Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #10
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,
    தங்களுடைய ஆதங்கம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. என்ன தான் விருதைப் பற்றி கவலையில்லை என்று சொன்னாலும் அது கிடைக்கும் போது நாம் நிச்சயமாக சந்தோஷப் படத்தான் செய்வோம். அது தான் யதார்த்தம். அப்படி இருக்கும் போது ஆஸ்கார் விருது நிச்சயம் ரசிகர்களுக்கு நீண்ட நாள் கனவு. தாங்கள் கூறுவது போல் நடிகர் திலகத்திற்கு அவ் விருதிற்குரிய தகுதிகள் மற்ற எல்லாரையும் விட பற்பல மடங்கு அதிகமாகவே உள்ளது. ஆனால் அதனை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை. அதை lobbying என்று சொல்லலாம். இந்த இடத்தில் லாபியிங் என்பதை நம் நாட்டு அரசியல் வாதிகளின் லாபியை நினைக்க வேண்டாம். ஆஸ்காருக்கான லாபியிங் என்பது அதற்கான ஆவணங்களைத் தயாரித்து அதை யாரிடம் சேர்க்க வேண்டும் எப்போது சேர்க்க வேண்டும் எப்படி சேர்க்க வேண்டும் என்பன போன்ற நடைமுறைகளைக் குறிப்பதாகும். இதை நிச்சயம் செய்ய வேண்டும்.

    தாங்கள் சொல்ல வந்த கருத்தை சரியான முறையில் சொல்லாததினால் தான் வாதங்கள் வருகின்றன. நான் பல முறை கூறி வந்துள்ளது போல் அவர் நடித்த படங்கள் மோசமாக இருக்கலாம், ஆனால் அவருடைய பங்களிப்பு ஒரு படத்தில் கூட ஒரு சதம் கூட குறைந்ததில்லை, தாங்கள் வெறுக்கும் சந்திப்பு, அமர காவியம் போன்ற படங்கள் உட்பட. தோல்விப் படங்களை அவர் எல்லா காலத்திலும் சந்தித்திருக்கிறார். ஆனால் அதற்கான காரணம் நிச்சயம் அவரல்ல.

    என்னைப் பொறுத்த வரை அவருடைய படங்களை விட அவருடைய நடிப்பிற்காகவே அத்தனை படங்களையும் பார்ப்பவன் விரும்புபவன், அது எப்படிப் பட்ட குப்பைப் படமாயிருந்தாலும் கூட.
    Last edited by RAGHAVENDRA; 27th February 2013 at 03:29 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •