-
10th May 2013, 08:30 PM
#11
Senior Member
Diamond Hubber
இரவின் மடியில் குளிர் போக்க கொள்ளிக்கட்டைகள் எரிந்துகொண்டிருக்க, முக்கால்பாக முகம் வெளிச்சத்திலும் கால் பாக முகம் இருட்டிலும் தெரிய 'புதியபறவை' பழைய பாடலை அமைதியாகப் பாட, ஆழ்ந்த அமைதி கொண்ட அந்த வேளையில் மனம் முழுக்க அந்த சமயம் லேசாகி கண்களை எப்போதாவது சிமிட்டி (கண்களை அடிக்கடி சிமிட்டினால் புதிய பறவையின் அழகை முழுதும் பருக முடியாமல் போய்விடுமோ!) மிக நிதானமாக புகையை இழுக்கும் பாங்கு, வந்த பறவை வல்லூறு என்று தெரியாமல் தன்னை முழுவதுமாகவே கொடுத்துவிடும் ஏமாளித்தனம்... உள்மனதில் புதைந்து கிடக்கும் மர்மங்களையும் தாண்டிய தாளாத காதல்... பறவையின் சம்மதம் நிச்சயம் என்ற திருப்தி... உடல் அசதி, உள்ள அசதி, கண நேர மனநிம்மதியில் பறவையின் பாடலில் மயங்கி, கிறங்கி அப்படியே ஆழ்நிலை உறக்கம். அதே நாற்காலியில் அமர்ந்து பின்னாளில் தானே தன் வாயால் வாக்குமூலம் கொடுக்கப் போவதை அறியமாட்டாத அப்பாவியாய்.
அந்த பாவப்பட்டவனோடு சேர்ந்து நாமும் கொஞ்சம் உறங்கலாம்.
-
10th May 2013 08:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks