http://i68.tinypic.com/2qs3vhx.jpg
Printable View
ராஜவேலு:
எங்க தலை குனிய வச்சுட்டு நீ எப்பவும் நெஞ்சை நிமித்திட்டு நடப்பியே இப்ப ஏன் குனிஞ்ச தலை நிமிரவே இல்லையே ஏன்?
மாணிக்கம்:
உம் முகத்தை பாக்கவே கண் கூசுது.
ராஜவேலு:கூசத்தாண்டா செய்யும்?எம் முகத்தை மட்டுமல்லஇந்த ஊர் முகத்த பார்க்கவே உனக்கு கண் கூசத்தான் செய்யும். நல்லவனா இருந்தா இந்நேரம் அவமானம் தாங்காம நாக்க புடிங்கிக்கிட்டு செத்துருக்கனும்..
மாணிக்கம்:இதுல என்னடா அவமானம்?இதோ இடுப்புல இருக்கிற கதிர் அரிவாளைஎடுக்கக் கூட சக்தி இல்லாம ஒரு கையாலவயித்தைப் புடிச்சுக்கிட்டு இன்னொரு கையால மானத்தையும் மறைச்சுகிட்டு நின்னுகிட்டுஇருக்கே உன் முன்னாலே பட்டினிக்கூட்டம்,அவங்க வயித்துக்கு சேர வேண்டிய கஞ்சியை உன் சட்டையில் போட்டுகிட்டு விரைச்சுகிட்டு நிக்கிறியே இதுக்கு
நீ தாண்டா அவமானப்படனும்.உன்னை எல்லாம் இன்னும் விட்டு வச்சுருக்கம்பாரு அதுக்கு நான் மட்டும் இந்த நாடே வெட்கப்படணும்.
ராஜவேலு:இதுக்கு அப்புறமும் உன் திமிறு அடங்கலே பாரு
மாணிக்கம்:இது அடங்கற திமிரு இல்லே அடக்கற திமிறு.
அய்யாக்கண்ணு:ஏடா செஞ்சே? எதுக்கு செஞ்சே?
மாணிக்கம்:நான் ஏன் செஞ்சேன்? எதுக்கு செஞ்சேன்னு அவங்கவங்க
மனசுக்குத் தெரியும்.
ராஜவேலு:எங்க மனசுக்கு தெரிஞ்சா பத்தாதுடா?இங்க கூடி இருக்கிற கூட்டத்துக்குநல்லா கேட்கிற மாதிரி சத்தம் போட்டு சொல்லு.
மாணிக்கம்:சொல்றண்டா. சொல்றேன்.
வயலை எரிச்ச பந்தத்தை அணைச்சு வச்சுறுக்கேன்.அத மறுபடியும் கொளுத்தி எடுத்துட்டு வந்துஎன்னை உயிரோடு கொளுத்திடுவேன்னு சொன்ன அத்தனை பயலுகளையும் எரிச்சு சாம்பலாக்கிட்டு அந்த சாம்பல் மேட்டுல நின்னுகிட்டு சத்தம் போட்டு சொல்றண்டா. சத்தம் போட்டு சொல்றேன்.
மாணிக்கம்:சின்ன வயசுல இருந்து என் பையனை நான் தொட்டதே இல்லேன்னுபெருமையா பேசிக்குவீங்களே!உங்க ஆத்திரம் தீரும் வரை அடிங்க. அடிங்க.ஏன்னா என்னை பழி வாங்கணும்ங்கிற வெறி அவங்கள விட உங்களுக்குத்தானே அதிகம்.வாங்க உங்க எஐமான விசுவாசத்த காட்ட நல்ல. சந்தர்ப்பம்.அடிங்க. நல்லா அடிங்க
மாணிக்கத்தின் வார்த்தைகளால் தாக்கப்பட்டு அய்யாக்கண்ணு தடுமாற ,
அதற்குப்பினநடக்கும் சில நிகழ்வுகள் உண்மையைச்சொல்லி சுபமாக்குகிறது.
http://i1065.photobucket.com/albums/...psborqyhoo.jpg
மேலே சொன்ன காட்சிதான் க்ளைமாக்ஸ் என்றிருந்தாலும்
படத்திலே வரும் பல காட்சிகள் அதைவிட பிரமாதமாக அமைந்திருக்கும்.
நடிகர்திலகம் வரும் முதல்காட்சி வசனங்களேஏகஅமர்க்கள
மாயிருக்கும்.வேட்டி
சட்டை யில்ரெண்டு மாட்டையும் பிடித்துக்கொண்டு அவர் அறிமுகமாகும் காட்சி அருமையிலும் அருமை.இந்த ஒரு போட்டோ சொல்லுமே அதன் அழகை.
http://i1065.photobucket.com/albums/...psdszlm0tk.jpg
அடக்கமா கேட்டா மரியாதையா பதில் வரும்.இகழ்ச்சியா கேட்டா
அதுக்கேத்தமாதிரி பதில். மேல கைய வைச்சா பதிலுக்கு பதில்.எல்லாருக்கும் வேலைக்கேத்த கூலி கிடைக்கணும்.ஏழையோ,
பணக்காரனோ மனுஷனுக்குண்டான மதிப்பு குடுக்கணும். இதுதான் மாணிக்கம் கேரக்டர்.
அதிரடி அறிமுகம்:
வயலில் வேற்று ஆட்களை வைத்து
வேலை வாங்க நம்பியார் முன்னே வர
"வயலில் காலை வைத்தால் காலை ஒடைச்சுருவேன்"னு சத்தம் மட்டும் வரும்.யார்ராராதுன்னு எல்லோரும் பார்க்க, நெற்கதிர்களின் பின்னே இருந்து வந்து நடிகர்திலகம் காட்சி தரும் காட்சி கண் கொள்ளா காட்சி.
முதலில் தொழிலாளர்களுக்கு பரிஞ்சு
பணிவாய் விவாதம் செய்ய அதற்கு நம்பியார் "உங்கப்பன் கொடுப்பான்"
மரியாதை குறைவாய் பேச ஆரம்பிக்க,சட்டென்று பணிவு மறைந்து பதில் மரியாதைக்கு தாவி,
பதிலுக்கு பதில் வசனங்களலால்
அந்த அறிமுக காட்சி முழுவதும் கலகலப்பாக செல்லும்.கதிர் அறுப்பது.,கதிர் அடிப்பது என்று அவர் டக் டக்குன்னு இயல்பாக வயலில் இறங்கி வேலை செய்யும் நடிப்பு அசல் கிராமத்து விவசாயியை விட அழகு+எதார்த்தம்.
நடிகர்திலகம் வரும் அடுத்த காட்சி:
காந்திமதி, நடிகர்திலகம் இருவரும் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும் காட்சி.எவ்வளவு இயல்பாக இருக்கும்.
விஜயகுமாரி எங்கே என்று விசாரிக்க ,
முத்துராமனை பார்க்க சென்றிருப்பதாக காந்திமதி சொல்ல நொடியில் சடாரென்று கோபப்படுவதும்,விஜயகுமாரி வந்தபின்பு விசாரிக்கையில் ஆத்திரப் படுவதும் பின்
ஆதங்கப்படுவதுமாய் மாறி மாறி உணர்ச்சி வசப்படுவதுமாயும்,தடங்கலின்றி பெய்யும் மழையாய் வசனங்கள்
பொழிந்து மழை நின்றது போல் சற்று ஆசுவாசப்பட மீண்டும் வி எஸ் ராகவன் வர அதே மழை தொடர, என்று காட்சிகள் ஜிவ்வென்று சுறுசுறுப்பாய் செல்லும்.பெரிய ஆக்ஷன் படங்களில் கூட சில சமயங்களில் நடிகர்திலகத்தின் குடும்பபடங்களில் வரும் இது போன்ற விறுவிறுப்பு சுவாராஸ்யங்களை
காண முடியாது.
சவால்கள் சமாளிக்கப்படும்(தொடரும்)
Hearty welcome to brother Senthilvel for opening part 17 of this glorious thread and hope the thread will be colourful as usual with your art.
all the verybest.
iam also happy to inform all our friends that iam leaving for USA on 31st to attend my daugher who is on the family way.
with BLESSINGS
Hearty congrats subramanyam ramajeyam sir on your way to be a grandpa! God bless your daughter!!
senthil
Even as I sincerely thank all the contributors hitherto I extend a warm welcome joining hands with all to Arima Senthilvel to have the honor of inaugurating the 17th part of our NT thread with all his aplomb for a colorful presentation of his mind on NT!!
senthil
வியட்நாம் வீடு ஸ்டில்கள் மிக அருமை முத்தையன் சார்
நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்
http://i1028.photobucket.com/albums/...ps69fmqard.jpg
நெருக்கியடிக்கும் திருவிழாக் கூட்டத்தில் வெயிலில் அலைந்த களைப்பு தீர
மரத்தடி நிழலில் நின்று
பருகும் இளநீர் தரும் ஒரு
குளுமையை...
சத்தம், சாப்பாடு,சந்தோஷம்
எல்லாமே கொஞ்சம் அதிகமாக
காணப்படுகிற கல்யாண வீட்டு
களேபரத்திலும், பெண்ணைப்
பெற்றவனின் மனம் காணும்
நிம்மதி மிகுந்த மௌனத்தை..
மடித்துக் கட்டிய வேட்டியும்,
பனியனை வெளிக் காட்டும்
மெல்லிய ஜிப்பாவும், கண்களில்
கனலும், நீட்டி முழக்கிப் பேசும்
பேச்சுமாய் நடிகர் திலகம்
வாழ்ந்த "கருடா சௌக்கியமா"
படத்தின் வேகப் போக்கினூடே
இந்த மென்பாடலைப் பார்த்த
போது உணர்ந்திருக்கிறேன்.
சில வருத்தங்கள் நம் மனதோடு தங்கி விடுகின்றன.
"வேறு மாதிரியான நல்ல படம்" என்பதற்கான மிகச்
சிறந்த உதாரணப் படமாய்
அமைந்த இந்தப் படம் ஏன்
அதிகமாகப் பேசப்படவில்லை..
போற்றப்படவில்லை..?
- என்கிற வருத்தத்தைப் போல.
ஒரு படம்.அதற்குள் பாடல்களைத் திணிக்கிற கதைச் சூழல்கள்.. இதெல்லாம்
மீறி இந்தப் படத்தின் கதையோடு ஈஷிக் கொண்டு
வருகிற இந்தப் பாடலின்
சூழல் அற்புதமானது.
சதையைப் போற்றும் சராசரிப்
பாடல்களிலிருந்து தூரமாய்
விலகிக் கொண்டு, காதலைக்
கண்ணியமாய்ப் பேசுகிறது..
இந்தப் பாடல்.
மெல்லிசை மாமன்னர் இந்தப்
பாடலின் மென்மையில்
வாழ்கிறார்.
அரிதான, இனிமையான சசிரேகாவின் குரலை நமக்கும்,
காற்றுக்கும் மிகவும் பிடிக்கிறது.
"பாடும் நிலா" என்று எஸ்.பி.பி
அவர்களை அழைப்பது சரிதான்
என்று அழுத்தமாய் நிரூபிக்கிறது இந்தப் பாடல்.
இசை வெளிச்சமற்று இருண்டு
கிடக்கிற நம் இதயங்கள்
ஒளிர, ஒளிர "நிலா" பாடுகிறது.
ரௌடிக் கட்டு விடுத்து, கண்ணியமான அந்த வேட்டிக்
கட்டல், அடர் நீலச் சட்டை அணிந்து நடந்து வரும் அழகு,
நடிகர் திலகத்திற்கு மட்டுமே
வாய்த்த அழகு.
" சந்தன மலரின் சுந்தர வடிவில்" என்று பாடத்
துவங்குகிற நிமிஷத்தில்,
மனைவியின் முன் நின்று
ஓர் வளர்ந்த குழந்தை போல்
சட்டையின் கீழ்ப்புறமாய்
நீவி விட்டுக் கொண்டு பாடும்
நடிப்பை இந்தத் தலைமுறை
நடிகர்களெல்லாம் பார்த்துப்
பார்த்துக் கற்றுக் கொள்ள
வேண்டும்.
ஊரையே பயந்து மிரள வைக்கும் தீனதயாளு தன் அன்பான மனைவிக்கு மட்டும் தனது சுயரூபம் காட்டாது,
மென்மையானவனாய்க் காட்டிக் கொள்கிற கதைச் சூழலை உள்வாங்கிக் கொண்டு
அவர் வெளிப்படுத்துகிற
நடிப்பில் அசந்து போகிறோம்.
-----------
"மு த் து க் கி ரு ஷ் ணா.."
என்று விரல் சொடுக்கி
அழைப்பதிலும், சிரித்த முகம்
மாற்றாமல் கானம் பாடி"
நடப்பதிலும் மயங்கிக் கிடக்க
நாமிருக்கிறோம்.
எது வேண்டுமென்று நாம்
நினைக்கிறோமோ.. அதை
அப்படியே தருவதற்கு அவர்
இருக்கிறார்.
பிறகென்ன..?
https://youtu.be/-FWGP3ubDus
செந்தில்வேல்,
மாணிக்கத்தின் சவாலை திறம்பட சமாளித்த நீங்கள் தொடரும் பாகத்தையும் திறம்படத் துவக்கி அனைவரையும் ஆனந்தக் களிப்பில் மூழ்கடிப்பீர்கள் என்பது திண்ணம்.
முத்தையன்
வியட்நாம் வீடு ஸ்டில்ஸ் ஒவ்வொன்றுமே கண்களைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளையடிக்கின்றன. பாராட்டுக்கள்.
ரவி
முத்துக்கிருஷ்ணன் என்னையும் வாசுவையும் ஆட்கொண்டாற்போல தங்களையும் விடவில்லை. தங்களை மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் விடவில்லை.
என்ன சொல்பவர் சிலபேர், மௌனமாக ரசிப்பவர் பலர்.
தலைவரின் சொல்லழகிற்கோர் உன்னதக் காவியம் கருடா சௌக்கியமா.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
நடிகர் திலகம் திரியின் அடுத்த பாகத்தை துவக்கி வைக்க நான் யாரை மனதில் நினைத்திருந்தேனோ அவரையே அனைத்து நண்பர்களும் வழி மொழிந்திருக்கிறார்கள் எனும்போது மகிழ்வாக இருக்கிறது.அனைவரின் ஒருமித்த கருத்திற்கேற்ப இளைய சகோதரர் செந்திவேல் அவர்களை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் Part -17-ஐ துவக்கி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாகம் 17 ஐத் துவக்கப் போகும் செந்திவேல் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 17ல் ஆவணங்கள் ஆனவரை நிறையட்டும். ஒரு வரிப் பதிவுகள் அகலட்டும். அலசல்கள் தொடரட்டும். அனைத்துப் பங்களிப்பாளர்களும் தத்தம் பங்கை நல்கட்டும். விரைவில் 18 ஐக் காண்போம்.
முரளி சார்
17ஆம் பாகத்தை துவக்கி வைக்கும் பெருமையை அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பழைய திரிகளில் பங்கெடுத்து பெருமை சேர்த்தவர்களை அழைத்து வர முயற்சி செய்ய வேண்டும்.உங்களால்முடியும் .
நீங்களும் உங்கள் அனுபவ தொடரை பெரிய இடைவெளி இல்லாமல் தொடர எல்லோரும் விரும்புகிறோம்.
நன்றி.
Courtesy: Daily Thanthi
சென்னை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் தேவை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
புதுடெல்லி
சென்னை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
சிவாஜி கணேசன் சிலை
சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச்சிலை கடந்த 2006–ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, சிலையை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
எனினும் சிலை இதுவரை அகற்றப்படாததால், நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மீது, திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
மேல் முறையீடு
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த 2014 ஜனவரி 23–ந் தேதி பிறப்பித்த உத்தரவின் படி உடனடியாக சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்றும், இது குறித்து அடுத்த மாதம் (நவம்பர்) 16–ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
2 ஆண்டுகள் ஆகும்
நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் கட்டுவதற்காக பல்வேறு துறைகளுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தற்போது சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் நடிகர் சிவாஜி சிலை அகற்றப்பட்டு, தமிழக அரசு கட்டப்போகும் அந்த மணிமண்டபத்தில் வைக்கப்படும்.
இந்த மணிமண்டபத்தை கட்டுவதற்கு குறைந்தது 2 ஆண்டுகள் தேவைப்படுகிறது. எனவே 2 ஆண்டுகளும் நடிகர் சிவாஜி சிலை தற்போது உள்ள காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பிலேயே தொடர்ந்து வைத்திருக்க அவகாசம் வழங்க வேண்டும்.
மேலும் தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நடிகர்திலகத்தின் சிலை அகற்றல் தொடர்பாக "தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள" நெடுஞ்சாலைத் துறையை நீதிமன்றம் கேட்டபோது 'சிலை போக்குவரத்துக்கு இடையுறாக இருப்பது உண்மைதான். அதனால் விபத்துக்கள் நடப்பது உண்மைதான் என்று கூறியது.
அதனை ஏற்று உயர்நீதிமன்றம் சிலையை அகற்ற உத்தரவிட்டது. (பின்னே?. அரசுத்துறையே விபத்து நடக்கும் என்று சொல்கிறதே)
இப்போது "அதே தமிழ்நாடு அரசு" இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்கிறது.
அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு அங்கு விபத்துக்கள் எதுவும் நடக்காது.
அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் சிலை இடையூறாக இருக்காது.
இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் வாகன ஓட்டிகள் கவனமாக ஓட்டுவார்கள். அதன்பிறகுதான் கண்மண் தெரியாமல் வேகமெடுப்பார்கள்.
சரஸ்வதி சபதத்தில் கே.ஆர்.விஜயாவின் அரசு குறித்து நடிகர்திலகம் பேசும் வசனம் இங்கு மிகப்பொருந்தும். ஆனால் அதை எழுதினால் அரசியல் ஆகிவிடும்.
இரண்டு ஆண்டுகள் மட்டும் அவகாசம் கேட்பதைவிட, மணிமண்டபம் கட்டும்வரை அவகாசம் வேண்டும் என்று கேட்டால், சிலை இப்போது இருக்கும் அதே இடத்தில் காலாகாலத்துக்கும் நிலைத்து இருக்க வாய்ப்பு கிடைக்குமே.
From Facebook
An epic classic film Karnan...a film which can never be made again .
Most of the main people involved in the making of the movie are no more with us ..but what a legacy they have left behind....and superb songs....
http://youtu.be/3QhGXfzrGeA
கண்ணுக்கு குலமேது ....
கண்ணா கருமைக்கு இனம் ஏது.................
படம் : கர்ணன் ( 1964)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன் TK . ராம மூர்த்தி
பாடியவர் :பி.சுசீலா
வரிகள் : கண்ணதாசன்
கண்ணுக்கு குலமேது (2)
கண்ணா கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
விண்ணுக்குள் பிரிவேது.. கண்ணா
விண்ணுக்குள் பிரிவேது .. கண்ணா
இழப்புக்கு இருளேது..
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
பாலில் இருந்து…. ஆ..ஆ
பாலில் இருந்து நெய் பிறக்கும்.. கண்ணா
பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்து குலம் பிறக்கும்
அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
கொடுப்பவர் இல்லாம்.. கொடுப்பவர் எல்லாம் மேலாவார்
கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்
தருபவன் அல்லவோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே..
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
திரி பாகம்-17 ஐத் துவக்கிவைக்கவிருக்கும் திரு.செந்தில்வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Expecting another memorable post from Mr V R sir on reaching magic number of 8000.
Advance Congratulation.
திரி பாகம்-17 ஐத் துவக்கிவைக்கவிருக்கும் திரு.செந்தில்வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.