-
15th June 2015, 03:35 AM
#751
Junior Member
Newbie Hubber
வாசு,
உனது பதிவு வரும் என்று தெரியும். ராமுவிற்கு நான் பதிவு போடும் போது நினைவிலிருந்த இருவர் நீயும், சிவாஜி செந்திலும்.
நீ ஜெமினியை பற்றி சொன்னது முழுக்க சரி. ஆனால் அவர் சில வரிகளை முழுங்கும் விதம் அவர் நடிப்பை மேலும் மெருகேற்றும்.
அதை விட நான் ஜெமினியிடம் ரசிப்பது. அவர் தங்கவேலுவின் கல்யாண பரிசு காமெடி யில் தோதாக எடுத்து கொடுக்கும் விதம். one liners ,ஆமோதிப்பு,கிண்டல் என்று. கிழிப்பார்.
நீ சொன்ன கடைசி வரி புரிந்தது.
சிவாஜி செந்தில்- நன்றி.நாங்களெல்லாம் ஜெமினியின் ரசிகர்களும் கூட.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
15th June 2015 03:35 AM
# ADS
Circuit advertisement
-
15th June 2015, 09:46 AM
#752
Junior Member
Veteran Hubber
அன்புள்ள கோபால்
உங்களிடம் எல்லோரும் மகிழத் தக்க அளவில் நிறைய மாற்றங்கள்
உங்களைப் போன்ற வாசுவைப் போன்ற எழுத்து விற்பன்னர்கள், சின்னக்கண்ணன் போன்ற எழுத்துக் கலைவாணர்கள், முரளி, ராகவேந்தர் போன்ற ஜாம்பவான்களை ரோல் மாடல்களாகக் கொண்டேஎங்களைப் போன்ற ஆரம்பகட்ட பதிவர்களும் எங்கள் முயற்சிகளை தொடர்கிறோம்.
செஞ்சோற்றுக்கடன் போல நடிப்பு கர்ணனின் பல படங்களில் தனது மனமுவந்த பங்களிப்பை நல்கிய காதல் மன்னருக்கும் நம்மால் முடிந்த மன அஞ்சலி செலுத்தும் நோக்கில்தான் என்னுடைய பதிவின் குறிக்கோள் இருந்தது.
இப்போது ஒப்பிடமுடியாத தரத்தில் நீங்கள் இருவரும் வந்த பிறகு இந்தத் திரி இனி தொய்வடையாது என்ற நம்பிக்கை வித்தை ஊன்றியமைக்கு இருவருக்கும் நானும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!! உங்கள் எழுத்து வன்மையை ரசித்துக்கொண்டே எனக்குத் தெரிந்த பாணியில் தொடர்கிறேன்
செந்தில்
தனிமையிலே இனிமை காண முடியுமா ?
Last edited by sivajisenthil; 15th June 2015 at 10:05 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
15th June 2015, 10:08 AM
#753
Senior Member
Seasoned Hubber
ஜெமினி- சரோஜாதேவி ஜோடி தான் எனக்கு பிடித்த ஜோடி
சாவித்திரி அவர் மனைவியாகவே இருந்தாலும் இந்த ஜோடியில் ஒரு குறும்பு கொப்பளிக்கும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th June 2015, 02:22 PM
#754
Junior Member
Veteran Hubber
Dear Rajesh Sir.
கன்னடத்துப் பைங்கிளி என்ற புகழாரத்துடன் தமிழ் திரையுலகத்தில் நுழைந்து ஒரு நிரந்தரமான இடத்தைத் தனது பன்முக நடிப்பாற்றலால் தககவைத்துக் கொண்ட அழகும் திறமையும் மிக்க நடிகை அபிநய சரஸ்வதி என்றும் அறியப்பட்ட என்றுமே ஸ்லிம் சரோஜாதேவி அவர்கள்!!
வெறும் பொழுதுபோக்குப் பட கிளாமர் கேர்ல் ஆக முடிந்துவிடாமல் புத்திசாலித்தனமான முடிவின் மூலம் நடிகர்திலகம் மற்றும் காதல் மன்னரின் திரைப்படங்களில் கதாநாயகருக்கு இணையான குணசித்திர கதாநாயகியாகவும் பரிமளிக்க முடிந்தது!
கல்யாண பரிசு அவரது நிரந்தரமான அடையாளம் !
பாலும் பழமும், பாகப் பிரிவினை, புதிய பறவை, ஆலய மணி, இருவர் உள்ளம், பணமா பாசமா, தாமரை நெஞ்சம், ஆடிப்பெருக்கு ....அவரது மேலான நடிப்புத்திறனின் சாட்சிகள்! காதல் மன்னருடன் இணைந்து நடித்த எல்லாப் படங்களிலும் கிளாமர் தவிர்த்து நெஞ்சங்களை வசீகரிக்கும் குடும்பப் பாங்கான நடிப்பில் மிளிர்ந்தவர் !!
கல்யாண பரிசு திரைப்படத்தில் காதல் மன்னருடன் அபிநயம் புரியும் சரஸ்வதி !
ஜெமினி- சரோஜாதேவி ஜோடி தான் எனக்கு பிடித்த ஜோடி
சாவித்திரி அவர் மனைவியாகவே இருந்தாலும்
இந்த ஜோடியில் ஒரு குறும்பு கொப்பளிக்கும்
by Rajesh
Last edited by sivajisenthil; 15th June 2015 at 02:29 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th June 2015, 02:57 PM
#755
Senior Member
Diamond Hubber
செந்தில் சார், ஜி

எனக்குப் பிடித்த சரோ ஜெமினி இணைவுப் பாடல்களில் முதன்மையானது 'கல்யாணப் பரிசி'ல் வரும்
'ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே
அபிநயம் குறையுது முகம்'
வெகு அழகான பாடல்! பாடல் மட்டுமா! ஜெமினி அழகு என்றால் சரோ அன்று பூத்த ரோஜா மலர் போல மென்மை சிந்தும் அழகு.
யதார்த்த காதலர்களின் தத்ரூப, எல்லை மீறாத, கொள்ளை கொண்ட காதல் விளையாட்டுக்கள். கூண்டை விட்டு அவிழ்த்து விட்ட சிட்டுக்குருவிகளாய் தனிமையாய் சிறகடித்துப் பறக்கும் இளஞ் சிட்டுக்கள்.
பின்னால் நேரப் போகும் துன்பம் அறியாது துள்ளிக் குதித்து இளமை கொப்பளிக்க இருவரும் கொஞ்சும் அழகே அழகுதான்.

ஒரு இடம் கூட நில்லாமல் சரோ அங்கும் இங்கும் சுழன்று சுற்றியபடியே சுறுசுறுப்பு காட்டுவார். சுசீலா முடிக்கும் ஒவ்வொரு வரிக்கும் ராஜா 'ஆஹா, ஓஹோ, ஐ சி, ரியலி, ஸாரி' என்றெல்லாம் பதிலுரைப்பது பாயசத்தோடு சேர்ந்த பாதாம்.
சரோ கண்களாலும் கைகளாலும் வெட்டும் விதம் இருக்கிறதே! ஜெமினி வீழ்ந்தாரோ இல்லையோ நாம் வீழ்ந்தோம்.
ஜெமினி அவருக்கே உரித்தான பாலோ -அப் பில் சரோவைத் தொடர்வது, தொடுவது, தொங்குவது
என்று ரகளைதான்.
'தேரில்லாத கொடிதனில்
வாலில்லாத ஒரு அணில்'
எனும் போது சரோ கொடிக்குத் தன்னையும், வாலில்லாத அணிலுக்கு வாலிப ஜெமினியையும் சுட்டிக் காட்டும் சுட்டித்தனம் சுவையோ சுவை. குறும்பும், குறுநகையும், 'குறுகுறு' பார்வையும் அப்படியே குந்திக் கொள்ளும் நம் இதயங்களில்.
காதல் வேகத்தில் தன் கையைப் பிடிக்க வரும் ஜெமினியிடமிருந்து சற்று விலகி,
'ஆளிலாத நேரம் பார்த்து தாவிப் பிடிக்குது கையில்'
என்று சரோ மென்மையாய் பொய்க் கண்டிப்பு காட்டி சுட்டிக் காட்டுகையில் ஜெமினி சரோவின் கையை விரல்களால் தொட்டு 'ஸாரி' என்று சிரிப்பதை யார் ரசிக்காமல் இருக்க முடியும்?

சரோ பின்னழகுக்கு மிகவும் புகழ் பெற்றவர் என்பது சகலரும் உணர்ந்ததே. அவரது பின்னழகு நடை பார்த்து பித்துப் பிடித்தவர் பல பேர். இந்தப் பாடலில் இன்னும் பிரமாதம். வழக்கமான நடை இல்லாமல்
'மாலை என்ற நேரம் ஒன்று
ஆளை மீறுதே'
என்று பாடியவாறு பின் பக்கம் நின்று ஒரு அபிநய போஸ் ஒன்று தருவார். அப்போது புரியும் இவர் ஏன் 'அபிநய சரஸ்வதி' என்று பட்டம் வாங்கியிருக்கிறார் என்று. இடது காலை பாதி மடக்கியவாறு இரு கைகளையும் மேலே தூக்கி, இடுப்பொடித்து, பின் பக்கமாக இவர் காட்டும் உடல் பாவம்....அடடா! அப்போதைய இளைஞர்கள் பாவம்.
அற்புதமான போஸ் அது.
அது மட்டுமா? பாஸ்கர் வசந்தி இவர்களுடைய இரண்டு சைக்கிள்களும் கூட எவ்வளவு அழகாக ஜோடி போட்டு இவர்களைப் போலவே காதல் களிநடம் புரிகின்றன! பாருங்கள்.
உல்லாசபுரியில் உச்சக் காதலில் தனை மறந்து காதலர்கள் குறும்பு பேசும் கவிதை கானம்.
இளமை பொங்க இயக்கிய ஸ்ரீதருக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.
சர்க்கரைப் பாகைக் காதில் கரைத்து ஊற்றிய சுசீலாவிற்கும், ராஜாவுக்கும், காதுகளிலேயே தங்கி விட்ட இனிமையான இசைக்கும், வைர வரிகளுக்கும்
இன்னும் பாராட்டுக்கள்.
கிண்டி விட்ட 'ஜி'க்கும் தான்.
Last edited by vasudevan31355; 15th June 2015 at 03:20 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
15th June 2015, 02:59 PM
#756
Senior Member
Diamond Hubber

செந்தில் சார்,
என்ன ஒற்றுமை! கடந்த இரண்டு மணி நேரமாக 'ஆசையினாலே மனம்' பதிவு ரெடி செய்து கொண்டிருந்தேன். முடித்து விட்டு சப்மிட் கொடுத்துப் பார்த்தால் அதே பாடல் தங்கள் பதிவாக வந்திருக்கிறது. உள்ளங்கள் ஒன்று பட்டால் ரசனையும் ஒன்று படுவது இயற்கைதான் என்றாலும் இன்னும் மீள முடியாத ஆச்சர்யமே!
Last edited by vasudevan31355; 15th June 2015 at 03:09 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th June 2015, 03:21 PM
#757
Senior Member
Seasoned Hubber
ராஜேஷ்
அருமையான கோணத்தில் தங்கள் கருத்து இத்திரியைப் பயணிக்க வைத்துள்ளது
ஜெமினி கணேசன் சரோஜா தேவி இணையில் வெளிவந்த படங்கள் எல்லாமே மறக்க முடியாதவை, குறிப்பாக பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கும் வகையில் அமைந்து இன்றும் நம் நெஞ்சில் தனி ஈர்ப்பை உண்டாக்குகின்றன.
இவர்கள் இணையில் வெளிவந்த சில பாடல்களைப் பார்ப்போமே..
இவர்கள் இணையில் எனக்கு மிக மிக பிடித்தவற்றில் கைராசி, எல்லோரும் இந்நாட்டு மன்னர், ஆடிப்பெருக்கு, வாழவைத்த தெய்வம் என பல படங்களில் பாடல்கள் அமைந்துள்ளன.
ஏனோ ஜெமினி சரோஜாதேவி என்றால் கல்யாண பரிசை தாண்டி யாரும் செல்வதில்லை. உண்மையிலேயே சொல்லப் போனால் அதற்கு சற்றும் குறையாத வகையில் அமைந்த படம் கைராசி. ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக செதுக்கப் பட்டிருக்கும். கோவர்த்தன் அவர்களின் பெயரை காலமெல்லாம் சொல்லும் படம் கைராசி.
அதுவும் குறிப்பாக காத்திருந்தேன் காத்திருந்தேன் பாடல், இசையரசியின் ஈடு இணையில்லா குரலில் நம்மை அப்படியே கட்டிப் போட்டு விடும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
15th June 2015, 03:23 PM
#758
Senior Member
Seasoned Hubber
இதே போல் இன்னோர் சூப்பர் ஹிட் பாடல்...
இதுவும் இசையரசியின் குரலே.. திரை இசைத் திலகத்தின் இசையில்..
காதை தீட்டிக் கொள்ளுங்கள்.. காதல் கதை பேச வருகிறார் ... கேட்கக் கேட்க ஆனந்தமே..
வாழ வைத்த தெய்வம் படத்திலிருந்து..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
15th June 2015, 03:27 PM
#759
Senior Member
Seasoned Hubber
திரை இசைத் திலகத்தின் இசையில் அமைந்த சில வேகத் தாளக்கட்டுப் பாடல்களே இன்று குத்துப் பாடல்களுக்கெல்லாம் முன்னோடியாய் விளங்குகின்றன. இதோ பாருங்கள். இந்த குட்டியை ஜெமினி கணேசன் கலாய்ப்பதை..
வாழ வைத்த தெய்வம் படத்தில் சின்னாளப் பட்டி சேலையைக் கட்டி வந்தாளே ஒரு குட்டி..
பாடகர் திலகத்தின் குரல்... ஜெமினிக்கு மட்டும் பொருந்தாமல் போய் விடுமா என்ன..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
15th June 2015, 03:34 PM
#760
Senior Member
Seasoned Hubber
இந்த மாதிரி ஏகாந்தமான வேளையில் காதலர்களுக்கு ஆசை ஏன் மேவாது...
மனம் எனும் வானிலே மழை மேகமாகவே இவர்களுக்கு ஆசைகள் மேவிடுதாம்...
எல்லோரும் இந்நாட்டு மன்னர் படத்திலிருந்து ஏ.எம்.ராஜா இசையரசி குரல்களில் டி.ஜி.லிங்கப்பா இசையில்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks