-
6th March 2014, 05:38 PM
#11
Junior Member
Seasoned Hubber
இந்த படத்தில் சிவாஜி சார் படும் கஷ்டத்தை பார்தால் கண்ணில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை , தான் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிப்பது , குடும்பம் சேதறும் பொது , ஒன்றுமே செய்ய முடியாமல் , வெறும் முகத்தில் மட்டுமே தன் நிலைமையை காட்டுவது (acting எப்படி செய்ய வேண்டும் என்று , reaction எப்படி காட்ட வேண்டும் என்று தெரியும் இவருக்கு ) சாப்பாட்டை பார்த்த உடன் தன் மனைவிக்காக அதை எடுத்து கொண்டு வந்து , அதை சாப்பிட முடியாமல் போன உடன் வெறித்து பார்ப்பது , கண்ணாடி இல்லாமல் , தன் மனைவியை பார்க்கும் பொது கண்ணை சிமிட்டி ,சிமிட்டி பார்ப்பது கடைசியில் உயிர் விடுவது என்று நன்றாக செய்து உள்ளார்
இந்த படத்தில் யாரும் கேட்டவர்கள் என்று இல்லை , பணத்தின் மேல் ஆசை உள்ளவர் VKR , திமிர் பிடித்த ராஜா சுலோச்சனா இது தான் நெகடிவ் characters . பாக்கி அனைவரும் , வளர்ந்த முறையாலும் , சூழ்நிலையின்னால் உள்ள grey characters தான்
முரளியின் கதாபாத்திரம் தன் காலில் நிற்க ஆசைபடும் கேரக்டர் , அதற்காக அவர் சொல்லாமல் சென்று விடுவது ஏன் என்று தெரியவில்லை
பூவிலங்கு மோகன் நன்றாக நடித்து இருக்கிறார் , பெருசாக வர வேண்டியவர் இப்போ தொலைகாட்சியில் கலக்கி கொண்டு இருக்கிறார் , அவர் ஆனதை என்று தெரிந்த உடன் அவர் நடிக்கும் காட்சி ஒன்று போதும் , அவர் நடிப்புக்கு ஒரு சான்று
ரஞ்சனியின் கதாபாத்திரத்தை பற்றி நிறைய எழுதி உள்ளேன்
இந்த படத்தின் பெரிய minus காமெடி track அதுவும் மிகவும் talented VKR , ஜனகராஜ் , நகைச்சுவை பெரிய வேக தடை , ஆனால் ஜனகராஜ் அவர் தம்பி SN வசந்த் இருவரும் ஒரு சின்ன திருப்பத்திற்கு உதவுகிறார்கள் .
இசை : ரங்கா ராவ் பாடல்கள் சுமார் தான் . ஒரு மனிதர் நல்லதே செய்து , நல்லவனாகவே இருக்கும் பொது , அவர் ஒரு உதவியும் இன்றி வாடி , வதங்கி , அழியும் பொது , அதை ஏற்க முடியவில்லை (அவன் தான் மனிதன் , பாசமலர் , தெய்வமகன் (கண்ணன் பாத்திரம்) படங்களும் பார்க்கும் போதும் இது தான் தோன்றியது )
இந்த காமெடி track யை தவிர்த்து , முக்கிய பாத்திரங்களை நன்றாக establish செய்து , குடும்பம் ஒரு கோவில் என்ற தலைப்புக்கு ஏற்ப முடிவை positive ஆக மாற்றி இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் .
-
6th March 2014 05:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks