பழம் பெறும் கத்தி!

என்னைக் கத்தியென்று வர்ணிக்கும் என் அழகிய தர்ப்பூசணிப் பழமே!
நான் உன் மீதோ நீ என் மீதோ விழுந்துவிட்டால்
வெட்டுப்படப் போவது நீ என்றுதானே அங்கலாய்க்கிறாய்?
நான் அன்புக் காகிதத்தில் செய்யப்பட்ட அபூர்வக் கத்தி. ஆசைப் படு.
இதில் வெட்டுபட குத்துப் பட ஒன்றுமில்லை. ஆனந்தம்
விட்டுப் போக நட்டப்பட வாய்ப்பே இல்லை.
தர்ப்பூசணி போர்த்தப் பட்டுப் பொக்கிஷமாகும்.
விடுதலை குறையாத இன்ப விலங்கு விழும்.
வியர்க்கும் நினைவில் காற்று வரும்.
பழமும் கத்தியும் பழகி மாயும். பிழியாது சாறூரப் பழக்கமாகும்.
கத்திக் கேங்கிக் கிட்டாது போகும் பாவப்பட்ட பழமாவதில்
புத்திக்கெட்டும் வரை லாபமில்லை.
நான் தர்ப்பூசணித் தோட்டத்தில் தனித்து வாழும்
கற்புக் காரன். கத்தியாசையில் சில பழங்கள்.
வெட்டு குத்து பழக வைத்துவிடாதே!

திருத்தக்கன்