Page 37 of 399 FirstFirst ... 2735363738394787137 ... LastLast
Results 361 to 370 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #361
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    முரளி சார்,
    யாத்ரா மொழி பற்றிய உங்கள் குறிப்புகள் சுவாரஸ்யம் . இந்த படத்தில் நடித்த மலையாள சினிமாவின் சரித்திர கலைஞன் திலகன் ஒரு தீவிர நடிகர் திலகத்தின் ரசிகர் என்பது பலருக்கும் தெரிந்தது தான் . மலையாள சினிமாவில் தன்மானத்தின் அடையாளமாக , சூப்பர் ஸ்டார்களையே தண்ணி காட்டிய , தனக்கு Best supporting actor விருது கிடைத்த போது "supporting actor என்ற ஒன்றே கிடையாது . நான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு நான் நாயகனே தவிர யாருக்கும் சப்போர்ட் செய்வதற்காக நான் நடிக்கவில்லை என சொல்லி அந்த விருதை மறுத்த தெளிவும் துணிவும் உள்ள கலைஞன் திலகன் மனதார பணிந்து வணங்குது தான் குருவாக நினைக்கும் நடிகர் திலகத்தை தான் .யாத்ரா மொழியில் கூட தான் நடிகர் திலகத்தை பணிந்து வணங்குவது போல காட்சியமைப்பை வைக்கச் சொன்னதே திலகன் தானாம் ..இது குறித்து மேலும் உங்களுக்கு தெரிந்திருக்கும் .
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #362
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    எதற்கு வீணே கத்திக் கொண்டிருகிறீர்கள்? தூங்குபவர்களை எழுப்பி.......கதைதான். பாவமன்னிப்பு பெறக்கூட ஒரு அருகதை வேண்டும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #363
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று மாலை காட்சிக்கு என் அம்மா உடன் நம்ம நடிகர் திலகத்தை ரசிக்க சென்றேன் அட நம்ம ராயல் தியேட்டர்க்கு தான் ராஜா படம் பார்க்க .இந்த படம் எங்க அம்மாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகம் படங்களில் ஒன்று . என் அம்மா சொல்லி தான் நான் இந்த படம் DVD வாங்கி பார்த்தேன் . இதே அம்மா என்னிடம் அவன் தான் மனிதன் படம் பற்றி சொல்லி நான் அதை பார்த்து எங்க அம்மாவை திட்டியது தனி கதை என் என்றல் என்னால் இவ்வளவு சோகம் நிறைந்த நடிகர் திலகத்தை டைஜஸ்ட் செய்ய முடியவில்லை .
    சரி விஷயத்துக்கு வருவோம் இந்த படத்தின் போஸ்டர் வியாழக்கிழமை பார்த்த பொழுதே நான் குஷி அடைந்தேன் . இதை அம்மாவிடம் சொன்ன பொழுது அவர்கள் மிகிந்த மகிழ்ச்சி அடைந்தார்கள் . இந்த தியேட்டர் ஒரு சாதாரணமான தியேட்டர் ஆனால் மிகவும் பாரம்பரியம் உள்ள தியேட்டர் . இங்கே தான் நான் முதல் முதலில் நாடோடி மன்னன் பார்த்தேன் . அதாவுது 2008ல் .
    அதுக்கு அப்புறம் சில MGR படங்களை அங்கே பார்த்தேன் . இப்போ இருக்கும் multiplex தியேட்டர் போலே இல்லை .

    இவ்வளவு சொல்லியும் எங்க அம்மா மிகவும் பிடித்தார்கள் நான் அவங்களை அழைத்து செல்ல வில்லை என்றல் என்னக்கு பிரச்சனை ஆகி விடும் என்பதால் வேறு வழி இன்றி அழைத்து சென்றேன் . மேலும் 6.45 பம் காட்சிக்கு நாங்கள் 5.00 PM சென்றோம் . அந்த தியேட்டர் கொஞ்கம் உள்ளே இருக்கு . கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் . ஆனால் தியேட்டர் யை நெருங்கும் பொழுதே ஒரு festival atmosphere தொற்றிகொண்டது , எனக்கு பிரமிப்பு என் என்றல் இது MGR தியேட்டர் போல வார வாரம் இங்கே கண்டிப்பாக MGR படம் ரிலீஸ் ஆகி விடும் தார தப்பட்டை முழம்கும் , மாலை , மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . அதே மாதிரி அங்கே சென்ற உடன் அப்பிடி ஒரு கொண்டாட்டம் அற்பட்டம் மாலை , கட்அவுட்க்கு மலை , கற்பூரம் என்று ஒரே சந்தோசம் அப்பிடி இப்பிடி என்று டிக்கெட் வாங்கி விட்டேன் . நேராக சென்றோம் அங்கே ஒரு பெரிய யானை சிலை இருக்கும் அதை பார்க்கும் ஒரு சந்தோசம் நம்ம சிவாஜி சாரை பார்ப்பது போலே காலையில் தான் காத்தவராயன் வேற பார்த்தேன் அதில் நம்ம ஆளு யானைல தான் அறிமுகம் .
    எங்கள் இருக்கையில் சென்று அமர்தோம் . என்னக்கு பிடித்த நடிகர்களின் படங்களை பார்க்கும் பொழுது ஒரு நிமிடம் திரும்பி பார்பேன் , புல் ஆக இருக்கா என்று (முக்கல் வாசி தேவை இருக்காது
    என்னா நான் போற ரஜினி , அஜித், கமல் படங்கள் முதல் நாள் போய்டுவேன் இவங்க படங்களை தவற வேற படங்களுக்கு செல்லவது இல்லை .) வசந்த மளிகை படம் பார்க்க சென்ற பொழுது கொஞ்ச நேரம் நோட்டம் விட்டேன் எப்போ புல் ஆகும் என்று , ஒரு அளவுக்கு அரங்கு நிறைந்த உடன் தான் நிம்மதி .

    அந்த அவசியம் ராஜாவுக்கு வர வில்லை , கண்ணனுக்கு எட்டிய வரை காலி இருக்கை இல்லை அதுவும் பெண்கள் ,தாய்மார்கள் அதிக அளவில் வந்தார்கள் . இங்கே நம்ம ரசிகர்களை பற்றி சொல்ல வேண்டும் வெளியே எவ்வளவு அலப்பறை செய்த பொழுதும் உள்ளே படம் பார்க்கும் பொழுது கொஞ்சம் அமைதி காத்தார்கள் .

    படம் ஆரம்பித்தது , சுஜாதா சினி ஆர்ட்ஸ் emblem தோன்றியது உடன் ஒரே கிளாப்ஸ் தான் அதுகே அப்படி என்றல் சிவாஜி பெயர் போடும் பொது எப்படி இருந்து இருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள் .

    கொஞ்ச நேரம் அமைதி ஆக இருந்த அரங்கம் , ஜெயில் காட்சியில் நெருப்பு தெரிந்த உடன் கற்பூரம் காட்டுவதும் , கூச்சல் இடுவதும் , விசில் அடிப்பதும் ஒரே அமர்க்களம் தான் , இதே response ஜெயலலிதா அறிமுகம் ஆகும் காட்சியிலும் காண முடிந்தது அந்த ஹோட்டல் சீன்ல் சிவாஜி ராஜா வென்று வித விதமாக சொல்லும் பொது

    திரும்பவும் ஒரு அமைதி , நீ வர வேண்டும் என்று எதிர்பாத்தேன் பாடல்க்கு நல்ல response . தியேட்டர் இரண்டாக கிழிந்தது என்ன வென்று பார்த்தல் அந்த மல்யுத்த வீரன் உடன் நம்மவர் சண்டை போடும் காட்சி . கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக சென்ற படம் மீண்டும் கண்ணன் உடன் சண்டை இடும் இடத்தில கூடம் அற்பரிதது , இப்படி சென்ற படம் கோவில் கொள்ளை சம்பவங்கள் காட்சிகள் பொது கொஞ்சம் restless ஆனது பட் சிவாஜி அவங்களை காப்பதும் காட்சி மீண்டும் எங்களை படத்துக்குள் இழுத்தது .

    அதுக்கு அப்புறம் ரங்கா ராவ் காட்சிகள் மீண்டும் ஒரு ஸ்பீட் breaker சிவாஜிக்கு உண்மை தெரிந்து அவர் அந்த போட்டோவை ஒரு கையால் அடிக்கும் காட்சியில் மீண்டும் ஒரு applause . அந்த விறுவிறுப்பு அடுத்த காட்சிகளையும் தெரிந்தது குறிப்பக பாலாஜி உடன் சண்டைய்டும் காட்சி. அப்படி இப்பிடி என்று கிளைமாக்ஸ் வந்தது , மீண்டும் ஒரே ஆர்பாட்டம் , சிவாஜி அழுது, சிரிக்கும் காட்சிக்கு தான்

    படம் முடிந்த உடன் அனைவரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி .பிரிண்ட் கூட ஓகே. என் அம்மா முகத்தில் ஒரே குஷி படம் முடிந்து வர வர மீண்டும் பேசி கொண்டே வந்தோம் என்னமோ இப்போ தான் முதல் முறையாக பார்த்த படம் போலே ஆனால் போர் அடிக்க வில்லை
    இனி சிவாஜி படங்களும் வரும் என்று எதிர்பார்க்கலாம்
    என்னக்கு ஒரு சந்தேகம் இது தேவ் ஆனந்த் படம் இதே மாதிரி இருக்கும் jewel thief படத்தை என் இதே கூட்டணி ரீமேக் செய்ய வில்லை.
    Last edited by ragulram11; 10th June 2013 at 10:25 AM.

  5. #364
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய காலகட்டங்களில் ஒரு பழயபடத்திற்க்கு தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் முதலாளிகள் சந்தோஷத்துடன் தங்கள் நவீனமயமாக்கப்பட்ட திரைஅரங்கில் திரைப்படத்தை திரையிட இசைகிரார்கள் என்றால் அது நம் நடிகர் திலகத்தின் திரைப்படம் தான் என்பதை உலகறியும்.

    ஒவொரு வாரமும் நம் திரையுலக சித்தர் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் திரையிடவேண்டும் என்ற அவசியம் இல்லை.

    எப்போது திரையிட்டாலும் இடும் விநியோகஸ்தரை பொருத்து குறைந்தது 65 - 75 திரை அரங்கில் அதுவும் புத்தம் புதிய தலைமுறை நடிகர்கள் நடித்த பல படங்கள் வெளியீட்டு மத்தியில் திரையிட்டு மற்றவர்கள் பார்த்து பொறாமைப்பட்டு, வயிறெரிந்து நடிகர் திலகத்தின் படத்தை தாழ்புனர்சியில் ஆயிரம் நொட்டை சொல்லும் அளவுக்கு பெருவெற்றி பெறுவது சமீபகாலங்களில் நாம் பார்கின்ற ஒன்று.

    ஆயிரம் நொட்டைகலில் நாம் கேள்விப்படும் சில நொட்டைகள்
    1) பெயரளவில் பார்வையாளர்கள்
    2) மிகை நடிப்பு (நடிப்பை பற்றி பேச ஒரு தகுதியும் இல்லாத கும்பலின் ஓலம் )
    3) Just for Record Purpose
    4) அழுவாச்சி படம்
    5) வேறு ஒன்றும் சொல்லத் தெரியாதவர்கள் சொல்வது "கட்சி ஆரம்பிச்சு ஒரு இடம் கூட ஜெயிக்கமுடியல! மற்றும் இத்தியாதி...இத்தியாதி ...!

    ஒரு நவீன திரை அரங்கின் ஒரு நாள் செலவு அதுவும் மின்சாரம் மட்டும் மும்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் என்ன என்பதை கணக்கு பார்பவர்கள் இந்த முட்டாள்தனமான வாதங்களை முன்வைப்பார்கள என்றால் சந்தேகமே ..அப்படி இருக்க எந்த நவீன திரை அரங்கும் அவர்களுக்கு லாபம் இல்லாமல் எந்த திரைப்படத்தையும் திரையிடமாட்டார்கள் என்பதை ஏன் இவர்கள் புரியாத மாதிரி நடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் நடிகர் திலகத்தை விட சிறந்த நடிகர்கள் என்று ஒத்துகொள்ளத்தான் வேண்டும் !

    இன்றைய நிலையில் நடிகர் திலகத்தின் படங்கள் 65 - 75 திரை அரங்கில் ஒரே நேரத்தில் திரையிடுவது என்பது அந்த திரைப்படம் தொடர்ந்து 72 வாரங்கள் ஒவொரு திரை அரங்கில் திரையிடுவதற்கு சமமாகும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

    ஆகையால் நடிகர் திலகத்தின் படங்கள் தொடர்ந்து வார வாரம் திரை அரங்குகளில் வலம் வர வேண்டிய அவசியம் இல்லவே இல்லை.
    அதுமட்டும் அல்ல, நடிகர் திலகத்தின் படங்களை விநியோகம் செய்த பல விநியோகஸ்தர்கள் இன்று நல்ல நிலைமையில் உள்ளனர். அவர்களில் பலரும் தங்களுடைய வியாபாரங்களை Diversify செய்தும் உள்ளனர். ஆகையால் அவர்களுக்கு திரைப்படங்களை திரையிடும் வியாபாரம் மட்டுமே உள்ளது அதன் மூலம் வருமானம் வந்தால் தான் வண்டி ஓடும் என்ற நிலை இல்லை. நடிகர் திலகத்தின் படங்களை திரையிட்டு வரும் வரவை ஒரு rotation செய்யும் நிலையும் இல்லை.

    இந்த ஊர் எங்க கோட்டை...அந்த ஊர் எங்க கோட்டை என்று திரும்ப திரும்ப என்னமோ நமக்கே சந்தேகம் உள்ளது போல சொல்லவேண்டிய நிலையில் நாம் இல்லை !

    பார்க்கலாம் ...கர்ணன் என்ற ஒரு திரைப்படத்தின் மறுவெளியீடு சாதனையை எந்த திரைப்படத்தின் மறுவெளியீடு முறியடிக்கிறது என்று.

    கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்ததுதானே ஆகவேண்டும் !

  6. #365
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகுல்ராம் ,

    உன் மகிழ்ச்சியை குறித்து எனக்கும் மகிழ்ச்சி. உன் அன்னையாருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள்.

    இங்கே எழுதும் போது ,அனாவசியமாக மற்ற பெயர்களை குறிப்பிட வேண்டாம். அனாவசிய சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும். comparison என்பது அவசியமற்றது.

    உன் வழக்க படி விமரிசனத்தை தொடரு. ரசிக்க நாங்கள் தயார்.

    சிவாஜி, குறிஞ்சி பூ போலவே ராஜா போன்ற படங்களை கொடுத்தார். ஆனால் அதிலும் அவர் தொட்ட சிகரங்களை மற்றவர்கள் தொட இயலவில்லை.

  7. #366
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Gopal sir,

    My intention was not for creating problems sir infact I love such garlands, allaparai even for Makkal thilagam movies as I watched them earlier,
    With due respect I have changed certain words too, thank you for correcting the mistakes

  8. #367
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் திரு. ராகுல்ராம் / ராகவேந்திரன் சார்,

    "ராஜா" - கோவை ராயல் திரையரங்க நிகழ்வுகள் பதிவிற்கு நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #368
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    Gopal sir,

    My intention was not for creating problems sir infact I love such garlands, allaparai even for Makkal thilagam movies as I watched them earlier,
    With due respect I have changed certain words too, thank you for correcting the mistakes
    My advise is simple. Write only about our Nadigarthilagam. Do not even mention any other names.

  10. #369
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய அரிய புகைப்படம்

    (திலகத்துடன் இருப்பவரை தெரிகிறதா?)

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #370
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீதர் ?

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •