களுக்கு அர்பணித்த மகான். அவர் மகனுக்கும்,பேரனுக்குமா அவர் நடித்தார்?இன்று பல மொக்கைகளுக்கு கோடி கணக்கில் அள்ளி கொடுக்கும் திரையுலகம்,அன்றைய சோசியலிஸ்ட் இந்தியாவில் நியாயமான ஊதியமே கடினம். எவ்வளவு கடின உழைப்பு,அதுவும் சிவாஜி மாதிரி உண்மையான ஈடுபாடுள்ள உலக நடிகர்களுக்கு? எதற்கு குடும்பத்தை இழுக்கிறீர்கள்?நாங்கள் இருக்கிறோம். பத்து கோடி தமிழர்களும் தங்களால் இயன்றதை தந்து கட்டி விடுவோம். நாம்தானே அவரால் பலன் பெற்றோம்? நாமே செய்வோம்.
பம்மலார் ,புத்தக விஷயத்தை இழு இழு என்று இழுப்பது மிக சோர்வையும் ,வேதனையையும் தருகிறது,oct 2013,jan 2014,july 2014,jan 2015 என்று போக்கு காட்டி இன்னும் நேரம் குறிக்க காணோம். ரசிகராக இதை நாம் கேட்கவில்லை. நமக்கு பிடிக்காததில் முன்னுரிமை கொடுத்து,நம் விஷயத்தை நேரம் தராமல் ஒத்தி வைப்பது மிக கண்டிக்க தக்கது. அவர் நண்பர்,சக ரசிகன் என்பது வேறு. இது வேறு. தயவு செய்து அவரும் இந்த வேறுபாட்டை உணர்வார் என நம்பி, அவர் புத்தகத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு பம்மலார் ரசிகன். சிங்கப்பூர் ,இந்தோனேசியா,ஹாங்காங்,இவற்றில் மட்டும் நூறு பிரதி விற்று கொடுக்க நானாயிற்று. இனிமேலும் எங்களை சோதிக்காதீர்கள் பம்மலாரே .ஒரு ரசிகராக ,இங்கு வந்து நினைவு நாள் பதிவு கூடவா போட கூடாது?