-
3rd July 2013, 06:15 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ள ராகவேந்தர் சார்,
'புகுந்த வீடு' திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் கலைஞர்களுக்கு நடிகர்திலகம் வெற்றிக்கேடயம் வழங்கும் பேசும்படம் புகைப்பட தொகுப்பு மிகவும் அருமை. தான் பங்கேற்காத ஒரு படத்தின் வெற்றி விழாவிலும் கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்புடன் அவர் பரிசு வழங்கும் அழகே அழகு.
பரிசுபெறும் கலைஞர்களான இயக்குனர் பட்டு, ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன், சோ, வி.எஸ்.ராகவன், சாவித்திரி, லக்ஷ்மி, சந்திரகலா, ரமாபிரபா. சகுந்தலா, பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், சங்கர் - கணேஷ் அனைவரின் முகத்திலும், ஒரு மாபெரும் கலைஞரின் கையால் வெற்றிக்கேடயம் பெறுகிறோம் என்னும் மகிழ்ச்சி தாண்டவமாடுவதைக் காண முடிகிறது.
அரிய ஆவணத்தை அளித்த தங்களுக்கு நன்றி...
-
3rd July 2013 06:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks