-
23rd March 2013, 07:49 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..
ஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது. திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது. பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான "திருடாதே பாப்பா திருடாதே" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..
இந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார் ..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார். சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.
மேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..பிற நடிகர்களின் திரைப்படங்களின் வசூலை இந்த ஒரு படம் முறியடித்து சாதனை படைத்த மாபெரும் வெற்றிப்படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது..
தங்களின் விமர்சனம் மிகவும் அருமை
நன்றி கலியபெருமாள் சார்
அதேபோல் எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் புதுச்சேரி பதிவுகள் அத்தனையும் அருமை சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
-
23rd March 2013 07:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks