Page 185 of 400 FirstFirst ... 85135175183184185186187195235285 ... LastLast
Results 1,841 to 1,850 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    வாசு சார்


    திருடன் நம் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளையடித்தவன். ஸ்டைல் என்ற வார்த்தைக்கு இன்னுமோர் பரிமாணத்தைக் கொடுத்தவர் தலைவர் இப்படத்தில். செய்யும் தொழில் சமூக விரோதமாக இருந்தாலும் அதனை கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்பவனின் உள்மனதில் எத்தகைய போராட்டங்களெல்லாம் வெடிக்கும் என்பதை உன்னதமாக சித்தரித்தார் தலைவர். இந்தத் தொழிலே வேண்டாம் என்று ஒதுங்கி செல்பவரை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அதற்குள்ளேயே நுழைக்கும் கட்டங்களில் மனம் எப்படியெல்லாம் துடிக்கும் என்பதை காட்சி யாக அற்புதமாக வடித்தவர் தலைவர். என்னைப் பொறுத்தவரையில் இப்படத்தில் மேலே தாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் பாடலும், அதைத் தொடர்ந்து அந்த சூதாட்ட விடுதியில் மீண்டும் இவரை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்ட பாடலும் முதலிடம் பெறும். அதிலும் நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் என்று சூழ்நிலைக்கேற்ற பாடல் வரிகளோடு அமைந்த பாடலில் வெள்ளுடை வேந்தராக மிகவும் ஸ்லிம்மாக சுமார் 20 அல்லது 25 வயதுக்கு மேல் மதிப்பிட முடியாத இளமைத் தோற்றத்தில் தலைவரின் ஒய்யாரமான நடன அசைவுகளும் நடையழகும் நம் உள்ளத்தைக் கபளீகரம் செய்து விடும்.

    மறக்க முடியாத திருடன் பாடலோடு மறக்க முடியாத நாளாக இன்றை ஆக்கி விட்டீர்கள். இனியென்ன நினைத்தபடி நடந்து விடும். இந்த இரண்டு பாட்டும் இன்று முழுதும் ஆக்கிரமிக்கும்.
    ராகவேந்திரன் சார்,

    பக்கங்களில் விளக்கக்கூடிய விஷயங்களை 'நச்'சென்று அழகாகப் பத்தியில் விளக்கி விட்டீர்கள். அருமை. ரசித்து மகிழ்ந்தேன். நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai, Georgeqlj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Nadigar Thilagam Film Appreciation Association (NTFAnS) Next Programme.



    Last edited by RAGHAVENDRA; 18th July 2016 at 04:26 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி கெய்ட்டி திரை அரங்கில் வரும் சனிக்கிழமை அதாவது 23 ஆம் தேதி முதல் உலக திரை உலகினரால் முடிசூட்டப்பட்ட நிரந்தர சாம்ராட், நடிக்க வந்த 23 ஆவது ஆண்டிலேயே 175 ஆவது காவியம் கண்ட திரை உலகின் சக்ரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய மாபெரும் வெற்றிப்படைப்பு அவன் தான் மனிதன் திரையிடப்படுகிறது !



    அவன்தான் மனிதன் திரைப்படத்தின் அந்த கால வசூல் மற்றும் ஓடிய நாட்களின் விளம்பர ஆவணங்கள் இருப்பின் அதனை தயவு செய்து இங்கு நண்பர்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் !

    RKS

  6. Thanks vasudevan31355 thanked for this post
  7. #4
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஹிட்லர் கடைசி நாட்கள் பற்றி வாசு விவரம் கேட்டான்.நான் எழுதிய திரைக்கதை கரையானால் பறி போனது. (நெய்வேலியில்)

    ஆனால் நினைவில் உள்ளது ,கடைசி 30 நாட்கள்,அதில் அடங்கும்.அது படமாகி இருந்தால் சிவாஜிக்கு oscar நிச்சயம். பாடல்கள் கிடையாது.
    32 பக்கங்களில், மற்றோர் பேசும் வசனங்கள் 24 பக்கங்கள் . 8 பக்க வசனம் நடிகர்திலகத்துக்கு. அதிக பட்சம் 5 வாக்கியங்கள் தான் தொடர் வசனம்.மிச்சம் ஓரிரு வாக்யங்களே.

    முதலில் ஹிட்லரின் முழு ஆளுமை. - தேச பக்தன், அஞ்சாநெஞ்சன், தான் நினைத்ததை சாதிப்பவன்,திட்டமிடுபவன்,கம்பீரன் ,பேச்சாளி,ஆளுமை மிகுந்தவன். ஆனால் hysteria நோய் ,வயிற்று கோளாறு,கொலை வெறி,personality disorder இவற்றால் அவதி. சைவன், நாய்களின் மீது பிரியம், பெண்களின் மீது நாட்டமின்மை,ஆனால் இனவொழிப்பில் ஈடு பட்டவன்.

    ஆனால் கடைசி சில நாட்கள்.

    ஹிட்லரின் ஆளுமை படி படியாய் சிதையும். மற்றோர் ஆலோசனை கேளாமல் ,தப்பிக்க எண்ணாமல் கடைசி வரை நம்பிக்கை விதைப்பான். ஆனால் சோர்வு,நம்பிக்கை குலைவு சிறிதே தெரியும். கடைசி நிமிடங்களில் ரகசியமாய் உடைந்து அழுதுள்ளான் .வெளியே காட்டாமல். கடைசி நிமிடங்கள் ஈவா பிரவுன் திருமணம். பிறகு தற்கொலை . என்று உணர்ச்சிகளை அள்ளி தெறிக்கும் படிப் படி நிலை. நடிகர்திலகத்தை தவிர யாருமே செய்திருக்க முடியாது.
    அப்போதைய உடல்வாகு ஒத்துழைத்திருக்கும்.

    என்ன செய்வது ,அப்போது எனக்கு வயது 14. வாசனும் மறைந்திருந்தார்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Georgeqlj, Harrietlgy, vasudevan31355 liked this post
  9. #5
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    அவன்தான் மனிதன் திரைப்படத்தின் அந்த கால வசூல் மற்றும் ஓடிய நாட்களின் விளம்பர ஆவணங்கள் இருப்பின் அதனை தயவு செய்து இங்கு நண்பர்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் !

    RKS



    100 தொடர்ந்து கொட்டகை நிறைந்த காட்சிகள்



    "அவன் தான் மனிதன்" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:

    1. சென்னை - சாந்தி

    2. சென்னை - கிரௌன்

    3. சென்னை - புவனேஸ்வரி

    4. மதுரை - சென்ட்ரல்

    5. சேலம் - நியூசினிமா

    6. திருச்சி - ராஜா

    7. யாழ்ப்பாணம் - லிடோ

    மேலும், சேலம் மாநகர திரைப்பட வரலாற்றில், ஒரே சமயத்தில் இரு அரங்குகளில் வெளியான படங்களில், ஒன்றில் 107 நாட்களும் [நியூசினிமா], மற்றொன்றில் 35 நாட்களும் [பேலஸ்] ஓடிய முதல் திரைப்படம் "அவன் தான் மனிதன்".

    கோவை 'கீதாலயா'வில் 85 நாட்கள் ஓடி வசூல் மழை பொழிந்தது. மேலும் பற்பல ஊர்களிலும் 50 நாட்களைக் கடந்து பெருவெற்றி பெற்றது.

    அயல்நாடான இலங்கையில், கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 82 நாட்களும், யாழ்ப்பாணம் 'லிடோ' திரையரங்கில் 122 நாட்களும் ஓடி இமாலய வெற்றி அடைந்தது.

    சென்னை மாநகரின் சாந்தி(100), கிரௌன்(100), புவனேஸ்வரி(100) ஆகிய மூன்று திரையரங்குகளின், 300 நாள் மொத்த வசூல் ரூ.13,29,727-37பை.

    1970களில் ஒரு படம், முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக அரை கோடியை [ரூ.50,00,000/-] ஈட்டினாலே 'சூப்பர்ஹிட்' அந்தஸ்தைப் பெற்று விடும். "அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் மொத்த வசூலாக ரூ.55,00,000/-த்தை [ரூபாய் ஐம்பத்து ஐந்து லட்சங்களை] அளித்தது. அன்றைய சில லட்சங்கள் இன்றைக்கு பல கோடிகளுக்குச் சமம்.

