-
16th September 2011, 11:32 AM
#1791
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்தர்,
வாவ்....., எத்தனை சிரமப்பட்ட தொகுப்பு. அற்புதம்... அற்புதம்.
உங்கள் எண்ணம் எப்படியெல்லாம் ஓடுகிறது, அதற்கு உடனே எப்படியெல்லாம் செயல்வடிவம் கொடுக்கிறீர்கள். இவை அத்தனை இசைக்கருவிகள் வாசிக்கும் புகைப்படங்களை சேகரிப்பதும் அவற்றை இங்கே பதிப்பதும் லேசான வேலையா?.
நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் உங்கள் செயல்பாடுகள் புல்லரிக்க வைக்கின்றன. (எங்க மாமா படத்தில் அக்கார்டியன் இசைக்கும் புகைப்படமும் உங்கள் தொகுப்பில் உள்ளது. ஆகவே அக்கருவியையும் நீங்கள் அளித்துள்ள பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்).
நிச்சயமாக உலகத்தில் வேறு யாரும் இத்தனை இசைக்கருவிகளை இசைப்பவராக நடித்திருக்க முடியாது. ஏனென்றால் அவற்றில் பல வாத்தியங்கள் நம் நாட்டுக்கே உரித்தானவை.
அட்டகாசம்... அருமை... அற்புதம்...
சாதனை நாயகனுக்கேற்ற சாதனை ரசிகர் நீங்கள்.
-
16th September 2011 11:32 AM
# ADS
Circuit advertisement
-
16th September 2011, 11:53 AM
#1792
Senior Member
Veteran Hubber
டியர் பம்மலார்,
நடிகர்திலகத்தின் 125-வது வெற்றிக்காவியம் 'உயர்ந்த மனிதன்' விழாத்தொகுப்பு மிக அருமை. 'பொம்மை' இதழில் வந்த அதை அதன் ஒரிஜினல் வடிவத்தில் பார்க்கும்போது மனம் குதூகலிக்கிறது.
அவ்விழாவில், மறைந்த முதல்வர் அண்ணா கலந்துகொண்டார் என்பது மட்டுமே பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அன்றைய மத்திய அமைச்சர்கள் ஒய்.பி.சவான், கே.கே.ஷா போன்றவர்களும், தமிழக அமைச்சர்கள் மற்றும் எஸ்.எஸ்.வாசன் போன்றோரும் கலந்துகொண்டது பலருக்குப் புதிய செய்தி. சவான் அவர்களின் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது.
இதுபோன்ற பல புதையல்களை வெளிக்கொணர்ந்து எல்லோரையும் அறியச்செய்யும் அரிய சேவைக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். இதுவரை உங்களிடம் மட்டுமே இருந்து வந்த இந்த அரிய பொக்கிஷங்கள் இப்போது எண்ணற்ற நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கைகளில். அவை இன்னும் பல்கிப்பெருகி இளைய தலைமுறையினருக்கு நடிகர்திலகத்தின் அருமை பெருமைகளைப் பறைசாற்றும்.
சீரிய, சிறப்பான சேவை தொடர வாழ்த்துக்கள்.
-
16th September 2011, 12:07 PM
#1793
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
கிடைத்தற்கரிய நடிகர் திலகத்தின் 125வது படவிழா பொம்மை ஆவணப் பதிவை வெளியிட்டு நம் மகானுக்கு புகழ் சேர்த்து விட்டீர்கள். அரிய ஆவணத்திற்கு நன்றி. அற்புதம்.
இந்த ஆவணத்தில் அவருடய பெருமைகளை மற்றவர்கள் பறை சாற்றுவது ஒரு பக்கம் சந்தோஷம் அளிக்கிறது என்றாலும் மறுபக்கம் என் மனதில் இருந்து பொங்கி வரும் ஆதங்கத்தை இங்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்.
மேடைகளில் நிகழ்ச்சி நடைபெறும் அந்த ஒரு சில மணி நேரங்களில் மட்டும் "இவரைப் போல சிறந்த நடிகர் ஊரில் எவரும் இல்லை..இந்தியாவில் கூட யாரும் இல்லை ..ஏன் உலகத்தில் கூட ஒருவரும் இல்லை" என்று எதுகை மோனையுடன் பேசிப் பெயர் வாங்கிக் கொண்டதைத் தவிர வேறு என்ன அவருக்காகச் செய்து சாதித்து கிழித்து விட்டார்கள்?
அவர் ஆரம்ப காலக் கட்டங்களில் கஷ்டப் பட்டபோது அவருக்கு உதவி செய்தவர்களை நாம் மறந்து விடவில்லை. மறந்து விடவும் கூடாது. அவரும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க என்றுமே தவறியது இல்லை. செய்நன்றியை ஒருபோதும் மறந்ததும் இல்லை. ஆனால் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் கிடைக்க இவர்கள் எல்லாம் மேற்கொண்ட முயற்சி என்ன? அவர் உழைப்பை பிடுங்கித் தின்றதைத் தவிர...
அவர் முன்னாளில் இருந்த திராவிட இயக்கம் ஆகட்டும்... பின்னாளில் மாடாய் உழைத்து உயிரைக் கொடுத்து வளர்த்த காங்கிரஸ் பேரியக்கமாகட்டும். அவருக்கு என்ன செய்தன? அவர் உழைப்பை உறிஞ்சி சுய லாபங்களுடன் தங்களை வளர்த்துக் கொண்டன.
தேர்தல் பிரச்சாரங்களுக்கு மட்டும் அவர் வேண்டும். ஊர் ஊராய் ராப்பகலாய் சுற்றி ஓட்டு சேகரிக்க வேண்டும் .திரை உலகின் உச்ச நடிகராய் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் கஷ்டப்பட்டு உழைத்த அந்தக் காலக் கட்டங்களில் கூட வீடு மனைவி மக்களைப் பிரிந்து எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் காங்கிரசுக்காக ரத்தத்தை வியர்வையாய் சிந்தி இவர்களை அரியணையில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும்.
அவருடைய ரசிகக் கண்மணிகள் கட்சிக்கொடி கட்ட மட்டும் பயன்படுத்தப் படுவார்கள். அவரது படங்களின் வெளியீடுகளின் முதல் நாள் ரசிகர் ஷோ வசூல் 'கட்சிக்கு'என்ற பெயரில் விழுங்கி ஏப்பம் விடப்படும். அவரும் அவர் ரசிகர்களும் காட்டிய உழைப்பு உறிஞ்சப்பட்டு கறிவேப்பிலையாய் அவர்கள் தூக்கி எறியப் படுவார்கள்.
யார் யாரோ திறமை,தகுதி அற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் சிறந்த நடிகர் பட்டம் வாங்குவார்கள். அல்லது அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கப்படும். அதற்கெல்லாம் இவரும் விழாக்கள் எடுக்க வேண்டும்.ஆரத்தித் தட்டுக்கள் ஏந்த வேண்டும். என்ன கொடுமைடா இது...
ஆனால் இவருக்குக் கிடைக்கக் கூடிய அங்கீகாரங்களைப் பற்றி இவர்கள் எவருக்கும் சிந்திக்கக் கூட நேரம் இருந்ததில்லை. அதைப் பற்றியக் கவலையும் இல்லை. நமக்குத்தான் அவரால் ஆக வேண்டிய காரியங்கள் எல்லாம் கச்சிதமாக ஆகிக் கொண்டிருக்கிறதே..பிறகென்ன..
உலக நாடுகளின் அங்கீகாரங்கள் கிடைத்தால் என்ன... நாங்கள் ஏற்றுக் கொள்வோமா? என்ற மனப் போக்கு உள்ளவர்களைத்தான் அன்றும் பார்க்க முடிந்தது. இன்றளவும் பார்க்க முடிகிறது. இதோ அவருக்காகக் குரல் கொடுக்கிறேன்..இதோ இவருக்காக ரத்தம் சிந்தவும் தயார் என்றெல்லாம் ஜம்பம் அளப்பார்கள். அந்தப் பக்கம் போனதும் மண்வெட்டியை எடுத்துக் கொள்வார்கள்.
எதிர்ப்பு என்ற நெருப்பு அலைகளிலேயே நீந்தி நீந்திக் கரை சேர்ந்து இமயத்தின் உச்சியைத் தொட்டு வானத்தை அளந்தவர் அவர். திறமை என்ற அந்த மூலதனம் மட்டும் அவர் பெற்றிருக்காவிட்டால் அவரை சுருட்டி சூறையாடி காற்றில் பறக்கவிட்டு களியாட்டம் போட்டிருப்பார்கள். காங்கிரசில் அந்தக் காலத் தலைவர்கள் முதல் இந்தக்காலத் தலைவர்கள் வரை அது யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்... இவருக்காக ஒருவரும் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட்டது கிடையாது என்பதுதான் வரலாற்று உண்மை.
இவரின் நண்பர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் எதிர் அணியினரோ செய்த அட்டகாசங்களுக்கு அளவே இல்லை. திரைத்துறை,அரசியல்துறை அனைத்திலும் இவருக்கெதிரான சூழ்ச்சிகள் ..தந்திரங்கள்..பழிவாங்கல்கள். (இவ்வளுவுக்கும் சூதுவாது தெரியாமல் நியாய தர்மத்துக்குக் கட்டுப் பட்டு நடந்த அந்த உத்தம புத்திரனுக்கு எதிராக)
வெறும் வார்த்தை ஜாலங்களாலும்,வெற்றுப் பாராட்டுக்களாலும் அவரையோ,அவர் ரசிகக் கூட்டத்தையோ ஏமாற்றிவிடலாம் என்று இவர்கள் கணக்குப் போட்டால் என்ன? கோடானு கோடி உலக மக்களின் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்து ராஜாங்கம் நடத்துகிறாரே அந்த அதிசய அன்பு மகான்! அவர் குடியிருக்கும் அந்த அன்பு உள்ளங்களை என்ன செய்துவிட முடியும் இவர்களால்?
இந்த நேரத்தில் இந்தப் பதிவு ஏன் என்று கூட நண்பர்கள் யோசிக்கலாம். காங்கிரஸ் தலைவர்களையும் திராவிட இயக்கத் தலைவர்களையும் காணும் போதே அவர்கள் உண்மையான பற்றுடன் தலைவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தாலும் கூட அதையும் மீறி அவர்கள் நம் தலைவரின் நியாயமான அங்கீகாரத்திற்கு தங்களுடைய பங்கை சரியான முறையில் அளிக்கவில்லை என்பதே மாறாத வடுவாய் நெஞ்சில் முதலிடத்தில் நிலைத்து நிற்கிறது.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 16th September 2011 at 07:00 PM.
-
16th September 2011, 12:37 PM
#1794
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
பூப்பறிக்க வருகிறோம் விளம்பரக் கட்டிங் வண்ணமயமாக வளைய வருகிறது.எந்த வயதானால் என்ன? நம்ம ஊர் ராஜா நம்ம ஊர் ராஜாதான். அசத்தல் ஸ்டில். முதல் ஸ்டில்லே இப்படி என்றால்... எப்போது சார் அடுத்த ஸ்டில்ஸ்? காத்திருக்க நேரமில்லை. நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
16th September 2011, 01:01 PM
#1795
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் அவர்களே,
உங்கள் பதிவு உங்களுடையது மட்டுமல்ல, நடிகர்திலகத்தின் ஒவ்வொரு ரசிகர்கள் / தொண்டர்களின் உள்ளக்குமுறல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது பற்றி நமது திரியின் இரண்டாம் பாகத்திலேயே நான் பதித்திருந்ததை மீண்டும் இங்கு தருவதில் தவறில்லையென்று நினைக்கிறேன்.
நான் பதித்திருந்தது இதுதான்.....................
// "நடிகர்திலகம் காங்கிரஸுக்காக உழைத்த அளவுக்கு, காங்கிரஸில் அவர் கௌரவிக்கப் படவில்லை. காங்கிரஸில் அவரளவுக்கு காமராஜர் பெயரை உச்சரித்தவர்களும் இல்லை. தன்னுடைய திரைப்படங்கள் மூல்மாக காமராஜரையும் காங்கிரஸையும் மக்கள் மத்தியில் உயிர்ப்பாக வைத்திருந்தவர். அவரது அரசியல் ஈடுபாடு காரணமாக, வெற்றிபெற வேண்டிய பல படங்களும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்றன. அவ்வளவு பெரிய நடிகர் தன்னுடைய திரைப்பட செல்வாக்கை காங்கிரஸ் கட்சிக்கு வலிய வந்து தருகிறாரே என்ற நன்றியுணர்ச்சி காங்கிரஸ் தலைவர்களுக்கு (தொண்டர்களுக்கு அல்ல) என்றுமே இருந்ததில்லை.
தேர்தல் நேரங்களில், அவர் தன்னுடைய திரைப்பட படப்பிடிப்புகளை ஒத்தி வத்துவிட்டு, தேரதல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், ஒரு நன்றி சொல்லக்கூட அவரைச்சென்று பார்க்கமாட்டர்கள். இது கண்கூடாக நடந்த உண்மை.
ஒருமுறை ஒரு பொதுத்தேர்தல் முடிந்த சமயம், படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் ஸ்டுடியோவுக்கு வெளியில் மரத்தின் நிழலில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, சற்று தூரத்தில் ஒரு கூட்டத்தினர், வேறொரு படப்பிடிப்பில் இருந்த நடிகர் ஆனந்தனை சந்தித்து, அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து அவருடன் உரையாடிவிட்டுப் போனார்களாம். அப்போது சிவாஜி தன் அருகில் இருந்தவரிடம் 'அவங்க என்னப்பா பண்றாங்க?. ஆனந்தனுக்கு இன்னைக்கு பிறந்த நாளா?' என்று கேட்க, அருகில் இருந்தவர், 'இல்லண்ணே, இப்போ நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவர் வந்து ஆனந்தனுக்கு நன்றி சொல்லிட்டு போகிறார். ஏன்னா, ஆனந்தன் அவருக்காக அவருடைய தொகுதியில் பிரச்சாரம் பண்ணினாராம்' என்று சொல்லியிருக்கிறார். அப்போது நடிகர்திலகம் 'உம்... நானும்தான் தமிழ்நாடு முழுக்க சுற்றி, சுற்றி பிரச்சாரம் பண்ணினேன். அதுல பலர் ஜெயிச்சும் இருக்காங்க. ஆனா ஒருத்தர் கூட தேர்தல் முடிந்து என்னை வந்து பார்க்கலை' என்று விரக்தியோடு சொன்னாராம். இந்த அளவுக்குத்தான் காங்கிரஸ்காரர்களின் நன்றியுணர்ச்சி.
கருணாநிதியும், எம்,ஜி,ஆரும், ஜெயலலிதாவும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் சிவாஜி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. கருணாநிதி தி.மு.கவுக்காக பிரசாரம் செய்தால், அக்கட்சி வெற்றி பெற்றதும் அவர் முதல்வர் ஆவார். எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்தால் அக்கட்சி வெற்றியடைந்ததும் அவர் முதல்வர் ஆவார். அதுபோலவே ஜெயலலிதா, அண்ணா தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்தால் அக்கட்சி வெற்றியடைந்ததும் அவர் முதல்வர் ஆவார். ஆனால் சிவாஜி காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்து அக்கட்சி வெற்றி பெற்றாலும் அவருக்கு எந்தப்பதவியும் கிடைக்கப்போவதில்லை. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் காங்கிரஸில் அவருக்கு உரிய மரியாதையும் கௌரவமும் வழங்கப்படவில்லை என்பது உண்மை.
அதுமட்டுமல்லாது, தேர்தல் என்று வந்துவிட்டால், காங்கிரஸுக்கு மிகப்பெரிய தொண்டர்படையாக செயல்பட்டது சிவாஜி ரசிகர்மன்றம் தான். தங்கள் அபிமான நட்சத்திரம் காங்கிரஸில் இருக்கிறார் என்பதற்காகவே தங்களை காங்கிரஸுடன் இணைத்துகோண்ட ரசிகர்கள் எராளம்."" //
(இன்னும் காட்டமான பகுதிகளும் இருக்கின்றன. அவை இங்கு வேண்டாம் என்று நினைப்பதால் 'கட்' பண்ணி விட்டேன்)
-
16th September 2011, 01:32 PM
#1796
Senior Member
Veteran Hubber
காங்கிரஸ் கட்சியினர்தான் இப்படியென்றால், திராவிட இயக்கத்தினர் அதற்கு பல படிகள் மேலே போய் நடிகர்திலகத்தை வஞ்சித்தனர். அரசியல் ஆதாயங்களுக்காக மத்திய அரசுடன் சேர்ந்துகொண்டு, த்குதியானவரைக் கீழே தள்ளி, தகுதியற்றவர்களை விருதுக்குத் தகுதி பெற வைத்தனர். அதற்கு அவர்களுடன் துணை போனது தேசியக்கட்சியான "இ.காங்கிரஸ்".
'உயர்ந்த மனிதன்' விழாவில் ஜனவரி 69-ல் இப்படி பேசிய மாறன், அதே நடிகர்திலகத்தை 1971 ஜனவரியில் தேர்தல் மேடைகளில் எப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேசினார் என்பது நாடறிந்தது. ராகவேந்தர் சார் அடிக்கடி சொலவ்து போல தங்களிடம் இருந்த "இன்னொரு சக்தி"யை மேலே கொண்டுவர அவர்கள் செய்த சூழ்ச்சிகள் எண்ணிலடங்காதவை.
சுருக்கமாகச் சொன்னால், தான் சார்ந்திருந்த கட்சியாலும், எதிர்க்கட்சியாலும் ஒரே நேரத்தில் சேர்ந்தாற்ப்போல பழி வாங்கப்பட்ட ஒரே அப்பாவித் தமிழன் நமது நடிகர்திலகம் மட்டுமே. அத்தனையும் கடந்து அவரை மக்கள் மனதில் நிலைபெற வைத்தது அவரது அபார திறமையும், கள்ளம் கபடமில்லாத நல்ல உள்ளமும்தான்.
-
16th September 2011, 02:32 PM
#1797
இங்கு நடிகர் திலகம் புகழ் பாடும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்,
இது ஒரு சத்யமான வார்த்தை, எல்லா சிவாஜி ரசிகர்களின் மனதில் இருக்கும் மாறாத வடு;ஒரு உயர்ந்த இடத்தை தனது திறமையாலும், கடுமையான உழைப்பாலும் மட்டுமே எட்டிய ஒரு தமிழனை, சக தமிழர்களும், கூட இருந்து குழி பறித்தவர்கலுமே அதிகம் என்பதை நமது ரசிகர்கள் ஒவ்வொருவரும் அறிவர்; திரு. வாசுதேவன் மற்றும் சாரதா மேடம் அவர்களின் உள்ளக் குமறலை நானும் வழி மொழிகிறேன்.
இந்த திரியை, நமது நடிகர் திலகம் புகழ் பாடும் இந்த நூலகத்தை, பல்கலைகழகத்தை ஒரு மாதம் முன்புதான் காணும் வாய்ப்பு கிடைத்தது; பெரும் பாக்கியம் பெற்றேன்;என்னைபோலவே இங்கு பல முகங்களை காண்கிறேன், ஆனால், உங்களைப் போல் எல்லாம் என்னால் இந்தத் திரியில் என்னால் பங்கு கொள்ள முடியாது, ஆனால், இதையெல்லாம் பார்த்து, நடிகர் திலகத்தின் நடிப்பை பார்ப்பது போல், பார்த்து, படித்து பரவச முடியும், ஏனென்றால், இன்று வரை நம்மால் அப்படி வேறு ஒரு நடிகரை அடையாளம் காண முடியாததால்.
இங்கு பங்கேற்கும் அனைத்து நமது சிவாஜி ரசிகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள், இப்படி ஒரு திரியை ஆரம்பித்து , அணையா விளக்கைப்போல், நாளொரு மேனிபோல் வளர்த்துக் கொண்டிருப்பதற்கு!!!!!
Anm
-
16th September 2011, 03:08 PM
#1798
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
anm
இங்கு நடிகர் திலகம் புகழ் பாடும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்,
இங்கு பங்கேற்கும் அனைத்து நமது சிவாஜி ரசிகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள், இப்படி ஒரு திரியை ஆரம்பித்து , அணையா விளக்கைப்போல், நாளொரு மேனிபோல் வளர்த்துக் கொண்டிருப்பதற்கு!!!!!
Anm
Welcome Anm to our NT thread. We are all here to spread our NT fame and our Ragavendran, Pammalar, Vasu and Murali sir, Saradha madam are here to give authentic information about our NT for our next generations. From this thread so many people understood that NT's movies collections and records not touched by any other actors and media people over hyped an actor's records original records shown to every one and even over hyped actor fans also agreed with the proof given by our Pammalar sir.
Vasu sir, I agree with you when our NT acted as Cycle Rickshaw wala with cotton shirt (as original shirt wear by Richshaw walas) but when an actor wear terry cotton shirt and driven Rickshaw (big show) got an Bh......th award, what a shame.... History never forgive these people who purposely worked against NT.
But these people succeed for few times, look at now people talk and discuss and praise about our NT, not about any other actors. That is more than any awards.
Long live NT fame.
Cheers,
Sathish
-
16th September 2011, 03:31 PM
#1799
Dear Ragavendra Sir,
Very True, what you said about Randor-guy.
Randor-guy is an anti Shivaji writer, a self assumed intellect, who was in selection committees and these are all the pseudo-intellectuals who don't know what is acting!!!
ANM
-
16th September 2011, 03:48 PM
#1800
Thank you very much, Mr.Sathish for the warm welcome by the forum.
You are very true, No one else's film is still remembered like our Nadikar thilagam films and they are Monuments now and we know that other films are gone with the days.
Once again thanking for the prompt welcome, I am really very very happy to know lots of shivaji's veteran fans here and what is the 'uniqueness' is that every one speaks the same language, I mean 'Shivaji'.
ANM
Bookmarks