-
16th September 2011, 11:23 PM
#1821
சதிஷை சந்தித்தேன்!
நமது அன்பு நண்பர் ஆஸ்திரேலியா கண்டத்தில் நடிகர் திலத்தின் புகழ் பரப்பும் மதுரையின் மைந்தன் கோல்ட் ஸ்டார் சதீஷ் அவர்களை பத்து நாட்களுக்கு முன் மதுரையில் வைத்து சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது!
அவரே குறிப்பிட்டிருப்பதை போல ஒன்றாக இருந்த அந்த ஒரு மணி நேரமும் நடிகர் திலகம் பற்றிய பேச்சிலேயே கழிந்தது. டி.வி.டி கடையிலும் சரி உட்கார்ந்து பேசிய உணவு விடுதிலும் சரி, உரையாடல் அவரை சுற்றி சுற்றியே வந்தது.
டவுன் ஹால் ரோடு - மேலமாசி வீதி - மேலகோபுர வாசல் தெரு சந்திக்கும் இடத்தில் நின்று கொண்டு பேசியபோது அவரிடம் பழைய நினைவுகளை நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டேன். அந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் அதுதான் சென்ட்ரல் சினிமா அமைந்துள்ள இடம்! அவரிடம் அந்த நாற்சந்திப்பின் மூலையை காட்டி சிவந்த மண் படம் வெளியான முதல் நாளன்று இந்த இடத்தையும் தாண்டி வரிசை நின்றது என்பதை சொன்னேன்! சொர்க்கம் படத்திற்கு முதல் நாள் எந்த வழியாக தியேட்டர் உள்ளே சென்றோம் என்பதை சுட்டிக் காட்டினேன்! ஊட்டி வரை உறவு முதல் நாள் கூட்டத்தைப் பற்றி, என் தம்பி மூன்றாம் நாள் அலப்பறையைப் பற்றி, ராஜாவிற்கு வந்த கூட்டத்தைப் பற்றி, பட்டிக்காடா பட்டணமா படத்தின் வெள்ளி விழாவிற்கு வந்த நடிகர் திலகம் திறந்த ஜீப்பில் தியேட்டரில் இருந்து பாண்டியன் ஓட்டலுக்கு சென்ற போது நான் எங்கிருந்து பார்த்தேன் என்ற இடம், அந்த தெருவில் ஞாயிறன்று வாசகசாலை எங்கே அமைப்பார்கள் என்ற இடம் இவற்றையெல்லாம் பற்றி சொல்லிக் கொண்டேயிருந்தேன்! சதீஷ் வீட்டில் ஒரு முக்கியமான சடங்கு நடைப் பெற்றுக் கொண்டிருந்த அந்த நேரத்திலும் அவரின் presence வீட்டில் கட்டாயம் தேவை என்ற நிலையிலும் அவர் என்னோடு நேரம் செலவிட்டுக் கொண்டிருந்த அந்த செய்கை மறக்க முடியாத ஒன்று! அந்த நேரத்திலேயே அந்த இடத்திலிருந்தே சுவாமியுடன் அலைபேசியில் உரையாடியதும் மறக்க முடியாத ஒன்று!
நன்றி சதீஷ்! நன்றி! அநேகமாக நீங்கள் மதுரையிலிருந்து புறப்படும் தினமான செப்டம்பர் 30 அன்று மதுரையில் மன்னவன் வந்தானடி திரையிடப்படலாம்! அதுவும் உங்கள் அபிமான அலங்கார் திரையரங்கில்!
அன்புடன்
-
16th September 2011 11:23 PM
# ADS
Circuit advertisement
-
17th September 2011, 12:03 AM
#1822
Senior Member
Veteran Hubber
டியர் anm,
நல்வரவு ! நற்பதிவுகள் !! நல்வாழ்த்துக்கள் !!!
தங்களுடைய மேலான பதிவுகளை-பங்களிப்பை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன் !
[My abbreviation for your id anm : awesome nadigarthilagam's messenger]
அன்புடன்,
பம்மலார்.
-
17th September 2011, 12:03 AM
#1823
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராகேஷ்! [செப்டம்பர் 17]
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
-
17th September 2011, 12:09 AM
#1824
Senior Member
Veteran Hubber
A Very Very Happy Birthday Mr.Rakesh !
Many Many More Happy Returns !
-
17th September 2011, 12:17 AM
#1825
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
'சென்னையில் சவான்' விகடன் தொகுப்பு அருமை. "உயர்ந்த மனிதன்" படவிழாவை வீடியோவாகவும் எடுத்திருப்பது தெரிகிறது. அதனைத் தேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
Dear Mr. NOV,
Thanks a lot for the radio interview of NT.
டியர் சந்திரசேகரன் சார்,
பொக்கிஷப் பாராட்டுக்கு பணிவான நன்றி !
சகோதரி சாரதா,
தங்களது பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !
தங்கள் கூற்று முற்றிலும் உண்மை. 'நான் ஒருவன் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் பொக்கிஷங்களை அகிலமெங்கும் உள்ள அனைவரும் பார்த்துக் களித்து இன்புற வேண்டும்' என்பதே எனது குறிக்கோள். அந்த வகையில் அதற்கு வழிவகை செய்திருக்கின்ற நமது திரிக்கும், நமது 'ஹப்'பிற்கும் நமது நன்றிகள் என்றென்றும் !
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
தங்களின் குமுறல் நம் எல்லோரது எண்ணங்களையும் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளது. தங்களின் ஆதங்கம் infinite percent நியாயமானது.
தாங்கள் கூடியவிரைவில் தரப்போகின்ற 'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞன்' நிழற்படத்தொகுப்பிற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !
Dear goldstar Satish,
Thanks for your praise !
டியர் mr_karthik,
பாராட்டுக்கு நன்றி !
தாங்கள் தொகுத்துள்ள 'நடிகர் திலகம் இசைத்த இசைக்கருவிகள்' பட்டியல் அருமை.
Dear Mr.Kumareshanprabhu,
Thanks for the release date of VM.
டியர் முரளி சார்,
தங்களின் 'சதீஷை சந்தித்தேன்' பதிவில் ஒரு மினி வரலாறே உள்ளது.
அன்புடன்,
பம்மலார்.
-
17th September 2011, 12:52 AM
#1826
Senior Member
Veteran Hubber
-
17th September 2011, 04:38 AM
#1827
Senior Member
Veteran Hubber
-
17th September 2011, 04:43 AM
#1828
Senior Member
Veteran Hubber
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
பூப்பறிக்க வருகிறோம்
[17.9.1999 - 17.9.2011] : 13வது உதயதினம்
பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணங்கள்
நடிகர் திலகம் பற்றி நடிகர் ரகுவரன் : தினமணி [வெள்ளிமணி] : 11.12.1998

விமர்சனம் : தினகரன் : 18.9.1999

பூப்பறிக்க வருகிறோம்...
அன்புடன்,
பம்மலார்.
-
17th September 2011, 04:49 AM
#1829
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
பம்மலார் சார்,
நடிகர்திலகத்தின் கடைசிக்காவியமான 'பூப்பறிக்க வருகிறோம்' பட விளம்பரம் ஜோர். அப்படத்தில் அவரோடு இணைந்து நடித்த மாளவிகா போன்ற இன்றைய தலைமுறையினரின் கருத்து பற்றிய பத்திரிகை கட்டிங் எதுவும் இருக்கிறதா?.
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
பூப்பறிக்க வருகிறோம்
[17.9.1999 - 17.9.2011] : 13வது உதயதினம்
பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்
நடிகர் திலகம் குறித்து நடிகை மாளவிகா : தினத்தந்தி : 24.3.1999

[டியர் mr_karthik, தங்கள் சித்தம் என் பாக்கியம் !]
அன்புடன்,
பம்மலார்.
-
17th September 2011, 06:06 AM
#1830
Senior Member
Diamond Hubber
Bookmarks