-
15th February 2013, 05:45 AM
#11
Junior Member
Platinum Hubber
சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பதுஅவசியம்.
தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமழ்ச் சமுதாயம் தமிழ் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.
ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.
கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல – தரத்தை மட்டுமல்ல. அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.
கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தையும் காட்ட முடியும்.
மனிதர்களுக்குச் சில குணங்கள் உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் சரியான முறையில் தங்களது சந்ததியினரை வழி நடத்திச சென்றால் அழகான குடும்பத்தினரை உருவாக்க முடியும்.
கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அமைதியில்தான் ஆரம்பமாகிறது. பிறகு இறுதியில் உச்சக்கட்டம் ஏற்பட்டு முடிகிறது.
பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும். பிறர் ரசிப்பதற்காக அல்ல! ஆடலும் பாடலும் அதுபோலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.
குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
கலை எப்போதும் இருக்கும். ஆனால் கலைஞர்கள் இருக்கமாட்டார்கள்.
இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால்தான் எதிர் காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.
சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்துகொள்ளாத்தே இதற்குக் காரணம்.
பதவிகள் எல்லாம் வந்தால் வரும்; போனால் போகும். நான் நடிகனாக இருந்தவன்; அந்த உணர்வை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது.
கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படுவது சிக்கலை ஏற்படுத்துவதற்காக அல்ல; அவசியமான நன்மைகளைப் பெறுவதற்கும் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெருவதற்குமேயாகும்.
ஒரே கட்சி ஆட்சிதான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி, அது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக்க் கூற விரும்புகிறேன்.
-
15th February 2013 05:45 AM
# ADS
Circuit advertisement
Bookmarks