Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like


    வரப்பிரசாதம் (1976)/புலமைப்பித்தன்/கோவர்தனம் (உதவி: இளையராஜா)/
    வாணி ஜெயராம் & கே.ஜே.யேசுதாஸ்/ஜெயசித்ரா & ரவிச்சந்திரன்


    கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
    கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
    மெல்ல நடந்தாள்
    கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
    கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
    மெல்ல நடந்தாள்

    கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
    காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
    கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
    காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
    விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல
    விதி என்னும் ஆற்றில் பரிபோவதல்ல

    கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
    கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
    மெல்ல நடந்தாள்

    மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்
    மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
    உள்ளம் நெகிழ்ந்தான்
    மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

    மாணிக்கப் பாவை நீ வந்த வேளை
    நினையாததெல்லாம் நிறைவேறக் கண்டேன்
    மாணிக்கப் பாவை நீ வந்த வேளை
    நினையாததெல்லாம் நிறைவேறக் கண்டேன்
    அன்பான தெய்வம் அழியாத செல்வம்
    பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்

    மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்
    மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
    உள்ளம் நெகிழ்ந்தான்

    மணியோசை கேட்டு மணமாலை சூட்டி
    உறவான வாழ்க்கை நலமாக வேண்டும
    நடமாடும் கோவில் மணவாளன் பாதம்
    வழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்
    திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்
    ஆனந்த பூஜை ஆரம்ப வேளை

    கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
    கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
    மெல்ல நடந்தாள்...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •