-
7th July 2014, 04:43 AM
#3781
Junior Member
Platinum Hubber
Irandayirathil oruvan-yukesh
இனிய நண்பர் திரு யுகேஷ் அவர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் .
மிக குறுகிய காலத்தில் 2000 பதிவுகள் வழங்கி சாதனை புரிந்து மக்கள் திலகம் திரியில் பல்வேறு படங்கள் - வீடியோ காட்சிகள் - மக்கள் திலகம் பற்றிய காட்சிகள் இடம் பெற்ற மற்ற படங்களின் பதிவுகள் - உடனுக்குடன் மக்கள் திலகம் படங்கள் பற்றிய தகவல்களை திரியில் பதிவிடுதல் என்று தினமும் திரியில் உங்களுடய பங்களிப்பை பிரமாதமாக
செய்து வருவது அறிந்து மகிழ்ச்சி .
தொடர்ந்து மக்கள் திலகத்தின் அபூர்வ செய்திகள் - மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய உங்களது கட்டுரைகள் என்று
புதிய கோணத்தில் புதுமையான படைப்புகளை வழங்கி மக்கள் திலகத்திற்கு பெருமைகளை சேர்க்கவும் .
-
7th July 2014 04:43 AM
# ADS
Circuit advertisement
-
7th July 2014, 05:01 AM
#3782
Junior Member
Platinum Hubber
இலங்கை நண்பர் திரு சிவா
நீங்களும் ரவி கிரணை போலவே அவசர கோலத்தில் பதிவுகளை உங்களின் பதிவை நியாய படுத்தி உங்களை நீங்களே தாழ்த்தி கொள்கிறீர்கள் . நான் பதிவிட்ட இரண்டு இலங்கை செய்திகளும் எங்கள் தரப்பு நண்பர் 1979ல் கடிதம் மூலம்
வந்த செய்தியை பதிவிட்டேன் ..
இலங்கையில் எம்ஜிஆர் படங்களும் பிரமாண்ட சாதனைகள் படைத்துள்ளது .200 நாட்கள் - 161 நாட்கள் -100 நாட்கள்
என்று எம்ஜிஆர் படங்களும் ஓடி யுள்ளது . மறு வெளியீடுகளில் ஒளிவிளக்கு உருவாக்கிய சாதனைகள் உங்களுக்கு
நன்கு தெரிந்திருக்கும் .
மற்றவர்கள் பதிவை நம்பும் நீங்கள் அதையே மீள் பதிவாக போட்டு வருவது உங்கள் உரிமை .
அதே போல் எங்கள் தரப்பு பதிவுகள் எங்கள் நண்பரின் அனுப்பிய அடிப்படையில் நம்புவது எங்கள் உரிமை .
உங்களிடமும் எந்த ஆதாரமில்லை . நம்புகிறோம் .எனவே சற்று யோசியுங்கள் . நிதானமாக செயல் படுங்கள் .
நீங்கள் வயதில் மூத்தவர் என்பதால் மதிப்பளிக்கிறோம் .
சிரிப்பதும் அழுவதும் ஒரு கலையே - வாழ்க்கையை அனுபவியுங்கள் சிவா சார் .
-
7th July 2014, 06:17 AM
#3783
Junior Member
Diamond Hubber
விஜய் அரசியல் பிரவேசம்!
நடிகர் எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆனதால், அதன்பின் வந்த பல நடிகர்களுக்கும், முதல்வர் ஆசை தொற்றிக் கொண்டது. அவ்வகையில், அவருக்கு பின் அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடிப்பார் என்று, எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினி. ஆனால், சமீபகாலமாக, அவர் அரசியலுக்கு வருவதற்கான, அறிகுறிகளே இல்லை. அதனால், விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து, விஜய் வட்டாரம், அரசியல் கோதாவில் இறங்கியிருக்கிறது. தன் மக்கள் இயக்கத்தின் மூலம், ஏழை மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வரும் விஜய்யிடம், 'எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?' என்று, அவரது ரசிக கோடிகள், நச்சரித்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களுக்கு, 'பேஸ்புக்'கில் பதிலளித்த விஜய், 'வாழ்க்கை ஒரு வட்டம்; இன்றைக்கு கீழ இருப்பவன், நாளைக்கு மேல இருப்பான்... அப்ப பார்க்கலாம்...' என்று, சூசகமாக அறிவித்துள்ளார்.
courtesy dinamalar
-
7th July 2014, 06:25 AM
#3784
Junior Member
Diamond Hubber
நடிகர்கள் நாடாளும் காலம் இனி யாருக்கும் கிடைக்காது . மக்கள் திலகதிற்கு கிடைத்தது அதிர்ஷ்டத்தால் இல்லை கடின உழைப்பால் கிடைத்தது . அவரை மக்கள் கடைசி வரை ஒரு தலைவராக மட்டும் தான் பார்த்தனர் அவரும் மக்களின் உரிமைகளை காப்பதற்கு மட்டுமே தன் படங்களை உபயோகித்தார் . அதனால் தான் இன்று வரை அவரின் பெருமைகளை இன்றைய இயக்குனர்கள் தன் படங்களில் பயன் படுத்துகின்றனர் .
இந்த உலகிற்கு ஒரு சூரியன் ,ஒரு சந்திரன் என்றுமே ஒரே ஒரு எம் ஜீ ஆர் மட்டும் தான் .
-
7th July 2014, 06:31 AM
#3785
Junior Member
Diamond Hubber
மறு வெளியீடுகளில் ஒளிவிளக்கு உருவாக்கிய சாதனைகள் உங்களுக்கு
நன்கு தெரிந்திருக்கும் .
ஒளிவிளக்கு மறுவெளி யீடு சாதனைகள் இலங்கையில் மட்டும் இல்லை தமிழகத்தில் அதனுடைய சாதனைகளை முறியடிக்க எந்த ஒரு நடிகர் படத்தினாலும் முடியாது .
எனக்கு தெரிந்த தகவலின் படி ஆயிரத்தில் ஒருவன் கூட 1993 வருடம் 50 நாட்கள் ஓடியுள்ளதாக நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருகிறேன். வினோத் சார் உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும் .
கூடிய சிக்கிரம் திரி no 14 முடிவைந்துவிடும் இப்பொழுதே இலங்கை சாதனைகளை குறை சொல்ல ஆரம்பித்து விட்டனர் இனி இது தான் அவர்களின் காரசாரமான தலைப்பு நண்பர் rks கொடுத்துவைத்தவர் தான் .
-
7th July 2014, 06:43 AM
#3786
Junior Member
Diamond Hubber
என்னை வாழவைக்கும் தெய்வங்களே, ரசிக பெருமக்களே என்று இன்றைய் கதாநாயகர்கள் உதட்டளவில் சொல்லிவிட்டு தங்களின் சொத்துகளை உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் . மேலும் அந்த சொத்துகள் பறிபோகாமல் இருக்க அரசியல் பிரவேஷம் செய்ய திட்டம் போடுகின்றனர் . இது தான் இன்றைய நாயகர்களின் உண்மையான நோக்கம் மக்களுக்கு சேவை என்பதல்லாம் சும்மா ரீல் விடுவது . ஒரு படம் முடிந்தால் வெளிநாட்டிற்கு சென்று ஒய்வு எடுக்கும் நாயகர்களே என்றாவது ஒரு நாள் உங்கள் ரசிகர்கள் இல்லத்தின் நல்லது கேட்டது நிகழ்சிகளில் கலந்தது உண்டோ ? ஆனால் உங்கள் திரை உலகில் தயாரிபளோரோ இயக்குனரோ வீட்டு விசேஷம் என்றால் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்கும் நீங்கள் என்றாவது ஒரு ரசிகனின் உள்ள குமுறலை கேட்டது உண்டோ? இல்லையே அப்படி இருக்க முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைபடுவது நியாம் தானா ?
முதலில் தனித்துவமாக இருங்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஜால்ரா தட்டும் போக்கினை மாற்றுங்கள் மக்களுக்காக குரல் கொடுங்கள் யாராக இருந்தாலும் அநி தியை தட்டி கேளுங்கள் அப்பொழுது பாருங்கள் பதவிகள் தேடிவரும் உங்கள் இல்லம் தேடி
அதனால் எல்லோரும் எங்கள் குலதெய்வம் எம் ஜீ ஆர் ஆகமுடியாது

Originally Posted by
Yukesh Babu
விஜய் அரசியல் பிரவேசம்!
நடிகர் எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆனதால், அதன்பின் வந்த பல நடிகர்களுக்கும், முதல்வர் ஆசை தொற்றிக் கொண்டது. அவ்வகையில், அவருக்கு பின் அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடிப்பார் என்று, எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினி. ஆனால், சமீபகாலமாக, அவர் அரசியலுக்கு வருவதற்கான, அறிகுறிகளே இல்லை. அதனால், விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து, விஜய் வட்டாரம், அரசியல் கோதாவில் இறங்கியிருக்கிறது. தன் மக்கள் இயக்கத்தின் மூலம், ஏழை மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வரும் விஜய்யிடம், 'எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?' என்று, அவரது ரசிக கோடிகள், நச்சரித்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களுக்கு, 'பேஸ்புக்'கில் பதிலளித்த விஜய், 'வாழ்க்கை ஒரு வட்டம்; இன்றைக்கு கீழ இருப்பவன், நாளைக்கு மேல இருப்பான்... அப்ப பார்க்கலாம்...' என்று, சூசகமாக அறிவித்துள்ளார்.
courtesy dinamalar
-
7th July 2014, 06:45 AM
#3787
Junior Member
Diamond Hubber
-
7th July 2014, 06:46 AM
#3788
Junior Member
Diamond Hubber
-
7th July 2014, 06:46 AM
#3789
Junior Member
Diamond Hubber
-
7th July 2014, 06:47 AM
#3790
Junior Member
Diamond Hubber
Bookmarks