    "அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் உண்டாக்கிய பாக்ஸ்-ஆபீஸ் பிரளயத்தின் முழு விவரத்தை, நமது திரியின் 8வது பாகத்தில் தனியொரு சிறப்புப் பதிவாகவே தருகிறேன்.

    மேலும், மறுவெளியீடுகளாகவும், சிங்காரச் சென்னையில் "அவன் தான் மனிதன்" கணிசமான அளவுக்கு திரையிடப்பட்டுள்ளது. 1988-ல் சென்னையின் பல அரங்குகளை ரெகுலர் காட்சிகளில் அலங்கரித்த காவியம் "அவன் தான் மனிதன்". 1989 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மீண்டும் சென்னையில் வெளியான இக்காவியம் பல அரங்குகளில் House-Full காட்சிகளாக அமோக வரவேற்பு பெற்றது. 'எவ்வளவு தான் உடைஞ்சாலும் ராஜா ராஜா தான்' டயலாக்கிற்கெல்லாம் அரங்குகளின் கூரைகள் பிய்த்துக் கொள்ளும். பின்னர் 1993-ம் ஆண்டிலும், 1997-ம் ஆண்டிலும் கூட சென்னையில் ரவிகுமார் வெற்றி உலா வந்திருக்கிறார். மதுரை ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் படம் இதுதான். மதுரையில் பல முறை மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்டிருக்கிறது. ஏனைய ஊர்களிலும் ரவிகுமார் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஹீரோ தான்!

    அன்புடன்,
    பம்மலார்.


    இலங்கையில் 17 ..09 ..1976 ல் திரையிடப்பட்டது

    அவன்தான் மனிதன்

    கொழும்பு...............கிங்ஸ்லி....83..நாட்கள ்

    கொழும்பு..............கல்பனா......51..நாட்கள்

    யாழ்நகர்...............லிடோ.........122..நாட் கள்



    யாழ்நகர்......லிடோவில்...105 தொடர் house full காட்சிகள்




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. Thanks Russellmai, Harrietlgy thanked for this post
  11. #6
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    19.07.2016 தேதியிட்ட இன்றைய தினத்தந்தி நாளிதழிலிருந்து...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks Harrietlgy, vasudevan31355 thanked for this post
  13. #7
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Written by Mr. Sudhangan,

    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 135.




    சிவாஜியிடம் அப்படியென்ன கேள்வி கேட்கப்பட்டது?
    `உங்களுக்கு பின்னால் வந்த நடிகர்கள் சிலர் ஏதோ ஒரு காலகட்டத்தில் படங்களை டைரக்ட் செய்திருக்கிறார்கள். நீங்கள் ஏன் அந்த முயற்சி செய்யவில்லை?’
    அதற்கு சிவாஜி என்ன பதில் சொன்னார்?
    ஓர் இயக்குநருக்கு எவ்வளவு பெரிய பொறுப்பும், கடமையும் உள்ளன என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
    அதனால்தான் நான் படம் இயக்கவில்லை.
    ஒரு வேளை நான் ஒரு நல்ல உதவி இயக்குநராக இருந்திருக்க முடியும். மற்றவர்களுக்கு நடிப்பைச் சொல்லிக்கொடுத்திருக்க முடியும். `இது மாதிரி செய்தால் நன்றாக இருக்கும், இப்படி மாற்றினால் சிறப்பாக இருக்கும்’ என்று கருத்து சொல்ல முடியும்.
    ஆனால், நான் ஒரு இயக்குநராக முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
    நான் ஒரு படத்தை இயக்குகிறேன் என்றால், அதில் நடிக்கும் எல்லா நடிகர்களின் முகங்களிலும் என்னுடைய சாயல் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன். என்னை மாதிரி நடிக்கிறார்களா என்றுதான் எதிர்பார்ப்பேன். அப்படி இல்லை என்றால் விடமாட்டேன். அவர்களாகவும் நடிக்க அனுமதிக்க மாட்டேன். என்னை மாதிரி நடிக்கிறவரைக்கும் பயிற்சி கொடுத்துக்கொண்டே இருப்பேன். இதனால் என்ன ஆகும்? என்னுடன் நடிக்கும் எல்லோருமே சிவாஜி கணேசன் போல்தான் நடிப்பார்கள்.
    ஒரே காட்சியில் எட்டு சிவாஜி கணேசன் இருந்தால், அந்த காட்சி நன்றாய் இருக்குமா? ஒரு சிவாஜி கணேசனாக இருந்தால் மக்கள் ரசிப்பார்கள்.
    அதனால்தான், அந்த தவறான காரியத்தை நாம் செய்யக்கூடாது என்பதால்தான் நான் படங்களை இயக்க விரும்பவில்லை. எனக்கு தெரியாத வேலையில் நான் எப்போதும் தலையிடுவதில்லை. அப்படியும் ஒரு படத்தில் என்னை திரைப்பட இயக்குநர் வேடத்தில் நடிக்க வைத்தார்கள். அந்த படம்தான் `சாதனை.’
    ஒரு திறமையான இயக்குநர் ஒரு சமயத்தில் ஒரு படம்தான் இயக்க விரும்புவார். அப்பொழுதுதான் எல்லா பொறுப்புக்களையும் சரிவரச் செய்ய முடியும். நடிகனாக இருந்தால், ஒரே சமயத்தில் மூன்று நான்கு படங்களில் நடிக்கலாமே! இதையெல்லாம் யோசித்துத்தான் நான் இயக்குநராகவில்லை. அடுத்து தன்னை கவர்ந்த சில இயக்குநர்களைப் பற்றியும் சிவாஜி சொல்லியிருக்கிறார்.
    பல படங்களில் அவற்றை இயக்கியவரே அந்தப் படத்தின் கதை, வசனத்தையும் எழுதியிருப்பார். உதாரணமாக– ஏ.பி.நாகராஜன், கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இதைத்தவிர பீம்சிங், மாதவன், தாதாமிராசி, கே.சங்கர் போன்ற பல இயக்குனர்கள் என்னை இயக்கியிருக்கிறார்கள். அதே போல் தன் சக நடிகர்கள் பற்றியும் பதிவு செய்திருக்கிறார் அவர்.
    ‘நான் ஏழிலிருந்து எழுபது வயதுக்குள் மூன்று தலைமுறை கலைஞர்களை பார்த்திருக்கிறேன்.
    1950--–70களில் பிரபலமாக இருந்த எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர்.,- பாலையா, சந்திரபாபு, வி.கே. ஆர்., நம்பியார், முத்துராமன், ஜெமினி கணேசன், மனோகர், தங்கவேலு, நாகேஷ் என்று பலரை சொல்லலாம்.
    என்.டி.ராமாராவ், பிரேம்நசீர் போன்றவர்களுடன் நடித்திருக்கிறேன்.
    நடிகைகள் என்று பார்த்தால் பானுமதி, அஞ்சலிதேவி, சாவித்திரி, பத்மினி, சவுகார் ஜானகி, தேவிகா, மனோரமா, எம்.என்.ராஜம். கே.ஆர்.விஜயா, மஞ்சுளா, சுஜாதா, லட்சுமி என்று பலரைக் குறிப்பிடலாம்’.
    இதெல்லாம் சரி!
    சிவாஜிக்கும் – எம்.ஜி.ஆருக்குமான உறவு எப்படி இருந்தது?
    காரணம், இரு தரப்பு ரசிகர்களும் எதிரிகளாகவே இருந்தார்கள்!
    சின்னப் பிள்ளையிலிருந்தே நானும் எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும், என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவருடைய தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம்.
    ஒரு கதை மாதிரி எங்கள் நட்பு வரலாற்றைச் சொல்கிறேன்.
    இரண்டாவது உலகப் போர் முடிந்த சமயம். 1943-–44ல் நான் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள ஒற்றைவாடை தியேட்டர் அருகேதான் குடியிருந்தேன்.
    அந்த காலத்தில்தான் லட்சுமிகாந்தன் நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில்தான் எம்.ஜி.ஆர். தன் தாயார், சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியுடம் தங்கியிருந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆர்., சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.
    நானும் நண்பர் காக்கா ராதாகிருஷ்ணனும் அடிக்கடி அவருடைய வீட்டுக்கு போவோம். அனேகமாக சாப்பிடும் நேரத்தில் அங்கேதான் இருப்போம்.
    எம்.ஜி.ஆர்., `பசிக்கிறது’ என்றாலும், `இருப்பா, கணேசன் வரட்டும்’ என்பார் அவருடைய தாயார்.
    அந்த அளவுக்கு அவருக்கு என் மேல் பாசம் இருந்தது.
    எம்.ஜி.ஆர்., இரவு நேரத்தில் என்னையும் காக்கா ராதாகிருஷ்ணனையும் டவுனுக்கு பக்கத்தில் உள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்க கூட்டிச் செல்வார். திரும்பி வரும் போது சாப்பாத்தி, பால் போன்றவற்றை சாப்பிடுவோம். அது போல நீண்ட நாட்களாக இருந்தோம்.
    பிறகு நான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.
    `சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தில் முதலில் எம்.ஜி.ஆர்., நடிப்பதாகவே இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னை தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது.
    சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும் போது எம்.ஜி.ஆரை சந்தித்தேன். ஒரே காலகட்டத்தில் இருவரும் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தோம். அதே சமயத்தில் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம்.
    `ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.
    என்னை அவர் விமர்சிப்பார்! அவரை நான் விமர்சிப்பேன்! அது அரசியல்ரீதியாகத்தான்! பெர்ஸனலாக இருக்காது! இதை வைத்துக்கொண்டு பலரும் நாங்கள் ‘விரோதிகள்’ என்று பேசிக்கொண்டார்கள்.
    அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை. பல வருடங்களுக்குப் பின், அவர் முதல்வரானார்!
    அவர் பதவியிலிருக்கும்போது நான் அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். அவரும் பல நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார். எனக்கும் அவருக்குமுள்ள நட்பு என்றும் மாறவில்லை. எனக்கு மெட்ராசில் ஒரு தோட்டம் இருக்கிறது.
    அதுவும் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது.
    என் தோட்டத்தில் உள்ள என் தாயாரின் உருவப்படத்தை திறக்க வரவேண்டுமென்று நான் எம்.ஜி.ஆரை கேட்டுக்கொண்டேன்.
    உடனே ஒத்துக்கொண்டு தன் மனைவியுடன் வந்து என் தாயாரின் உருவப்படத்தை திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர்.
    தனது தாயைப் போல் கருதிய என் அம்மாவின் உருவப்படத்தை திறந்து வைப்பதில் அவர் மகிழ்ச்சியடைந்தார். இதே போல் மற்றொரு சம்பவமும் நடந்தது!
    அது என்ன?
    (தொடரும்)

  14. Thanks Russellmai, vasudevan31355 thanked for this post
  15. #8
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு உள்ளங்களே,
    நமது உயிராக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 23.07.2016 சனிக்கிழமை முதல் திருச்சி-கெயிட்டி திரையரங்கில் நடிகர்திலகத்தின் 175வது வெள்ளி விழா காவியமான அவன்தான் மனிதன் திரைப்படம் திரையிடப்படுகிறது.
    திருச்சிக்கு அருகில் உள்ள அனைத்து ரசிகர்களும் அவசியம் அவன்தான் மனிதன் திரைப்படத்திற்கு வருகை தந்து படத்திற்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தருமாளு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    ஏற்கனவே, திருச்சி கெயிட்டி திரையரங்கில் வெளிவரும் நமது மக்கள்தலைவரின் படங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போட்டு, அந்த செய்திகள் செய்தித்தாள்களில் வருவதை பார்த்திருக்கறோம்.
    ஆனால் இந்த முறை அவன்தான் மனிதன் திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் பாதிபேர் திரும்பி விட்டனர், என்ற செய்தி வியப்படைய வைக்க வேண்டும்.
    மாசற்ற மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் ஒருவரே கலையுலகில் என்றும் வசூல்சக்கரவரத்தி என்பதனை நிரூபிப்போம்.
    கெயிட்டி தியேட்டருக்கு வாருங்கள்,
    கலைப் பசியாறிவிட்டு செல்லுங்கள்.



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  16. Thanks Russellmai thanked for this post
  17. #9
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சரித்திரம் படைத்த சிவகாமியின் செல்வனின்
    மதுரை வெற்றி விபரம் நாளை........




    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  18. Thanks Russellmai thanked for this post
  19. #10
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  20. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •