
Originally Posted by
RAGHAVENDRA
இன்று ஒரு பரத நாட்டிய விற்பன்னர் ஒருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் முறைப்படி பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்ததோடு மட்டுமின்றி அக்கலையில் மிக உயர்ந்த நிலையில் உள்ள கல்வித் தகுதியும் பெற்றவர். அதே நிலையில் மேலும் ஓர் ஆய்வினை மேற்கொள்ள இருப்பதாகக் கூறிய அவரிடம் அந்தத் தலைப்பைப் பற்றிக் கேட்டேன். அவர் கூறிய பதிலில் நான் வியப்பில் திகைத்தது நிஜம். காரணம் அவர் பரத நாட்டியத் துறையில் அடுத்த நிலை ஆய்வுக்கான பொருள் நடிகர் திலகமும் நாட்டியமும் என்பதாகும்.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக அவர் சொன்னது நம் அத்தனை பேர் நெஞ்சிலும் பால் வார்த்தது.
மிகை நடிப்பு என்பதெல்லாம் கலையைப் பற்றித் தெரியாதவர்கள் சொல்லும் வாதம். அவருடைய ஒவ்வொரு பாத்திரத்திலும் அவர் உள்ளே சென்று ஆராய்ந்து எது தேவை என்று அறிந்து செய்கிறார். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர் தன்னை இழக்க வில்லை. அதாவது அந்த பாத்திரமாகவே மாறி விடுகிறார் என்பதைக் காட்டிலும் அந்தப் பாத்திரத்திற்குள் கூடு விட்டு கூடு பாய்ந்து தேவையானவற்றைத் தருகிறார். இவர் நிச்சயம் சரஸ்வதி தேவியின் அம்சம் என்றார்.
இன்று முழுக்க மனம் இதையே நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது.
இதைப் படிக்கும் உங்களுக்கும் அப்படித் தானே...
Bookmarks