-
11th March 2013, 08:45 AM
#11
Senior Member
Seasoned Hubber
டியர் வெங்கி ராம்,
கட் அவுட் கலாச்சாரம் என்பது இன்றைய கால கட்டத்தில் பொருள் தரும் விதமாக அந்தக் கால கட்டத்தில் அறிமுகப் படுத்தப் படவில்லை என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கட் அவுட் என்பது ஒரு விளம்பர யுத்தி. ஒரு பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பயன் படுத்தப் படும் பல்வேறு வகை உபாயங்களில் ஒன்று. அதில் ஒரு புதுமையாக வணங்காமுடி திரைப்படத்திற்கு சென்னை சித்ரா திரையரங்கின் முகப்பில் பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப் பட்டு படத்திற்கு ஒரு talk கொடுத்தது. அதைத் தொடர்ந்து மற்ற படங்களுக்கும் அது தொடர்ந்தது. இதில் எந்த விதமான தவறும் இல்லை.
ஆனால் இதனை அரசியல் வாதிகள் தங்கள் சுய விளம்பரத்திற்காக பயன் படுத்தத் தொடங்கிய போது தான் இந்த கட்அவுட் கலாச்சாரம் என்கிற சொல்லே பரிச்சயமானது. இதைப் பற்றி விவாதிக்க ஏராளமான பக்கங்கள் வேண்டும்.
கட் அவுட் வைப்பதை முதலில் தொடங்கி வைத்தது விளம்பர நிறுவனங்கள். பின்னாளில் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர் மேல் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாக அதனைப் பின்பற்றத் தொடங்கினர்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th March 2013 08:45 AM
# ADS
Circuit advertisement
Bookmarks