Results 1 to 10 of 625

Thread: வாகை சூட வரும் 'வசந்தமாளிகை'

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்றைய [ 10.03.2013 ] தினம் மறக்க முடியாத நாள். சென்னை நகரில் இப்படி ஓர் அளப்பரையை சமீப காலத்தில் எந்த நடிகரின் படமும் பெற்றிருக்காது என ஆணித்தரமாக அறுதியிட்டுச் சொல்ல வைத்த நாள். சென்னை ஆல்பர்ட்டில் எழுந்த ஆரவாரம் நம் தங்கத் தலைவனாம் நடிகர் திலகத்தை விண்ணுலகில் உசுப்பி எழுப்பி யிருக்கும். வந்திருந்த புதியவர்கள் தங்கள் அனுபவத்தை தாங்கள் பார்த்ததை சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரே வார்த்தை

    பிரமிப்பு

    ஆட்சியில் இருந்தவரில்லை, அதிகாரம் படைத்தவரில்லை, உண்மையைத் தவிர வேறேதும் அறிந்தாரில்லை, இப்படிப் பட்ட ஓர் உன்னத மனிதரை, இறந்து 11 ஆண்டுகளாகியும் மக்கள் இந்த அளவிற்கு வெறித்தனமாக நேசிக்கிறார்கள் என்றால் அது உலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும் தான்.

    இன்றைய தினம் ஜனத் திரளில் ஆல்பர்ட் திரையரங்கும் திக்கு முக்காடிப் போனது உண்மை. ஏதோ திருவிழாவிற்கு வருவது போல் மக்கள் வருகையைக் கண்டு பிரமித்துப் போனவர்களில் பலர் என்றாலும் குறிப்பிடத் தக்கவர்



    வெண்கலக் குரலோன் டி.எம்.சௌந்தர் ராஜன் அவர்கள்.

    விரிவான இடுகை தொடரும் முன்,

    நாமெல்லாம் இத்திரியில் இணையக் காரணமான முரளி சாரின் திரு முகத்தைப் பார்ப்போமா



    Murali Srinivas எனக் குறிப்பிடப் பட்டிருப்பவர் தான் முரளி சார். அவரை இதுவரை பார்க்காதவர்களுக்காக இந்த அறிமுகம். நடிகர் திலகத்தின் புகழை இம் மய்யத்தின் மூலம் ஊரறியச் செய்யும் அத் திருக்கரங்களை நாம் உணர்ந்திருக்கிறோம். அத் திருமுகத்தைப் பார்க்க வேண்டாமா.



    இன்று நம்முடைய மய்ய நண்பர்கள் திருவாளர்கள் நெய்வேலி வாசுதேவன், சித்தூர் வாசுதேவன், பம்மலார், பார்த்த சாரதி, கிருஷ்ணா ஜி, பால தண்டபாணி, திரு ராதா கிருஷ்ணன் என பெரும்பாலானோர் வந்திருந்தனர். நமது மற்றோர் ஹப்பர் திரு ராமஜெயம் அவர்களும் வந்திருந்தார்.

    அளப்பரை கூட்டம் அலங்காரம் போன்ற அனைத்தையும் பற்றித் தொடரும் பதிவுகளில் பார்ப்போம். ஆனால் அதற்கெல்லாம் அடையாளச் சின்னமாக விளங்கும் இந் நிழற்படத்தைப் பார்ப்போமா .. பக்கம் பக்கமாய் நாம் எழுத எண்ணுவதை இப்படம் ஒன்றே விளக்கிடுமே.

    Last edited by RAGHAVENDRA; 11th March 2013 at 12:21 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •