Page 96 of 399 FirstFirst ... 46869495969798106146196 ... LastLast
Results 951 to 960 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #951
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள ராகவேந்தர் சார்,

    'புகுந்த வீடு' திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் கலைஞர்களுக்கு நடிகர்திலகம் வெற்றிக்கேடயம் வழங்கும் பேசும்படம் புகைப்பட தொகுப்பு மிகவும் அருமை. தான் பங்கேற்காத ஒரு படத்தின் வெற்றி விழாவிலும் கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்புடன் அவர் பரிசு வழங்கும் அழகே அழகு.

    பரிசுபெறும் கலைஞர்களான இயக்குனர் பட்டு, ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன், சோ, வி.எஸ்.ராகவன், சாவித்திரி, லக்ஷ்மி, சந்திரகலா, ரமாபிரபா. சகுந்தலா, பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், சங்கர் - கணேஷ் அனைவரின் முகத்திலும், ஒரு மாபெரும் கலைஞரின் கையால் வெற்றிக்கேடயம் பெறுகிறோம் என்னும் மகிழ்ச்சி தாண்டவமாடுவதைக் காண முடிகிறது.

    அரிய ஆவணத்தை அளித்த தங்களுக்கு நன்றி...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #952
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள சௌரி சார்,

    தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அட்டகாசம். தங்கள் புனைப்பெயருக்கு ஏற்றார்போல நடிகர்திலகத்தின் திறமையை 360 கோணங்களிலும் அலசுவதாக அமைந்துள்ளது. 'பராசக்தி' அலசல் துவக்கமே வெகு அருமை. தொடர்ந்து பிளந்து கட்டுங்கள். வாழ்த்துக்கள்.

  4. #953
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சவுரி,
    பராசக்தி ரொம்ப ரசித்தேன்.

  5. #954
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    சவுரி,
    பராசக்தி ரொம்ப ரசித்தேன்.
    souri] nt360degree;
    very very grand opening at apprapriate time. Please continue.
    All the very best.

  6. #955
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    The Bahamas
    Posts
    0
    Post Thanks / Like
    அடடா! காணொளியின் விருந்தே படைத்து விட்டீர்களே!! நன்றி த்ரீசிக்ஸ்டி சார்.

  7. #956
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like

    திரை உலக சித்தர் சிவாஜி


    இன்றைய சினிமா என்பது, தெருக்கூத்து, தெருமுனை நாடகம், அரங்க நாடகம் இவற்றின் அடுத்த தலைமுறை விஞ்ஞான வளர்ச்சிதான் ! நாடகத்தில் நன்கு சோபித்தவரே திரையில் எந்த வித கடினமான கதாபாத்திரத்தையும் லாவகமாக கய்யாளகூடிய திறன் படைத்தவராக உலாவரமுடியும். ஆகையால்தான் பிறர் நடிக்க பயந்த கதாபாத்திரங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக ஊதி தள்ளி, திரை உலகையே வெறுத்த திராவிட தந்தை பெரியார் அவர்களையே கவர்ந்து, நடித்த மேடயிலயே அவர் வாயாலயே "சிவாஜி" என்ற பட்டமும் கொடுக்க வைத்த நடிப்பு நம்முடைய தமிழகத்தின் பெருமையாம் திரை உலக சித்தர் சிவாஜி கணேசன் அவர்களுடையது.


    ஒரு மன்னனாக வேடமிட்டால் ..அந்த அலங்காரம் செய்து உடையுடுத்திய வேடம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது ! மன்னனிடம் கம்பீரம் என்ற ஒரு விஷயம், அந்த நடை, உடை, பாவனையில் இருக்கவேண்டும்...! அப்படி இருந்தால் தான் ஏற்றுகொண்ட வேடம் திறம்பட அமையும்.


    எந்த மனிதனும் அந்த மன்னர் அழகா இருந்தார் என்று கூறமாட்டார்கள். மாறாக அந்த ராஜாவுக்கு என்ன கம்பீரம் பாருடா ! என்ன ஒரு நடை, என்ன ஒரு bodylanguage ...இப்படி தான் எல்லாரும் உரைப்பார்கள் ! கம்பீரம் இல்லாமல் பேசட்டும் பார்க்காலாம் - என்னடா ஒரு ராஜ என்கிற கம்பீரமே இல்லாம சாதாரணமா பேசறாரு...ராஜான்னா பேச்சுலயே ஒரு கெத்து வேணாம்? ஹய்யோ..ஹய்யோ ! என்று தலையிலடித்து கூறுவார்கள்.

    உதாரணமாக ...கட்டபொம்மனை எடுத்துகொண்டால், ஒரு சாமானிய குடிமகன் போல செய்யவேண்டும் என்று
    பேரில் சாதாரணமா சாதாரனமனிதரைபோல "இயற்கையாய்" "இதோபாருங்கள் british officer இந்த கிஸ்தி, திரை, வரி வட்டி இதெல்லாம் எதற்கு கொடுக்கவேண்டும்..எனக்கு ஒன்றும் புரியவில்லை ....ஏனென்றால் வானம் அதுபாட்டுக்கு பொழியுது..பூமி அதுபாட்டுக்கு விளையுது ? என்ற ரீதியில் இயற்கையான நடிப்பு என்று சப்பைகட்டுகட்டி, முகபாவம் என்ற ஒன்றை மறந்து, body language என்ற ஒன்றை பற்றி துளி கூட கவலை படாமல் வசனம் பேசினால்,


    படம் பார்க்கும் மனிதர்கள்...என்னடா இது...கட்டபொம்மன் நல்ல நறுக்குன்னு நாலு சத்தம் போட்டு கேள்விகேகரதவிட்டு சொரனகெட்டபொம்மனால்ல பேசறான் ? என்று எள்ளி நகையாடமாட்டார்கள் ?

    ஆனால் நம் நடிகர் திலகம் அந்த வசனம் பேசும்போது 90 வயது கெழவன் கூட நரம்பு முறுக்கேறி..மனதளவில்.." அப்படி கேள்வி கேள்ளுட என் சிங்கக்குட்டி ! " என்று நினைக்கும் வண்ணம் வசனத்தை அதற்குரிய விதத்தில் பேசி நடித்திருப்பார்.

    அந்த காட்சியை பாருங்கள் ....இதில் நடிப்பு மட்டும் அல்ல ! பல பரிமாங்களும் எக்கால நடிகர்களும் கற்றுக்கொள்ள அவர்கள் இயற்கையாய் நடிப்பவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நிமிடம் ஆடிபோய்தான் விடுவார்கள், விட்டிருப்பார்கள் !

    இந்த ஒரு காட்சியில் நடிகர் திலகத்தின், mannerism , body language , gesture இவை அனைத்தும் ஒரு சேர வழங்கியிருப்பார். !

    முக்கியமாக அந்த அதிகாரி இவருக்கு நாற்காலி இடாமல் அவமானபடுத்த நினைக்கையில் சற்று தன்னை மறந்து அதிகார தோரணையில் எழும்போது, நடிகர் திலகம் அந்த நாற்காலியை தன பக்கம் இழுக்கும் அந்த தோரணை , இழுத்தபின் அமர்ந்து ஒரு SUPERIOR என்ற ஒரு gesturai காண்பிக்கும் திறம் பாருங்கள்...

    பிறகு, அந்த அதிகாரி...நட்பு வேண்டும் அதற்கேற்ற நடத்தை இல்லை உம்மிடம் என்று கூறும்போது ..ஒரு நொடி கோபம் அந்த காலை தரையில் வைத்து எழ எத்தனிக்கும்போது அந்த கோபம் சற்று அடக்கி பேச்சுவார்த்தையை தொடரும் அந்த லாவகம்....!


    இயற்கையாய் நடிக்கிறோம் என்று சப்பைகட்டுகட்டும் எந்த நடிகருக்கும் அவர் இந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் சரி ..எந்தனாட்டினைசேர்ந்தவராக இருந்தாலும் சரி ஏழு ஜென்மம் எடுத்தாலும் வராது !



    ஆனால் நடிப்பை பற்றி ஒரு ABCD கூட தெரியாத தாழ்புனற்சிகொண்ட ஒரு சிலர், அதை கூட மிகைநடிப்பு என்று விமர்சனம் செய்திரிகிறார்கள் அந்த காலத்தில் !.

    பாவம் அவர்களை சொல்லி குற்றமில்லை. அடிமட்ட மக்கள் அல்லவா......?

    இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் "
    முக்கால்வாசி எல்லா படத்திலும் ஒரே ஒரு சாதாரண மசாலா கதை,
    அதில் தங்களுக்கு பிடித்த நடிகர்,
    கதாநாயகி என்ற ஒருவர் டூயட் பாடுவதற்கு மட்டும் கவர்ச்சி பொருளாய் இருப்பார்,
    ஒரு காமெடியன் இருப்பார்-இடையிடையே கதை தோய்ந்துபோகும் போது தனுடைய தமாஷ் நடிப்பின் மூலம் சரிகட்ட ,
    ஒன்றோ இரேண்டோ வில்லன்கள் இருப்பார்கள். அவர்களுக்கு 5 - 10 அடியாட்கள்.
    இவர்களும் படத்தின் விறுவிறுப்பை கூட்ட அடிகடி வந்து கதாநாயகனிடம் டிஷ்யூம் டிஷ்யூம் என்று அடி மட்டும் வாங்கி கொண்டு போவார்கள்.
    கடைசியில் போலீஸ் வந்த இவர்களை கைதுசெய்து, வழக்கம்போல கதாநாயகனை வானளாவ புகழ்ந்து கைதிகளை அழைத்துசெல்ல...சுபம் !

    இவர்களைப்போல் உள்ளவர்களுக்கு கட்டபொம்மன் உயிரை கொடுத்து சுதந்திரத்திற்கு வித்திடான் என்றாலும் ஒன்றுதான் .....ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி என்றாலும் ஒன்றுதான் ! பாவம் !

    ஒரு நடிகன் என்பவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மக்கள் முன் அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் திறம் படைத்தவனாக இருந்தால் தான் மக்கள் அதை ஏற்றுக்கொண்டு "இவரைப்போல நடிக்க இனி ஒருவர் பிறந்தால் கூட முடியாது என்று மனதார வாழ்திகூறுவர். அப்படி மக்களுடைய ஒருமித்த குரலில் வாழ்த்து பெற்று இவரை நடிப்பில் மிஞ்ச இனி ஒருவரும் வரமுடியாது என்று அகில உலகமும் ஏகமனதாக ஒத்துகொண்ட நடிகர் தான் "நடிகர் திலகம்".


    இன்றளவும் தமிழகத்தில் பல குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய குழந்தைக்கு பள்ளி விழாக்களில் FANCY DRESS போட்டியில் கலந்துகொள்ளும்போது நடிகர் திலகம் கட்டபொம்மனாக வாழ்ந்த காவியத்தின் பாதிப்பில் தங்கள் குழந்தைக்கு கட்டபொம்மன் வேடம் புனைந்து போட்டிக்கு அனுப்பி வைகிறார்கள் !

    ஏன் அவர்கள் நினைத்தால் இயற்கையாக நடிக்கிறோம் என்ற தவறான நினைப்புடன் நடிக்கும் நடிகர்கள் எவ்வளவோ பேர் இருகிறார்கள் அவர்கள் நடித்த படங்களில் ஏதாவது ஒரு சாமானிய மனிதன், சாதாரண மனிதன் வேடம் இயற்கையாக இருக்கிறது என்று அதை செய்திருக்கலாமே ! அப்படி செய்தார்கள ?

    இல்லை ! காரணம் அவர்களுக்கு தெரியும் நல்லது எது கெட்டது எது என்று ! அதனால் தான் கட்டபொம்மனை தேர்ந்தெடுகிறார்கள் ! அதற்க்கு காரணம் அவர்கள் மனதில் நம் நடிகர் திலகம் நிரந்தரமாக கட்டபொம்மனாக குடிகொண்டதுதான் ! அதற்க்கு சாட்சி இந்த காட்சி !!!!




    இந்த மழலை இந்த வசனத்தை உரைக்கும்போது அதுவும் " அங்கே கொஞ்சி விளையாடும் எம்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணிபுரிந்தாயா " எனும்போதும் , "துடிக்கிறது மீசை "என்று கூறும்போது பாருங்கள்....நம் நடிகர் திலகத்தின் செய்கை அப்படியே செய்யும் அழகை காண கண் கோடி வேண்டும் ! - அது தான் திரை உலக சித்தரின் நடிப்பின் வலிமை..!

    அதுமட்டும் அல்ல ! வீட்டில் உள்ளவர்கள் கூட தங்கள் குழந்தைக்கு நம் நடிகர் திலகத்தின் கட்டபொம்மனை சொல்லிகொடுக்கும் அழகை பாருங்கள் !! இது எந்த இயற்க்கை நடிகரின் திரை கதாபாத்திரத்திற்கும் எக்காலத்திலும் கிடைக்காத ஒரு பாக்கியம் !







    இன்னும் தாழ்புணர்ச்சி கொண்டவர்களுக்கு உறைக்கும்படி கூறவேண்டும் என்றால் " வயிற்றெரிசலால் பொய்யை அந்த காலம் போல எல்லா காலங்களிலும் சொல்கிறார்களே "மிகைபடுத்தப்பட்ட" நடிப்பு என்று ! அதனால் தான் கற்றோர் மனதில் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் திரை உலக சித்தராக கோயில் கொண்டுள்ளார் !

    அதனால் தான் அவர் திரை உலக சித்தர் என்று கருதபடுகிறார்.



    சுருக்கமாக சொன்னால்......."உலகம் இதிலே அடங்குது...உண்மையும் பொய்யும் விளங்குது........கலகம் வருது...தீருது....அச்சு கலையால் நிலைமை மாறுது......!!




    மீண்டும் சந்திப்போம் !!!!
    Last edited by NTthreesixty Degree; 4th July 2013 at 11:44 PM.

  8. #957
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ravi Sir,

    Thanks a ton for your kind gesture. It was so nice to have received your call complimenting the contribution.

    It is not only me, but also our greatest contributors Mr.Neyveli Vasudevan, Mr.Raghavender, Mr.Pammalar, and who can forget our Mr.Gopal of Vietnam, Mr.Murali Srinivas and am sure you would have loved reading Mr.Karthik's contribution in all the threads.... They are all much more seasoned veterans than me.

    As a matter of fact, Mr.Vasudevan, Mr.Gopal and Mr.Raghavender spends too much time only on this and publishes a very high quality contributions about our nadigar thilagam.

    I shall also convey your appreciations to them here when you mentioned over the phone during our telecon.

    Thanks once again sir...! We would be glad to see your contribution too ...in your view !

    Regards
    Subbu

  9. #958
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள சௌரி சார்,

    தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அட்டகாசம். தங்கள் புனைப்பெயருக்கு ஏற்றார்போல நடிகர்திலகத்தின் திறமையை 360 கோணங்களிலும் அலசுவதாக அமைந்துள்ளது. 'பராசக்தி' அலசல் துவக்கமே வெகு அருமை. தொடர்ந்து பிளந்து கட்டுங்கள். வாழ்த்துக்கள்.
    திரு. கார்த்திக் அவர்களே

    மிகவும் நன்றி தங்களுடைய பாராட்டிற்கு ! தங்களுடைய Contribution திரு.நெய்வேலியார், திரு.ராகவேந்திரர், திரு.கோபால், திரு.முரளி (on madurai related statistics) திரு.பம்மலர் இவர்களை விட பெரிதாக ஒன்றும் நான் இங்கு செய்துவிடவில்லை என்றே நினைகிறேன் !

    உங்கள் அனைவருடைய ஊக்கமும் உந்துதலும் இருக்கின்றவரையில் என்னுடைய பங்களிப்பு தொடர்ந்துகொண்டிருக்கும்.

    எல்லா பாராட்டும் நம் சித்தர் பொற்பாதங்களில் !

  10. #959
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சவுரி,
    பராசக்தி ரொம்ப ரசித்தேன்.
    கோபால் சார்,

    மிகவும் நன்றி !

    என்னுடைய பதிவு மிக மிக சாதாரணம் ஆனால் தங்களுடைய "ஸ்கூல் ஒப் அக்டிங் " ஓவொன்றும் விலைமதிக்கமுடியாதவை. யாரேனும் பதிவெடுத்து நிஜமாகவே ஒரு சில changes செய்து புத்தகமாக போட்டுவிடபோகிரார்கள். !

    The biggest theft happening these days is "Information Theft". May be you can copyright the same if there is a way out. !

  11. #960
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Subramaniam Ramajayam View Post
    souri] nt360degree;
    very very grand opening at apprapriate time. Please continue.
    All the very best.
    Dear SR sir,

    I sincerely extend my thanks for your appreciation and motivation. Mine is only an ordinary contribution when compared to Mr.Neyveliyaar, Mr.Raghavender or Mr.Gopal. Honestly, they inspired me to write and infact taught me how to write in Tamil here !

    Similarly, "The Gentleman of Thread", Esvee Sir of our other thread also taught me how to do it in Tamil. I should thank him too !

    Thanks once again !
    Last edited by NTthreesixty Degree; 4th July 2013 at 10:37 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •