-
12th March 2013, 05:37 PM
#11
Junior Member
Veteran Hubber
திரைப்பட வரலாற்றின் நூற்றாண்டு விழா. புரட்சித்தலைவரின் பெயரை சொல்லாமல் அதுவும் தமிழகத்தில் நடக்கிறது. தமிழனின் புகழை தன் படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் மூலம் தரணி எங்கும் தழைக்க வைத்த தலைவனின் சுவடு இல்லாமல் ஒரு விழா.. உலகத்தமிழர்களுக்கு இதை விட துயர செய்தி ஏதாவது இருக்க முடியுமா.. சினிமா வரலாற்றிலேயே நடிகர் என்ற தொழிலையே குறைவாக எடைபோட்டபோது, அந்த தொழில் செய்பவர்களுக்கு ஒரு கௌரவத்தை ஏற்படுத்தி கொடுத்தவர். உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகர் நாடாள முடியும் என்பதை நிரூபித்தவர்..இவருக்கு பிறகுதான் அமெரிக்க ஜனாதிபதியாக ரீகன் 1981ம் ஆண்டு பதவி ஏற்றார். சிறந்த நடிப்பிற்காக பாரத் விருதை பெற்றது மட்டுமல்லாது பாரத தேசத்தின் பல தலைவர்களால் போற்றப்பட்டு பாரதத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்து அந்த சங்கத்திற்கே பெருமை சேர்த்தவர்..இந்தியாவின் இரும்பு மங்கை என்று போற்றப்பட்ட அன்னை இந்திராவின் அன்பிற்கு பாத்திரமான ஒரே ஒப்பற்ற தலைவர் புரட்சிதலைவர். நடிகராய் தான் ஈட்டிய பொருள் அனைத்தையும் மக்களுக்காக..ஏன் இந்தியாவிற்காக செலவிட்டார்.எத்தனை முறை யுத்த நிதிக்காக நிதியளித்தார்..அப்படி புகழ்மிக்க தலைவராக இன்றும் விளங்கும் எம்.ஜி.ஆருக்கு அந்த விழாவில் ஒரு பங்கில்லை. எல்லாவற்றிற்கும் மேலான விஷயம் ஒன்று இருக்கிறாது. மக்களின் உள்ளங்களில் மட்டுமல்லாது இந்த உலகத்திலே அதிக கட்டுரைகளிலும், பேட்டிகளிலும் இடம்பெற்ற, பேசப் படுகிற ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்தான்..இது ஒரு பெரிய கின்னஸ் சாதனைஆகும்..இந்த சாதனையை கின்னசில் இடம்பெற செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். நடிப்பில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதை எல்லோரும் ரசிக்கும்படி செய்தவர். அவர் நடிப்பு கொஞ்சம் கூட மிகையில்லாத ஒரு இயற்கை நடிப்பாகும்..ஆம். இயற்கை நடிப்பால் எல்லோருடைய மனங்களையும் கவர்ந்து இன்றும் இதய தெய்வமாக வாழ்ந்து வருபவர்..மலைக்கள்ளனில் அவரது பண்பட்ட மற்றும் மாறுபட்ட நடிப்பால் அப்படம் ஜனாதிபதியின் தங்கபதக்கம் பெற்றது..அப்படிப்பட்ட ஒரு ஒப்பில்லா நடிகரை பாராட்ட இந்த விழாவில் வார்த்தை இல்லாதபோது இந்த விழா நடக்கவும் வேண்டுமா என்பதுதான் தமிழக மக்களின் எண்ணமாக இருக்கும்..எனவே மேற்கூறிய கருத்துகளை நூற்றாண்டு விழா நடத்துவோரிடம் நடிகர் சங்கமோ, அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ கொண்ட செல்ல வேண்டும் என்பதுதான் என்போன்ற தலைவரின் தொண்டனின் எண்ணமாகும்.
-
12th March 2013 05:37 PM
# ADS
Circuit advertisement
Bookmarks