-
7th July 2014, 06:17 AM
#11
Junior Member
Diamond Hubber
விஜய் அரசியல் பிரவேசம்!
நடிகர் எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆனதால், அதன்பின் வந்த பல நடிகர்களுக்கும், முதல்வர் ஆசை தொற்றிக் கொண்டது. அவ்வகையில், அவருக்கு பின் அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடிப்பார் என்று, எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினி. ஆனால், சமீபகாலமாக, அவர் அரசியலுக்கு வருவதற்கான, அறிகுறிகளே இல்லை. அதனால், விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து, விஜய் வட்டாரம், அரசியல் கோதாவில் இறங்கியிருக்கிறது. தன் மக்கள் இயக்கத்தின் மூலம், ஏழை மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வரும் விஜய்யிடம், 'எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?' என்று, அவரது ரசிக கோடிகள், நச்சரித்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களுக்கு, 'பேஸ்புக்'கில் பதிலளித்த விஜய், 'வாழ்க்கை ஒரு வட்டம்; இன்றைக்கு கீழ இருப்பவன், நாளைக்கு மேல இருப்பான்... அப்ப பார்க்கலாம்...' என்று, சூசகமாக அறிவித்துள்ளார்.
courtesy dinamalar
-
7th July 2014 06:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks