Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 32 வசந்தத்தில் ஓர் நாள்காட்சி - படத்தின் உச்சக்கட்டம்கதை..டாக்டர் ராஜசேகர் மிகப் பெரிய செல்வந்தர். தொழில் நிமித்தம் மலேசியா செல்லும் அவர் எதிர்பாராத ஒரு உடல் வலியால், ஒரு நாட்டு வைத்தியரிடம் செல்லும் படியான நிர்ப்பந்தம் நேர்கிறது. அவருடைய மகள் நீலாவின் யதார்த்தமான அன்பும் பரிவும் அவளிடம் அவரை ஈர்க்கின்றன. அவளும் அவரை விரும்புகிறாள். தன் மகளுக்குத் திருமணமாக வேண்டும் என்கிற ஒரே ஆசையில் வாழும் வைத்தியரும் சம்மதிக்கிறார். சந்தர்ப்ப வசத்தால் திருமணமாகாமலேயே காதலர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு விடுகின்றனர். அவசர காரணமாக தாய் நாடு திரும்ப வேண்டிய நிர்ப்ந்த்த்தில் ராஜசேகர் நீலாவை திரும்பி வந்து திருமணம் செய்து கொள்வதாய்க் கூறி புறப்பட்டு விடுகிறார்.பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்பி மலேசியாவுக்கு வருகிறார் நாட்டு வைத்தியர் காலமாகி விட்டார், தன் காதலி நீலாவும் ஒரு மகளை ஈன்று விட்டு பைத்தியமாய் பல ஆண்டுகள் திரிந்து கடைசியில் மாண்டு விடுகிறாள். அவள் மகளான ராஜி ஒருவனிடம் காதல் வயப்பட்டிருந்தாள். அவனும் அவளைத் திருமணம் செய்வதாகக் கூறி விட்டு சென்று விடுகிறான்.பல ஆண்டுகளாக ராஜசேகர். பல வகையில் முயற்சி செய்து ஒரு வழியாய் தன் மகள் ராஜியைக் கண்ணால் பார்க்கும் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம் அவருடைய மகள் அங்கே ஒரு விலைமாதாய் வாழுகிறாள். தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறாமல், மெல்ல மெல்ல அவள் மனதைக் கரைத்து தன்னுடன் அவளை அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார்.. ஒரு கட்டத்தில் அந்த விடுதி முதலாளியான பெண்மணியும் தன் நல்லெண்ணத்தின் காரணமாக ராஜியை அவர் அழைத்துச் செல்ல சம்மதிக்கிறாள்.ராஜியும் ஒரு கட்டத்தில் மனம் மாறி அவருடன் செல்ல சம்மதிக்கிறாள். . அவருடைய களங்கமற்ற அன்பு அவள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. தன்னால் அவர் வாழ்வில் இன்னல் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவருடன் பொய்யாக சண்டை போட்டு விட்டு மீண்டும் விடுதிக்கு வருகிறாள். ஆனால் விடுதி முதலாளியான பெண்மணி அவருடனேயே சேர்ந்து வாழும் சந்தர்ப்பத்தை இழக்க வேண்டாம் என அறிவுறுத்தி அவளைத் திருப்பி அனுப்புகிறாள்.அந்த விடுதியை விட்டு வெளியேறி ராஜசேகருடன் வாழ்வதற்காக அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு ராஜி வருகிறார்.இதன் பிறகு என்ன நடந்த்து. ராஜசேகர் தன் மகளுடன் சேர்ந்தாரா. ராஜி அவரை ஏற்றுக் கொண்டாளா. இது தான் உச்சக்கட்டக் காட்சி. இந்தக் காட்சியைத் தான் இன்று நாம் காண இருக்கிறோம்.ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்கு ஆய்வு செய்து கிட்டத்தட்ட ஒரு மனோதத்துவ நிபுணராய் தன்னை நிலைப்படுத்தி, (PSYCHO ANALYSIS) அதற்குள் புகுந்து அந்த கதாபாத்திரத்தின் மன நிலையை நன்கு உள்வாங்கி வெளிப்படுத்துவதால் தான் நடிகர் திலகம் இன்றும் ஈடிணையற்ற உன்னத கலைஞராய் விளங்குகிறார். மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் ஒரு கதாபாத்திரம் சிக்கிக் கொள்ளும் போது எப்படி அதை வெளிப்படுத்த வேண்டும், எப்படி அதற்கான REACTION தர வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம். தன் மகளே தன்னை மணமுடிக்க வேண்டும், தன்னோடு வாழ வேண்டும் எனக் கேட்டு வரும் போது அவர் வெளிப்படுத்தும் அந்த அதிர்ச்சி, அவளிடம் உண்மையைக் கூறும் போது வெளிப்படைத் தன்மை, தன் மேல் எந்தக் குற்றமும் இல்லை என மகளிடம் கூறுவதன் மூலம் தனக்குத் தானே சமாதானப் படுத்திக் கொள்ளுதல், மகளிடம் உண்மையைக் கூறி விட்ட பின் ஏற்படும் நிம்மதி, அவள் என்ன செய்தாலும் பரவாயில்லை என எதிர்கொள்ளும் துணிவு, தன் உணர்வை அவள் ஏற்றுக்கொள்ளாமல் வெளியேறும் போது ஏற்படும் ஏமாற்றம், சோகம், ஊரை விட்டுக் கிளம்பும் சமயம் அவளை சந்திக்கும் போது ஏற்படும் ஒரு சிறிய நம்பிக்கை, என அமர்க்களப் படுத்துகிறார் தலைவர்.எல்லாவற்றிற்கும் மேலாக வசனமே இல்லாமல் பார்வையிலேயே அன்பைப் பொழிந்து அவள் மனதை மாற்றி அவள் தன்னை நம்பும் படி செய்வது, தந்தையும் மகளும் சேர மாட்டார்களா என பார்வையாளர்களிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, அது நிறைவேறிய பின் அனைவருக்குள்ளும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் காட்சியைத் தன் நடிப்பால் நகர்த்திச் செல்லும் அசாத்திய தன்னம்பிக்கை...நடிப்பின் இமயத்தின் மிகச் சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி. இதில் நடிகர் திலகத்துடன் போட்டி போடுபவர்கள் பலர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர், இவர்களை யெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு நடிகர் திலகத்துடன் கைகோர்த்து இணையாய் நடந்து செல்லும் மெல்லிசை மன்னர்.காலங்களைக் கடந்து நிற்கும் காவிய நாயகனின் வசந்தத்தில் ஓர் நாள், காலமெல்லாம் நாம் ரசித்து மகிழுவதெல்லாம் திருநாள்.நடிகர்கள் ராஜசேகர் - நடிகர் திலகம்நீலா மற்றும் ராஜி - ஸ்ரீப்ரியாநாட்டு வைத்தியர் - வி.கே. ராமசாமிவிலைமாது விடுதி முதலாளி - மனோரமாவிலைமாது தரகர் - தேங்காய் சீனிவாசன்ராஜசேகரின் சமையல்காரர் - ராமராவ்ஒளிப்பதிவு - விஸ்வநாத் ராய்வசனம் - ஆரூர்தாஸ்படத்தொகுப்பு - பி.கந்தசாமிஇசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்திரைக்கதை டைரக்ஷன் ஏ.சி. திருலோக்சந்தர் https://www.facebook.com/vee.yaar/vi...4937166556951/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •