-
30th March 2013, 08:27 PM
#11
Senior Member
Seasoned Hubber
லாரன்ஸ் ஒலிவியர் போன்ற சிறந்த நடிகர்கள் கூட ஒரே படத்தில் ஒரே பாத்திரத்தில் வெவ்வேறு பள்ளி வகையிலான நடிப்பைத் தந்துள்ளனர். ஒலிவியரின் ஹென்றி 5 இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.
நடைமுறையில் கற்பிக்கப் படும் பல்வேறு நடிப்புப் பயிற்சிகள் ஒரு புறம் இருக்க ஷேக்ஸ்பியர் நாடகக் குழுவிற்கென்று தனி நடிப்புப் பயிற்சி உண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் படமாக்கும் பொழுது அதில் நடிக்கும் நடிகர்களில் பெரும்பாலானோர் அந்தப் பயிற்சியை மட்டுமே பின்பற்றுவர். ஆனால் சர் லாரன்ஸ் ஒலிவியர் அவர்கள் சுயமாக மற்ற பள்ளிகளின் இலக்கணங்களைப் புகுத்தி விடுவார்.
இந்த ஷேக்ஸ்பியர் நாடக் குழுவினர் ஒரு சரித்திர நாடகத்தில் பின்பற்றும் ஒரு நடைப் பயிற்சியை நடிகர் திலகம் ஒரு சமூகப் படத்தில் ஒரு இக்கட்டான சூழலில் பயன் படுத்தியிருப்பார்.
அது தான் தங்கப் பதக்கம் திரைப்படத்தில் போலீஸ் உயர் அதிகாரி ஒரு bad news என்று கூறி சௌத்ரியின் மனைவி இறந்த தகவலைச் சொல்லும் கட்டம். அதில் நடிகர் திலகம் நடக்கும் போது கால் தடுக்கும், சுதாரித்து நடப்பது. இதனை ஒரு முறை நான் சந்தித்த லண்டன் ஷேக்ஸ்பியர் நாடகக் குழு உறுப்பினர் - இந்தியாவிலிருந்து சென்று அங்கே பயிற்சி பெற்றவர் - கூறியதாகும். லண்டன் ஷேக்ஸ்பியர் நாடகக் குழுவில் ஒரு பயிற்றுனர் இந்த நடையை ஒரு மன்னரின் கதையில் ராணுவ வீரருக்கு [KINIGHT] நேருமாறு சொல்லியிருப்பார். இதனைப் பார்த்து விட்டு சென்னை வந்த அந்த உறுப்பினர் தங்கப் பதக்கம் திரைப்படத்தைப் பார்த்து விட்டு பிரமித்து நின்று விட்டாராம். அவரே என்னிடம் கூறிய தகவல் இது. எந்த நாட்டில் எந்த ஊரில் எந்த நாடகத்தில் எந்த சூழலில் இடம் பெற்ற ஒரு நடிப்புக் கலையை இவர் இங்கே எப்படி சரியான முறையில் சரியான சூழலில் கொண்டு வந்தார் என்பதை மிகவும் வியப்பாக உணர்ந்தாராம்.
Last edited by RAGHAVENDRA; 30th March 2013 at 09:22 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th March 2013 08:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks