-
4th January 2017, 06:56 AM
#2951
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th January 2017 06:56 AM
# ADS
Circuit advertisement
-
4th January 2017, 09:00 AM
#2952
Senior Member
Seasoned Hubber
-
4th January 2017, 01:39 PM
#2953
Junior Member
Newbie Hubber
நினைவுநாள் திவசங்கள் நடிகர்திலகத்துக்கு ஒவ்வாத ஒன்று. மணிமண்டபம் ,அவர் அடுத்த பிறந்த நாளிலே திறக்க பட வேண்டும். கொண்டாட்ட நாளை தேர்ந்தெடுப்பதே சரியானது.
-
4th January 2017, 03:33 PM
#2954
Junior Member
Newbie Hubber
தமிழர்களின் உணர்வோடு கலந்தவர் சிவாஜி.. அவரது சிலை கடற்கரையில்தான் இருக்க வேண்டும்.. வைகோ
நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்று வைகோ கோரியுள்ளார். தமிழர்களின் உணர்வோடு கலந்தவர் நடிகர் சிவாஜி என்பதால் அவரது சிலை அங்கே இருப்பதுதான் சரி என்றும் அவர்
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரத்துக்கு தடையாக இருப்பதாகக் கூறி கடற்கரை சாலையில் இருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சிலையை அங்கிருந்து அகற்றக் கூடாது என்றும் தமிழர்களின் உணர்வோடு கலந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை கடற்கரையில் இருப்பதுதான் சரி என்றும் வைகோ கூறியுள்ளார்.
Do not remove Actor Sivaji statue from Marina says Vaiko
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை கடற்கரை காமராசர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய சிலையை அகற்றக் கோரிய வழக்கில், சிலையை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது.
புதிதாகக் கட்டப்படுகின்ற மணிமண்டபத்தில் அந்தச் சிலையை வைக்கப் போவதாகத் தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்து இருக்கின்றது.
நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு இணையான நடிகர் அகிலத்தில் வேறு எவரும் இல்லை.
அவருடைய உருவம் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. சென்னைக் கடற்கரைக்கு வருகின்ற இலட்சக்கணக்கான மக்கள் கண்டு மகிழ்கின்ற வகையில், தமிழ்நாட்டுக்குப் பெருஞ்சிறப்பைச் சேர்த்துத் தந்த அந்த மாமனிதரின் சிலை சென்னைக் கடற்கரையில் இருப்பதுதான் பொருத்தமானது, தகுதியானது.
சென்னை மாநகருக்குள் எத்தனையோ சிலைகள் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்ற நிலையில், நடிகர் திலகம் அவர்களுடைய சிலையை மட்டும் அகற்றுவது வேதனையானது.
இருப்பினும், கடற்கரையில் போதுமான இடம் இருப்பதால், ஏற்கனவே உள்ள சிலைகளின் வரிசையிலேயே ஒரு இடத்தை ஒதுக்கி, அங்கேயே நடிகர் திலகம் சிவாஜி அவர்களது சிலையை இடமாற்றம் செய்திட வேண்டும் என்றும்;
புதிதாகக் கட்டப்படுகின்ற மணிமண்டபத்தில் மற்றொரு புதிய சிலையை அமைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th January 2017, 03:37 PM
#2955
Junior Member
Newbie Hubber
எங்கள் உணர்வில் கலந்த தமிழின தலைவர் கலைஞர் மகனும், தி.மு.கவின் உண்மை தொண்டனும், சிறந்த நிர்வாகியும் ஆன ஸ்டாலின் செயல்தலைவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
ஆனால் பொருளாளர்,இளைஞரணி தலைவர் பதவியை பிறருக்கு கொடுத்திருக்கலாமே?
-
4th January 2017, 08:52 PM
#2956
Senior Member
Diamond Hubber
நாட்டில் என்னென்னவோ அக்கிரமங்கள் நடக்குமாம். பணப் பதுக்கல், கொள்ளை, கொலை, ஊழல், கூழைக்கும்பிடு, காலில் விழுந்து கெஞ்சல், பகட்டுக் கல்யாணங்கள், பதவி மோகம், லஞ்சம் என்று. இதற்கெல்லாம் முக்கியத்துவம் இல்லை. தண்டனை இல்லை. கண்ணெதிரே கொலைகாரர்களும், கொள்ளையர்களும் நடமாடுகிறார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் சிலை அகற்ற மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு எழுகிறார்கள். எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. இதற்கெல்லாம் நீதி இல்லை. ஆனால் நீதி மன்றம் நடிகர் திலகத்தின் விஷயத்தில் மட்டும் தீவிரம் காட்டுகிறது. எல்லாவற்றையும் விட நடிகர் திலகம் முக்கியமாய் படுவதற்கு நாம் ஓரளவிற்கு பெருமை கூட பட்டுக் கொள்ளலாம் போல. சே! என்ன நாடு இது!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th January 2017, 06:32 AM
#2957
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th January 2017, 07:05 AM
#2958
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th January 2017, 02:21 AM
#2959
Senior Member
Devoted Hubber

அன்பு இதயங்களே, இரண்டு வருடத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒருபடம் வெளியிடும் இன்றைய கதாநாயகர்களுக்கு மத்தியில் மண்ணை விட்டு மறைந்து 16 வருடங்கள் ஆகியும் இன்றும் வருடத்திற்கு 10 படங்கள் அதிலும் ஒரே நாளில் இரண்டு படங்கள் என சாதனை படைத்திடும் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழை எந்தக் கொம்பனும் எந்த காலத்திலும் மறைக்கவோ அழிக்கவோ முடியாது.
என்றும்
மக்கள்தலைவர் சிவாஜி புகழ்பாடும்
கா.சுந்தராஜன்.
(முகநூல் பக்கம்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th January 2017, 02:35 AM
#2960
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks