Page 178 of 401 FirstFirst ... 78128168176177178179180188228278 ... LastLast
Results 1,771 to 1,780 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1771
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by raghavendra View Post
    ஆர்கேஎஸ்,


    தயவு செய்து என்னைக் குறை கூறுவதில் தங்களுடைய பொன்னான நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

    .
    ராகவேந்தர் சார்

    உங்கள் மீது எனக்கு சிறு கோபம் உள்ளது உண்மைதான் மறைப்பதற்கில்லை. ஒரு நல்ல விஷயத்திற்காக அதுவும் உண்மை விஷயம் பொய்யாக திரிக்கபடுகையில் உங்களை போன்ற நடிகர் திலகம் அவர்களுடன் மிக மிக நெருங்கி பழகியவர் தான் ஆதரவு தரவேண்டும்.

    நீங்களே யோசித்து பாருங்கள், எனக்கு சப்போர்ட் செய்து ஒரு பதிவேனும் நீங்கள் செய்திருப்பீர்களா. உங்களை போன்ற ஜாம்பவான்களிடம் இருந்து அதை நான் எதிர்பார்ப்பது தவறா சொல்லுங்கள் சார் ?

    Rks கூறும் தகவல்கள் சரியே...அல்லது...rks கூறும் தகவல் தவறு..இப்படி ஏதாவது கூட நீங்கள் பதில் எழுதியிருக்கலாமே. பம்மளார் அவர்கள் சுத்தமாக எதுவுமே எழுத வருவதில்லை அவர் தினசரி மையம் படித்தாலும் கூட...அவருக்கு வேலை பளு இருந்தாலும் இது போன்ற சந்தர்பங்களில் மட்டுமாவது வரமாட்டாரா..வந்து உண்மையை உரைக்க மாட்டாரா என்ற ஏக்கம் எனக்கு இருக்காதா ? அல்லது நம் மற்ற ரசிகர்களுக்கு இருக்காதா ? நீங்களாவது தகவலை அவரிடம் கேட்டு பதிவு செய்யலாமே என்று உங்களிடம் ஒரு சிறு கோபம் இருந்தது உண்மைதான்.

    உங்களை தாழ்த்த வேண்டிய எண்ணம் என் தாயின் மீது ஆணையாக இல்லை. எல்லோருக்கும் அவர் அவரின் தாய் எவ்வளவு உயர்வானவர் என்பது உங்களுக்கு தெரியும். அந்த தாய் மீது ஆணையிட்டு கூறுகிறேன். உங்கள் மீது கோபம் சிறிது இருந்ததே தவிர உங்களை தாழ்த்தும் எண்ணம் எனக்கு சிறிதும் கிடையாது சார் !


    இதை நான் தனியாக மினஞ்சல் மூலமாக உங்களுக்கு அனுப்பி இருக்க முடியும். அப்படி செய்யாமல் இங்கு பகிரங்கமாக பதிவு செய்வதன் காரணம் என் மீதி தவறு உள்ளது என்பதால் மேலும் நான் பதிவு செய்தது இங்கு என்பதால். எனக்கு EGO கிடையாது ஆகவே தான் இந்த பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் !

    மக்கள் திலகம் திரியிலும் அப்படிதான் இதுவரை இருந்துள்ளேன். என்மீது தவறு இருப்பின் நிச்சயம் நான் தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கோர தயங்கியதே இல்லை. அந்த பக்தர்களும் அதை அறிவார்கள் !

    உங்கள் மனம் வேதனை அடைந்துள்ளதை புரிந்து கொள்கிறேன். தங்கள் காலில் நான் சாஷ்டாங்கமாக
    நமஸ்காரம் செய்வதாக நினைத்துகொள்ளுங்கள் , நினைத்து , மூத்த சஹோதரர் நிலையில் இருந்து என்னை மன்னித்து விடுங்கள்..ப்ளீஸ் !

    தங்கள் மனம் வருத்தப்ப்படுமாறு இனி நான் எழுதமாட்டேன். I promise on my mother !


    rks
    Last edited by RavikiranSurya; 14th September 2015 at 08:25 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1772
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Senthilvel sir
    usually we nt fans does not visit shanthi theatre on sundays only when some NT movies screening takes place we vit on sundays. please see my pm

  4. #1773
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Sivantha Mann profit records: Great show, particular bhaskar tiruchy, who brought in Sivantha mann profit proof.

    I totally agree with Goldstar. Kalaiventhan from other thread should tender unconditional apology to NT and his fans and feel sorry for defaming and tweaking the history of Sivantha mann success. That is a decent thing to do. Will it happen? We hope that in the future, the other gang will behave as a good citizens and avoid defaming NT.

    class and mass சேர்த்து திரைப்படங்கள் தர முடியம் என பல முறை சாதித்து கட்டியவர் எங்கள் நடிகர் திலகம். தமிழ் திரை உலகின் ஒரே நடிகன் and வசூல் மன்னர் NT புகழ் வாழ்க!!

    Regards




    Quote Originally Posted by goldstar View Post
    Ragavendran sir,

    I strongly suggest and wish Mr. Kalai Vendar should apologies to all NT fans for again and again defaming and giving false and in-correct information to park this topics. I have seen how Sivantha Maan made huge collections in so many re-run in our Madurai theaters....

    Long live NT fame....
    Last edited by tacinema; 14th September 2015 at 09:23 PM.

  5. #1774
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post

    குளோப் தியேட்டரில் வெள்ளி விழாவை மிக எளிதாக கடந்திருக்கக் கூடிய சிவந்தமண் படத்தை ஓட்டக்கூடாது என்று திரையரங்கை நிர்பந்தித்ததெல்லாம் அந்நாளைய வரலாறு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறை சொல்லவரவில்லை. ஆனால் அவர் தங்களிடம் இருக்கிறார் என்பதற்காக நடிகர் திலகத்தை எந்த அளவிற்கு இழிவு படுத்த முடியுமோ, நல்ல வசூல் செய்தும் அவர் படத்தைத் தோல்வி என்று எந்த அளவிற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர் சார்ந்த இயக்கத்தினர் செய்தும் அதனையெல்லாம் சந்தித்து வெற்றி கொண்டு தான் இறந்தும் 14 ஆண்டுகள் கழித்தும் எங்கள் தலைவன் இறவாப்புகழுடன் இருக்கிறார்.

    என்னுடைய வேண்டுகோள், இத்துடன் நாம் இந்த விவாதத்தை முடித்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் மற்ற விஷயங்களைத் தொடருவோம்.
    Dear Raghavendra,

    what bothers me is the first part of your above post. sounds like a well planned motive to defame Sivantha Mann in its original release itself. சிவந்த மண் அழகான படம். மிக நன்றாக ஓடியுள்ள இந்த படத்தை அவர்கள் திசை திருப்பி உள்ளனர் - இப்போதும் செய்து கொண்டே தான் உள்ளனர். அவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். இந்த முறை நாம் அதை செய்துள்ளோம்; மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும். Hope they will stop defaming NT commercial success in the future.

    One thing that I may differ with most of NT fans here and agree with Tiruchi Baskar is that we should focus more on NT unmatched commercial success. The reason is that everyone knows about NT acting versatility; so, no point in focusing on this aspect instead we should direct our energy into highlighting NT's commercial success.

    Regards.
    Last edited by tacinema; 14th September 2015 at 09:51 PM.

  6. Thanks Russellbzy, RAGHAVENDRA thanked for this post
    Likes Russellbzy liked this post
  7. #1775
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy Mr. Sudhangan' Facebook

    செலுலாய்ட் சோழன் – 89
    பேசும் தெய்வம் வித்யாசமான கதைக் களத்தைக் கொண்டது!
    இந்தப் படத்திற்கு கே.வி.மகாதேவன் இசைமையைத்திருதார்!
    இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்!
    இது ஒரு புறமிருக்க!
    1965 ம் வருடம் வந்த `திருவிளையாடல்’ திரைப்படத்தை பற்றி எழுதாமல் சிவாஜியின் சரித்திரமே நிறைவு பெறாது!
    புராணப் படங்களில் ` திருவிளையாடல் தமிழகத்தையே புரட்டிப் போட்டது!
    அதுவும் அந்த படம் வந்த கால கட்டம் மிகவும் முக்கியமானது!
    அப்போது தமிழகத்தில் பகுத்தறிவும் பிரசாரம் தீவிரமடைந்திருந்த சமயம்!
    கடவுள் மறுப்பு என்பது தீவரமாகிக்கொண்டிருதது!
    திமுக அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது!
    அந்த சமயத்தில் வந்த புராண படம் தான் ` திருவிளையாடல்’
    படத்தின் பிரும்மாண்டம், படத்தின் இசை, திரைக்கதை அமைப்பு, மிக அருமையான வசனங்கள்!
    படத்தின் இயக்குனர் ஏ.பி நாகராஜன் தமிழக மக்கள் மனதில் மிகபபெரிய சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டார்!
    அவருக்கு அந்த சிம்மாசனத்தை போட்டுத்தந்தவர் நடிகர் திலகம் தான்!
    அந்தப் படம் வந்த பிறகு சிவபெருமான் இப்படித்தான் இருப்பார் என்று மக்கள் நம்ப ஆரம்பிக்கிற அளவிற்கு சிவாஜி அப்படியே சிவனாக வாழ்ந்திருந்தார்!
    கண்ணதாசன் தன் தமிழை வைத்து பாடல்களில் விளையாடியிருந்தார்!
    என் தாயாருக்கு அந்த படத்தை பார்க்க ஏக துடிப்பு!
    அதனால் முதல் நாளே அழைத்துப் போயிருந்தார்!
    தியேட்டரில் திருவிழாக் கூட்டம்!
    இந்தப் புராணப்படங்களையெல்லாம் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தன் மகள் விஜயலட்சுமி பெயரில் துவக்கிய விஜயலட்சுமி பிக்சர்ஸ் பேனிரில் தான் வெளியிட்டார்!
    படம் துவங்கும்போது திருமகளான லட்சுமி ஒரு தாமரை மலரில் அமர்ந்திருப்பாள்!
    அதன் கீழே நிறுவனத்தின் பெயர் வரும்!
    அந்த காட்சி அப்படியே இருக்கும்போது ஒரு பின்னனிக் குரல் ஒலிக்கும்1
    அது அந்த படத்தைப் பற்றிய ஒரு அறிமுகமாகவே இருக்கும்!
    அந்த குரலுக்குச் சொந்தக்காரர்!
    அப்படித்தான் `திருவிளையாடல்’ படமும் துவங்கும்!
    பேரன்புமிக்க ரசிக பெருமக்களுக்கு எங்கள் நன்றி கலந்த வணக்கம்!
    ஆண்டவன் அன்பர்களுக்கு அருள் புரிந்த திருவிளையாடல் என்கிற பழம்பெரும் இதிகாசத்திலிருந்து சில படலங்களை ஈசன் விளையாட்டெல்லாம் திருவிளையாட்டு என்ற கருத்தினை மற்றும் சில இதிகாசங்களிலிருந்து சிலவற்றை தொகுத்து திருவிளையாடல் என்கிற தலைப்பில் உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்!
    என்று படம் ஆரம்பிக்கும்!
    படத்தின் ஆரம்பம் கைலாயத்திலிருந்து துவங்கும்!
    பூதகனங்களும், முனிவர்களூம், ஒம் நமசிவாய என்று குழுவாக ஈசனை வணங்குதல் போல் படம் துவங்குபோது தியேட்டரை சுற்றி கண்ணை சுழலவிடவேண்டும்!
    பெண்கள் கன்னத்தில் போட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள்!
    அவர்களுக்கு தாங்கள் பார்ப்பது சினிமா என்கிற நினைப்பே இல்லை!
    ஒம் நமசிவாய முடிந்ததும், தாரை தப்பட்டை ஒலிகள்!
    ஏ.பி.நாகராஜன் படத்திற்கு மிகப்பெரிய பலமே அரங்க அமைப்புகள்தான்!
    அந்த நாளில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஆர்ட் டைரக்டர் கங்கா!
    சொர்க்கத்தை கூட ஸ்டுடியோவிற்குள் கொண்டு வந்துவிடுவார்!
    கைலாயம் என்றால் கைலாயமாகவே இருக்கும்!
    பல வேத விற்பன்னர்களை கேட்டு,ஸ்தபதிகளோடு பேசித்தான் அவர் புனிதமான அரங்குகளை அமைப்பார்!
    அப்படிப்பட்ட ஒரு கைலாய அரங்கில் பல்வேறு வாத்யங்களை வாசித்தபடியே படம் துவங்கும்!
    சிவனுக்கு பிரதானமே நந்தி!
    அந்தி நந்தி மிருதங்கம் வாசிக்கும்!
    நந்திக்கு வேட்டி கட்டி, அந்த நந்தி அமர்ந்தபடி வாத்யத்தை வாசிக்கும்போதே பிருமிப்பாக இருக்கும்!
    அப்போது நாரதர் வருவார்!
    சீர்காழியின் குரல் கம்பீரத்தில் ` சம்போ மகாதேவா’ பாடல் கணீரென்று ஒலிக்கும்!
    அடுத்து பெண்கள் வீணை மீட்டு, யாழிசைத்து, குழுவாக நடனமாடுவார்கள்!
    இவையெல்லாம் முடிந்ததும் உமையவளாக படத்தில் நடித்த சாவித்திரிக்காக சுசீலாவின் குரல் ஒலிக்கும்!
    நமச்சிவாய! நாதன் தாழ் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில்
    நீங்காதான் தாழ் வாழ்க!
    ஈசனடி போற்றி!
    எந்தையடி போற்றி!
    தேசனடி போற்றி!
    சிவன் சேவடி போற்றி!
    நேயத்தே நின்ற நிமலனடி போற்றி!
    மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி!
    சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றி!
    ஆராத இன்பமருளும் மலை போற்றி!
    இந்தப் பாட்டை உமையவள் பாடி முடித்ததும் புலித்தோல் உடையுடன் தத்ரூபமாக சிவனாக சிவாஜி வருவார்!
    ஒரு பத்து நிமிடம் அடுத்த வசனம் காதில் விழாது!
    நான்காவது முறை படம் பார்த்தபோதுதான் அடுத்து கைலாயத்திற்கு வந்திருக்கும் நாரதர் என்ன பேசினார் என்பஹே காதில் விழும்!
    சிவாஜி மக்கள் சிவனாகவே கண்டதன் விளைவு அது!
    அடுத்து நாரதர் துவக்குவார்
    `உமா மகேஸ்வரே!உலகக் காக்கும் பரம்பொருளே! திருவருள் புரியுங்கள் சுவாமி!
    உடனே சிவன் பேசுவார்!
    `உமையவளே! என் உள்ளம் கவர்ந்த மலைமகளே!
    தாய்க்குலத்தின் தலைமகளே!
    உலகத்தவர் போற்றும் வடிவாம்பிகையே!
    வருக அமர்க! என்றதும் உமையவள் ஈசனுக்கு பக்கத்தில் சென்று அமர்வாள்!
    `சக்தி பூதகனங்களின் வாத்ய ஒலியும்,சப்தரிஷிகளின் வேதம்,நந்தியின் மத்தளம்,நாரதகானம்,வாணியின் வீணை,சப்தகன்னிகளின் ஆட்டம், கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தோம்!உள்ளம் குளீர்ந்திருக்கிறது! வேண்டுவன கேள் தேவி!
    `எங்கும் நிறைந்த எம்பரம்பொருளே என் நாயகா !எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென்று எண்ணுவதை தவிர,வேறென்ன கேட்க போகிறேன்! திருவருள் புரியுங்கள் ஸ்வாமி!
    `எங்கும் எதிலும் வெற்றியே பெற்று எண்ணங்கள் யாவும் சித்தி பெற என் இதயம் கனிந்த நல்லாசிகள்!நலமடைவீர்களாக!
    இப்போது நாரதர் துவங்குவார்!
    `சம்போ மகாதேவா!சர்வேஸ்வரா! சமூகத்தை நாடி ஒரு நற்செய்தி கொண்டு வந்திருக்கிறேன்!
    `ம் ( என்றபடி சிவன் ஒரு நமுட்டுச் சிரிப்பை சிரிப்பார்)
    `நாரதா! புரிகிறது! இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா ?’
    `சிவசிவ! அப்படி எண்ண வேண்டாம்! உண்மையாகவே ஒரு நன்மையான காரியத்திற்காகவே வந்தேன்!
    இப்போது உமையவள் சிரித்தபடியே!
    `நாரதனின் கலகம் நன்மையில் முடியும் என்றுதானே கூறுவார்கள்! விஷயத்தை சொல்!
    `சர்வேஸ்வரா! எவருக்குமே கிடைக்காத பழம் ஒன்று எனக்கு கிடைத்தது! இது சாதாரண பழமல்ல! ஞானப்பழமென்று சான்றோர்கள் கூறினார்கள்! இதை நான் அருந்துவதை விட உலகையே காத்து ரட்சிக்கும் தாங்கள் அருந்தினால் பலனுண்டு என்று கொண்டு வந்திருக்கிறேன்!
    `பழத்தை கொண்டு வந்து நாடகத்தை துவங்குகிறாய்?’ நடத்து!
    `உண்மையாகவே சொல்கிறேன்! வேறு எந்த நோக்கத்தோடும் அல்ல! நீங்கள் உண்ணவேண்டுமென்ற எண்ணத்தோடுதான் கொண்டு வந்திருக்கிறேன்! ஏற்றுக்கொள்ளுங்கள்!
    நாரதர் பழத்தை சிவனிடம் கொடுப்பார்!
    `பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டாயா! சரி! உன் சார்பாக நானே அதை துவக்குகிறேன்!
    `என்ன ஸ்வாமி! பாசத்தோடு நாரதன் பழத்தை கொண்டு வந்திருக்கிறான்! அதை அருந்தாமல் அவனை பரிகாசம் செய்கிறீர்களே!
    சிவனின் அடுத்த வார்த்தையிலிருந்தே திருவிளையாடல் துவங்கும்!

  8. #1776
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    நான் மீண்டும் மீண்டும் சொல்லுவதாக எண்ண வேண்டாம்.
    இன்றைய விஞ்ஞான யுகத்தில் மின்னணு ஊடகங்களின் பெருக்கத்தில் தகவல் தொடர்பு என்பது மிக மிக எளிதாகி விட்டது. தகவல் தொடர்பு என்ற வகையில் இது நமக்கு நன்மை பயக்கும் என்றாலும் கருத்துப் பரிமாற்றங்கள் வரும் போது கருத்துரிமைகள் ஒரு நிலைக்கு மேல் போக முடியாத சூழலும் உள்ளது. அதாவது நாம் சொல்ல நினைப்பதை அப்படியே சொல்ல முடியாத அளவிற்கு ஊடகங்களின் தாக்கங்கள் உள்ளன.

    முழுதும் காகித யுகத்தில் இருந்த போது தகவல்கள் அச்சு வடிவில் இருந்த கால கட்டத்தில் நமக்கு நாளிதழ்களும் பருவ இதழ்களும் ஆளுமை பெற்ற ஊடகங்களாக இருந்து வந்தன. இதன் மூலம் சினிமா உலகம் மிகப் பெரிய பலன் பெற்று இன்றைக்கு நூற்றாண்டு விழா காணும் நிலையில் உள்ளது.

    நாளிதழ்கள் பருவ இதழ்களில் வெளிவந்த விளம்பரங்கள் செய்திகள் போன்றவை அனைவராலும் பாதுகாத்து வைக்கப்படக்கூடிய சூழல் அன்றைய கால கட்டத்தில் குடும்பங்களில் கிடையாது. சினிமா என்றாலே பெற்றோர் விரட்டி அடிக்கும் கால கட்டத்தில் ரசிகர்கள் மிகவும் சிரமப்பட்டு தங்களுடைய கஷ்டமான பொருளாதார சூழலிலும் விளம்பரங்களை சேமித்து வந்துள்ளனர். அது எல்லோராலும் முடிந்ததில்லை, சமுதாயத்தில் 0.5 சதம் அளவிற்கு மேல் அவை இருந்திருக்க வாய்ப்பில்லாத கால கட்டம்.

    அந்தக்காலத்தில் விநியோகஸ்தர்கள் தரக்கூடிய விளம்பரங்களில் பெரும்பாலும் வசூல் விவரங்கள் இருக்காது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் மிகச் சில தயாரிப்பாளர்களே வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று ஆவலுடன் தகவல் சேகரித்து அவரவர் நடிகர்களுக்கான மலர், நோட்டீஸ் என வெளியிடுவதன் மூலமாகவே ஓரளவிற்கு உண்மையான வசூல் வந்துள்ளது. இதில் தவறு என்பது அதிகபட்சம் ஐந்து சதம் வரையில் இருக்கலாமே தவிர முழுமையாகப் புறக்கணிக்க முடியாதவையாகும். இது சிவாஜி, எம்.ஜி.ஆர். என அனைத்து ரசிகர்களுக்கும் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால் பணமா பாசமா படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் போது தமிழக மெங்கும் புதியதாக ஜெமினி மன்றங்கள் முளைத்தன. ஆளாளுக்கு அங்கங்கே ஜெமினி பெயரில் மன்றம் ஆரம்பித்து அவர்களும் தங்கள் பங்கிற்கு வசூல் விவரங்களை வெளியிட்டு மூவரில் ஜெமினி தான் சாதனைச் சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி என்றெல்லாம் கூறிக் கொண்டனர்.

    ஆனால் காலப்போக்கில் மின்னணு யுகத்தில் திரையரங்குகளும் தப்பவில்லை. பல திரையரங்குகள் வசூல் விவரங்களடங்கிடய டிசிஆர் என்கிற ஆவணத்தை ஒரு குறிப்பிட்ட காலக்கெடு வைத்துக் கொண்டு அதற்குப் பின்னர் உள்ள விவரங்களை மட்டுமே பராமரிக்கத் தொடங்கின. அதற்கு முந்தைய ஆண்டுகளின் டிசிஆர் போன்ற விவரங்களை அவர்கள் பாதுகாத்ததாகத் தெரியவில்லை, அவை பற்றிய விவரங்கள் இப்போது கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இது ஒரு பக்கம்.

    இன்னொரு பரிமாணம், தயாரிப்பாளர்கள் தரப்பு. பல தயாரிப்பாளர்கள் புதிய தயாரிப்பாளர்களாயிருப்பர், அவர்களுக்கு டிசிஆர் விவரங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. அல்லது அதனை வெளியிட தயங்கியிருப்பார்கள். இதற்கு வருமான வரி போன்ற பல காரணங்கள் இருக்கலாம். அல்லது வேறு காரணங்களும் இருக்க்லாம். இது போன்ற சூழலில் தயாரிப்பாளர்கள் தங்கள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால் கூட அதைத் தோல்விப் படம் என்று அவர்களாகவே சித்தரித்திருக்க வாய்ப்புண்டு.

    இது போன்ற பல காரணங்களால் நம்மால் பழைய படங்களின் வசூல் விவரங்களை சரிபார்க்க முடியாது. நம்முடைய ரசிகர் மன்ற நோட்டீஸில் உள்ள விவரங்கள் உண்மை என்றாலும் கூட அவையும் பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும் என்கிற அவசியம் வந்தால் அதற்கான விவரங்களை சம்பந்தப்பட்ட திரையரங்குகளோ அல்லது தயாரிப்பாளரோ தான் உதவ வேண்டும். இந்த இரு தரப்பிலும் தகவல் பெற நமக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை.

    பத்திரிகை விளம்பரத்திலும் கூட ஒரு சில அபூர்வமான சந்தர்ப்பங்கள் தவிர பெரும்பாலும் வசூல் விவங்கள் இடம் பெறாது, திரையரங்குகளிலும் விவரம் பெற முடியாது, தயாரிப்பாளர் தரப்பிலும் விவரம் கிடைக்காது என்கிற போது எந்த அடிப்படையில் நாம் வசூல் விவரங்களைப் பற்றி விவாதிக்க முடியும்.

    அனுமானங்களும் கணக்கீடுகளும் ஏட்டளவில் எழுதும் போது நன்றாக இருக்கலாமே தவிர ஆதாரமாக பயன்படுத்த முடியாது.

    சாதனைகளை நிரூபிக்க வேண்டுமென்றால் ஓடிய நாட்கள் தான் சிறந்த அளவுகோலாக இருக்கும். அதற்கு நிச்சயமாக விளம்பரங்கள் கை கொடுக்கும். அவை ஓரளவிற்கு கிடைத்து வருகின்றன. அதுவும் நம் பம்மலாரின் ஆவணப் பதிவுகள் மூலம் இவற்றிற்குத் தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல பத்திரிகைகளும் தங்களிடம் இருக்க்க் கூடிய பல பழைய பிரதிகளின் நகல்களுக்கே நல்ல கட்டணம் வசூலித்து சம்பாதிக்கின்றன. எனவே இந்த விளம்பரங்களை வைத்து நாம் நூறு நாட்கள், வெள்ளி விழா என ஒரு படத்தின் ஓட்டத்தின் கால அளவை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இதில் அனுமானங்களும் கணக்கீடுகளும் நிச்சயமாக சரியான தீர்வை அடைய உதவும்.

    இன்றைய கால கட்டத்தில் வாதப் பிரதிவாதங்கள் யாவுமே ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே நடக்கின்றன. நம்முடைய இந்த்த் திரிகளின் விவாதங்களும் அவ்வாறே. எனவே எந்த விதமான ஆதாரங்கள் நமக்குக் கிடைக்க்க் கூடும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப நம் வாதங்களை அமைத்துக்கொண்டால் அதில் அர்த்தமிருக்கும்.

    எனவே மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் வசூல் விவரங்களைப் பற்றிய விவாதங்களை, குறிப்பாக ஒப்பீடு விவாதங்களை முற்றிலுமாக தவிர்க்குமாறு நமது நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes eehaiupehazij, Russellmai liked this post
  10. #1777
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் ஆர்கேஎஸ்
    பொதுவான விஷயத்திற்கு, அதுவும் யூனிவர்சல் ட்ரூத் எனப்படும் நிரூபிக்கப்பட்ட விஷயத்திற்கு, யாராவது ஒருவர் சொன்னாலே போதுமானது. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சிவந்தமண் மிகப் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம் என்பதை எந்த சிவாஜி ரசிகனும் மறுக்கப்போவதில்லை. தங்களுக்கு நான் ஆதரவாக பதிவிடவேண்டுமென்றால் புதியதாக ஏதாவது சொல்லவேண்டும். அதற்கு அவசியமே இல்லை.

    நான் ஒப்பீடுகளைத் தவிர்க்கிற காரணத்தால் அந்த விவாதத்தில் நான் நுழைய விரும்பவில்லை. அதற்காக சிவந்தமண் படத்தின் வெற்றியைப்பற்றி திரு பாஸ்கர் கூறிய கருத்திலிருந்து நான் மாறுபடவில்லை. அது வேறு படத்துடன் ஒப்பீடு செய்யப்படுவதைத் தான் நான் தவிர்க்கிறேன். அதற்காக நான் மாற்று முகாமின் அன்பைப் பெறுவதற்காக அமைதியாக இருக்கிறேன் என்று காரணமும் கற்பிக்கப்பட்டது. அதை நான் பொருட்படுத்தவில்லை.

    ஒப்பீடுகளைக் கடந்து சிவந்தமண் படத்தின் வெற்றியே கேள்விக்குறியாக சித்தரிக்கும் சூழல் வந்தபோது தான் நான் என் கருத்தைக் கூற வந்தேன். நண்பர் ஸ்ரீராம் அவர்கள் கோபுவின் புத்தகத்திலிருந்து அனுப்பிய நிழற்படத்தை மேற்கோள் காட்டி நேற்று என் கருத்தைக் கூறினேன். அதைத் தொடர்ந்து இன்று காலை நண்பர் வாசு அவர்களும் மிகச்சிறப்பாக சிவந்த மண் திரைப்படத்தின் வெற்றியைப் பற்றிய கருத்தைக் கூறினார். தர்த்தி ஹிந்திப் படம் தோல்விப்படமே என ஸ்ரீதர் அவர்களின் நூலிலும் சரி, கோபு அவர்கள் எழுதிய நூலிலும் குறிப்பிட்டிருந்ததற்குத் தான் என்னுடைய கருத்தினைக் கூறினேன்.

    என்னுடைய நிலைப்பாட்டில் நான் புதியதாக எந்த மாற்றமும் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. உங்களுக்கோ அல்லது மற்ற நண்பர்களுக்கோ நான் ஆதரவு தருவதில்லை என்று நான் எந்த நிலைப்பாட்டையும் எடுத்து என் கருத்தினைத் தீர்மானிப்பதில்லை.

    இந்த அடிப்ப்டையில் என் பதிவுகளைப் படித்திருந்தீர்களானால் என் மேல் எந்தத் தவறுமில்லை என்பதைத் தாங்கள் மட்டுமல்ல இங்கு அனைவருமே புரிந்து கொள்வீர்கள்.

    அதே போல புதிய தலைமுறை இதழின் தலையங்கத்தைக் கண்டித்து எழுதியது மட்டுமின்றி நடிகர் திலகத்தின் சமூதாயத்தொண்டிற்கோர் சான்றாக அவர் நடத்திய பாரதி விழாவைப் பற்றிய பேசும்படம் பத்திரிகை பக்கம் ஒன்றையும் இங்கே பகிர்ந்து கொண்டேன். அதை இங்கே எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியாது. காரணம் அதைப் பற்றிய பதிவு ஏதும் இங்கு வரவில்லை. ஆனால் முகநூலில் மிகப் பெரிய அளவில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது.

    மன்னிப்புக் கேட்பது என்பதெல்லாம் நண்பர்களுக்குள் அறவே தேவையற்ற ஒன்று. கருத்துப் பரிமாற்றங்களில் கோபம் வரும். எனக்கு அதிகமாகவே வரும். அதை நான் நேரடியாகவே வெளிப்படுத்தி விடுவேன். அவ்வளவு தான். உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு வெளியே வேறு பேசுவதோ எழுதுவதோ என்னிடம் கிடையாது. அதைப் புரி்ந்து கொண்டால் போதும்.
    Last edited by RAGHAVENDRA; 14th September 2015 at 10:55 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1778
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே
    தங்களால் கஷ்டப்பட்டு மூளையை கசக்கிப்ளிநது எழுதிய அற்புதமான கட்டுரைகளை copy செய்துபதிவிட்டிருக்கிறோம். நமது இதயதெய்வம் புகழ் மற்றும் அவரைப்பற்றிஉண்மையான செய்திகள் எல்லோரிடமும் கொண்டுசேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறொன்றும் கிடையாது.சமிபத்தில் எங்களது வங்கி whatsapp இல் மிக பெரிய வாக்குவாத த்திற்கு திரு.ராகவேந்திரா சார் பதிவிட்ட பாரதி விழா தான் எனக்கு கைகொடுத்தது.சிவாஜி என்ற மாபெறும் கலைஞன் சமூகத்தில் எவ்வளவு அக்கறையுடன் எத்தனை திறமைசாலிகளுக்கு விழா எடுத்திருக்கிறார் எனபதை இன்றைய
    தலைமுறைக்கு பறைசாற்றவே. தயவு செய்து ஒரு வேண்டுகோள் whatsapp மூலமும் பகிரவும்.நன்றி.

  12. Likes Russellbzy liked this post
  13. #1779
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    dear ravikiran
    நக்கீரன் பதிவை whatsapp மூலம் பகிரவும்

  14. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Russellbzy, RAGHAVENDRA liked this post
  15. #1780
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    செந்தில்வேல் சார்,

    சாந்தி தியேட்டர் உட்புறம் எடுக்கப்பட்ட நிழற்பட பதிவுகள் அனைத்தும் மிக அருமை. அப்படியே மலரும் நினைவுகளில் மனம் சுழல்கிறது.

    இதோடு நில்லாமல் அங்குள்ள 'ஷீல்டு காலரி'யையும் படமெடுத்து பதியுங்கள், ப்ளீஸ்.
    ஆதிராம் சார்
    நான் ஞாயிறு அன்று விக்ரம்பிரபுவை சந்தித்து விட்டு மாலை சாந்திக்கு சென்று திரு. வேணுகோபால் அவர்களிடம் அனுமதி பெற்று எடுத்த போட்டோக்கள் தான் அவை.அன்று மாலையே கோவை திரும்ப வேண்டி இருந்ததாலும்,நண்பர்களின் வருகைக்காக காத்திருக்க வேண்டி இருந்ததாலும்....
    சாந்தியை இடிப்பதற்கு முன் பார்க்க வேண்டும் என்ற காரணத்தாலும்.,,

    சாந்தி இடிப்பதற்குமுன்
    இனி சென்னை வரும் வாய்ப்பு கிடைத்தால் தங்களின் ஆசையை நிறைவேற்றுகின்றேன்.அது என் ஆசை மட்டுமல்ல,எல்லாருடைய ஆசையாகவும் இருக்கும்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •