-
31st March 2013, 09:23 PM
#11
Junior Member
Devoted Hubber
அன்புள்ள கோபால்,
நான் பலமுறை விமானத்தில் பயணித்துள்ளேன்.இருக்கையில் அமர்வேன்.விமானம் ஓடு பாதையில் ஓடத்துவங்கும்.திடீரென பறக்கும்.வானில் மிதக்கும்.இவைகளை ஒரு யதார்த்த நிகழ்வாகவே பார்த்து வந்த எனக்கு, இத்தனை எடையுள்ள விமானம் ஆகர்ஷண சக்தியை எதிர்த்து பறப்பது எப்படி என்ற கேள்விக்கு பல நாள் விடை தெரியாமலேயே இருந்தது.
அதேபோல,
நடிகர் திலகம் நடித்த பல படங்களைப்பர்த்து மகிழந்திருந்தாலும்,அவர் நடிப்பை பல கோணகளில் ஒப்பிட்டு அதன் சிறப்பு என்ன என்பது என புரிந்து கொள்வது எனக்கு தெரியாமலேயே இருந்தது.ஆனால் thanks to you, எனக்கு இப்பொழுது அவைகளுக்கான பதில் ஓரளவு தெரிகிறது.
நீங்கள் மிகச்சிறப்பாக எழுதியுள்ள இந்த தொடர் ஒரு ரசிகனால் மட்டுமே செய்ய முடியும்.அதாவது நடிகர் திலகமே நினைத்தால் கூட நான் இம்முறையில் நடித்துள்ளேன் என்று விளக்கி சொல்ல அவரால் கூட முடியாது.ஏனெனில் அவர் பிறவி நடிகர்.
உங்களின் இந்த அரியபணிக்கு சிவாஜி ரசிகர்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.
இக்கட்டுரைகளை அடிநாதமாக கொண்டு மேற்கொண்டு அந்த மேதையின் நடிப்பை ஆராய நினைப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.
உலக நடிகர்கள் அனைவரும் செய்யாத ஒரு சாதனை தலைவரின் 300 க்கும் மேற்பட்ட படங்களே.அவ்வாறு நடிப்பது எவ்வளவு சிரமம் என்பது இன்னொரு நல்ல நடிகனுக்கே தெரியும்.
மேலும் நீங்கள் எழுதியுள்ளது மிகவும் கடுமையான ஒரு subject ஆகும்.அதை ஓரளவுதான் எளிமைப்படுத்தவும் முடியும்.தோசை செய்வது எப்படி என ஒரு நண்பர் கேட்டால் 4 பங்கு அரிசி என ஆரம்பித்து சொல்லி விடலாம்.ஆனால் அணுகுண்டு தயாரிப்பது எப்படி என்ற கேள்விக்கு முதலில் தேவையான அளவிற்கு யுரேனிய அணுவை எடுத்துக்கொள்ளவும் எனஆரம்பிக்க முடியாது.அந்த வகையில், புரிவதற்கு சற்று கடினமாக இருந்தபோதிலும் புரியவைக்க நீங்கள் எடுத்துள்ள சீரிய முயற்சி போற்றத்தக்கது.
இந்த வகையில் நண்பர் ராகவேந்தருக்கும் ஒரு வேண்டுகோள்.நீங்கள் கோபால் எழுதியவற்றிக்கு rejoinder கொடுப்பதற்கு பதில் இந்த ஆறு வகை different school of acting ஐ இருவரும் பிரித்துக்கொண்டு தனித்தனியே எழுதினால்.நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.மற்றபடி உங்கள் விளக்கங்களும் மிக நன்றாகவே உள்ளன.
மிக்க நன்றி.
Last edited by Ganpat; 31st March 2013 at 09:25 PM.
-
31st March 2013 09:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks