Page 287 of 400 FirstFirst ... 187237277285286287288289297337387 ... LastLast
Results 2,861 to 2,870 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிறிது இடைவெளிக்குப் பின் வரும் 'கோபக்காரர்' கோபால் அவர்களே வருக! வருக! (ஐஸ்!)
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    அமர்க்களம்.
    பணம் படத்தின் தகவலாகட்டும், ராஜா தெய்வமகன் மறு வெளியீட்டு நிழற்படங்களாகட்டும். அசத்தல்.
    நன்றி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #4
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,

    உனது எழுத்து திறனால் பல விஷயங்கள் பரிமளிக்கின்றன. ஆனால் ஒன்று. Word Smithy என படும் வார்த்தை விளையாட்டுக்களால் தூக்கி பிடிக்க பட்டாலும் பல சராசரி படங்களை தூக்கி நிறுத்துவதால் பலனில்லை.

    நான் வெற்றி பெற்ற ,புகழ் பெற்ற படங்களை மட்டும் குறிக்கவில்லை.
    சிறந்த படங்கள் ,மற்றும் நடிப்பின் சிறப்பில் மின்னும் படங்கள். இன்னும் இளைய தலைமுறைக்கு சுவாரஸ்யம்,அதிசயம் ஏற்படுத்தும் படங்கள்.

    உதாரணம்- அந்தநாள், ராஜாராணி,காத்தவராயன்,எல்லாம் உனக்காக, குலமகள் ராதை ,செல்வம் இன்னும் பல.

    ஆனால் பணம்,அன்பு போன்ற படங்கள் படுத்தல்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #5
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பளிப்பு.- 1969.-01/01/1969- Happy New Year Friends.

    வரும் புத்தாண்டில் 47 வருட முடிவை எய்த போகும் அன்பளிப்பு ,வந்த நாட்களில் ஒரு தீவிர சமுதாய பிரச்சினையை பொழுது போக்குடன் கலந்து பேசிய படம்.

    முதல் பாராட்டு ஏ.சி.திருலோக சந்தர். இவர் ஒரு நவீன ராஜா கால பொழுது போக்கு (வீர திருமகன்), குடும்ப செண்டிமெண்ட் (நானும் ஒரு பெண்)Romantic musical (அன்பே வா),thriller (அதே கண்கள்) ,Anti -hero பொழுதுபோக்கு (தங்கை) என்று வித விதமாக variety கொடுத்து தன்னை சிறை படுத்தி கொள்ளாத executive வகை இயக்குனர்.(திரைக் கதை நுட்பங்களும் அறிந்த படிப்பாளி)இவர் கிராமிய மணத்துடன்,கிராமிய பிரச்சினை என்று சுருக்காமல் மனித இனத்துக்கே அச்சுறுத்தலாக சவால் விட்டு கொண்டிருக்கும் இன்றைய பிரச்சினையை அன்றே சொன்னார்.ஓரளவு nativity கொண்ட நல்ல பொழுது போக்கு படம்.

    பசுமை விவசாயம், விவசாய விளை நிலங்கள் பிளாட்டுகளாக,தொழிற்சாலைகளாக(சில நேரம் ஆபத்தான ரசாயன-அணு நிலையங்களாகவும்) மாறி கிராமங்களையும் ,உணவு உற்பத்தியையும் சிதைக்கும் அபாய விளைவுகளை ,முக்கிய கருவாக கொண்ட படம்.

    ஒரு பூர்ஷ்வா செல்வ நிலை கொண்ட ஒருவனும், அவன் குடும்பம் சார்ந்து நிற்கும் விவசாய சுயம் கொண்ட ஏழை தொழிலாளி ஒருவனும் சகோதரர் போல மன இணைப்பு கொண்டாலும், அந்த கிராமத்தை தொழில்-சார் நகர முகமாக மாற்ற நினைக்கும் படித்த பணக்காரனுக்கும்,விவசாயம் சார்ந்த மண் பற்று கொண்ட அடிப்படை ஏழை மனிதனுக்கும் நிகழும் போராட்ட நிலையில் தொடரும் பிரச்சினைகள்.இடை-நிலை சுயநலமிகளால் தீ மூட்ட பட்டு ,தீயுடனே முடியும் இறுதி காட்சி.

    நடிகர்திலகம் இந்த படத்தில் அற்புதமான உடல் கட்டு (கிருஷ்ணாவின் சொற்களில் தேக்கு மர தேகம் ),திராவிட மன்மத எழில் தோற்றம்,இளமை சுடர் விடும் துறு துறுப்பு கொண்டு அவ்வளவு ,இவ்வளவு என்று சொல்ல முடியாத அளவு handsome உச்சத்தில் இருப்பார்.(அதுவும் தம்பியாக நடிக்கும் ,வயது மிக குறைந்த அன்றைய வளரும் இன்னொரு நடிகரின் அருகில் பாதி வயதாக தெரிவார்)

    பிரச்சாரமாக தெரியாமல் தன் தொழில்-சார் மண் நேசத்தை இயல்பாக உணர்த்தும் ,பாத்திரத்தை ஒட்டிய நடிப்பு.ஒரு raw என்ற நிலையில் ஜாலி நடன காட்சிகள், எல்லை மீறா காதல் குறும்புகள்,மிதமான நட்பு-பாச வெளியீடுகள்,விறு விறுப்பான சிலம்ப சண்டை,என்று இயல்பான நகைசுவையும் தெளிப்பார். ரவி சந்திரனை இரண்டாவது நாயகனாக்கியிருக்கலாமோ என்ற ஏக்கம் எனக்கு இன்றும் உண்டு.

    விஸ்வநாதன் இசையமைப்பில் தேரு வந்தது , வள்ளி மலை மான்குட்டி பாடல்கள் என்னை இன்று வரை மயக்கும் பாடல்கள்.அது தவிர வேஷ பொருத்தம்,கோபாலன் எங்கே உண்டோ,எனக்கு தெரியும் என்ற நல்ல பாடல்கள்.

    படத்திற்கு திருஷ்டி சரோஜா தேவி. சோர்வு தெரியும்,தளர்ச்சி கொண்ட வயதான தோற்றத்தில் சிவாஜிக்கு அம்மா போல தோற்றமளிப்பார்.படத்தில் காதல் காட்சிகள் குட்டிசுவரானது இவரால்தான்.ஒட்டாமல் போகும். அதை விட கொடுமை விஜய நிர்மலா.கதாயகியர் இருவரும் கொடூரம்.(ஆனால் இதற்கு பின் வந்த அஞ்சல் பெட்டியில் சரோஜாதேவி ப்ரெஷ் ஆக இளமையாக இருந்தார்)

    எல்லோருடைய நல்ல பங்களிப்பு ,அளவான நல்ல திரைகதை-வசனங்கள், உறுத்தாத இயக்கம், பொழுதுபோக்கு, தீவிர பிரச்சினையின் நுணுக்கமான கையாளல்,நடிகர்களின் நிறைவான பங்களிப்பு இருந்தும் ,எதிர்பார்த்த வெற்றி கோட்டை இந்த படம் தொடாதது இது வரை புதிராகவே உள்ளது.

    நடிகர்திலகம் , ஒரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு பணிவது அவசியம் என்றாலும்,இந்தளவிர்க்கா ?என்று கேட்டிருந்தார். எம்.ஆர்.சந்தானம்-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Likes Harrietlgy liked this post
  8. #6
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,

    ஒரு திருத்தம்.. ஜெனோவா விஸ்வநாதன் இசையமைத்த முதல் படம்.(தனியாக). பணம், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர் இணைந்து இசையமைத்த முதல் படம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #7
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆதிராம்,

    உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. பொய்யிலே பிறந்து ,பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே மறைந்து , சரித்திரத்தை இஷ்டப்படி திரிப்போர் மத்தியில் ,நம்மால் ஏற்கவே முடியாத, விரும்பவும் விரும்பாத ஒருவரை சம்பந்த படுத்தி, சிறிதே உண்மைக்கு மாறான செய்தி வந்தாலும் , உண்மையை சொல்லும் பண்பு, இறுதிமூச்சு வரை நேர்மையை கடைபிடித்த கலை தெய்வத்தின் ரசிகர்களின் உயரிய மாண்பின் சிறந்த எடுத்துக்காட்டு. நான் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டீர்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #8
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. Likes sivaa liked this post
  12. #9
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes sivaa liked this post
  14. #10
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •